S.No int64 1 1.05k | Tamil stringlengths 13 109 | English stringlengths 16 159 |
|---|---|---|
1,001 | இரவற் சோறு பஞ்சம் தாங்குமா? | Will borrowed rice prove a security against famine ? |
1,002 | இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறித்தாளாம். | It is said, that relying on a borrowed cloth, she threw away hertattered cloth |
1,003 | இராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை, ராஜ திசையிற் கெட்டவனும் இல்லை. | None ever prospered under Rahu, nor. was any one. ever ruined under Jupiter. |
1,004 | இராக் கண்ட சனி மிடாப்போல வீங்கின கரை. | The story of one who in a-dream of the night saw Saturn swelling; as a large pat. |
1,005 | இராசன் ஏறிய குரையைப்போல். | Like a horse ridden by a king. |
1,006 | இராசமுகத்துக்கு எலுமிச்சம் பழம்போல. | As a lemon offered to a king. |
1,007 | இராச கீரியைக் காவுகிறது போல. கீரி | Like carrying a royal mongoose. |
1,008 | இராசன் ஆனாலும் தன் தாய்க்கு மகனே. | Though a king, he is the son of his mother. |
1,009 | இராசன் செங்கோல் தன் நாடுவரையில் | A kirig’s seeptte extends to the limit of his territory. |
1,010 | இராசா மகள் ஆனாலும் கொண்டவனுக்குப் பெண்டுதான். | Though a princess, she is the wife of the man who has taken her in marriage. |
1,011 | இராசாளியைக் கண்ட கொக்குப் போல. | Like a heron which saw a falcon. |
1,012 | இராசா கடன்படப் புளுக்கை காடித்தண்ணீர் குடித்ததுபோல. | As a slave lived on gruel because the king was in debt. |
1,013 | இராப்பட்டினி கிடந்தவன் உரித்த வாழைப்பழம் விற்கிறதா என்ற விசாரித்தானாம். | It is said that he who starved the whole night inquired if peeled plantains could be obtained. |
1,014 | இராப்பட்டினி கிடப்பவன் அகவிலை கேட்பானோ? | Does he who lies down at night. fasting, enquire after the price of grain? |
1,015 | இராப்பட்டினி பாயோடே. | The sense of hunger evds on the mat. |
1,016 | இராப்பகல் கண்ணிலே. | In the eye night and day. |
1,017 | இராமர் இருந்த இடம் அயோத்தி. | Ayodhya was the city of Rama. |
1,018 | இராமன் மங்கையோடு இணங்கியது அவம். | Aoquiescence with the wishes of his wife was fatal to Rama. |
1,019 | இராமனைப் போல ராஜா இருந்தால் அனுமானைப் போலச் சேவகனும் இருப்பான். | If the king be equal to Rama, his servant may be equal to Hanuman. |
1,020 | இரா முழுதும் ராமாயணம் கேட்டுச் சீதைக்கு ராமன் என்ன என்ற கதை. | The story of one who having listened to the reading of the Ramayana a whole night, asked what relationship existed between. Sita and Rama. |
1,021 | இராமேசுரத்துக்குப் போயும் சனீசுரன் தொலையவில்லை. | Though he went on a pilgrimage to Rameswaram, Saturn has not left him. |
1,022 | இராவணன் குடிக்கு மகோதரன் போலும், சுயோதனன் குடிக்குச் சகுனிபோலும். | He is what Mahdedharan was to the family of, Ravana end what Sakuni was to Suyodhana. |
1,023 | இராவண சந்நியாசி போல் இருக்கிறான். | He is as Ravana in the. guise of a hermit. |
1,024 | இராவுத்தனைத் தள்ளினதும் அல்லாமல் குழியும் பறித்ததாம் குதிரை. | It is said that the horse not only threw his rider, but dug his grave also. |
1,025 | இருக்கிற அன்றைக்கு எருமைமாடு தின்றாற்போல. | Like a buffalo he consumes the day’s supply. |
1,026 | இருக்கிறவன் செவ்வையாய் இருந்தால் சிரைக்கிறவன் செவ்வையாய்ச் சிரைப்பான். | If he who is being shaved sits properly, the barber will shave well. |
1,027 | இருக்க வேண்டும் என்றால் இரும்பைத் தின். | If you wish to live dong, eat iron. |
1,028 | இருக்க இருக்க எல்லாம் இசைவாகும். | In time all willb e in harmony. |
1,029 | இருக்கும் இடம் ஏவுமா? | Will the place on which we sit, incite |
1,030 | இருசி உடைமை இராத்தங்கல்ஆகாது. | Oblations made to a demoness must not be kept till the morning. |
1,031 | இரு குழி, இருந்து உண்டாலும் உண்ணும், இரந்து உண்டாலும் உண்ணும். | He who has a double twirl of hair, may live either on his own resources or by begging. |
1,032 | இருட்டு வேலையோ குருட்டு வேலையோ? | Was the work done in the dark or by the blind |
1,033 | இருட்டு வீட்டுக்குள் போனால் திருட்டுக்கை நிற்குமா? | Will his thievish hand be restrained when he enters a dark room ? |
1,034 | இருட்டுக் குடிவாழ்க்கைத் திருட்டுக்கு அடையாளம். | It is a sign of thievishness for a family to live in obscurity. |
1,035 | இருதலை மணியன் பாம்பைப்போல. | Like a snake that has a head at both ends. |
1,036 | இருதலைக் கொள்ளி எறும்பு போல் ஆனேன். | I have become like an ant en a fire-brand lighted at both ends. |
1,037 | இருந்தல்லோ படுக்க வேண்டும். | Must one not sit before lying down ? |
1,038 | இருந்த நாள் எல்லாம் இருந்துவிட்டு ஊர்ப்பறையனுக்குத் தாரைவார்த்த கதை. | The story of one who after leading an unexceptionable course of life gave his daughter in marriage to the village Pariah. |
1,039 | இருந்தவன் தலைமேலே இடி விழுந்தது போல. | As the thunder-bolt fell on the head of the one who remained. |
1,040 | இருந்த கால் மூதேவி நடந்த கால் சீதேவி. | The sluggish foot is Mudevi the goddess of adversity, the active foot is Shridevi the goddess of prosperity. |
1,041 | இருந்தவனுக்குப் போனவன் குணம். | He that went away was better than he who stayed. |
1,042 | இருந்தவன் எழுந்திருக்கிறதற்குள்ளே நின்றவன் ஒரு காதம் போவான். | Whilst he who was seated was rising, the man who was standing had gone ten miles. |
1,043 | இருந்தால் பூனை, பாய்ந்தால் புலி. | While squatting, a cat, when springing, a tiger. |
1,044 | இருந்தால் இருப்பீர், எழுந்ததிருந்தால் நிற்பீர். | If sitting you sit, if you rise you stand. |
1,045 | இருந்து பணம் கொடுத்து நடந்து வாங்கவேண்டியதாய் இருக்கிறது. | One must walk a long wey to get back the money letit when seated. |
1,046 | இருபத்தொரு மழையும் எண்ணி ஊற்றியது. | The twenty one kinds of rain were enumerated and poured out. |
1,047 | இருப்புக் கதவு இடித்துத் தவிட்டுக் கொழுக்கட்டை எடுக்கிறதா? | What! knocking down an iron door to obtain a brdn cake |
1,048 | இருப்புச் சலாகையை விழுங்கிப்போட்டு இஞ்சிச்சாறு குடித்தால் தீருமா? | If one has swallowed a bar of iron, will its effects be removed by drinking a decoction of ginger |
1,049 | இருப்புக் கோட்டையும் கற்கதவும் போல. | Like an iron fort and a stone door. |
1,050 | இரு மனது மங்கையோடு இணங்குவது அவம். | Fo aasociate with a double minded woman is fatal. |
1,051 | இரும்பு செம்பானால் துரும்பும் தூணும். | If iron becomes copper, a straw may. become a pillar. |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.