| <|startoftext|> |
| <author>புதுமைப்பித்தன்</author> |
| <genre>சிறுகதை</genre> |
| <content> |
| புதுமைப்பித்தன் சிறுகதை: பல ரித்த |
| , |
| ரு மிண்தொகுப்புத்திட்டட் எண; |
| பாகம் 4 , சிறுகதைகள் 61-90 |
| putumaippittan |
| part 4, short stories 61-90 |
| In Tamil script, unicodeutf-8 format |
| Acknowledgements: |
| Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this |
| work. |
| This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof- |
| reading of the output file. |
| Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, |
| Switzerland. |
| of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet. |
| Details of |
| https:www.projectmadurai.org |
| You are welcome to freely distribute this file, provided this header page is kept intact. |
| </content> |
| <|endoftext|> |
|
|
| <|startoftext|> |
| <author>புதுமைப்பித்தன்</author> |
| <genre>சிறுகதை</genre> |
| <content> |
| projectmadurai org |
| You are welcome to freely distribute this file, provided this header page is kept intact 2 |
| பாகம் 4 , சிறுகதைகள் 61-90 |
| உள்ளடக்கம் |
| 61. நொண்டி 76. சாப விமோசனம் |
| 62. ஒப்பந்தம் 77. சாளரம் |
| 63. ஒரு கொலை அனுபவம் 78. சாமாவின் தவறு |
| 64. பால்வண்ணம் பிள்ளை 79. சாயங்கால மயக்கம் |
| 65. பறிமுதல் 80. சமாதி |
| 66. பாட்டியின் தீபாவளி 81. சமாதி |
| 67. பித்துக்குளி 62. சாமியாரும் குழந்தையும் சீடையும் |
| 68. பொய்க் குதிரை 83. சணப்பன் கோழி |
| 69. 'பூசனிக்காய்' அம்பி 84. சங்குத் தேவனின் தர்மம் |
| 70. புரட்சி மனப்பான்மை 85. செல்வம் |
| 71. புதிய கூண்டு 86. செவ்வாய் |
| 72. புதிய கந்த புராணம் 87. சிற்பியின் நரகம் |
| 73. புதிய நந்தன் 68. சித்தம் போக்கு |
| 74. புதிய ஒளி 89. சித்தி |
| 75. ராமனாதனின் கடிதம் 90. சிவசிதம்பர சேவுகம் |
| 61. நொண்டி |
| இந்தச் சம்பவம் எனக்குக் கொஞ்ச நாட்களுக்கு முன் நேர்ந்தது. |
| ரயிலில், ஒருவரும் இல்லாத தனி வண்டியாகப் பார்த்து, செளகரியமாகப் படுக்கையை |
| விரித்துவிட்டு, தொந்தரவில்லாமல் பிரயாணம் செய்யலாம் என்று |
| நினைத்துக்கொண்டே உட்காருமுன், மறுபடியும் வண்டியின் கதவு திறக்கப்பட்டது. |
| "ஜாக்கிரதையாக ஏறுங்கள்; தரையிலிருந்து படி வெகு உயரமாக இருக்கிறது" என்றது |
| ஒரு குரல். |
| </content> |
| <|endoftext|> |
|
|
| <|startoftext|> |
| <author>புதுமைப்பித்தன்</author> |
| <genre>சிறுகதை</genre> |
| <content> |
| ரயிலில், ஒருவரும் இல்லாத தனி வண்டியாகப் பார்த்து, செளகரியமாகப் படுக்கையை |
| விரித்துவிட்டு, தொந்தரவில்லாமல் பிரயாணம் செய்யலாம் என்று |
| நினைத்துக்கொண்டே உட்காருமுன், மறுபடியும் வண்டியின் கதவு திறக்கப்பட்டது |
| "ஜாக்கிரதையாக ஏறுங்கள்; தரையிலிருந்து படி வெகு உயரமாக இருக்கிறது" என்றது |
| ஒரு குரல் 3 |
| "அதற்கென்ன, நான் கெட்டியாகத்தான் பிடித்துக் கொண்டிருக்கிறேன்" என்றது |
| மற்றொரு குரல். |
| கதர்குல்லாய் அணிந்த தலை, பிறகு இரும்புக் கம்பியைக் கெட்டியாகப் பிடித்துத் |
| தொங்கிக் கொண்டிருக்கும் இரு கைகள். மெதுவாகத் தடித்த சரீரத்தை அப்படியே |
| உயர இழுக்கும்பொழுது, மரக்கட்டைகள் ரயில் வண்டியின் படிகளில் இடிபடும் சப்தம் |
| கேட்டது. |
| மனிதனின் உடம்பு மேலே வந்ததும், தொள தொளவென்று பஞ்சகச்சம் |
| வைத்துக்கட்டிய வேஷ்டிக்கிடையில் இரண்டு மரக்கால்கள் தெரிந்தன. |
| "சரிதானே ஸார்" என்று வெளியே யிருந்த குரல் கேட்டது. |
| "ஆமாம் அப்பா" என்றார் வந்தவர். |
| "இதோ இருக்கிறது. உங்கள் கைத்தடியும் மூட்டைகளும்." |
| வேலைக்காரன் உள்ளே வந்து கையிலிருந்த மூட்டைகளை மேற்பலகையில் |
| ஒவ்வொன்றாக வைத்தான். |
| "ஐந்து மூட்டைகள், பட்சணங்கள், விளையாட்டுப் பொம்மைகள், கொட்டு, |
| விளையாட்டுத் துப்பாக்கி, புதிதாக வாங்கிய துணிகள்." |
| "சரி! சரி!" |
| "செளகரியமாய்ப் போய்விட்டு வரணும்" என்று கும்பிட்டான். |
| "உன் உடம்பையும் பார்த்துக் கொள்" என்று ஒரு ரூபாயை அவன் கையில் கொடுத்து |
| விட்டுச் சிரித்தார். |
| </content> |
| <|endoftext|> |
|
|
| <|startoftext|> |
| <author>புதுமைப்பித்தன்</author> |
| <genre>சிறுகதை</genre> |
| <content> |
| " |
| "செளகரியமாய்ப் போய்விட்டு வரணும்" என்று கும்பிட்டான் |
| "உன் உடம்பையும் பார்த்துக் கொள்" என்று ஒரு ரூபாயை அவன் கையில் கொடுத்து |
| விட்டுச் சிரித்தார் 4 |
| அவனும் கதவைச் சாத்திக் கொண்டு போய்விட்டான். |
| வந்தவருக்கு வயது முப்பது அல்லது முப்பத்தைந்திற்கு மேல் இராது; தலை பூராவும் |
| நரைத்துவிட்டது. கதர் உடைதான். நல்ல கறுத்து அடர்ந்த மீசை. திடீரென்று வந்த |
| ஊனத்தினால், உழைப்பு நின்றுவிட அதனால் ஏற்பட்ட உடல் பருமன். |
| வந்தவர் முகத்தைக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டு, "பீடி குடித்தால் |
| உங்களுக்குத் தொந்தரவாக இருக்காதே?" என்றார். |
| "தாராளமாகக் குடியுங்கள்." |
| அந்தப் பார்வை, அந்தக் குரல் எங்கோ கேட்ட மாதிரி இருக்கிறது. எப்பொழுது? |
| அதுதான் ஞாபகம் வரவில்லை. |
| அவரும் என்னையே கவனித்துக் கொண்டு இருந்தார். அவருக்கும் |
| பிடிபடவில்லைபோல் இருக்கிறது. |
| இப்படி மரியாதைக் குறைவாக வெருகுபோல் விழிப்பதில் கூச்சமாயிருந்ததால் |
| முகத்தைக் கொஞ்சம் வேறு பக்கம் திருப்பினேன். ஆனால் இந்த மனம் இருக்கிறதே! |
| மறுபடியும் கண்கள் அந்த திசையே நோக்கின. |
| "தங்களை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறதே. எனக்குப் பிடிபடவில்லை" என்றேன். |
| "அப்படித்தான் எனக்கும் இருக்கிறது" என்றார். |
| "என் பெயர் ஹரிஹரய்யர். ரெவினியு இன்ஸ்பெக்டர்" என்றேன். |
| அவரும் கொஞ்சம் யோசித்தார். "ஆமாம் ஸார், நாம் சென்னையில் நான்கு |
| வருஷங்களுக்கு முன் சந்தித்ததாக ஞாபகம்" என்றார். |
| </content> |
| <|endoftext|> |
|
|
| <|startoftext|> |
| <author>புதுமைப்பித்தன்</author> |
| <genre>சிறுகதை</genre> |
| <content> |
| அவரும் கொஞ்சம் யோசித்தார் "ஆமாம் ஸார், நாம் சென்னையில் நான்கு |
| வருஷங்களுக்கு முன் சந்தித்ததாக ஞாபகம்" என்றார் 5 |
| "ஆமாம்! ஆமாம்! தாங்கள்தான் தொண்டர் ராமகிருஷ்ணனோ?" |
| "ஆமாம்! இந்தக் கால்கள் தடியடியில் போகும்வரை தொண்டனாக இருந்தேன்." |
| நினைவு வந்து விட்டது. நான்கு வருடங்களுக்கு முன் என்ன அழகு? என்ன வாலிபம்! |
| மெலிந்ததாயினும் நல்ல கட்டுள்ள உடல். அவரைப் பற்றி நினைவிருக்க வேண்டிய |
| காரணங்கள் உண்டு. ஆமாம், அவரைப் பற்றிய ஒரு காதல் விஷயம் நன்றாக |
| நினைவிற்கு வருகிறது. அந்தப் பெண் மணோன்மணி. மறியலுக்காக வந்த ஸ்திரீ |
| தொண்டர்களில் ஒருத்தி. திருமணத்தை எதிர்நோக்கிக்கொண்டு இருந்தார்கள். என்ன |
| காதல், என்ன குதூகலம்! அப்பொழுதுதான் அவர்களைச் சந்தித்தேன். |
| எனது கண்கள் மேலே பலகையில் இருந்த விளையாட்டுச் சாமான்களில் சென்றன. |
| ரயில் வண்டி தண்டவாளங்களில் சற்றுக் குதித்துச் செல்லும்பொழுது, அந்த |
| வேலைக்காரனது வார்த்தைகள் நினைவிற்கு வந்தன. |
| "ஜந்து மூட்டைகள், பக்ஷணங்கள், விளையாட்டுப் பொம்மைகள், கொட்டு, |
| விளையாட்டுத் துப்பாக்கி, புதிதாக வாங்கிய துணி." |
| உடனே பளிச்சென்று எனது மனம், முடிவுபெறாத காதல் கதையின் கதைகளைத் |
| தானே கட்டிக்கொண்டு போக ஆரம்பித்தது. உலகத்தில் எந்தப் பாகத்திலும் |
| எழுதப்படும் காதல் கதைகளைப் போலத்தான். தேச விடுதலைக்காகக் காலிழந்த |
| காதலன். தனக்காகக் காத்திருந்த கன்னியை மணந்து கொள்வது. |
| நினைக்க நினைக்க அதன் அழகு, அதன் பொலிவு, அதன் தியாகம் எல்லாம் |
| புஸ்தகத்தில் இருக்கிற மாதிரி வெகு எளிதாக நிறைவேறிவிட்டன. இந்த மாதிரிச் |
| சம்பவங்களைப் படிப்பதில் எவ்வளவு ஆனந்தம்! அப்படியே தன்னை மறந்து |
| விடுகிறோம். அந்த உயர்ந்த லட்சியத்தில் - உலகத்தில் அப்படியிருக்கிறதா? |
| ஏமாற்றந்தான். |
| இதைவிட வேறு மாதிரி என் மனது கதை திரிக்க ஆரம்பித்தது. ஒரு வேளை அவன் |
| கால்களை இழக்குமுன் திருமணமாகியிருக்கலாம். காலிழந்த கணவனின் பத்தினிப் |
| </content> |
| <|endoftext|> |
|
|
| <|startoftext|> |
| <author>புதுமைப்பித்தன்</author> |
| <genre>சிறுகதை</genre> |
| <content> |
| இதைவிட வேறு மாதிரி என் மனது கதை திரிக்க ஆரம்பித்தது ஒரு வேளை அவன் |
| கால்களை இழக்குமுன் திருமணமாகியிருக்கலாம் காலிழந்த கணவனின் பத்தினிப் 6 |
| பெண். அவனது சுகத்திற்காகவே தன்னைத் தியாகம் செய்து கொள்ளும் ஒரு பத்தினிப் |
| பெண்ணின் உருவம் எனது மனக் கண்ணின் முன் தோன்றலாயிற்று. |
| அவனுக்கு வாழ்க்கை, சுகமா அல்லது இன்னலா, அதை அறியும்படி ஒரு சிறிய அவா |
| வரவரப் பெரிய ஆசையாகிவிட்டது. |
| நான் பேசிக் கொண்டுதான் இருந்தேன். மனது அதிவேகமாக வேறு பக்கம் |
| ஓடிக்கொண்டிருந்தது. |
| "அவனுக்கு மூன்று குழந்தைகள் இருக்கலாம். இரண்டு ஆண்கள், ஒரு பெண். |
| பொம்மைகள் பெண்ணுக்கு; மற்றவை ஆண்களுக்கு; புதிய துணி மனைவிக்கு." |
| திடீரென்று "உங்களுக்குக் குழந்தைகள் இருக்கின்றனவா?" என்றேன். |
| "இல்லை" என்றார். |
| மரியாதைக் குறைவாக நடந்துகொண்ட மாதிரி என் மனதில் ஒரு குழப்பம் ஏற்பட்டது. |
| "மன்னிக்க வேண்டும், சாமான்களைக் கண்டவுடன் கேட்டேன். காதில் விழுவதைக் |
| கேட்காமலிருக்கலாம். கண்டதைக் கேட்காமலிருக்கலாம். கண்டதை வைத்துக் |
| கொண்டு அனுமானிக்கலாம்" என்றேன். |
| புன்சிரிப்புடன், "இன்னும் எனக்குக் கலியாணங்கூட ஆகவில்லை." என்றார். |
| திடீரென்று ஞாபகப்படுத்திக் கொண்டவன் போல், "மன்னிக்க வேண்டும், |
| மனோன்மணியம்மாள்...?" |
| "தங்களுக்கு நல்ல ஞாபகம் இருக்கிறது" என்றார். |
| "மனோன்மணியம்மாள் யாரையோ கலியாணம் செய்து கொண்டதாகவும் ஒரு |
| வதந்தி..." |
| </content> |
| <|endoftext|> |
|
|
| <|startoftext|> |
| <author>புதுமைப்பித்தன்</author> |
| <genre>சிறுகதை</genre> |
| <content> |
| " 7 |
| "மிஸ்டர் பார்வதி நாதனை..." |
| "தங்கள் காயங்கள்தான் அதற்குக் காரணம் என்றும்..." முகத்தை நன்றாகக் |
| கவனித்தேன். முகம் வெட்கத்தால் சிவந்தது. |
| தோற்றுப்போன கட்சியை தோற்றுவிட்டது என்று தெரிந்த பிறகும் வாதிப்பவர் போல், |
| ஒரு பரபரப்புடன் பேசிக்கொண்டே போனார். |
| "மிஸ்டர் பார்வதிநாதனுடைய பெயருடன் என்னையும் முடிச்சு போடுவது வெறும் |
| அபத்தம். நான் ஆஸ்பத்திரியிலிருந்து வெளியேறியதும், அவள் என்னைக் கலியாணம் |
| செய்துகொள்ள நான் அனுமதிக்கவேயில்லை. அனுமதிப்பேனா? எதற்கு ஒருவனைக் |
| கலியாணம் செய்து கொள்வது? ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும், ஒவ்வொரு |
| நிமிஷமும், ஏன், ஒவ்வொரு வினாடியும் கூடி வாழவே ஒருவனைக் கலியாணம் செய்து |
| கொள்வது. அவனுக்கு என்னைப்போல் கால் இல்லாமலிருந்தால் மரணம் வரை |
| துன்பந்தான். தியாகத்தைப் போற்றுகிறேன். ஆனால் எனக்காக ஒரு பெண்ணின் |
| வாழ்க்கையையே தியாகமாக்க நான் சம்மதிக்க மாட்டேன். நான் நடக்கும் பொழுது |
| எல்லாம் இந்த மரக் கால் 'லொட்டு லொட்டு!' என்று இடியாக முழங்குகிறது. அவளை |
| முத்தமிட நெருங்குமுன் இந்த சப்தந்தானே காதைத் துளைக்கும்? அதை அவள் சகித்துக் |
| கொண்டு இருக்கும்படி செய்வேனோ? அவள் வேண்டுவது புருஷன்; நான் |
| வேண்டுவது அடிமை, பணியாள், அல்லது தாய், இது ஒத்து வருமா?" |
| பிறகு மெளனமாக இருந்தார். அவர் சொல்வது சரி என்று பட்டது. அவளைக் குற்றம் |
| சொல்ல முடியுமா? ஆனால் எனக்கு என்னவோ சுவாரஸ்யமான கதையின் இறுதியைப் |
| பிய்த்துவிட்ட மாதிரிப் பட்டது. எனது கதை உணர்ச்சி சாந்தியடையவில்லை. |
| என்னவோ ஏமாற்றப்பட்ட மாதிரிதான் இருந்தது. |
| "மனோன்மணியம்மாளுக்குக் குழந்தைகள் இருக்கின்றனவா?" என்று திடீரென்று |
| கேட்டேன். |
| </content> |
| <|endoftext|> |
|
|
| <|startoftext|> |
| <author>புதுமைப்பித்தன்</author> |
| <genre>சிறுகதை</genre> |
| <content> |
| "மனோன்மணியம்மாளுக்குக் குழந்தைகள் இருக்கின்றனவா " என்று திடீரென்று |
| கேட்டேன் 8 |
| "ஒரு பெண்ணும் இரண்டு ஆணும்; இவைகள் எல்லாம் அவர்களுக்குத்தான். அவள் |
| புருஷன் என்மேல் அதிகப் பிரியமாக இருக்கிறார்!" |
| அதற்குள் அந்தச் சிறு டன்னல் வழியாக ரயில் சென்று பிளாட்பாரத்தில் நின்றது. |
| அவருக்கு உதவி செய்யும்படி நான் எழுந்தேன். அதற்குள் ஒரு மனிதனின் இரண்டு |
| கரங்கள், திறந்த கதவின் வழியாக நீட்டப்பட்டன. |
| அந்த மனிதனுக்குப் பின், அவனுடைய மனைவி குழந்தைகளுடன் நின்றாள் - |
| அதரத்தில் புன்சிரிப்பு. |
| குழந்தைகள், வெளியில் வைத்த சாமான்களைத் தூக்கிக்கொண்டன. இந்த நொண்டி |
| பிளாட்பாரத்தில் இறங்கியதும் குழந்தைகள் அவரைச் சுற்றிக் கொண்டன. |
| எல்லோரும் வெளியே புறப்பட்டார்கள். அந்தப் பெண் குழந்தை, அவர் அக்குளில் |
| கொடுத்து ஊன்றி நடந்த தடிகளைத் தனது சிறிய விரல்களால் பிடித்துக்கொண்டே |
| நடந்தது. |
| 1934 |
| 62. ஒப்பந்தம் |
| பார்வதிநாதனுக்கு பி.ஏ. பாசாகிவிட்டது. அது மட்டுமல்ல. ஸர்வீஸ் கமிஷன் |
| பரீட்சையிலும் முதல் தொகுதியில் வந்துவிட்டான். சீக்கிரத்தில் வேலையாகிவிடும். |
| கலியாணம் ஒன்றுதான் பாக்கி. அதையும் செய்து முடித்துவிட்டால் பையனைப் பற்றிய |
| கவலை ஓய்ந்துவிட்டது என்று நினைத்தார் சங்கரலிங்கம் பிள்ளை. |
| ஒரு நாள் காலை. பிள்ளையவர்கள், தாம்பிரவர்ணியின் ஸ்நான இன்பம், நீண்ட பூஜை |
| முதலியவற்றுக்கு முற்றுப்புள்ளியான காலை போஜனத்தை முடித்துக் கொண்டதும், சுக |
| ஜீவனத்தின் குதூகலத்தை அனுபவித்தவராய், "ஏளா, அங்கே என்ன செய்யுதே" என்று |
| தமது பத்தினியைக் கூப்பிட்டார். |
| </content> |
| <|endoftext|> |
|
|
| <|startoftext|> |
| <author>புதுமைப்பித்தன்</author> |
| <genre>சிறுகதை</genre> |
| <content> |
| ஒரு நாள் காலை பிள்ளையவர்கள், தாம்பிரவர்ணியின் ஸ்நான இன்பம், நீண்ட பூஜை |
| முதலியவற்றுக்கு முற்றுப்புள்ளியான காலை போஜனத்தை முடித்துக் கொண்டதும், சுக |
| ஜீவனத்தின் குதூகலத்தை அனுபவித்தவராய், "ஏளா, அங்கே என்ன செய்யுதே" என்று |
| தமது பத்தினியைக் கூப்பிட்டார் 9 |
| "என்ன, நீங்களா கூப்பிட்டிய; இன்னா வாரேன்." |
| "நம்ம குட்டிக்கு" - பார்வதிநாதனின் செல்லப் பெயர் - "பொண்ணு பார்க்க |
| வேண்டாமா?" |
| "எனக்கென்ன தெரியும்? நீங்க சொல்லுதது சதி. நம்ப சிங்கிகுளத்துப் பொண்ணெப் |
| பாத்தா என்ன? பொண்ணு நல்ல செவத்த பொண்ணு; கண்ணும் முளியும் அப்படியே |
| பாத்துக்கிட்டே இருக்கலாம். ஆனா, புள்ளையவாளுக்குப் பிடிக்குமோ என்னமோ? |
| இந்தக் காலத்துப் புள்ளையளை என்ன சொல்ல?" |
| "அதாரு, சிங்கிகுளத்திலே?" |
| "என்ன உங்களுக்குத் தெரியாதாக்கும்? பேட்டையக்கா இருக்காஹள்ள, |
| பார்வதியக்கா, அவளுக்கு ஒண்ணுவிட்ட தம்பி மக." |
| "சரி! சரி! நம்ம சுப்பராயப்பிள்ளை மகளா? என்ன நகை போடுவா?" |
| "அது எனக்கென்ன தெரியும்? கோமதியக்காக்கிட்ட விசாரிச்சா தெரியும். நா அவளைக் |
| கூப்பிடுதேன்" என்று வெளியே சென்று ஒரு விதவையைக் கூப்பிட்டு வந்தாள். |
| "அம்மா, வா. இரி. நம்ம குட்டிக்கு இவ என்னமோ சிங்கி கொளத்துப் பொண்ணு |
| ஒண்ணு இருக்காமே. அதைப் பாக்கலாமென்னு சொல்லுதா. நீ என்னமோ, |
| பாத்திருக்கியாமே. அதெப்படி நகை என்னம்மா போடுவா?" என்று கேட்டார் |
| சங்கரலிங்கம் பிள்ளை. |
| "அதா, நல்ல எடமாச்சே. பொண்ணு தங்கமான கொணம். அவுஹளும் அப்படித்தான். |
| என்னமோ ரெண்டு ஆயிரத்துக்கு செய்வாஹ இன்னு சொல்லி இருந்தாஹ." |
| </content> |
| <|endoftext|> |
|
|
| <|startoftext|> |
| <author>புதுமைப்பித்தன்</author> |
| <genre>சிறுகதை</genre> |
| <content> |
| அவுஹளும் அப்படித்தான் |
| என்னமோ ரெண்டு ஆயிரத்துக்கு செய்வாஹ இன்னு சொல்லி இருந்தாஹ " 10 |
| "இம்புட்டுத்தானே! சதி, சதி. பேச்செ விட்டுத் தள்ளு. நம்ம பேட்டைப்பிள்ளை |
| ஐயாயிரம் நகை மருக, கலியாணச் செலவு ஒரு ரெண்டாயிரம் யென்று சொன்னாரே!" |
| "ஆமா, பொண்ணு கறுப்பில்லியா? எதுக்கும் கேட்டுப் பாருங்களேன்." |
| "சதி, நீ என்ன சொல்லுதே?" |
| "பாத்தா என்ன? நானும் அக்காளும் போயிட்டுத்தான் வாரமே!" என்றாள். |
| "சதி, நாளைக்கு மேக்கெ சூலம். நாளைக் கழிச்சி உதயத்திலெ வண்டியப் |
| போட்டுகிட்டுப் போய் பாத்துட்டு வாருங்க. பொறவு நாவன்னாவை விட்டு நான் |
| விசாரிக்கேன்." |
| "அய்யா, தபால்!" என்று தபால்காரன் உள்ளே நுழைந்து கவர்மென்டு முத்திரையிட்ட |
| நீண்ட 'ஸ்கோடா'வைக் கொடுத்தான். |
| "நம்ம குட்டிக்குப் போல இருக்கு. ஏலே அய்யா!" என்று கூப்பிட்டார். |
| "என்னப்பா?" என்று கீழே வந்தான் பார்வதிநாதன். |
| கடிதத்தைப் பிரித்துப் பார்க்க, சென்னையில் குமாஸ்தா வேலையாகியிருப்பதாகவும், |
| 25-ந் தேதி வந்து வேலை ஒப்புக்கொள்ளும்படியும் எழுதியிருந்தது. |
| வீட்டில் ஒரே குதூஹலம். தபால்காரன் 'பசஷிஸ்' தட்டாமல் போகவில்லை. |
| "ஏலே அய்யா! உனக்கு ஒங்கம்மை சிங்கிகொளத்துப் பொண்ணைப் பார்த்திருக்கிறா, |
| அப்பா. ஒனக்குப் புடிக்குமா?" என்று கேட்டார். |
| பார்வதிநாதனுக்கு இந்த விஷயம் திடுக்கிடச் செய்தது. இந்த மாதிரி தகப்பனார் |
| பேசியது இதுதான் முதல் தரம். முகம் வெட்கத்தால் சிவந்தது. ஒன்றும் பேசாமல் |
| </content> |
| <|endoftext|> |
|
|
| <|startoftext|> |
| <author>புதுமைப்பித்தன்</author> |
| <genre>சிறுகதை</genre> |
| <content> |
| இந்த மாதிரி தகப்பனார் |
| பேசியது இதுதான் முதல் தரம் முகம் வெட்கத்தால் சிவந்தது ஒன்றும் பேசாமல் 11 |
| மெத்தைக்கு ஏறினவன். "நாளைக்குப் புறப்பட வேண்டும்" என்று சொல்லிவிட்டுச் |
| சென்றுவிட்டான். |
| 2 |
| பெண்ணை எல்லாம் போய்ப் பார்த்துவிட்டு வந்தாகிவிட்டது. சங்கரலிங்கம் |
| பிள்ளையின் மனைவிக்கு சிங்கிகுளத்துப் பெண் பேரில் நோக்கம். |
| சங்கரலிங்கம் பிள்ளைக்கு இப்பொழுது மகனுக்கு வேலையாகி விட்டதால் ரேட்டை |
| உயர்த்த வேண்டும் என்ற நோக்கம். நகை வழியாகக் குறைந்தது மூவாயிரமாவது |
| கறந்துவிடவேண்டும் என்ற தீர்மானம். |
| நாவன்னா - நாராயண பிள்ளை அவர் பெயர் - அவரை விட்டுப் பெண் |
| வீட்டுக்காரரைத் தூண்டிவிடும்படி ஏற்பாடு செய்தார். |
| நாராயண பிள்ளை ஒரு தடவை சிங்கிகுளத்துப் பக்கம் சென்றார். "நம்ம பையன் |
| ஒருவன் இருக்கிறான். கொடுக்கலாம். நல்ல இடம்!" என்றார். விஸ்தரிப்பானேன்? |
| பெண்ணின் தகப்பனார் மாப்பிள்ளை வீட்டாரைக் கண்டு பேசப் புறப்பட்டார். நண்பர் |
| நாவன்னா வீட்டில் ஜாகை. |
| மறுநாள். |
| இருவரும் சங்கரலிங்கம் பிள்ளை வீட்டிற்கு வருகிறார்கள். |
| "அண்ணாச்சி, இவுஹதான் நம்ம சிங்கிகுளத்துப் பிள்ளையவாள். இந்தப் பக்கத்திலே |
| வந்திருந்தாஹ பாத்துக்கிட்டுப் போகட்டுமே என்று கூட்டி வந்தேன்" என்றார் |
| நாவன்னா. |
| "அப்பிடியா! வாருங்க! வாருங்க! ஏளா! வெத்திலை செல்லத்தை எடு. அங்கே தூத்துட்டு |
| சமுக்காளத்தை விரி! காப்பி சாப்பிடுங்களேன். அம்மாளு ரெண்டு எலையைப் போடு!" |
| என்று துரிதப்படுத்தினார். |
| </content> |
| <|endoftext|> |
|
|
| <|startoftext|> |
| <author>புதுமைப்பித்தன்</author> |
| <genre>சிறுகதை</genre> |
| <content> |
| அம்மாளு ரெண்டு எலையைப் போடு " |
| என்று துரிதப்படுத்தினார் 12 |
| அவருடைய தர்மபத்தினியும், "வாருங்க! சேவிக்கேன்!" என்று வரவேற்றுவிட்டு, அவசர |
| அவசரமாகப் பெருக்கிவிட்டு, ஜமுக்காளத்தை எடுத்து விரித்து, வெற்றிலைச் |
| செல்லத்தை எடுத்து வைத்துவிட்டு உள்ளே சென்றாள். |
| "நாங்கள் எல்லாம் காப்பி ஆச்சு. நீங்கள் ஆச்சா? இல்லவிட்டா முடிச்சுக்கொண்டு |
| வந்துவிடுங்கள்" என்றார் நாராயண பிள்ளை. |
| "நான் எல்லாம் ஆச்சு! வெத்திலைப் போடுங்க" என்றார் சங்கரலிங்கம் பிள்ளை. |
| பேச்சு மெதுவாகப் பெண் விஷயத்தில் வந்து விழுந்தது. |
| "ஆமாம்! பையனுக்கு வேலையும் ஆச்சே, முடிச்சுவிடலாம் என்று எண்ணுகிறேன்" |
| என்றார். |
| "ஆமாம் அது செய்ய வேண்டியதுதான்" என்றார் சிங்கிகுளத்துப் பிள்ளை. |
| "உங்களுக்குத் தெரியாததா? நகை ஒரு ரெண்டாயிரம், மத்தச் செலவு ஒரு ஆயிரம்!" |
| என்றார். |
| "என்ன, நம்ம பேட்டையப்பிள்ளை சொன்னதைக் கேட்டியள்ள?" என்றார் |
| சங்கரலிங்கம் பிள்ளை. |
| "ஆமா, ஆமா. அதிருக்கட்டும். இந்தக் காலத்திலே ஆயிரத்தைச் சொன்னாப் போதுமா? |
| சொன்னதைச் சொன்னபடி செய்யணும். அது நம்ம பிள்ளையவாள்தான். நான் ஒன்று |
| பொதுவாகச் சொல்லுகிறேன். நகை மூவாயிரம், மத்தது ரெண்டாயிரம்!" என்றார். |
| எல்லாரும் சற்று மெளனம். |
| "அண்ணாச்சி! நீங்க ஒரேடியா மொதொண்டாதிக. பிள்ளைவாள்! நீங்க காலைத் |
| தேச்சா பிரயோசனமில்லை. நல்ல இடம். பையனுக்கு நல்ல அதிர்ஷ்டம் கவர்மெண்டு |
| </content> |
| <|endoftext|> |
|
|
| <|startoftext|> |
| <author>புதுமைப்பித்தன்</author> |
| <genre>சிறுகதை</genre> |
| <content> |
| நீங்க காலைத் |
| தேச்சா பிரயோசனமில்லை நல்ல இடம் பையனுக்கு நல்ல அதிர்ஷ்டம் கவர்மெண்டு 13 |
| வேலை. இனிசூபெக்டரு, தாசில்தாரா வரலாம் உங்க பெண்ணுக்கு ராஜயோகம்!" |
| என்று மத்தியஸ்தம் பேசினார் நாவன்னா. |
| "சதி! பொறவு நீங்க சொல்லுறப்பா என்னா?" என்றார் சிங்கிகுளத்துப் பிள்ளை. |
| "வேறெ என்ன அய்யா? இப்பவே வெத்தலை பாக்கு கைமாறிடுத்து. வர |
| வியாழக்கிழமை நல்ல தினம். அன்னைக்கி திருமங்கிலியத்திற்குப் பொன்னுருக்கி |
| விடுகிறது. சரிதானே பிள்ளைவாள்?" என்று ஒரு வெள்ளித் தாம்பாளத்தைச் |
| சங்கரலிங்கம் பிள்ளையின் தர்மபத்தினியிடம் வாங்கி அந்தச் சிறு சடங்கை நடித்து |
| முடித்தார்கள். |
| சென்னையில் அன்று சாயங்காலம். |
| பார்வதிநாதன் வேலை ஒப்புக்கொண்டாகிவிட்டது. தகப்பனார் கொடுத்த பணம் |
| கொஞ்சம் கையில் ஓட்டம். சினிமாவிற்குச் சென்றான். |
| இவனுக்குப் பக்கத்தில் ஒரு ஆங்கிலோ இந்திய மாது - இளநங்கை - |
| உட்கார்ந்திருந்தாள். |
| தகப்பனார் அன்று பெண் விஷயத்தைக் கேட்டதிலிருந்து அவனுக்கு ஒரு புதிய |
| உணர்ச்சி, இயற்கையின் தேவை, அடிக்கடி மனத்தில் சுற்றிக்கொண்டே இருந்தது. |
| பார்வதிநாதன் நல்ல பையன் தான். இதுவரை அந்த நினைப்பிற்கு அவகாசமில்லை. |
| ஆனால் அந்தத் தினத்திலிருந்து அவனது உடல் கட்டுக்கடங்கவில்லை. |
| அன்று இருவர் சினிமா பார்க்கவில்லை. |
| அந்த நங்கை ஐந்து ரூபாய்க்கு இரண்டு மணி நேரம் அவன் மனைவியாக இருக்கச் |
| சம்மதித்தாள். இருவரும் கடற்கரைக்குச் செல்லுகிறார்கள். |
| </content> |
| <|endoftext|> |
|
|
| <|startoftext|> |
| <author>புதுமைப்பித்தன்</author> |
| <genre>சிறுகதை</genre> |
| <content> |
| அந்த நங்கை ஐந்து ரூபாய்க்கு இரண்டு மணி நேரம் அவன் மனைவியாக இருக்கச் |
| சம்மதித்தாள் இருவரும் கடற்கரைக்குச் செல்லுகிறார்கள் 14 |
| அந்தச் சிங்கிகுளத்துப் பெண் மூவாயிரம் ரூபாயைப் பணயமாக வைத்து, அவனுடன் |
| வாழ்க்கையைப் பிணைத்துக் கொள்ளச் சம்மதிக்கும் பொழுது, ஐந்து ரூபாய்க்கு |
| இரண்டு மணி நேரம் சரிதானே? |
| மணிக்கொடி, 05-08-1934 |
| 63. ஒரு கொலை அனுபவம் |
| இருள். எங்கு பார்த்தாலும் கரியவிருள். ரோட்டில் வெளிச்சம் மங்கியது. ஒற்றை |
| விளக்கு. |
| அந்த இருட்டிலே ஒரு மனிதன் தள்ளாடித் தள்ளாடி நடந்து கொண்டு போகிறான். |
| உள்ளூர ஒரு பாட்டு. குடிப் பேர்வழி. அந்த இருட்டிலும் பாடிக்கொண்டு போகிறானே. |
| ஆசாமி தைரியசாலியாகத்தான் இருக்க வேண்டும். நான் என்றால் பேசவே மாட்டேன். |
| இதென்ன வேடிக்கை? அவனுக்கென்ன பைத்தியமா? விளக்கைப் பிடித்துத் |
| தொத்திக்கொண்டு ஏன் ஏற வேண்டும்? விளக்கு ஏற்றி இருக்கும்பொழுது இவன் |
| என்ன அங்கு போய் சாதிக்கப் போகிறான்? இதுவும் ஒரு வேடிக்கைதான். |
| ஏறி இரும்புக் கம்பத்தின் குறுக்கில் உட்கார்ந்துகொண்டு "ராஜாதி ராஜன் நானே" |
| என்று பாடுகிறானே. அவனும் ராஜன் தான்! இவனுக்கும் ஹிட்லருக்கும் ஒரு |
| வித்தியாசமும் கிடையாது. |
| அடடா! முகத்தைப் பார்த்தால் என்போல் இருக்கிறதே! நான் தான் அவன். இதென்ன |
| வேடிக்கை? முகத்தைப் பார்த்தால் எனக்கு இரட்டைச் சகோதரன் மாதிரி இருக்கிறான். |
| எங்கே வந்து சொத்தில் உரிமை கேட்கப் போகிறானோ? |
| விளக்கெல்லாம் அணைந்துவிட்டதே! இதென்ன அதிசயம்? ஏன் விளக்கு அணைய |
| வேண்டும்? இரவு பூராவும் எரிவதென்றால் முனிஸிபாலிட்டியாருக்கு குடி |
| முழுகிவிடும்போல் இருக்கிறது. |
| </content> |
| <|endoftext|> |
|
|
| <|startoftext|> |
| <author>புதுமைப்பித்தன்</author> |
| <genre>சிறுகதை</genre> |
| <content> |
| ஏன் விளக்கு அணைய |
| வேண்டும் இரவு பூராவும் எரிவதென்றால் முனிஸிபாலிட்டியாருக்கு குடி |
| முழுகிவிடும்போல் இருக்கிறது 15 |
| அந்த இருட்டில் பாதையின் திருப்பத்திலிருந்து இன்னொரு உருவம் வருகிறது. ஏன் |
| இப்படி நடக்கவேண்டும்? ஆசாமியைப் பார்த்தால் பொம்மை மாதிரி. கிட்ட |
| நெருங்கட்டும். அதைத்தான் பார்ப்போம். இதென்ன அதிசயம்? அவனும் நான் தான். |
| முதல் வந்த ஆசாமிதானா அவன்? தலைதான் கம்பத்தின் மேல் தெரிகிறதே. எனக்குப் |
| பைத்தியமா? அல்லது பிரம்மாவிற்குத்தான் பைத்தியம் பிடித்துவிட்டதா? அல்லது |
| பிரம்மாவிற்கு நான் சொத்து சுகம் வைத்துக்கொண்டிருப்பதில் பொறாமையா? |
| அந்த 'எனக்கு' ஏன் பயம் போட்டு ஆட்ட வேண்டும்? இரண்டு பிரதிபிம்பங்கள். |
| இயற்கையின் கூத்தா? அல்லது பைத்தியக்கார ஆஸ்பத்திரியா? |
| இரவில் இன்னொரு உருவம் அதற்குப் பின் ஒளிந்துகொண்டு வருகிறது. அவனாவது |
| வேறு மாதிரியாக இருக்க வேண்டும். இரண்டாவது ஆசாமியை நெருங்குகிறானே. |
| முகம் தெரிகிறது. நல்ல காலம். அவனுக்கு தாடியும் மீசையும் இருக்கிறது. நானல்ல! |
| என்ன? நன்றாகப் பார். அவனும் நான் தான். எனக்கு தாடியும் மீசையுமா |
| முளைத்திருக்கிறது? எனது முகத்தில் ஒன்றையும் காணோமே! முகத்தையும் |
| கண்ணையும் பார்த்தால் என்ன பயமாக இருக்கிறது. மூன்று பேரும் நான் தானா |
| அல்லது 'எல்லாம் நானே' என்ற முக்தியை அடைந்துவிட்டேனா? |
| தாடியுடைய 'என்' கையில் என்ன மின்னுகிறது? |
| கத்தி. |
| முன் செல்லும் 'எனக்குப்' பின் வந்த இரண்டாவது 'நான்' ஏன் பதுங்கிப் பதுங்கிச் |
| செல்ல வேண்டும்? முதல் 'நான்' எங்கே? |
| ஆமாம்! அவன் குஷியாக கம்பத்தின் மீது பாட்டுப் பாடுகிறான். |
| நெருங்கிவிட்டான்! |
| "அய்யோ கொல்கிறானே!' |
| </content> |
| <|endoftext|> |
|
|
| <|startoftext|> |
| <author>புதுமைப்பித்தன்</author> |
| <genre>சிறுகதை</genre> |
| <content> |
| நெருங்கிவிட்டான் |
| "அய்யோ கொல்கிறானே ' 16 |
| மூன்றும் என் குரல். எல்லாம் இருள். ஒன்றையும் காணோம்! |
| விழித்தேன். பக்கத்தில் எனது நண்பன். 'பகலில் என்ன தூக்கம்?' என்று முதுகைத் |
| தட்டிக்கொண்டிருந்தான். எதிரே எழுதுகோல், காகிதம், இத்யாதி. துப்பறியும் நாவல் |
| எழுதுவது என்றால் லேசா? தூக்குத் தண்டனை இல்லாமல் ஆட்களைக் கொல்ல |
| வேண்டும். பிறகு துப்பறிவோனாகக் கண்டுபிடிக்க வேண்டும். அப்பப்பா? அந்தத் |
| தொழில் நமக்கு வேண்டாம். மானுடன் ஓடிக் கொண்டு நாயுடன் துரத்த என்னால் |
| முடியாது. |
| ஊழியன், 22-02-1935 |
| 64. பால்வண்ணம் பிள்ளை |
| பால்வண்ணம் பிள்ளை கலெக்டர் ஆபீஸ் குமாஸ்தா. வாழ்க்கையே தஸ்தாவேஜிக் |
| கட்டுகளாகவும், அதன் இயக்கமே அதட்டலும், பயமுமாகவும், அதன் முற்றுப்புள்ளியே |
| தற்பொழுது 35 ரூபாயாகவும் - அவருக்கு இருந்து வந்தது. அவருக்குப் பயமும், |
| அதனால் ஏற்படும் பணிவும் வாழ்க்கையின் சாரம். அதட்டல் அதன் விதிவிலக்கு. |
| பிராணிநூல், மிருகங்களுக்கு, முக்கியமாக முயலுக்கு நான்கு கால்கள் என்று கூறமாம். |
| ஆனால் பால்வண்ணம் பிள்ளையைப் பொறுத்தவரை அந்த அபூர்வப் பிராணிக்கு |
| மூன்று கால்கள்தான். சித்த உறுதி, கொள்கையை விடாமை, இம்மாதிரியான |
| குணங்கள் எல்லாம் படைவீரனிடமும், சத்தியாக்கிரகிகளிடமும் இருந்தால் பெருங் |
| குணங்களாகக் கருதப்படும். அது போயும் போயும் ஒரு கலெக்டர் ஆபீஸ் |
| குமாஸ்தாவிடம் தஞ்சம் புகுந்தால் அசட்டுத்தனமான பிடிவாதம் என்று கூறுவார்கள். |
| பால்வண்ணம் பிள்ளை ஆபீஸில் பசு. வீட்டிலோ ஹிட்லர். அன்று கோபம். |
| ஆபீஸிலிருந்து வரும் பொழுது - ஹிட்லரின் மீசை அவருக்கு இல்லாவிட்டாலும் - |
| உதடுகள் துடித்தன. முக்கியமாக மேலுதடு துடித்தது. காரணம், ஆபீஸில் பக்கத்துக் |
| குமாஸ்தாவுடன் ஒரு சிறு பூசல். இவர் மெக்ஸிகோ தென் அமெரிக்காவில் இருக்கிற |
| தென்றார். இவருடைய நண்பர் பூகோள சாஸ்திரம் வேறு மாதிரிக் கூறுகிறதென்றார். |
| </content> |
| <|endoftext|> |
|
|
| <|startoftext|> |
| <author>புதுமைப்பித்தன்</author> |
| <genre>சிறுகதை</genre> |
| <content> |
| இவர் மெக்ஸிகோ தென் அமெரிக்காவில் இருக்கிற |
| தென்றார் இவருடைய நண்பர் பூகோள சாஸ்திரம் வேறு மாதிரிக் கூறுகிறதென்றார் 17 |
| பால்வண்ணம் பிள்ளை தமது கட்சியை நிரூபிப்பதற்காக வெகு வேகமாக வீட்டிற்கு |
| வந்தார். |
| பால்வண்ணம் பிள்ளைக்கும் அவருடைய மனைவியாருக்கும் கர்ப்பத் தடையில் |
| நம்பிக்கை கிடையாது. அதன் விளைவு வருஷம் தவறாது ஒரு குழந்தை. தற்பொழுது |
| பால்வண்ண சந்ததி நான்காவது எண்ணிக்கை; பிறகு வருகிற சித்திரையில் நம்பிக்கை. |
| இப்படிப்பட்ட குடும்பத்தில் பால்வண்ணக் 'கொடுக்கு'கள் 'பேபி ஷோ'க்களில் பரிசு |
| பெறும் என்று எதிர்பார்க்க முடியாது. பால்வண்ணம் பிள்ளையின் சகதர்மிணி, |
| உழைப்பிலும் பிரசவத்திலும் சோர்ந்தவள். தேகத்தின் சோர்வினாலும், உள்ளத்தின் |
| களைப்பினாலும் ஏற்பட்ட பொறுமை. |
| கைக்குழந்தைக்கு முந்தியது சவலை. கைக் குழந்தை பலவீனம். தாயின் களைத்த தேகம் |
| குழந்தையைப் போஷிக்கச் சக்தியற்று விட்டது. இப்படியும் அப்படியுமாக, தர்ம |
| ஆஸ்பத்திரியின் மருந்துத் தண்ணீரும், வாடிக்கைப் பால்காரனின் கடன் பாலுமாக, |
| குழந்தைகளைப் போஷித்து வருகிறது. அந்த மாதம் பால் 'பட்ஜட்' - எப்பொழுதும் |
| போல் - நான்கு ரூபாய் மேலாகி விட்டது. |
| இம்மாதிரியான நிலைமையில் பால் பிரச்னையைப் பற்றி பால்வண்ணம் பிள்ளையின் |
| சகதர்மிணிக்கு ஒரு யுக்தி தோன்றியது. அது ஒன்றும் அதிசயமான யுக்தியல்ல. |
| குழந்தைகளுக்கு உபயோகமாகும்படி ஒரு மாடு வாங்கி விட்டால் என்ன என்பதுதான். |
| தெய்வத்தின் அருளைத் திடீரென்று பெற்ற பக்தனும், புதிதாக ஒரு உண்மையைக் |
| கண்டுபிடித்த விஞ்ஞானியும், 'சும்மா' இருக்க மாட்டார்கள். சளசளவென்று |
| கேட்கிறவர்கள் காது புளிக்கும்படி சொல்லிக் கொட்டி விடுவார்கள். பால்வண்ணம் |
| பிள்ளையின் மனைவிக்கும் அதே நிலை ஏற்பட்டது. |
| பிள்ளையவர்கள் வீட்டிற்கு வரும்பொழுது, அவர் ஸ்கூல் பைனல் வகுப்பில் |
| உபயோகித்த பூகோளப் படம் எங்கு இருக்கிறது, மாடியிலிருக்கும் ஷெல்பிலா, அல்லது |
| அரங்கிலிருக்கும் மரப் பெட்டியிலா என்று எண்ணிக் கொண்டு வந்தார். |
| </content> |
| <|endoftext|> |
|
|
| <|startoftext|> |
| <author>புதுமைப்பித்தன்</author> |
| <genre>சிறுகதை</genre> |
| <content> |
| பால்வண்ணம் |
| பிள்ளையின் மனைவிக்கும் அதே நிலை ஏற்பட்டது |
| பிள்ளையவர்கள் வீட்டிற்கு வரும்பொழுது, அவர் ஸ்கூல் பைனல் வகுப்பில் |
| உபயோகித்த பூகோளப் படம் எங்கு இருக்கிறது, மாடியிலிருக்கும் ஷெல்பிலா, அல்லது |
| அரங்கிலிருக்கும் மரப் பெட்டியிலா என்று எண்ணிக் கொண்டு வந்தார் 18 |
| வீட்டிற்குள் ஏறியதும், "ஏளா! அரங்குச் சாவி எங்கே?" என்று கேட்டுக்கொண்டே |
| மாடிக்குச் சென்று ஷெல்பை ஆராய்ந்தார். |
| அவர் மனைவி சாவியை எடுத்துக் கொண்டு பின் தொடர்ந்தாள். அவளுக்குப் பால் |
| நெருக்கடியை ஒழிக்கும் மாட்டுப் பிரச்னையை அவரிடம் கூற வேண்டும் என்று |
| உதடுகள் துடித்துக் கொண்டிருந்தன. ஆனால் மெக்ஸிகோ பிரச்னையில் |
| ஈடுபட்டிருக்கும் பால்வண்ணம் பிள்ளையின் மனம் அதை வரவேற்கும் நிலையில் |
| இல்லை. |
| "என்ன தேடுதிய?" என்றாள். |
| "ஒரு பொஸ்தகம். சாவி எங்கே?" |
| "இந்தாருங்க. ஒங்ககிட்ட ஒண்ணு சொல்லுணுமே! இந்தப் புள்ளைகளுக்குப் பால் |
| செலவு சாஸ்தியா இருக்கே! ஒரு மாட்டெத்தான் பத்து நூறு குடுத்து புடிச்சிப்புட்டா |
| என்ன?" என்றாள். |
| "இங்கே வர வேண்டியதுதான், ஒரே ராமாயணம். மாடு கீடு வாங்க முடியாது. எம் |
| புள்ளெய நீத்தண்ணியை குடிச்சு வளரும்!" என்று சொல்லி விட்டார். மெக்ஸிகோ வட |
| அமெரிக்காவிலிருந்தால் பிறகு ஏன் அவருக்குக் கோபம் வராது? |
| பால் பிரச்னை அத்துடன் தீர்ந்து போகவில்லை. அவர் மனைவியின் கையில் இரண்டு |
| கெட்டிக் காப்பு இருந்தது. அவளுக்குக் குழந்தையின் மீதிருந்த பாசத்தினால், அந்தக் |
| காப்புகள் மயிலைப் பசுவும் கன்றுக் குட்டியுமாக மாறின. |
| இரண்டு நாள் கழித்துப் பால்வண்ணம் பிள்ளை ஆபீஸிலிருந்து வந்து புறவாசலில் கை |
| கழுவச் சென்ற பொழுது, உரலடியில் கட்டியிருந்த கன்று, வைக்கோல் அசை போட்டுக் |
| கொண்டிருக்கும் மாட்டைப் பார்த்து 'அம்மா' வென்று கத்தியது. |
| "ஏளா?" என்று கூப்பிட்டார். |
| </content> |
| <|endoftext|> |
|
|
| <|startoftext|> |
| <author>புதுமைப்பித்தன்</author> |
| <genre>சிறுகதை</genre> |
| <content> |
| "ஏளா " என்று கூப்பிட்டார் 19 |
| மனைவி சிரித்துக் கொண்டே - உள்ளுக்குள் பயம் தான் - வந்தாள். |
| "மாடு எப்பொழுது வந்தது? யார் வாங்கிக் கொடுத்தா?" என்றார். |
| "மேலவீட்டு அண்ணாச்சி வாங்கித் தந்தாஹ. பாலு ஒரு படி கறக்குமாம்!" என்றாள். |
| "உம்" என்றார். |
| அன்று புதுப்பால், வீட்டுப் பால் காப்பி கொண்டு வந்து வைத்துக் கொண்டு |
| கணவரைத் தேடினாள். அவர் இல்லை. |
| அதிலிருந்து பிள்ளையவர்கள் காப்பியும் மோரும் சாப்பிடுவதில்லை. |
| அவர் மனைவிக்கு மிகுந்த வருத்தம். ஒரு பக்கம் குழந்தைகள். மற்றொரு பக்கம் |
| புருஷன் என்ற குழந்தை. வம்சவிருத்தி என்ற இயற்கை விதி அவளை வென்றது. |
| இப்படிப் பதினைந்து நாட்கள். |
| மாட்டை என்ன செய்வது? |
| அன்று இரவு எட்டு மணி இருக்கும். பால்வண்ணம் பிள்ளையும் சுப்புக் கோனாரும் |
| வீட்டினுள் நுழைந்தார்கள். |
| "மாட்டைப் பாரும். இருபத்தஞ்சி ரூபா!" என்றார். |
| "சாமி! மாடு அறுபது ரூபாய் பெறுமே!" என்றார் சுப்புக் கோனார். "இருபத்தைந்து |
| தான். உனக்காக முப்பது ரூபாய் என்ன? இப்பொழுதே பிடித்துக் கொண்டு போக |
| வேண்டும்!" |
| "சாமி! ராத்திரியிலா? நாளைக்கு விடியன்னே பிடிச்சிக்கிறேன்!" என்றார் |
| சுப்புக்கோனார். |
| </content> |
| <|endoftext|> |
|
|
| <|startoftext|> |
| <author>புதுமைப்பித்தன்</author> |
| <genre>சிறுகதை</genre> |
| <content> |
| நாளைக்கு விடியன்னே பிடிச்சிக்கிறேன் " என்றார் |
| சுப்புக்கோனார் 20 |
| "உம் இப்பவே?" |
| மாட்டையவிழ்த்தாய் விட்டது. |
| மனைவி 'மாடு எழுபது ரூபாயாயிற்றே, குழந்தைகளுக்குப் பாலாயிற்றே' என்று |
| தடுத்தாள். மேலும் வரும்படி வேறு வருகிறதாம். |
| "என் புள்ளெகள் நீத்தண்ணி குடிச்சு வளந்துக் கிடும்" என்றார் பிள்ளை. |
| சுப்புக் கோனார் மாட்டை அவிழ்த்துக் கொண்டு போகும் பொழுது, மூத்த பையன், |
| "அம்மா! என் கன்னுக் குட்டி!" என்று எழுந்து உட்கார்ந்து கொண்டு அழுதான். |
| "சும்மா கெட, சவமே!" என்றார் பால்வண்ணம் பிள்ளை. |
| மணிக்கொடி, 30-12-1934 |
| 65. பறிமுதல் |
| 43 நெர். கைதி ஒரு பயங்கரப் புரட்சிக்காரன். அவன் பேரில் அரசியல் விஷயமாகக் |
| கொலைக் குற்றம் சாட்டப்பட்டு, கோர்ட்டில் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. |
| பயங்கரப் புரட்சிக்காரன் என்று சமுதாயத்தின் சார்பாக அரசாங்கம் முடிவு |
| கட்டிவிட்டது. ஆனால் அவனைப் பார்த்தால் அப்படித் தோன்றாது. இயற்கைச் |
| சிருஷ்டியில் வசீகரப்படுத்தும் ஒரு ஜீவன் இருந்தால் அது 43 நெர். கைதி. |
| அவன் இருக்கும் அறை தனி. வெளிச்சம் வருவதற்கு அல்லாமல் காற்று வருவதற்கு |
| மட்டும் ஒரு சிறிய துவாரம். அதன் வழியாகப் பெரிய பூனை நுழையலாம். ஆனால், |
| புரட்சிக்காரர்கள் பூனை வடிவம் எடுக்கக்கூடும் என்று பயந்தோ என்னவோ அதிலும் |
| இரும்புக் கம்பி. |
| </content> |
| <|endoftext|> |
|
|
|
|