poem stringclasses 6
values | explanation stringclasses 6
values |
|---|---|
சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பல்லிசை பாட
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்ன மருங்கில் வளர்ந்தழ(கு) எறிப்பப் .
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சில் குடிகொண்ட நீல மேனியும் .
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்னும் மும்மதச் சுவடும்
இ... | குளிர்ச்சியும் நறுமணமும் உடைய செந்தாமரைப் பூவின் நிறத்தையுடைய பாதங்களில் அணிந்துள்ள சிலம்பு பலவிதமான இசை ஒலிகளை எழுப்ப, இடுப்பினிலே பொன்னாலான அரைஞாண் கயிறும், அழகிய வெண்பட்டு ஆடையும் அழகிற்கு மேலும் அழகேற்ற, பெரிய பேழை போன்ற வயிறும், பெரிய உறுதியான தந்தமும், யானை முகமும், நெற்றியில் ஒளிவீசும் குங்குமப் பொட்டும், ஐந்து ... |
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பக் களிரே!
முப்பழம் நுகரும் மூஸிக வாகன
இப்பொழுது என்னை ஆட்கொள வேண்டித் .
தாயாய் எனக்குத் தானெழந்(து) அருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதல்ஐந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து .
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத்... | சொற்களால் விபரிக்க முடியாத துரியம் எனப்படும் நிலையில் உண்மையான ஞானமானவனே, மா,பலா,வாழை ஆகிய மூன்று பழங்களையும் விரும்பி உண்பவரே, மூஞ்சூறினை வாகனமாக கொண்டவரே, இந்தக்கணமே என்னை ஏற்றுக்கொள்ள வேண்டி, தாயைப்போல் தானாக வந்து எனக்கு அருள் புரிபவரே, மாயமான இந்த பிறவிக்கு காரணமான அறியாமையை அறுத்து எறிபவரே, திருத்தமானதும் முதன்மை... |
உவட்டா உபதேசம் புகட்டிஎன் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக் .
கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடித்து
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே.
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் ... | வெளியாய் உபதேசிக்கக் கூடாத உபதேசத்தை எனது காதுகளில் உபதேசித்து, எவ்வளவு அனுபவித்தாலும் திகட்டாத ஞானத்தை தெளிவாய் எனக்கு காட்டி, தங்கள் இனிய கருணையினால் மெய், வாய், கண், மூக்கு செவி ஆகிய ஐந்து பொறிகளினால் ஆன செயல்களை அடக்குகின்ற வழியினை இனிதாக எனக்கு அருளி, மேலே சொன்ன ஐந்து பொறிகளும் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து, நல்வி... |
இடைபிங், கலையின் எழுத்தறி வித்துக்
கடையில் சுழிமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்.
குண்டலி அதனில் கூடிய அசபை
லிண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்து மூண்டெழு கனலைக்
காளால் எழுப்பும் கருத்தறி வித்தே .
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்த... | இடகலை, பிங்கலை எனப்படும் இடது, வலது பக்க நாடிகளின் மூலம் உள்ளிழுக்கப்படும் காற்றானது நடு நாடியான சுழுமுனை வழியே கபாலத்தையடையும் மந்திர மார்க்கத்தைக் காட்டி, 1) அக்னி 2) சூரியன் 3) சந்திரன் ஆகிய மூன்று மண்டலங்களின் தூண் போன்ற சுழுமுனையின் மூலம் நான்றெழு பாம்பான குண்டலனி சக்தியை எழுப்பி, அதனில் ஒலிக்கும் பேசா மந்திரமான அ... |
சண்முக தூலமும் சதுர்முக சூட்சமும்
எண்முக மாக இனிதெனக்(கு) அருளிப்
புரியட்ட காயம் புலப்பட் எனக்குத்
தெரிஎட்டு நிலையும் தெரிசனப் படுத்தி .
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி இனிதெனக்கு அருளி
என்னை அறிவித்து எனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்து .
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே என்றன் சிந்... | உருவமான தூலமும் அருவமான சூட்சுமமும் எனக்கு எளிதில் புரியும்படி அருளி, மூலாதாரம் முதல் சகஸ்ரதளம் வரையிலான எட்டு நிலைகளையும் எனக்கு தெரிசனப்படுத்தி அதன் மூலம் உடலின் எட்டு தன்மைகளையும் புலப்படுத்தி கபால வாயிலை எனக்கு காட்டித் தந்து, சித்தி முத்திகளை இனிதாக எனக்க அருளி, நான் யார் என்பதை எனக்கு அறிவித்து, பூர்வ ஜென்ம கன்ம ... |
எல்லை இல்லா ஆனந்தம் அளித்து
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி.
அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி.
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்ன... | அளவில்லாத ஆனந்தத்தை தந்து, துன்பங்கள் எல்லாவற்றையும் அகற்றி, அருள் வழி எது எனக்காட்டி, சத்-சித் அதாவது உள்ளும், புறமும் சிவனைக் காட்டி, சிறியனவற்றிற்கெல்லாம் சிறியது பெரியனவற்றிற்கு எல்லாம் பெரியது எதுவோ அதை கணுமுற்றி நின்ற கரும்பு போல என் உள்ளேயே காட்டி, சிவவேடமும் திருநீறும் விளங்கும் நிலையிலுள்ள உள்ள உண்மையான தொண்டர... |
Dataset Card for Vinayakar Akaval (விநாயகர் அகவல்)
Summary
Vinayakar Akaval (விநாயகர் அகவல்) is a classic Tamil devotional poem dedicated to Lord Ganesha, composed by the legendary poetess Avvaiyar. It was written during the later part of the Bhakti era and is considered the primary prayer for Ganesha devotees.
The poem is celebrated for its deep spiritual meaning, describing both the physical form (Sthula) and the mystical/yogic significance (Sukshma) of Lord Ganesha. It serves as a guide for spiritual awakening and is often recited for wisdom and obstacle removal.
Dataset Structure
The dataset pairs the original poetic stanzas (usually grouped in 4-line units) with their corresponding modern Tamil prose explanations.
Data Fields
verse_no: (Integer/String) The line number or verse identifier (e.g., 4, 8, 12...).poem: (String) The original rhythmic Tamil verses.explanation: (String) Simplified modern Tamil prose describing the physical attributes and spiritual metaphors.
Data Example
| Field | Value |
|---|---|
| verse_no | 4-12 |
| poem | சீதக் களபச் செந்தா மரைப்பூம் / பாதச் சிலம்பு பல்லிசை பாட... |
| explanation | குளிர்ச்சியும் நறுமணமும் உடைய செந்தாமரைப் பூவின் நிறத்தையுடைய பாதங்களில் அணிந்துள்ள சிலம்பு பலவிதமான இசை ஒலிகளை எழுப்ப... |
Dataset Creation
Curation Rationale
This dataset is curated for:
- Linguistic Analysis: Studying the transitioning Tamil grammar from the Bhakti period to modern prose.
- Religious NLP: Building knowledge graphs for Hindu iconography and Tamil liturgical texts.
- Text-to-Image Synthesis: Using the detailed physical descriptions in the verses for AI-based art generation of Tamil deities.
Source Data
Extracted and cleaned from digital Tamil literary repositories, ensuring the removal of contemporary web noise (ads/links) to maintain high data quality.
About the Author: Avvaiyar
The Avvaiyar of the Bhakti period is renowned for her spiritual depth. Unlike her instructional works for children (Aathichoodi), Vinayakar Akaval represents her highest yogic realization, blending profound devotion with the science of breath and Kundalini yoga.
Citation
If you use this dataset, please cite the cultural heritage:
Title: Vinayakar Akaval (விநாயகர் அகவல்)
Original Author: Avvaiyar (ஔவையார்)
Period: Later Bhakti Era
Dataset Type: Tamil Devotional Poetry-Prose Corpus
- Downloads last month
- 11