Naveen934 commited on
Commit
cf1793f
·
verified ·
1 Parent(s): d218b47

Upload tamil_pretraining_data.txt with huggingface_hub

Browse files
Files changed (1) hide show
  1. tamil_pretraining_data.txt +608 -0
tamil_pretraining_data.txt ADDED
@@ -0,0 +1,608 @@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
1
+ <|startoftext|>
2
+ <author>புதுமைப்பித்தன்</author>
3
+ <genre>சிறுகதை</genre>
4
+ <content>
5
+ புதுமைப்பித்தன் சிறுகதை: பல ரித்த
6
+ ,
7
+ ரு மிண்தொகுப்புத்திட்டட் எண;
8
+ பாகம் 4 , சிறுகதைகள் 61-90
9
+ putumaippittan
10
+ part 4, short stories 61-90
11
+ In Tamil script, unicodeutf-8 format
12
+ Acknowledgements:
13
+ Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this
14
+ work.
15
+ This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-
16
+ reading of the output file.
17
+ Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne,
18
+ Switzerland.
19
+ of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
20
+ Details of
21
+ https:www.projectmadurai.org
22
+ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
23
+ </content>
24
+ <|endoftext|>
25
+
26
+ <|startoftext|>
27
+ <author>புதுமைப்பித்தன்</author>
28
+ <genre>சிறுகதை</genre>
29
+ <content>
30
+ projectmadurai org
31
+ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact 2
32
+ பாகம் 4 , சிறுகதைகள் 61-90
33
+ உள்ளடக்கம்
34
+ 61. நொண்டி 76. சாப விமோசனம்
35
+ 62. ஒப்பந்தம் 77. சாளரம்
36
+ 63. ஒரு கொலை அனுபவம் 78. சாமாவின் தவறு
37
+ 64. பால்வண்ணம் பிள்ளை 79. சாயங்கால மயக்கம்
38
+ 65. பறிமுதல் 80. சமாதி
39
+ 66. பாட்டியின் தீபாவளி 81. சமாதி
40
+ 67. பித்துக்குளி 62. சாமியாரும் குழந்தையும் சீடையும்
41
+ 68. பொய்க் குதிரை 83. சணப்பன் கோழி
42
+ 69. 'பூசனிக்காய்' அம்பி 84. சங்குத் தேவனின் தர்மம்
43
+ 70. புரட்சி மனப்பான்மை 85. செல்வம்
44
+ 71. புதிய கூண்டு 86. செவ்வாய்
45
+ 72. புதிய கந்த புராணம் 87. சிற்பியின் நரகம்
46
+ 73. புதிய நந்தன் 68. சித்தம் போக்கு
47
+ 74. புதிய ஒளி 89. சித்தி
48
+ 75. ராமனாதனின் கடிதம் 90. சிவசிதம்பர சேவுகம்
49
+ 61. நொண்டி
50
+ இந்தச் சம்பவம் எனக்குக் கொஞ்ச நாட்களுக்கு முன் நேர்ந்தது.
51
+ ரயிலில், ஒருவரும் இல்லாத தனி வண்டியாகப் பார்த்து, செளகரியமாகப் படுக்கையை
52
+ விரித்துவிட்டு, தொந்தரவில்லாமல் பிரயாணம் செய்யலாம் என்று
53
+ நினைத்துக்கொண்டே உட்காருமுன், மறுபடியும் வண்டியின் கதவு திறக்கப்பட்டது.
54
+ "ஜாக்கிரதையாக ஏறுங்கள்; தரையிலிருந்து படி வெகு உயரமாக இருக்கிறது" என்றது
55
+ ஒரு குரல்.
56
+ </content>
57
+ <|endoftext|>
58
+
59
+ <|startoftext|>
60
+ <author>புதுமைப்பித்தன்</author>
61
+ <genre>சிறுகதை</genre>
62
+ <content>
63
+ ரயிலில், ஒருவரும் இல்லாத தனி வண்டியாகப் பார்த்து, செளகரியமாகப் படுக்கையை
64
+ விரித்துவிட்டு, தொந்தரவில்லாமல் பிரயாணம் செய்யலாம் என்று
65
+ நினைத்துக்கொண்டே உட்காருமுன், மறுபடியும் வண்டியின் கதவு திறக்கப்பட்டது
66
+ "ஜாக்கிரதையாக ஏறுங்கள்; தரையிலிருந்து படி வெகு உயரமாக இருக்கிறது" என்றது
67
+ ஒரு குரல் 3
68
+ "அதற்கென்ன, நான் கெட்டியாகத்தான் பிடித்துக் கொண்டிருக்கிறேன்" என்றது
69
+ மற்றொரு குரல்.
70
+ கதர்குல்லாய் அணிந்த தலை, பிறகு இரும்புக் கம்பியைக் கெட்டியாகப் பிடித்துத்
71
+ தொங்கிக் கொண்டிருக்கும் இரு கைகள். மெதுவாகத் தடித்த சரீரத்தை அப்படியே
72
+ உயர இழுக்கும்பொழுது, மரக்கட்டைகள் ரயில் வண்டியின் படிகளில் இடிபடும் சப்தம்
73
+ கேட்டது.
74
+ மனிதனின் உடம்பு மேலே வந்ததும், தொள தொளவென்று பஞ்சகச்சம்
75
+ வைத்துக்கட்டிய வேஷ்டிக்கிடையில் இரண்டு மரக்கால்கள் தெரிந்தன.
76
+ "சரிதானே ஸார்" என்று வெளியே யிருந்த குரல் கேட்டது.
77
+ "ஆமாம் அப்பா" என்றார் வந்தவர்.
78
+ "இதோ இருக்கிறது. உங்கள் கைத்தடியும் மூட்டைகளும்."
79
+ வேலைக்காரன் உள்ளே வந்து கையிலிருந்த மூட்டைகளை மேற்பலகையில்
80
+ ஒவ்வொன்றாக வைத்தான்.
81
+ "ஐந்து மூட்டைகள், பட்சணங்கள், விளையாட்டுப் பொம்மைகள், கொட்டு,
82
+ விளையாட்டுத் துப்பாக்கி, புதிதாக வாங்கிய துணிகள்."
83
+ "சரி! சரி!"
84
+ "செளகரியமாய்ப் போய்விட்டு வரணும்" என்று கும்பிட்டான்.
85
+ "உன் உடம்பையும் பார்த்துக் கொள்" என்று ஒரு ரூபாயை அவன் கையில் கொடுத்து
86
+ விட்டுச் சிரித்தார்.
87
+ </content>
88
+ <|endoftext|>
89
+
90
+ <|startoftext|>
91
+ <author>புதுமைப்பித்தன்</author>
92
+ <genre>சிறுகதை</genre>
93
+ <content>
94
+ "
95
+ "செளகரியமாய்ப் போய்விட்டு வரணும்" என்று கும்பிட்டான்
96
+ "உன் உடம்பையும் பார்த்துக் கொள்" என்று ஒரு ரூபாயை அவன் கையில் கொடுத்து
97
+ விட்டுச் சிரித்தார் 4
98
+ அவனும் கதவைச் சாத்திக் கொண்டு போய்விட்டான்.
99
+ வந்தவருக்கு வயது முப்பது அல்லது முப்பத்தைந்திற்கு மேல் இராது; தலை பூராவும்
100
+ நரைத்துவிட்டது. கதர் உடைதான். நல்ல கறுத்து அடர்ந்த மீசை. திடீரென்று வந்த
101
+ ஊனத்தினால், உழைப்பு நின்றுவிட அதனால் ஏற்பட்ட உடல் பருமன்.
102
+ வந்தவர் முகத்தைக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டு, "பீடி குடித்தால்
103
+ உங்களுக்குத் தொந்தரவாக இருக்காதே?" என்றார்.
104
+ "தாராளமாகக் குடியுங்கள்."
105
+ அந்தப் பார்வை, அந்தக் குரல் எங்கோ கேட்ட மாதிரி இருக்கிறது. எப்பொழுது?
106
+ அதுதான் ஞாபகம் வரவில்லை.
107
+ அவரும் என்னையே கவனித்துக் கொண்டு இருந்தார். அவருக்கும்
108
+ பிடிபடவில்லைபோல் இருக்கிறது.
109
+ இப்படி மரியாதைக் குறைவாக வெருகுபோல் விழிப்பதில் கூச்சமாயிருந்ததால்
110
+ முகத்தைக் கொஞ்சம் வேறு பக்கம் திருப்பினேன். ஆனால் இந்த மனம் இருக்கிறதே!
111
+ மறுபடியும் கண்கள் அந்த திசையே நோக்கின.
112
+ "தங்களை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறதே. எனக்குப் பிடிபடவில்லை" என்றேன்.
113
+ "அப்படித்தான் எனக்கும் இருக்கிறது" என்றார்.
114
+ "என் பெயர் ஹரிஹரய்யர். ரெவினியு இன்ஸ்பெக்டர்" என்றேன்.
115
+ அவரும் கொஞ்சம் யோசித்தார். "ஆமாம் ஸார், நாம் சென்னையில் நான்கு
116
+ வருஷங்களுக்கு முன் சந்தித்ததாக ஞாபகம்" என்றார்.
117
+ </content>
118
+ <|endoftext|>
119
+
120
+ <|startoftext|>
121
+ <author>புதுமைப்பித்தன்</author>
122
+ <genre>சிறுகதை</genre>
123
+ <content>
124
+ அவரும் கொஞ்சம் யோசித்தார் "ஆமாம் ஸார், நாம் சென்னையில் நான்கு
125
+ வருஷங்களுக்கு முன் சந்தித்ததாக ஞாபகம்" என்றார் 5
126
+ "ஆமாம்! ஆமாம்! தாங்கள்தான் தொண்டர் ராமகிருஷ்ணனோ?"
127
+ "ஆமாம்! இந்தக் கால்கள் தடியடியில் போகும்வரை தொண்டனாக இருந்தேன்."
128
+ நினைவு வந்து விட்டது. நான்கு வருடங்களுக்கு முன் என்ன அழகு? என்ன வாலிபம்!
129
+ மெலிந்ததாயினும் நல்ல கட்டுள்ள உடல். அவரைப் பற்றி நினைவிருக்க வேண்டிய
130
+ காரணங்கள் உண்டு. ஆமாம், அவரைப் பற்றிய ஒரு காதல் விஷயம் நன்றாக
131
+ நினைவிற்கு வருகிறது. அந்தப் பெண் மணோன்மணி. மறியலுக்காக வந்த ஸ்திரீ
132
+ தொண்டர்களில் ஒருத்தி. திருமணத்தை எதிர்நோக்கிக்கொண்டு இருந்தார்கள். என்ன
133
+ காதல், என்ன குதூகலம்! அப்பொழுதுதான் அவர்களைச் சந்தித்தேன்.
134
+ எனது கண்கள் மேலே பலகையில் இருந்த விளையாட்டுச் சாமான்களில் சென்றன.
135
+ ரயில் வண்டி தண்டவாளங்களில் சற்றுக் குதித்துச் செல்லும்பொழுது, அந்த
136
+ வேலைக்காரனது வார்த்தைகள் நினைவிற்கு வந்தன.
137
+ "ஜந்து மூட்டைகள், பக்ஷணங்கள், விளையாட்டுப் பொம்மைகள், கொட்டு,
138
+ விளையாட்டுத் துப்பாக்கி, புதிதாக வாங்கிய துணி."
139
+ உடனே பளிச்சென்று எனது மனம், முடிவுபெறாத காதல் கதையின் கதைகளைத்
140
+ தானே கட்டிக்கொண்டு போக ஆரம்பித்தது. உலகத்தில் எந்தப் பாகத்திலும்
141
+ எழுதப்படும் காதல் கதைகளைப் போலத்தான். தேச விடுதலைக்காகக் காலிழந்த
142
+ காதலன். தனக்காகக் காத்திருந்த கன்னியை மணந்து கொள்வது.
143
+ நினைக்க நினைக்க அதன் அழகு, அதன் பொலிவு, அதன் தியாகம் எல்லாம்
144
+ புஸ்தகத்தில் இருக்கிற மாதிரி வெகு எளிதாக நிறைவேறிவிட்டன. இந்த மாதிரிச்
145
+ சம்பவங்களைப் படிப்பதில் எவ்வளவு ஆனந்தம்! அப்படியே தன்னை மறந்து
146
+ விடுகிறோம். அந்த உயர்ந்த லட்சியத்தில் - உலகத்தில் அப்படியிருக்கிறதா?
147
+ ஏமாற்றந்தான்.
148
+ இதைவிட வேறு மாதிரி என் மனது கதை திரிக்க ஆரம்பித்தது. ஒரு வேளை அவன்
149
+ கால்களை இழக்குமுன் திருமணமாகியிருக்கலாம். காலிழந்த கணவனின் பத்தினிப்
150
+ </content>
151
+ <|endoftext|>
152
+
153
+ <|startoftext|>
154
+ <author>புதுமைப்பித்தன்</author>
155
+ <genre>சிறுகதை</genre>
156
+ <content>
157
+ இதைவிட வேறு மாதிரி என் மனது கதை திரிக்க ஆரம்பித்தது ஒரு வேளை அவன்
158
+ கால்களை இழக்குமுன் திருமணமாகியிருக்கலாம் காலிழந்த கணவனின�� பத்தினிப் 6
159
+ பெண். அவனது சுகத்திற்காகவே தன்னைத் தியாகம் செய்து கொள்ளும் ஒரு பத்தினிப்
160
+ பெண்ணின் உருவம் எனது மனக் கண்ணின் முன் தோன்றலாயிற்று.
161
+ அவனுக்கு வாழ்க்கை, சுகமா அல்லது இன்னலா, அதை அறியும்படி ஒரு சிறிய அவா
162
+ வரவரப் பெரிய ஆசையாகிவிட்டது.
163
+ நான் பேசிக் கொண்டுதான் இருந்தேன். மனது அதிவேகமாக வேறு பக்கம்
164
+ ஓடிக்கொண்டிருந்தது.
165
+ "அவனுக்கு மூன்று குழந்தைகள் இருக்கலாம். இரண்டு ஆண்கள், ஒரு பெண்.
166
+ பொம்மைகள் பெண்ணுக்கு; மற்றவை ஆண்களுக்கு; புதிய துணி மனைவிக்கு."
167
+ திடீரென்று "உங்களுக்குக் குழந்தைகள் இருக்கின்றனவா?" என்றேன்.
168
+ "இல்லை" என்றார்.
169
+ மரியாதைக் குறைவாக நடந்துகொண்ட மாதிரி என் மனதில் ஒரு குழப்பம் ஏற்பட்டது.
170
+ "மன்னிக்க வேண்டும், சாமான்களைக் கண்டவுடன் கேட்டேன். காதில் விழுவதைக்
171
+ கேட்காமலிருக்கலாம். கண்டதைக் கேட்காமலிருக்கலாம். கண்டதை வைத்துக்
172
+ கொண்டு அனுமானிக்கலாம்" என்றேன்.
173
+ புன்சிரிப்புடன், "இன்னும் எனக்குக் கலியாணங்கூட ஆகவில்லை." என்றார்.
174
+ திடீரென்று ஞாபகப்படுத்திக் கொண்டவன் போல், "மன்னிக்க வேண்டும்,
175
+ மனோன்மணியம்மாள்...?"
176
+ "தங்களுக்கு நல்ல ஞாபகம் இருக்கிறது" என்றார்.
177
+ "மனோன்மணியம்மாள் யாரையோ கலியாணம் செய்து கொண்டதாகவும் ஒரு
178
+ வதந்தி..."
179
+ </content>
180
+ <|endoftext|>
181
+
182
+ <|startoftext|>
183
+ <author>புதுமைப்பித்தன்</author>
184
+ <genre>சிறுகதை</genre>
185
+ <content>
186
+ " 7
187
+ "மிஸ்டர் பார்வதி நாதனை..."
188
+ "தங்கள் காயங்கள்தான் அதற்குக் காரணம் என்றும்..." முகத்தை நன்றாகக்
189
+ கவனித்தேன். முகம் வெட்கத்தால் சிவந்தது.
190
+ தோற்றுப்போன கட்சியை தோற்றுவிட்டது என்று தெரிந்த பிறகும் வாதிப்பவர் போல்,
191
+ ஒரு பரபரப்புடன் பேசிக்கொண்டே போனார்.
192
+ "மிஸ்டர் பார்வதிநாதனுடைய பெயருடன் என்னையும் முடிச்சு போடுவது வெறும்
193
+ அபத்தம். நான் ஆஸ்பத்திரியிலிருந்து வெளியேறியதும், அவள் என்னைக் கலியாணம்
194
+ செய்துகொள்ள நான் அனுமதிக்கவேயில்லை. அனுமதிப்பேனா? எதற்கு ஒருவனைக்
195
+ கலியாணம் செய்து கொள்வது? ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும், ஒவ்வொரு
196
+ நிமிஷமும், ஏன், ஒவ்வொரு வினாடியும் கூடி வாழவே ஒருவனைக் கலியாணம் செய்து
197
+ கொள்வது. அவனுக்கு என்னைப்போல் கால் இல்லாமலிருந்தால் மரணம் வரை
198
+ துன்பந்தான். தியாகத்தைப் போற்றுகிறேன். ஆனால் எனக்காக ஒரு பெண்ணின்
199
+ வாழ்க்கையையே தியாகமாக்க நான் சம்மதிக்க மாட்டேன். நான் நடக்கும் பொழுது
200
+ எல்லாம் இந்த மர���் கால் 'லொட்டு லொட்டு!' என்று இடியாக முழங்குகிறது. அவளை
201
+ முத்தமிட நெருங்குமுன் இந்த சப்தந்தானே காதைத் துளைக்கும்? அதை அவள் சகித்துக்
202
+ கொண்டு இருக்கும்படி செய்வேனோ? அவள் வேண்டுவது புருஷன்; நான்
203
+ வேண்டுவது அடிமை, பணியாள், அல்லது தாய், இது ஒத்து வருமா?"
204
+ பிறகு மெளனமாக இருந்தார். அவர் சொல்வது சரி என்று பட்டது. அவளைக் குற்றம்
205
+ சொல்ல முடியுமா? ஆனால் எனக்கு என்னவோ சுவாரஸ்யமான கதையின் இறுதியைப்
206
+ பிய்த்துவிட்ட மாதிரிப் பட்டது. எனது கதை உணர்ச்சி சாந்தியடையவில்லை.
207
+ என்னவோ ஏமாற்றப்பட்ட மாதிரிதான் இருந்தது.
208
+ "மனோன்மணியம்மாளுக்குக் குழந்தைகள் இருக்கின்றனவா?" என்று திடீரென்று
209
+ கேட்டேன்.
210
+ </content>
211
+ <|endoftext|>
212
+
213
+ <|startoftext|>
214
+ <author>புதுமைப்பித்தன்</author>
215
+ <genre>சிறுகதை</genre>
216
+ <content>
217
+ "மனோன்மணியம்மாளுக்குக் குழந்தைகள் இருக்கின்றனவா " என்று திடீரென்று
218
+ கேட்டேன் 8
219
+ "ஒரு பெண்ணும் இரண்டு ஆணும்; இவைகள் எல்லாம் அவர்களுக்குத்தான். அவள்
220
+ புருஷன் என்மேல் அதிகப் பிரியமாக இருக்கிறார்!"
221
+ அதற்குள் அந்தச் சிறு டன்னல் வழியாக ரயில் சென்று பிளாட்பாரத்தில் நின்றது.
222
+ அவருக்கு உதவி செய்யும்படி நான் எழுந்தேன். அதற்குள் ஒரு மனிதனின் இரண்டு
223
+ கரங்கள், திறந்த கதவின் வழியாக நீட்டப்பட்டன.
224
+ அந்த மனிதனுக்குப் பின், அவனுடைய மனைவி குழந்தைகளுடன் நின்றாள் -
225
+ அதரத்தில் புன்சிரிப்பு.
226
+ குழந்தைகள், வெளியில் வைத்த சாமான்களைத் தூக்கிக்கொண்டன. இந்த நொண்டி
227
+ பிளாட்பாரத்தில் இறங்கியதும் குழந்தைகள் அவரைச் சுற்றிக் கொண்டன.
228
+ எல்லோரும் வெளியே புறப்பட்டார்கள். அந்தப் பெண் குழந்தை, அவர் அக்குளில்
229
+ கொடுத்து ஊன்றி நடந்த தடிகளைத் தனது சிறிய விரல்களால் பிடித்துக்கொண்டே
230
+ நடந்தது.
231
+ 1934
232
+ 62. ஒப்பந்தம்
233
+ பார்வதிநாதனுக்கு பி.ஏ. பாசாகிவிட்டது. அது மட்டுமல்ல. ஸர்வீஸ் கமிஷன்
234
+ பரீட்சையிலும் முதல் தொகுதியில் வந்துவிட்டான். சீக்கிரத்தில் வேலையாகிவிடும்.
235
+ கலியாணம் ஒன்றுதான் பாக்கி. அதையும் செய்து முடித்துவிட்டால் பையனைப் பற்றிய
236
+ கவலை ஓய்ந்துவிட்டது என்று நினைத்தார் சங்கரலிங்கம் பிள்ளை.
237
+ ஒரு நாள் காலை. பிள்ளையவர்கள், தாம்பிரவர்ணியின் ஸ்நான இன்பம், நீண்ட பூஜை
238
+ முதலியவற்றுக்கு முற்றுப்புள்ளியான காலை போஜனத்தை முடித்துக் கொண்டதும், சுக
239
+ ஜீவனத்தின் குதூகலத்தை அனுபவித்தவராய், "ஏளா, அங்கே என்ன செய்யுதே" என���று
240
+ தமது பத்தினியைக் கூப்பிட்டார்.
241
+ </content>
242
+ <|endoftext|>
243
+
244
+ <|startoftext|>
245
+ <author>புதுமைப்பித்தன்</author>
246
+ <genre>சிறுகதை</genre>
247
+ <content>
248
+ ஒரு நாள் காலை பிள்ளையவர்கள், தாம்பிரவர்ணியின் ஸ்நான இன்பம், நீண்ட பூஜை
249
+ முதலியவற்றுக்கு முற்றுப்புள்ளியான காலை போஜனத்தை முடித்துக் கொண்டதும், சுக
250
+ ஜீவனத்தின் குதூகலத்தை அனுபவித்தவராய், "ஏளா, அங்கே என்ன செய்யுதே" என்று
251
+ தமது பத்தினியைக் கூப்பிட்டார் 9
252
+ "என்ன, நீங்களா கூப்பிட்டிய; இன்னா வாரேன்."
253
+ "நம்ம குட்டிக்கு" - பார்வதிநாதனின் செல்லப் பெயர் - "பொண்ணு பார்க்க
254
+ வேண்டாமா?"
255
+ "எனக்கென்ன தெரியும்? நீங்க சொல்லுதது சதி. நம்ப சிங்கிகுளத்துப் பொண்ணெப்
256
+ பாத்தா என்ன? பொண்ணு நல்ல செவத்த பொண்ணு; கண்ணும் முளியும் அப்படியே
257
+ பாத்துக்கிட்டே இருக்கலாம். ஆனா, புள்ளையவாளுக்குப் பிடிக்குமோ என்னமோ?
258
+ இந்தக் காலத்துப் புள்ளையளை என்ன சொல்ல?"
259
+ "அதாரு, சிங்கிகுளத்திலே?"
260
+ "என்ன உங்களுக்குத் தெரியாதாக்கும்? பேட்டையக்கா இருக்காஹள்ள,
261
+ பார்வதியக்கா, அவளுக்கு ஒண்ணுவிட்ட தம்பி மக."
262
+ "சரி! சரி! நம்ம சுப்பராயப்பிள்ளை மகளா? என்ன நகை போடுவா?"
263
+ "அது எனக்கென்ன தெரியும்? கோமதியக்காக்கிட்ட விசாரிச்சா தெரியும். நா அவளைக்
264
+ கூப்பிடுதேன்" என்று வெளியே சென்று ஒரு விதவையைக் கூப்பிட்டு வந்தாள்.
265
+ "அம்மா, வா. இரி. நம்ம குட்டிக்கு இவ என்னமோ சிங்கி கொளத்துப் பொண்ணு
266
+ ஒண்ணு இருக்காமே. அதைப் பாக்கலாமென்னு சொல்லுதா. நீ என்னமோ,
267
+ பாத்திருக்கியாமே. அதெப்படி நகை என்னம்மா போடுவா?" என்று கேட்டார்
268
+ சங்கரலிங்கம் பிள்ளை.
269
+ "அதா, நல்ல எடமாச்சே. பொண்ணு தங்கமான கொணம். அவுஹளும் அப்படித்தான்.
270
+ என்னமோ ரெண்டு ஆயிரத்துக்கு செய்வாஹ இன்னு சொல்லி இருந்தாஹ."
271
+ </content>
272
+ <|endoftext|>
273
+
274
+ <|startoftext|>
275
+ <author>புதுமைப்பித்தன்</author>
276
+ <genre>சிறுகதை</genre>
277
+ <content>
278
+ அவுஹளும் அப்படித்தான்
279
+ என்னமோ ரெண்டு ஆயிரத்துக்கு செய்வாஹ இன்னு சொல்லி இருந்தாஹ " 10
280
+ "இம்புட்டுத்தானே! சதி, சதி. பேச்செ விட்டுத் தள்ளு. நம்ம பேட்டைப்பிள்ளை
281
+ ஐயாயிரம் நகை மருக, கலியாணச் செலவு ஒரு ரெண்டாயிரம் யென்று சொன்னாரே!"
282
+ "ஆமா, பொண்ணு கறுப்பில்லியா? எதுக்கும் கேட்டுப் பாருங்களேன்."
283
+ "சதி, நீ என்ன சொல்லுதே?"
284
+ "பாத்தா என்ன? நானும் அக்காளும் போயிட்டுத்தான் வாரமே!" என்றாள்.
285
+ "சதி, நாளைக்கு மேக்கெ சூலம். நாளைக் கழிச்சி உதயத்திலெ வண்டியப்
286
+ போட்டுகிட்டுப் போய் பாத்துட்டு வாருங்க. பொற��ு நாவன்னாவை விட்டு நான்
287
+ விசாரிக்கேன்."
288
+ "அய்யா, தபால்!" என்று தபால்காரன் உள்ளே நுழைந்து கவர்மென்டு முத்திரையிட்ட
289
+ நீண்ட 'ஸ்கோடா'வைக் கொடுத்தான்.
290
+ "நம்ம குட்டிக்குப் போல இருக்கு. ஏலே அய்யா!" என்று கூப்பிட்டார்.
291
+ "என்னப்பா?" என்று கீழே வந்தான் பார்வதிநாதன்.
292
+ கடிதத்தைப் பிரித்துப் பார்க்க, சென்னையில் குமாஸ்தா வேலையாகியிருப்பதாகவும்,
293
+ 25-ந் தேதி வந்து வேலை ஒப்புக்கொள்ளும்படியும் எழுதியிருந்தது.
294
+ வீட்டில் ஒரே குதூஹலம். தபால்காரன் 'பசஷிஸ்' தட்டாமல் போகவில்லை.
295
+ "ஏலே அய்யா! உனக்கு ஒங்கம்மை சிங்கிகொளத்துப் பொண்ணைப் பார்த்திருக்கிறா,
296
+ அப்பா. ஒனக்குப் புடிக்குமா?" என்று கேட்டார்.
297
+ பார்வதிநாதனுக்கு இந்த விஷயம் திடுக்கிடச் செய்தது. இந்த மாதிரி தகப்பனார்
298
+ பேசியது இதுதான் முதல் தரம். முகம் வெட்கத்தால் சிவந்தது. ஒன்றும் பேசாமல்
299
+ </content>
300
+ <|endoftext|>
301
+
302
+ <|startoftext|>
303
+ <author>புதுமைப்பித்தன்</author>
304
+ <genre>சிறுகதை</genre>
305
+ <content>
306
+ இந்த மாதிரி தகப்பனார்
307
+ பேசியது இதுதான் முதல் தரம் முகம் வெட்கத்தால் சிவந்தது ஒன்றும் பேசாமல் 11
308
+ மெத்தைக்கு ஏறினவன். "நாளைக்குப் புறப்பட வேண்டும்" என்று சொல்லிவிட்டுச்
309
+ சென்றுவிட்டான்.
310
+ 2
311
+ பெண்ணை எல்லாம் போய்ப் பார்த்துவிட்டு வந்தாகிவிட்டது. சங்கரலிங்கம்
312
+ பிள்ளையின் மனைவிக்கு சிங்கிகுளத்துப் பெண் பேரில் நோக்கம்.
313
+ சங்கரலிங்கம் பிள்ளைக்கு இப்பொழுது மகனுக்கு வேலையாகி விட்டதால் ரேட்டை
314
+ உயர்த்த வேண்டும் என்ற நோக்கம். நகை வழியாகக் குறைந்தது மூவாயிரமாவது
315
+ கறந்துவிடவேண்டும் என்ற தீர்மானம்.
316
+ நாவன்னா - நாராயண பிள்ளை அவர் பெயர் - அவரை விட்டுப் பெண்
317
+ வீட்டுக்காரரைத் தூண்டிவிடும்படி ஏற்பாடு செய்தார்.
318
+ நாராயண பிள்ளை ஒரு தடவை சிங்கிகுளத்துப் பக்கம் சென்றார். "நம்ம பையன்
319
+ ஒருவன் இருக்கிறான். கொடுக்கலாம். நல்ல இடம்!" என்றார். விஸ்தரிப்பானேன்?
320
+ பெண்ணின் தகப்பனார் மாப்பிள்ளை வீட்டாரைக் கண்டு பேசப் புறப்பட்டார். நண்பர்
321
+ நாவன்னா வீட்டில் ஜாகை.
322
+ மறுநாள்.
323
+ இருவரும் சங்கரலிங்கம் பிள்ளை வீட்டிற்கு வருகிறார்கள்.
324
+ "அண்ணாச்சி, இவுஹதான் நம்ம சிங்கிகுளத்துப் பிள்ளையவாள். இந்தப் பக்கத்திலே
325
+ வந்திருந்தாஹ பாத்துக்கிட்டுப் போகட்டுமே என்று கூட்டி வந்தேன்" என்றார்
326
+ நாவன்னா.
327
+ "அப்பிடியா! வாருங்க! வாருங்க! ஏளா! வெத்திலை செல்லத்தை எடு. அங்கே தூத்துட்டு
328
+ சம���க்காளத்தை விரி! காப்பி சாப்பிடுங்களேன். அம்மாளு ரெண்டு எலையைப் போடு!"
329
+ என்று துரிதப்படுத்தினார்.
330
+ </content>
331
+ <|endoftext|>
332
+
333
+ <|startoftext|>
334
+ <author>புதுமைப்பித்தன்</author>
335
+ <genre>சிறுகதை</genre>
336
+ <content>
337
+ அம்மாளு ரெண்டு எலையைப் போடு "
338
+ என்று துரிதப்படுத்தினார் 12
339
+ அவருடைய தர்மபத்தினியும், "வாருங்க! சேவிக்கேன்!" என்று வரவேற்றுவிட்டு, அவசர
340
+ அவசரமாகப் பெருக்கிவிட்டு, ஜமுக்காளத்தை எடுத்து விரித்து, வெற்றிலைச்
341
+ செல்லத்தை எடுத்து வைத்துவிட்டு உள்ளே சென்றாள்.
342
+ "நாங்கள் எல்லாம் காப்பி ஆச்சு. நீங்கள் ஆச்சா? இல்லவிட்டா முடிச்சுக்கொண்டு
343
+ வந்துவிடுங்கள்" என்றார் நாராயண பிள்ளை.
344
+ "நான் எல்லாம் ஆச்சு! வெத்திலைப் போடுங்க" என்றார் சங்கரலிங்கம் பிள்ளை.
345
+ பேச்சு மெதுவாகப் பெண் விஷயத்தில் வந்து விழுந்தது.
346
+ "ஆமாம்! பையனுக்கு வேலையும் ஆச்சே, முடிச்சுவிடலாம் என்று எண்ணுகிறேன்"
347
+ என்றார்.
348
+ "ஆமாம் அது செய்ய வேண்டியதுதான்" என்றார் சிங்கிகுளத்துப் பிள்ளை.
349
+ "உங்களுக்குத் தெரியாததா? நகை ஒரு ரெண்டாயிரம், மத்தச் செலவு ஒரு ஆயிரம்!"
350
+ என்றார்.
351
+ "என்ன, நம்ம பேட்டையப்பிள்ளை சொன்னதைக் கேட்டியள்ள?" என்றார்
352
+ சங்கரலிங்கம் பிள்ளை.
353
+ "ஆமா, ஆமா. அதிருக்கட்டும். இந்தக் காலத்திலே ஆயிரத்தைச் சொன்னாப் போதுமா?
354
+ சொன்னதைச் சொன்னபடி செய்யணும். அது நம்ம பிள்ளையவாள்தான். நான் ஒன்று
355
+ பொதுவாகச் சொல்லுகிறேன். நகை மூவாயிரம், மத்தது ரெண்டாயிரம்!" என்றார்.
356
+ எல்லாரும் சற்று மெளனம்.
357
+ "அண்ணாச்சி! நீங்க ஒரேடியா மொதொண்டாதிக. பிள்ளைவாள்! நீங்க காலைத்
358
+ தேச்சா பிரயோசனமில்லை. நல்ல இடம். பையனுக்கு நல்ல அதிர்ஷ்டம் கவர்மெண்டு
359
+ </content>
360
+ <|endoftext|>
361
+
362
+ <|startoftext|>
363
+ <author>புதுமைப்பித்தன்</author>
364
+ <genre>சிறுகதை</genre>
365
+ <content>
366
+ நீங்க காலைத்
367
+ தேச்சா பிரயோசனமில்லை நல்ல இடம் பையனுக்கு நல்ல அதிர்ஷ்டம் கவர்மெண்டு 13
368
+ வேலை. இனிசூபெக்டரு, தாசில்தாரா வரலாம் உங்க பெண்ணுக்கு ராஜயோகம்!"
369
+ என்று மத்தியஸ்தம் பேசினார் நாவன்னா.
370
+ "சதி! பொறவு நீங்க சொல்லுறப்பா என்னா?" என்றார் சிங்கிகுளத்துப் பிள்ளை.
371
+ "வேறெ என்ன அய்யா? இப்பவே வெத்தலை பாக்கு கைமாறிடுத்து. வர
372
+ வியாழக்கிழமை நல்ல தினம். அன்னைக்கி திருமங்கிலியத்திற்குப் பொன்னுருக்கி
373
+ விடுகிறது. சரிதானே பிள்ளைவாள்?" என்று ஒரு வெள்ளித் தாம்பாளத்தைச்
374
+ சங்கரலிங்கம் பிள்ளையின் தர்மபத்தினியிடம் வாங்கி அந்தச் சிறு சடங்கை நடித்து
375
+ முடித���தார்கள்.
376
+ சென்னையில் அன்று சாயங்காலம்.
377
+ பார்வதிநாதன் வேலை ஒப்புக்கொண்டாகிவிட்டது. தகப்பனார் கொடுத்த பணம்
378
+ கொஞ்சம் கையில் ஓட்டம். சினிமாவிற்குச் சென்றான்.
379
+ இவனுக்குப் பக்கத்தில் ஒரு ஆங்கிலோ இந்திய மாது - இளநங்கை -
380
+ உட்கார்ந்திருந்தாள்.
381
+ தகப்பனார் அன்று பெண் விஷயத்தைக் கேட்டதிலிருந்து அவனுக்கு ஒரு புதிய
382
+ உணர்ச்சி, இயற்கையின் தேவை, அடிக்கடி மனத்தில் சுற்றிக்கொண்டே இருந்தது.
383
+ பார்வதிநாதன் நல்ல பையன் தான். இதுவரை அந்த நினைப்பிற்கு அவகாசமில்லை.
384
+ ஆனால் அந்தத் தினத்திலிருந்து அவனது உடல் கட்டுக்கடங்கவில்லை.
385
+ அன்று இருவர் சினிமா பார்க்கவில்லை.
386
+ அந்த நங்கை ஐந்து ரூபாய்க்கு இரண்டு மணி நேரம் அவன் மனைவியாக இருக்கச்
387
+ சம்மதித்தாள். இருவரும் கடற்கரைக்குச் செல்லுகிறார்கள்.
388
+ </content>
389
+ <|endoftext|>
390
+
391
+ <|startoftext|>
392
+ <author>புதுமைப்பித்தன்</author>
393
+ <genre>சிறுகதை</genre>
394
+ <content>
395
+ அந்த நங்கை ஐந்து ரூபாய்க்கு இரண்டு மணி நேரம் அவன் மனைவியாக இருக்கச்
396
+ சம்மதித்தாள் இருவரும் கடற்கரைக்குச் செல்லுகிறார்கள் 14
397
+ அந்தச் சிங்கிகுளத்துப் பெண் மூவாயிரம் ரூபாயைப் பணயமாக வைத்து, அவனுடன்
398
+ வாழ்க்கையைப் பிணைத்துக் கொள்ளச் சம்மதிக்கும் பொழுது, ஐந்து ரூபாய்க்கு
399
+ இரண்டு மணி நேரம் சரிதானே?
400
+ மணிக்கொடி, 05-08-1934
401
+ 63. ஒரு கொலை அனுபவம்
402
+ இருள். எங்கு பார்த்தாலும் கரியவிருள். ரோட்டில் வெளிச்சம் மங்கியது. ஒற்றை
403
+ விளக்கு.
404
+ அந்த இருட்டிலே ஒரு மனிதன் தள்ளாடித் தள்ளாடி நடந்து கொண்டு போகிறான்.
405
+ உள்ளூர ஒரு பாட்டு. குடிப் பேர்வழி. அந்த இருட்டிலும் பாடிக்கொண்டு போகிறானே.
406
+ ஆசாமி தைரியசாலியாகத்தான் இருக்க வேண்டும். நான் என்றால் பேசவே மாட்டேன்.
407
+ இதென்ன வேடிக்கை? அவனுக்கென்ன பைத்தியமா? விளக்கைப் பிடித்துத்
408
+ தொத்திக்கொண்டு ஏன் ஏற வேண்டும்? விளக்கு ஏற்றி இருக்கும்பொழுது இவன்
409
+ என்ன அங்கு போய் சாதிக்கப் போகிறான்? இதுவும் ஒரு வேடிக்கைதான்.
410
+ ஏறி இரும்புக் கம்பத்தின் குறுக்கில் உட்கார்ந்துகொண்டு "ராஜாதி ராஜன் நானே"
411
+ என்று பாடுகிறானே. அவனும் ராஜன் தான்! இவனுக்கும் ஹிட்லருக்கும் ஒரு
412
+ வித்தியாசமும் கிடையாது.
413
+ அடடா! முகத்தைப் பார்த்தால் என்போல் இருக்கிறதே! நான் தான் அவன். இதென்ன
414
+ வேடிக்கை? முகத்தைப் பார்த்தால் எனக்கு இரட்டைச் சகோதரன் மாதிரி இருக்கிறான்.
415
+ எங்கே வந்து சொத்தில் உரிமை கேட்கப் போகிறான��?
416
+ விளக்கெல்லாம் அணைந்துவிட்டதே! இதென்ன அதிசயம்? ஏன் விளக்கு அணைய
417
+ வேண்டும்? இரவு பூராவும் எரிவதென்றால் முனிஸிபாலிட்டியாருக்கு குடி
418
+ முழுகிவிடும்போல் இருக்கிறது.
419
+ </content>
420
+ <|endoftext|>
421
+
422
+ <|startoftext|>
423
+ <author>புதுமைப்பித்தன்</author>
424
+ <genre>சிறுகதை</genre>
425
+ <content>
426
+ ஏன் விளக்கு அணைய
427
+ வேண்டும் இரவு பூராவும் எரிவதென்றால் முனிஸிபாலிட்டியாருக்கு குடி
428
+ முழுகிவிடும்போல் இருக்கிறது 15
429
+ அந்த இருட்டில் பாதையின் திருப்பத்திலிருந்து இன்னொரு உருவம் வருகிறது. ஏன்
430
+ இப்படி நடக்கவேண்டும்? ஆசாமியைப் பார்த்தால் பொம்மை மாதிரி. கிட்ட
431
+ நெருங்கட்டும். அதைத்தான் பார்ப்போம். இதென்ன அதிசயம்? அவனும் நான் தான்.
432
+ முதல் வந்த ஆசாமிதானா அவன்? தலைதான் கம்பத்தின் மேல் தெரிகிறதே. எனக்குப்
433
+ பைத்தியமா? அல்லது பிரம்மாவிற்குத்தான் பைத்தியம் பிடித்துவிட்டதா? அல்லது
434
+ பிரம்மாவிற்கு நான் சொத்து சுகம் வைத்துக்கொண்டிருப்பதில் பொறாமையா?
435
+ அந்த 'எனக்கு' ஏன் பயம் போட்டு ஆட்ட வேண்டும்? இரண்டு பிரதிபிம்பங்கள்.
436
+ இயற்கையின் கூத்தா? அல்லது பைத்தியக்கார ஆஸ்பத்திரியா?
437
+ இரவில் இன்னொரு உருவம் அதற்குப் பின் ஒளிந்துகொண்டு வருகிறது. அவனாவது
438
+ வேறு மாதிரியாக இருக்க வேண்டும். இரண்டாவது ஆசாமியை நெருங்குகிறானே.
439
+ முகம் தெரிகிறது. நல்ல காலம். அவனுக்கு தாடியும் மீசையும் இருக்கிறது. நானல்ல!
440
+ என்ன? நன்றாகப் பார். அவனும் நான் தான். எனக்கு தாடியும் மீசையுமா
441
+ முளைத்திருக்கிறது? எனது முகத்தில் ஒன்றையும் காணோமே! முகத்தையும்
442
+ கண்ணையும் பார்த்தால் என்ன பயமாக இருக்கிறது. மூன்று பேரும் நான் தானா
443
+ அல்லது 'எல்லாம் நானே' என்ற முக்தியை அடைந்துவிட்டேனா?
444
+ தாடியுடைய 'என்' கையில் என்ன மின்னுகிறது?
445
+ கத்தி.
446
+ முன் செல்லும் 'எனக்குப்' பின் வந்த இரண்டாவது 'நான்' ஏன் பதுங்கிப் பதுங்கிச்
447
+ செல்ல வேண்டும்? முதல் 'நான்' எங்கே?
448
+ ஆமாம்! அவன் குஷியாக கம்பத்தின் மீது பாட்டுப் பாடுகிறான்.
449
+ நெருங்கிவிட்டான்!
450
+ "அய்யோ கொல்கிறானே!'
451
+ </content>
452
+ <|endoftext|>
453
+
454
+ <|startoftext|>
455
+ <author>புதுமைப்பித்தன்</author>
456
+ <genre>சிறுகதை</genre>
457
+ <content>
458
+ நெருங்கிவிட்டான்
459
+ "அய்யோ கொல்கிறானே ' 16
460
+ மூன்றும் என் குரல். எல்லாம் இருள். ஒன்றையும் காணோம்!
461
+ விழித்தேன். பக்கத்தில் எனது நண்பன். 'பகலில் என்ன தூக்கம்?' என்று முதுகைத்
462
+ தட்டிக்கொண்டிருந்தான். எதிரே எழுதுகோல், காகிதம், இத்யாதி. துப்பறியும் நாவல்
463
+ எழுதுவது என்றால் லேசா? தூக்குத் தண்டனை இல்லாமல் ஆட்களைக் கொல்ல
464
+ வேண்டும். பிறகு துப்பறிவோனாகக் கண்டுபிடிக்க வேண்டும். அப்பப்பா? அந்தத்
465
+ தொழில் நமக்கு வேண்டாம். மானுடன் ஓடிக் கொண்டு நாயுடன் துரத்த என்னால்
466
+ முடியாது.
467
+ ஊழியன், 22-02-1935
468
+ 64. பால்வண்ணம் பிள்ளை
469
+ பால்வண்ணம் பிள்ளை கலெக்டர் ஆபீஸ் குமாஸ்தா. வாழ்க்கையே தஸ்தாவேஜிக்
470
+ கட்டுகளாகவும், அதன் இயக்கமே அதட்டலும், பயமுமாகவும், அதன் முற்றுப்புள்ளியே
471
+ தற்பொழுது 35 ரூபாயாகவும் - அவருக்கு இருந்து வந்தது. அவருக்குப் பயமும்,
472
+ அதனால் ஏற்படும் பணிவும் வாழ்க்கையின் சாரம். அதட்டல் அதன் விதிவிலக்கு.
473
+ பிராணிநூல், மிருகங்களுக்கு, முக்கியமாக முயலுக்கு நான்கு கால்கள் என்று கூறமாம்.
474
+ ஆனால் பால்வண்ணம் பிள்ளையைப் பொறுத்தவரை அந்த அபூர்வப் பிராணிக்கு
475
+ மூன்று கால்கள்தான். சித்த உறுதி, கொள்கையை விடாமை, இம்மாதிரியான
476
+ குணங்கள் எல்லாம் படைவீரனிடமும், சத்தியாக்கிரகிகளிடமும் இருந்தால் பெருங்
477
+ குணங்களாகக் கருதப்படும். அது போயும் போயும் ஒரு கலெக்டர் ஆபீஸ்
478
+ குமாஸ்தாவிடம் தஞ்சம் புகுந்தால் அசட்டுத்தனமான பிடிவாதம் என்று கூறுவார்கள்.
479
+ பால்வண்ணம் பிள்ளை ஆபீஸில் பசு. வீட்டிலோ ஹிட்லர். அன்று கோபம்.
480
+ ஆபீஸிலிருந்து வரும் பொழுது - ஹிட்லரின் மீசை அவருக்கு இல்லாவிட்டாலும் -
481
+ உதடுகள் துடித்தன. முக்கியமாக மேலுதடு துடித்தது. காரணம், ஆபீஸில் பக்கத்துக்
482
+ குமாஸ்தாவுடன் ஒரு சிறு பூசல். இவர் மெக்ஸிகோ தென் அமெரிக்காவில் இருக்கிற
483
+ தென்றார். இவருடைய நண்பர் பூகோள சாஸ்திரம் வேறு மாதிரிக் கூறுகிறதென்றார்.
484
+ </content>
485
+ <|endoftext|>
486
+
487
+ <|startoftext|>
488
+ <author>புதுமைப்பித்தன்</author>
489
+ <genre>சிறுகதை</genre>
490
+ <content>
491
+ இவர் மெக்ஸிகோ தென் அமெரிக்காவில் இருக்கிற
492
+ தென்றார் இவருடைய நண்பர் பூகோள சாஸ்திரம் வேறு மாதிரிக் கூறுகிறதென்றார் 17
493
+ பால்வண்ணம் பிள்ளை தமது கட்சியை நிரூபிப்பதற்காக வெகு வேகமாக வீட்டிற்கு
494
+ வந்தார்.
495
+ பால்வண்ணம் பிள்ளைக்கும் அவருடைய மனைவியாருக்கும் கர்ப்பத் தடையில்
496
+ நம்பிக்கை கிடையாது. அதன் விளைவு வருஷம் தவறாது ஒரு குழந்தை. தற்பொழுது
497
+ பால்வண்ண சந்ததி நான்காவது எண்ணிக்கை; பிறகு வருகிற சித்திரையில் நம்பிக்கை.
498
+ இப்படிப்பட்ட குடும்பத்தில் பால்வண்ணக் 'கொடுக்கு'கள் 'பேபி ஷோ'க்களில் பரிசு
499
+ பெறும் என்று எதிர்பார்க்க முடியாது. பால்வண்ணம் ��ிள்ளையின் சகதர்மிணி,
500
+ உழைப்பிலும் பிரசவத்திலும் சோர்ந்தவள். தேகத்தின் சோர்வினாலும், உள்ளத்தின்
501
+ களைப்பினாலும் ஏற்பட்ட பொறுமை.
502
+ கைக்குழந்தைக்கு முந்தியது சவலை. கைக் குழந்தை பலவீனம். தாயின் களைத்த தேகம்
503
+ குழந்தையைப் போஷிக்கச் சக்தியற்று விட்டது. இப்படியும் அப்படியுமாக, தர்ம
504
+ ஆஸ்பத்திரியின் மருந்துத் தண்ணீரும், வாடிக்கைப் பால்காரனின் கடன் பாலுமாக,
505
+ குழந்தைகளைப் போஷித்து வருகிறது. அந்த மாதம் பால் 'பட்ஜட்' - எப்பொழுதும்
506
+ போல் - நான்கு ரூபாய் மேலாகி விட்டது.
507
+ இம்மாதிரியான நிலைமையில் பால் பிரச்னையைப் பற்றி பால்வண்ணம் பிள்ளையின்
508
+ சகதர்மிணிக்கு ஒரு யுக்தி தோன்றியது. அது ஒன்றும் அதிசயமான யுக்தியல்ல.
509
+ குழந்தைகளுக்கு உபயோகமாகும்படி ஒரு மாடு வாங்கி விட்டால் என்ன என்பதுதான்.
510
+ தெய்வத்தின் அருளைத் திடீரென்று பெற்ற பக்தனும், புதிதாக ஒரு உண்மையைக்
511
+ கண்டுபிடித்த விஞ்ஞானியும், 'சும்மா' இருக்க மாட்டார்கள். சளசளவென்று
512
+ கேட்கிறவர்கள் காது புளிக்கும்படி சொல்லிக் கொட்டி விடுவார்கள். பால்வண்ணம்
513
+ பிள்ளையின் மனைவிக்கும் அதே நிலை ஏற்பட்டது.
514
+ பிள்ளையவர்கள் வீட்டிற்கு வரும்பொழுது, அவர் ஸ்கூல் பைனல் வகுப்பில்
515
+ உபயோகித்த பூகோளப் படம் எங்கு இருக்கிறது, மாடியிலிருக்கும் ஷெல்பிலா, அல்லது
516
+ அரங்கிலிருக்கும் மரப் பெட்டியிலா என்று எண்ணிக் கொண்டு வந்தார்.
517
+ </content>
518
+ <|endoftext|>
519
+
520
+ <|startoftext|>
521
+ <author>புதுமைப்பித்தன்</author>
522
+ <genre>சிறுகதை</genre>
523
+ <content>
524
+ பால்வண்ணம்
525
+ பிள்ளையின் மனைவிக்கும் அதே நிலை ஏற்பட்டது
526
+ பிள்ளையவர்கள் வீட்டிற்கு வரும்பொழுது, அவர் ஸ்கூல் பைனல் வகுப்பில்
527
+ உபயோகித்த பூகோளப் படம் எங்கு இருக்கிறது, மாடியிலிருக்கும் ஷெல்பிலா, அல்லது
528
+ அரங்கிலிருக்கும் மரப் பெட்டியிலா என்று எண்ணிக் கொண்டு வந்தார் 18
529
+ வீட்டிற்குள் ஏறியதும், "ஏளா! அரங்குச் சாவி எங்கே?" என்று கேட்டுக்கொண்டே
530
+ மாடிக்குச் சென்று ஷெல்பை ஆராய்ந்தார்.
531
+ அவர் மனைவி சாவியை எடுத்துக் கொண்டு பின் தொடர்ந்தாள். அவளுக்குப் பால்
532
+ நெருக்கடியை ஒழிக்கும் மாட்டுப் பிரச்னையை அவரிடம் கூற வேண்டும் என்று
533
+ உதடுகள் துடித்துக் கொண்டிருந்தன. ஆனால் மெக்ஸிகோ பிரச்னையில்
534
+ ஈடுபட்டிருக்கும் பால்வண்ணம் பிள்ளையின் மனம் அதை வரவேற்கும் நிலையில்
535
+ இல்லை.
536
+ "என்ன தேடுதிய?" என்றாள்.
537
+ "ஒரு பொஸ்தகம். சாவி எங்கே?"
538
+ "இந்தாருங்க. ஒங்ககிட்ட ஒண்ணு சொல்லுணுமே! இந்தப் புள்ளைகளுக்குப் பால்
539
+ செலவு சாஸ்தியா இருக்கே! ஒரு மாட்டெத்தான் பத்து நூறு குடுத்து புடிச்சிப்புட்டா
540
+ என்ன?" என்றாள்.
541
+ "இங்கே வர வேண்டியதுதான், ஒரே ராமாயணம். மாடு கீடு வாங்க முடியாது. எம்
542
+ புள்ளெய நீத்தண்ணியை குடிச்சு வளரும்!" என்று சொல்லி விட்டார். மெக்ஸிகோ வட
543
+ அமெரிக்காவிலிருந்தால் பிறகு ஏன் அவருக்குக் கோபம் வராது?
544
+ பால் பிரச்னை அத்துடன் தீர்ந்து போகவில்லை. அவர் மனைவியின் கையில் இரண்டு
545
+ கெட்டிக் காப்பு இருந்தது. அவளுக்குக் குழந்தையின் மீதிருந்த பாசத்தினால், அந்தக்
546
+ காப்புகள் மயிலைப் பசுவும் கன்றுக் குட்டியுமாக மாறின.
547
+ இரண்டு நாள் கழித்துப் பால்வண்ணம் பிள்ளை ஆபீஸிலிருந்து வந்து புறவாசலில் கை
548
+ கழுவச் சென்ற பொழுது, உரலடியில் கட்டியிருந்த கன்று, வைக்கோல் அசை போட்டுக்
549
+ கொண்டிருக்கும் மாட்டைப் பார்த்து 'அம்மா' வென்று கத்தியது.
550
+ "ஏளா?" என்று கூப்பிட்டார்.
551
+ </content>
552
+ <|endoftext|>
553
+
554
+ <|startoftext|>
555
+ <author>புதுமைப்பித்தன்</author>
556
+ <genre>சிறுகதை</genre>
557
+ <content>
558
+ "ஏளா " என்று கூப்பிட்டார் 19
559
+ மனைவி சிரித்துக் கொண்டே - உள்ளுக்குள் பயம் தான் - வந்தாள்.
560
+ "மாடு எப்பொழுது வந்தது? யார் வாங்கிக் கொடுத்தா?" என்றார்.
561
+ "மேலவீட்டு அண்ணாச்சி வாங்கித் தந்தாஹ. பாலு ஒரு படி கறக்குமாம்!" என்றாள்.
562
+ "உம்" என்றார்.
563
+ அன்று புதுப்பால், வீட்டுப் பால் காப்பி கொண்டு வந்து வைத்துக் கொண்டு
564
+ கணவரைத் தேடினாள். அவர் இல்லை.
565
+ அதிலிருந்து பிள்ளையவர்கள் காப்பியும் மோரும் சாப்பிடுவதில்லை.
566
+ அவர் மனைவிக்கு மிகுந்த வருத்தம். ஒரு பக்கம் குழந்தைகள். மற்றொரு பக்கம்
567
+ புருஷன் என்ற குழந்தை. வம்சவிருத்தி என்ற இயற்கை விதி அவளை வென்றது.
568
+ இப்படிப் பதினைந்து நாட்கள்.
569
+ மாட்டை என்ன செய்வது?
570
+ அன்று இரவு எட்டு மணி இருக்கும். பால்வண்ணம் பிள்ளையும் சுப்புக் கோனாரும்
571
+ வீட்டினுள் நுழைந்தார்கள்.
572
+ "மாட்டைப் பாரும். இருபத்தஞ்சி ரூபா!" என்றார்.
573
+ "சாமி! மாடு அறுபது ரூபாய் பெறுமே!" என்றார் சுப்புக் கோனார். "இருபத்தைந்து
574
+ தான். உனக்காக முப்பது ரூபாய் என்ன? இப்பொழுதே பிடித்துக் கொண்டு போக
575
+ வேண்டும்!"
576
+ "சாமி! ராத்திரியிலா? நாளைக்கு விடியன்னே பிடிச்சிக்கிறேன்!" என்றார்
577
+ சுப்புக்கோனார்.
578
+ </content>
579
+ <|endoftext|>
580
+
581
+ <|startoftext|>
582
+ <author>புதுமைப்பித்தன்</author>
583
+ <genre>சிறுகதை</genre>
584
+ <content>
585
+ நாளைக்கு விடியன்னே பிடிச்சிக்கிறேன் " என்றார்
586
+ சுப்புக்கோனார் 20
587
+ "உம் இப்பவே?"
588
+ மாட்டையவிழ்த்தாய் விட்டது.
589
+ மனைவி 'மாடு எழுபது ரூபாயாயிற்றே, குழந்தைகளுக்குப் பாலாயிற்றே' என்று
590
+ தடுத்தாள். மேலும் வரும்படி வேறு வருகிறதாம்.
591
+ "என் புள்ளெகள் நீத்தண்ணி குடிச்சு வளந்துக் கிடும்" என்றார் பிள்ளை.
592
+ சுப்புக் கோனார் மாட்டை அவிழ்த்துக் கொண்டு போகும் பொழுது, மூத்த பையன்,
593
+ "அம்மா! என் கன்னுக் குட்டி!" என்று எழுந்து உட்கார்ந்து கொண்டு அழுதான்.
594
+ "சும்மா கெட, சவமே!" என்றார் பால்வண்ணம் பிள்ளை.
595
+ மணிக்கொடி, 30-12-1934
596
+ 65. பறிமுதல்
597
+ 43 நெர். கைதி ஒரு பயங்கரப் புரட்சிக்காரன். அவன் பேரில் அரசியல் விஷயமாகக்
598
+ கொலைக் குற்றம் சாட்டப்பட்டு, கோர்ட்டில் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
599
+ பயங்கரப் புரட்சிக்காரன் என்று சமுதாயத்தின் சார்பாக அரசாங்கம் முடிவு
600
+ கட்டிவிட்டது. ஆனால் அவனைப் பார்த்தால் அப்படித் தோன்றாது. இயற்கைச்
601
+ சிருஷ்டியில் வசீகரப்படுத்தும் ஒரு ஜீவன் இருந்தால் அது 43 நெர். கைதி.
602
+ அவன் இருக்கும் அறை தனி. வெளிச்சம் வருவதற்கு அல்லாமல் காற்று வருவதற்கு
603
+ மட்டும் ஒரு சிறிய துவாரம். அதன் வழியாகப் பெரிய பூனை நுழையலாம். ஆனால்,
604
+ புரட்சிக்காரர்கள் பூனை வடிவம் எடுக்கக்கூடும் என்று பயந்தோ என்னவோ அதிலும்
605
+ இரும்புக் கம்பி.
606
+ </content>
607
+ <|endoftext|>
608
+