text
stringlengths
515
1.8k
chunk_id
int64
1
246
author
stringclasses
1 value
book
stringclasses
1 value
‘ஐட்டம் நியூஸ்’. ஸ்ரீனிவாசனுக்குச் சம்பந்தி வீட்டிற்குப் போவதென்றால் ரொம்பக் குஷி. விஷயம் ருக்மிணி இருக்கிறாள் என்ற நினைப்பினால் அல்ல, பக்ஷணம் கிடைக்கும்; நாலைந்து நாள் ‘மாப்பிள்ளை’, ‘மாப்பிள்ளை’ என்ற உபசாரம்; விளையாட்டு, அப்பாவின் கோபமும் அடியும் எட்டாத இடம்; மேலும் விளையாடுவதற்கு நிரம்பப் பயல்கள்; இதுதான் மாமா வீடு ...
101
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
மீதும், அத்தையின் மீதும் அடங்காத கோபம். அந்தக் கோபத்தில் ஏற்பட்ட வெறுப்பின் சாயை, சீமாவின் மனவுலகத்தில் ருக்மிணியைத் தீண்டியதும் உண்டு. ருக்மிணி புஷ்பவதியானாள். சடங்குகளும் ஏக தடபுடலாக நடந்தன. ஆத்தூர்ப் பண்ணை ஐயர் நேரில் வந்து அழைத்தும், அங்கிருந்து ஒருவரும் போகவில்லை. ருக்மிணிக்கு மிகுந்த வருத்தம். தன் சீமா வராமல் இர...
102
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
செய்து கொள்ளுவதுதான் நாவல் சம்பிரதாயப்படி சுவாரஸ்யமான முடிவு. அப்பொழுதுதான் கதாசிரியனும், வாசகர்களே என்று ஆரம்பித்துக் குழந்தைக் கலியாணத்தின் கொடுமைகளைப் பற்றி வியாசம் எழுத முடியும். சீமாவின் உள்ளத்தில் என்ன என்னவோ எண்ணங்கள் எல்லாம் குவிந்தன. ஆனால் ருக்மிணியின் மீது ஒரு பெரிய ஏமாற்றம்தான் மிச்சம். கடிதம் வரவில்லை. சீமா...
103
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
தெரிந்தால் பெரிய அவமானம் என்ற பயம். ஊர் வாயை மூட முடியுமா? ருக்மிணி வாழாவெட்டியாகிவிட்டாள் என்று ஊர்க் கிழங்களிடையே பேச்சு. ஊர்ச் சிறுமிகளுக்கும் ருக்மிணி என்றால் சிறிது இளக்காரம். இதனால் ருக்மிணிக்கு ஆறுதலாக ஒருவரும் இல்லை. அவள் தாயார் அவள் தகப்பனாரின் எதிரொலி. புஷ்பங்களிலே பலவகையுண்டு. சிலவற்றைப் பார்த்ததும் குதூகலம்...
104
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
வெகு நாட்களாகி விட்டதென்ற, ஏறக்குறைய ஐந்து வருஷத்திற்கு மேலாகிவிட்டதென்ற நினைப்பே இல்லை. ஸ்டேஷனிலிருந்து வந்தால் அதாவது அங்கு வண்டிகள் கிடையாது. நடந்து வந்தால், அந்தப் பாலமற்ற ஆற்றைக் கடக்க வேண்டும். நடந்து வருகிறான். கரையேறி அக்ரகாரத்திற்கு நேராகச் செல்லும் பாதை வழியாக நடந்து வருகிறான். மனத்தில் பயம் கொஞ்சம் பட்பட் என...
105
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
்திற்கு வாங்க, போவோம்” என்றாள். “நான் அங்கே வரவில்லை…” ருக்மிணிக்கு ஏதோ மனதில் அடித்த மாதிரி இருந்தது. “உன்னைப் பார்க்கத்தான் வந்தேன். இங்கே வா. ஆற்றங்கரைப் பக்கம் போவோம்” என்றான். “சரி” என்றாள். சீமாவிற்கு இதில் சிறிது ஆச்சர்யம் தான். வெகு துணிச்சல்காரி என்று பட்டது. “ருக்மணி உன்னிடம் ஒன்று கேட்கவேண்டும்! கேட்பையோ?” “...
106
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
தான்…” “சீமா” என்று மெதுவாக அவன் காதுடன் காது வைத்துக் கூறினாள்… அதரங்கள் என்றும் மலராத விதம் மலர்ந்தன. சீமாவின் கரங்கள் அவள் இடையில் மெதுவாகச் சுருண்டன. அவள் இடையிலிருந்த குடம் கை சோர்ந்து மணலுக்கு நழுவியது. “ருக்மிணி! நான் சொன்னபடி கேட்பாயோ!” “இன்னும் சந்தேகமா? நீங்கள் கூப்பிடும் இடத்திற்கு வருகிறேன்.” அவள் கண்களில் ...
107
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
க்ஷாத்திரத்தை எல்லாம் மகளின் மீது தாக்கினார். “யார் என்று சொல்? பயலைத் தொலைத்து விடுகிறேன்” என்று கர்ஜித்தார். இதற்கு மேல் தாயாரின் பிடுங்கல் வேறு. ருக்மிணி ஒன்றிற்கும் பதில் சொல்லவில்லை. கணவன் இட்ட பணியை மறப்பாளா? அவர் வருவார், கடிதம் எழுதுவார் என்ற நம்பிக்கை இருக்கும்போது… இரகசியம் என்பது சில விஷயங்களில் வெகு கஷ்டமா...
108
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
ம் வெகுதூரமல்லவா? அதனால்தான் தைரியமிருந்தது. மேல் படிப்பிற்கு அவசியம் 200 ரூபாய் வேண்டுமாம். அந்தப் பொய் சொல்லியாவது… ருக்மிணி கடிதத்தை எதிர்பார்த்தாள். அது எப்படி வரும்?… இந்த உள்ளூர ஏற்பட்ட மன உளைச்சலும், இருதய உடைவாலும் சீமா நிறுவிய இலட்சியம் உடைந்து போயிற்று. அந்த அதிர்ச்சியில் மூளை குழம்பி விட்டது. “அவர் வந்து விட...
109
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
தெரியவில்லையா? என்ன ருக்மிணி நான் தான் வந்திருக்கிறேன்.” “அவரைக் கண்டீர்களா? சீமாவிடம் கொண்டு விடுங்கள்” என்றாள் மறுபடியும், குரலில் அதே தொனிப்பு. அவளிடம் விவாதம் செய்யாமல் ஒரு வண்டி பிடித்து அவளை ஏற்றிக்கொண்டு சென்றான்; துக்கம் நெஞ்சையடைத்துக் கொண்டது. என்ன மாறுதல்? கசங்கிய மலர். வண்டியில் போகும்பொழுது மறுபடியும் “அவ...
110
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
ஒன்றை ஒன்று பின்னிக்கொண்டு மிகவும் செழிப்பாக நெருங்கி வளர்ந்து, பிள்ளையாருக்கு சூரிய வெளிச்சமே படமுடியாமல் கவிந்து கொண்டன. மழைக் காலத்தில் எப்பொழுதும் மரங்களிலிருந்து ஈரம் சொட்டிக்கொண்டே இருந்ததினால் பிள்ளையாருக்கு நடுக்குவாதம் ஏற்பட்டுவிடும் போலிருந்தது. மேலும் கிளைகளில் பக்ஷிகள் கூடு கட்டிக்கொண்டு, பிள்ளையாரின் மேல் ...
111
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
பதில் சொல்லுமுன், தனது தும்பிக்கையால் அவரைத் தூக்கி வீசினார். கிழவர், மேடைக்கு வடகிழக்கில், வெகுதூரத்தில் போய் விழுந்தார். சற்று நேரத்தில் மண்வெட்டியுடன் சென்ற கிழவர், பிள்ளையாரை அணுகி, “நான் புதிதாக மேடை ஒன்று கட்டியிருக்கிறேன். அதில் அந்தக் கஷ்டம் ஒன்றும் இல்லை; என்று சொல்லி அவரைத் தூக்கிக் கொண்டு போய், தான் தயாரித்த...
112
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
சென்றது… வடமேற்கு கணவாய்களில் பெய்த அமோகமான மழையினால் நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. கணவாயில் ஒரு சிறு ரோஜாத் தோட்டம் போட்டு வசித்து வந்த கைலி கட்டிய ஒரு தாடிக் கிழவனையும் குடிசை தோட்டத்துடன் அடித்துக் கொண்டு வந்தது. வெள்ளத்தின் வேகத்தினால் அரச மரம் சாய்ந்தது. வேப்ப மரம் அடியோடு விழுந்து வேர் மாத்திரம் பிடித்திருந்...
113
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
மரத்தைத் தூக்க இருவரால் முடியுமா? அதிலும் கிழவர்கள். அரச மாரம் கோணிக்கொண்டுதான் நின்றது. முன்பும் இப்படித்தான் இருந்திருக்கும் என்று நினைத்து சந்தோஷப்பட்டுக் கொண்டு சென்றுவிட்டார்கள். விலகியிருந்த அரச மரத்தின் கிளைகள் மறுபடியும் கவிந்து பிள்ளையாரின் கழுத்தை இறுக்கவாரம்பித்தன. அருமைத் தொந்தியைச் சுற்றிய, மாமிச உரம் பெற்...
114
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
அணுகிற்று. படகினுள் இருந்தவன் பிள்ளையாரின் காலைப் பிடித்துக் கொண்டு மேடையில் தொத்திக்கொண்டான். பிறகு படகையும் மேடையில் இழுத்துப் போட்டுக் கொண்டான். வந்தவனுடைய உடம்பு மிகுந்த வெண்மையாகவும் தலைமயிர் உருக்கி வார்த்த தங்கக் கம்பிகள் மாதிரி பொன்னிறமாகப் பிரகாசித்தது. அவனது நீண்ட தாடி பொன்னிறமான ஆபரணம்போல் அவன் மார்பை அலங்க...
115
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
மர வேரையறுக்கப் போனால் புதிதாக வந்தவன் வாளை ஓங்குகிறான். அரச மரத்தின் கிளைகளை வெட்டப்போனால், பிள்ளையாரின் உதவியால் மரம் நிற்கிறது. அதை வெட்டிவிட்டால் மரமே விழுந்து விடும், இது ஆராய்ச்சி செய்ய வேண்டிய விஷயம், சற்று பொறுத்துச் செய்யுங்கள் என்றார்கள். சிலர் மரங்களையே எடுத்துவிட்டால் நல்லது என்று நெருங்கினார்கள். இரைச்சல் ...
116
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
பார்வை கவிந்தே இருக்கும். அவர்களுக்கு என்னவெல்லாம் தெரியும் என்பது எனக்குத் தெரியாது. ஒன்று மாத்திரம் நிச்சயமாகத் தெரியும். எதிரில் நிற்கும் உம்மையும் நம்மையும் போன்ற சாதாரண பேர்வழிகள் மனிதப் பிராணிகளாகக் கூட அவர்களுக்குத் தோன்றாது. ஸ்ரீமான் வரத வேங்கடராமன், இருளப்பன் சந்து 49ம் நம்பர் வீட்டு மாடியில் ஐந்து குழந்தைகளு...
117
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
த்துக்கெல்லாம் கீழே வசிக்கும் ஒட்டுக் குடித்தனங்களுக்கெல்லாம் டபிள் காலம் பதிமூன்று திக்கில் ஸ்ட்ரீமர் தலைப்பு அலங்காரங்களுடன் விசேஷப் பதிப்பு விநியோகிக்கப்பட்டது. வேறு என்ன சொல்ல வேண்டும்? அன்று ஸ்ரீமான் வரத வேங்கடராமன் அவரது குடும்பத்தினர் முன் ‘மாபெரும் வீரராகவே’ திகழ்ந்தார். விசுவரூப தரிசனம் குடும்ப நபர்களுக்குக் க...
118
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
கண்ட் க்ளாஸில் பாஸ் வாங்கியதன் பயனாக நின்றுகொண்டே பீச் ஸ்டேஷன் வரை யாத்திரை இந்தப் பேறுகள் யாவும் ஸ்ரீமான் வி.வி.ராமனுக்கு. இரண்டாயிரத்துச் சில்லறைக்கு மாறிய ‘ஸ்ரீ நிவாஸ்’ ரெடிமேட் செமண்ட் விஷயமானாலும் ஜப்பான் சரக்கைப் போல மினுக்குள்ளது. அதோடு எதிர் பங்களா மாஜி சுகாதார மந்திரி வசித்த இடம். ரங்கத்தின் சாந்தி ஏகமோக்களா. ...
119
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
ஸ்பெஷல் வீக் (வாரம்) ஒதுக்கிவிடு” என்று உத்தவரவு போட்டார் மாஜி நீதிபதியொருவர். “கம்பன் சொல்ரான் பார் ஒரு இடத்திலே…” என்று ஆரம்பித்தார் ஒரு கலாரஸிகர்… “அதெல்லாம் உள்ளுணர்வு சார்… அந்த சமுதாயத்திலே துன்பமும் இல்லை. மரணமும் இல்லை. சாயுஜ்ய பதவி ஸார். கனவு லோகம் ஞானரதம்” என்று அடுக்கிக்கொண்டே போனார் ஒரு ஆர்ட் கிரிடிக். ஸ்ரீ...
120
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
குடும்ப எரிமலைகள் சீறின என்றாலும் நெருப்புக் கக்கும் நிலையை எட்டவில்லை. அன்று ஒரு ஞாயிற்றுகிழமை. ‘ஸ்ரீ நிவாஸ்’ ரேடியோ ஸ்ரீமான் உச்சி பாகவதரின் கிராமிய கீதங்கள் யந்திர கமறலுடன் பாடிக் கொண்டிருந்தது… அப்பொழுது தறிதலை மணி வந்தான். “என்னடா மணி காண்றதே இல்லியே! ஏண்டா குமாரியின் ஆத்மிக டான்ஸ்க்கு வரலே… அன்னிக்கு சபையில் கிரு...
121
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
நாள் ஓர் அரசன்; பாண்டியன், அரிமர்த்தன பாண்டியன், இமையா நாட்டம் பெற்றவன் போல, சயனக்கிருஹத்தில் மஞ்சத்தில் அமர்ந்து நினைவுக் கோயிலில் நடமாடிவந்தான். அறிவை அன்று நடைபெற்ற நிகழ்ச்சிகள் சரக்கூடம் போட்டன; நடைபெற்ற நிகழ்ச்சிகள் வாலுடன் தலையிணைத்துக் காட்டி நகரின் வரம்பமைத்த பாம்பு மாதிரி அறிவு சக்கரவியூகம் போட்டது. பிரகாசம் க...
122
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
தெரியும் துண்டு வானத்தில் ஒரு நட்சத்திரமும் கூடச் சிரிக்கிறது. ‘முப்பது வயசுக்குள் எவனாவது திடீரென்று மாறிப் பரம் ஒன்றே என்ற நினைப்புடன் நடமாட முடியுமா? குதிரை வாங்கப் போன மந்திரி திரும்பிவரும்பொழுது, விழுந்து கும்பிடு என்று என் மனசே சொல்லும்படி எப்படி மாறிவிட முடியும்? கொண்டு போன பணத்தை என்ன செய்தான்? விரயம் செய்து ப...
123
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
பாண்டியன் உள்ளவரை, அந்நியன் தலை மண்ணில் உருளத்தான் செய்யும்; இருந்தாலும்…” என்கிறார் ஏனாதியான பகைக்கூற்றச் சித்திரனார். “வாதவூரரே, என்ன சொல்லுகிறீர்? தொகை எங்கே?” என்கிறான் அரிமர்த்தனன். “கொடுத்தவன் வாங்கிக் கொண்டான்; குதிரைகள் வரும்” என்கிறார் வாதவூரர். “அரசே, வாதவூரருக்கு வயது முப்பதுதான். திருக்கோவையாரைப் பாடியவர் எ...
124
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
சுழி இருக்க வேண்டுமே. அத்தனையும் உயர்ந்த ஜாதிக் குதிரைகள். குதிரைப் பாகன் தான் கண்கொள்ளாக் காட்சி. அவனை அழைத்துச் சென்று அப்படியே முடிசூட்டிவிடலாமா என்று கூட நினைத்தான் அரிமர்த்தனன். என்ன அசட்டுத்தனமான நினைப்பு! அவன் துருஷ்கனா, யவனனா, சோனகனா? கண்களிலேதான் அம்மம்ம, என்ன பயங்கரம்! சாட்டையைக்கொண்டு சிமிட்டாக் கொடுக்கிறான...
125
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
சங்கு விம்முகிறது, அலறுகிறது, முழங்குகிறது. அதன் ஓசையும் மடிகிறது. அது என்ன சத்தம், தனி நரி ஊளையிடுகிற மாதிரி! அதன் குரல் ஒடுங்கும் சமயத்தில் ஆயிரம் ஆயிரமாக நரிகள் ஊளையிடுகின்றன. நான்மாடக்கூடலில் நரிகளா? குதிரைப்பந்தி இருக்கும் திசையிலிருந்து அல்லவா கேட்கிறது! அரிமர்த்தனன் எழுந்து நிலாமுற்றத்துக்குச் செல்லுகிறான். காது...
126
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
விட்டிருக்கக் கூடும். அவர்கள் இரட்டைத் தாழிட்டு வீட்டுக்குள் அமர்ந்துவிட்டனர். குதிரைக் கொட்டடியின் முன் காவலர்கள் கதவைத் தாழிட்டுக் காவல் காத்து நின்றனர். “உள்ளே மருந்துக்குக்கூட ஒரு குதிரை இல்லை. நமது லாயத்தில் நின்ற பழைய குதிரைகளைக்கூட ஒன்று பாக்கிவிடாமல் கொன்று கிழித்துவிட்டன” என்றார்கள் காவலர்கள். “புதுக் குதிரைகள...
127
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
அவை நரிகளுக்குத்தான் சமம். மானம் கெட்டுப்போய் அரசனும் அவற்றை ஏற்றுக் கொண்டானே! இளம்பூரணர்: புரை தீர்ந்த நன்மை பயக்கும் என்றால் எதுவும் பொய்யே அல்ல. இன்று அரசன் ஏற்றவை நரிகளாகவே இருந்தாலும் அவை பரிகளே. வாதவூரனுக்கு வயசு முப்பது என்பதற்காக வாயில் வந்தபடி எல்லாம் பேசுவதா? ஒற்றன்: குதிரைகள் கொண்டுவந்தானே, அவனை நீங்கள் எங்...
128
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
வேலிகள் கட்டுகிறதே, அப்படிப்பட்ட அறிவு, என்னை ஆட்கொண்டு என்னை அளந்து நிற்கும்போது, அவனால்தான் வர முடியுமா, என்னால்தான் அவனிடம் போக முடியுமா? பாண்டியனிடம் சமத்காரமாகப் பேசிவிட்டதால் நான் செய்த காரியம் சரியாகிவிடுமா? அவன் கொடுத்தானாவது! அவன் வாங்கிக் கொண்டானாவது! அவன் அரிமர்த்தனனாக வந்து கொடுத்த பொழுது அரிமர்த்தனனாக நிற...
129
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
கட்சி போன்றதுதான். மதுரை அதிருஷ்டம் பெற்ற ஊர்தான். பாண்டியநாடு அதிருஷ்டம் பெற்ற நாடுதான். என்னை எப்படியாவது நீதியின் ஆதிக்கத்திலிருந்து பாதுகாப்பதற்காக என்ன என்ன பாடு பட்டான்! அவனுக்குக் குதிரையைப் பற்றிக்கூட அக்கறை இல்லை போல் இருக்கிறது. நீதி என்ற ஒன்று திருப்தியடையும்படி நான் பதில் தந்துவிட்டால் என்னைப் பாதுகாத்து ம...
130
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
களங்கமற்ற தர்மமானது என்னுடைய சிற்றறிவின் கொடுக்கல் வாங்கல்களின் அற்ப நடத்தைகளுக்கு, அகந்தைக்குத் துணை வருவதா? உலகத்தையே பொய்ப்பிக்கும் பொய்யை உண்டாக்கிய நான் அதமன் அல்லவா? சர்வேசுவரனுடைய லீலை என்னுடைய பொய்க்கும் துணை நின்று அதை மெய்ப்பிக்க அதல பாதாளத்தில் இறங்குமாகில் அது… அது… எனது நா எழவில்லையே…! வாதவூரரின் உடலிலிருந...
131
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
நரிகளுக்குச் சமம் என்றீரே. உமக்கு யக்ஷிணி உபாசனை உண்டோ ? சொன்ன மாதிரி பாண்டியன் குதிரை லாயத்திற்குள் நரிகள் எப்படிப் புகுந்தன? தலையாலங்கானத்துப் போரில் கவந்தங்கள் ஆடினவாம். கூளிகளும் பேய்களும் கூழ் அட்டனவாம். அன்று கேட்ட பேரிரைச்சல் கூட இன்றைய நரி ஒன்றின் சத்தத்துக்கு ஈடாகாதே. அலறல் கால பாசம் போல் அல்லவா உயிரை நாடித் த...
132
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
ஸ் நித்திரையில் ஆழ்ந்துள்ள நிலைப்பொருள்களும் ஏகோபித்து ஏற்றுச் சுமக்க வேண்டிய அவனது பார்வை அத்தனையையும் விட்டு அதில் ஒன்றான மகாநுட்பமான வாதவூரன் என்ற தோற்றத்தின் மீது, ஓர் உருவ வரம்புக்கு உட்பட்ட தனிச் சாகையின் மீது விழுந்தால் அது சுமக்குமோ? ஆமாம், அதனால் தான் வாதவூரன் நெஞ்சிலே வேதனை பிறந்தது. சொக்கன் திடுக்கிட்டான். வ...
133
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
என்று நினைத்தாள். வேதனை சுமந்த கழுத்துடன் ஆலவாய்க் கர்ப்பக் கிருகத்திலிருந்து வெளிவந்தது ஓர் உருவம். ஈசன் வெளிவந்தான். சுற்றுமுற்றும் பார்த்தான். எங்கே பார்த்தாலும் வெள்ளம். மதுரை மூதூரை ஊர் என்று அறிய முடியாதபடி ஆக்கிவிட்டது வெள்ளம். ஈசன் நடந்தான். ஈசன் சிரித்தான். ஈசன் வெள்ளத்தில் நீந்தி விளையாடி முக்குளித்துக் கும்ம...
134
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
? பிட்டுக் குழலைப் பார்ப்பாளா? அடுப்பைப் பார்ப்பாளா? அந்த இருட்டில் ஆள் தேடிப் போவாளா? இருட்டிலே “ஆச்சீ” என்ற குரல் கேட்டது. அதிலே எக்களிப்பும் பரிவும் கலந்திருந்தன. வேதனை வெள்ளத்தில் முக்குளித்த ஈசன் குரல் அல்லவா? “யாரப்பா, புட்டு வேணுமா?” என்று கேட்டாள் ஆச்சி. “என்ன ஆச்சி, புட்டா அவிக்கிறாய்? புட்டு நன்றாக இருக்குமா?...
135
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
ைச் சுழற்றியது. ஒரு கூடை மண் எடுத்துப் போட்டான். பாதிவெள்ளம் படக்கென்று வற்றியது. ஆனால் ஜலம் மனித வெள்ளம் இட்ட மண் கரைமேல் மோதித் தத்தி அலம்பி வழிந்து கொண்டிருந்தது. “ஆச்சீ, ஒரு கூடை போட்டுவிட்டேன். பசிக்கிறது. புட்டுப்போடு.” “பேரப்பிள்ளை, தெய்வமேதான் உன்னை இங்கே அனுப்பியிருக்கு. நீயும் அதிட்டக்காரந்தான். நீ போனதுலே இர...
136
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
வானவில்லிட்டன. அரிமர்த்தன பாண்டியனுடைய மணிமுடி மீதும் பட்டத்து யானையின் வைரமிழைத்த முகபடாம்மீது பட்டுத் தெறித்து மின்னி விளையாடின. அரசன் கரையோரமாகப் பட்டத்து யானைமேல், ஜனங்களிட்ட கரையைப் பார்த்துக் கொண்டு, கணக்கர்கள் கணக்கு ஒப்பிக்க, வந்து கொண்டிருந்தான். தூரத்திலே அவன் கண்ணில் ஒரு பகுதி மட்டும் உடைத்துக் கொண்டு வெள்ளம...
137
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
ஈசனது முடிப்பிட்ட முந்தி கிழிந்து கையுடன் வந்தது. ஈசன் ஜலத்தில் முக்குளித்து மறைந்துவிட்டான். அரசனும் தொடர்ந்து குதித்து மறைந்துவிட்டான். வெள்ளம் மடமடவென்று வற்றியது. நுங்கும் நுரையுமாகக் கொப்புளித்த பிரளயம் சர்வேசனது ஹிரண்ய கர்ப்பத்தில் ஒடுங்கியது. ஈரச் சகதியிலே மன்னவன் அரிமர்த்தன பாண்டியனது சடலம் கிடந்தது. உலராத சகதி...
138
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
பூரித்து விம்மிக் குலுங்க, அன்னை மணியூசல் ஆடினாள். ஆலவாய் ஈசன், அழகன் சொக்கன் வருகை நோக்கி மணியூசலாடினாள். தோள் துவள அவள் சங்கிலிகளைப் பற்றி அமர்ந்த பாவனை, சொக்கனை ஆரத் தழுவ அகங்காட்டும் செயல் போல அமைந்திருந்தது. அங்கயற்கண்ணியின் அதரத்திலே கீற்றோடிய புன்சிரிப்பு; மருங்கிலே துவட்சி; கண்ணிலே விளையாட்டு; நெஞ்சிலே நிறைவு....
139
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
ஈசனது பெருவிரலில் பின்னிப் பிணைந்து உந்தியது. “அடித்ததற்குப் பலன் அரியணைக்குப் பதில் அரன்மடி போலும்” என்றாள் அன்னை. அவர்களது மடிமீது அரிமர்த்தன பாண்டியன் அமர்ந்திருந்தான்; சிசுவைப் போல, கவலை இல்லை; எதுவும் இல்லை. “வாதவூரன் நெஞ்சில் வெள்ளம் அடங்கவில்லை. வழிநடையும் தூரந்தான்” என்றான் ஈசன். பொற் பிரம்பு ஈசன் முகத்தில் வி...
140
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
தான் ஒரு பெரிய ஷாப்பு வைத்துக் கொண்டிருந்தான். அப்பொழுதும் மாம்பலத்தில்தான் குடியிருந்தான். அங்கிருந்துதான் கடைக்கு வருவதும் போவதுமாக இருந்தான். ஒரு நாள் சாயங்காலம் போர்ட் ஸ்டேஷனில் புறப்பட்டான். அப்பொழுது மின்சார ரயில் போடப்படவில்லை. டிக்கட்டை வாங்கிக்கொண்டு பிளாட்பாரத்தில் உலாவிக் கொண்டிருக்கும்பொழுது, அவன் மனம் பித...
141
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
இப்படியா நடந்து கொள்வது?” என்று கண்டித்தேன். வேறு விதியில்லை. அவனைப் பார்த்தால் பரிதாபமாக இருந்தது. ஏதாவது ஒரு மாதிரியாக முடித்து வைக்கலாம் என்று மாஜிஸ்திரேட்டைப் பார்க்கச் சென்றேன். அந்தப் பெண்ணின் பெயர் சாந்தாவென்றும், அவள் ஐ஡தியில் பிராமணப் பெண் என்றும், அவள் பெற்றோர் இறந்துவிட்டதினால் சித்தப்பாவுடன் வசிக்கிறாள் என்...
142
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
என்னையும் அவளையும் தவிர வேறு ஒருவரும் கிடையாது. அவளுடன் பேச ஆரம்பித்தேன். “இந்தக் கேஸினால் எவ்வளவு தொந்தரவு இருக்கிறது. கோர்ட்டின் முன்பு நிற்கும்பொழுது எத்தனை பேர் சிரிப்பார்கள். நமக்குள்ளாக, ஒரு பேச்சிற்குச் சொல்கிறேன். அந்த முட்டாளுக்குப் புத்தி கற்பித்துவிட்டு, வேறு வண்டியில் ஏறியிருந்தால், இந்த கூக்குரல் இடாமல்?” ...
143
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
ஒரு வருஷ காலமாக எனது காதல் வளர்ந்து கொண்டே வருகிறது” என்று மனமறிந்து பொய் கூறினேன். “தங்களை ஒரு வருஷத்திற்கு முன்பு சென்னையில் சந்தித்தேன். அப்பொழுதே காதல் கொண்டேன். நான் வேணுவிற்காக இங்கு வரவில்லை. அந்தச் சாக்கை வைத்துக்கொண்டு தங்களைக் காணுவதற்காகவே வந்தேன்” என்றேன். அவளும் என்னைத் தழுவி முத்தமிட்டாள். இரவு ஏழு மணி இர...
144
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
வைத்துக்கொண்டு பராமரிப்பது தலைக்கட்டு நிர்வாகத்தை விடக் கஷ்டம் எனத் தோன்றியது கிழவனாருக்கு. பையனுக்கு இசக்கிமுத்து எனப் பெயரிட்டு, இசக்கியின் அருள் விட்டவழி என ஏக்கத்திலும் ஏமாற்றத்திலும் ஏற்படும் நிராதரவில் பிறக்கும் திருப்தியைப் பெற்றார். குழந்தையும் நாளொரு ஏமாற்றமும் பொழுதொரு கஷ்டமும் அனுபவித்து வளர்ந்து வந்தது. வித...
145
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
ஸ்தல ஹைஸ்கூலின் தலைமை நிர்வாகத்தை ஏற்று இங்கிலீஷும் சரித்திரமும் போதித்து வருகிறார். இவர் வசம் கோனார் தம் குழந்தையை ஒப்புக்கொடுத்தார். சாமியார் இலவசப் படிப்பும், அவன் வாழ்வுக்கு என்று மாசம் நான்கு ரூபாய் சம்பாவனையும் கொடுப்பதாக வாக்களித்ததில் கோனாருக்கு மகிழ்ச்சி கங்குகரையில்லாமல் பிறந்தது. “பிள்ளையை எப்படியும் நாலெழு...
146
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
ஏற்பட்ட உபாத்தியாயர் அர்ச்.பெர்னாண்டஸ் சாமியார் விபரீத ஆசையைக் கொண்டவர். பையனுடைய அழகு அவருடைய நேர்மையற்ற காமவிகாரத்திற்கு இலக்காகியது. பையன் திடுக்கிட்டான். தலைமைச் சாமியாரிடம் ஓடித் தெரிவித்தும் நிவாரணமோ ஆறுதலோ கிடைக்க வழியில்லாமல் போக, சிறு குழந்தைத்தனத்தின் அனுபவ சாத்தியமற்ற முறைகளைக் கையாண்டு, பள்ளிக்கூடத்திலிருந்...
147
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
புராதனச் செல்வங்களில், தொடர்பும் பரிச்சயமும் இல்லாததினால் நஞ்சுக்கொடியைத் தோளில் தூக்கிப் போட்டுக்கொண்டு பிறந்தவுடன் தெரு வழியாகக் கோஷமிட்டுக் கொண்டு ஓடும் குழந்தையின் அசாதாரணத் தன்மையைப் பெற்றிருந்தது. ஆனால் இசக்கிமுத்துவின் பாட்டு, இசக்கிமுத்தின் ‘வெளிவராத ரகசியமாக’ இருந்து வந்தது. இப்படியாக மனக்கனவுகளைப் பாடுவதும் க...
148
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
பூரணமாக நிறைவேறியதாகவே அவர் தீர்மானித்தார். லெட்சுமி என்ற பெண் இசக்கிமுத்துக்கு உடலதிர்ச்சிகளில் இருக்கும் இன்பத்தைக் காட்ட அவ்வூர்ப் பெரியோர்களால் ஆசீர்வதிக்கப்பட்டாள். புதுக்குடித்தனம் என்னும் பதினெட்டாம் பெருக்கு களிபுரண்டு கொந்தளித்துச் சுழித்து ஓடியது. மனக்கனவுகள் என்ற தெப்பம் இசக்கிமுத்துக்கு நிலை தடுமாறி குதித்த...
149
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
அவனது மன வீணையின் நரம்புகள் அறுந்து தொங்கும்படி உணர்ச்சி வாசித்து விளையாடிவிட்டன. உன்மத்தன் ஆனான். பூர்வஜன்மம் என்ற வசதி இருக்கிறதோ என்னவோ, மனித ஜீவனுக்கு உள்ள விசேஷ வசதிகளையும் சக்திகளையும் நம்மால் அறிய முடியாது. இசக்கிமுத்து அவளை மன்னிக்கும் மனப்பண்பு படைத்திருந்தான்; நபும்சகத்தால் விளையும் சகிப்புத்தன்மையல்ல; பரிபூர...
150
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
ஆனால் பொறுப்பை மறந்துவிடவில்லை. ஏனென்றால் அதனால் அதை மறக்க முடியவில்லை. நடந்தது… நடந்து வந்தது… இசக்கிமுத்தும் நடந்து வருகிறான். அவன் முகத்தை தாடியும் சிகையும் மறைத்தது. ஆனால் மனக்கொதிப்பின் புகை மண்டலம்போல் முகத்தைச் சுற்றிச் சிதறிப் பறந்தது. 6 இருவரும் சந்தித்தனர். அது அவனைச் சந்தித்தது; அவன் அதைச் சந்தித்தான். “நான்...
151
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
அப்பொழுது நின்ற இடம், அப்புறத்து அண்டமன்று; கிரக கோளங்கள் சுழலும் வெளியன்று; அது பூலோகந்தான். அவனுடைய வாசஸ்தலமாயிருந்த குகையின் பலிபீடத்தில் அவனுடைய ஆசையின் நிலைக்களமான பழைய தேகம், துகள்களாகச் சிதைவுபட்டுக் கிடந்தது. ஜடத்திலே வெறும் ஆகர்ஷண சக்திபோல், சூட்சுமமான உருவற்ற கம்பிபோல், பார்வைக்குத் தென்படாத ஒளிரேகைபோல் அவ்வு...
152
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
, அச்சமயத்தில் முன் அவனது பூத உடல் பெற்றிருந்த வடிவத்தைச் சூட்சும தேகம் இப்பொழுது பெறும். பூதவுடலிலே பார்ப்பதும், கேட்பதும், உண்பதும், வெளிப்படுத்துவதும் முதலிய காரியங்களைத் தனிப்பட்ட கருவிகள் செய்தன. இப்பொழுது அவனுக்கு உடல் முழுவதுமே வாய். அவன் பார்வைகள் வெளியே எட்டினாலும் ஆசைகள் பூமியை நோக்கி இழுத்தன. ஆசையின் ரேகைகள்...
153
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
ப்பாடியில் தோன்றும் மகான்கள் அடிக்கடி பாஷ்யம் விரித்து அதை ஒரு பெரும் சமுதாயக் கட்டுப்பாடாக்கினர். அக்காலத்திலே, குறிஞ்சிப்பாடியின் சமூகத்திலே தோன்றி, அதன் வளர்ச்சிக்கும் பிரபலத்திற்கும் பாடுபட்டவன் நன்னய பட்டன் என்ற வாலிபன். குறிஞ்சிப்பாடியில் குறுகிய ஆசைகளைப் பலப்படுத்தி வளர்ப்பதே அவனுக்கு ஒரு மகத்தான சேவையாகப் பட்டத...
154
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
கொண்டிருக்க மாட்டான். மரணத்தை வெல்வதே காலத்தின் போக்கைத் தடைசெய்வதே ஆண்மை என்று பதில் சொல்லியிருப்பான். பேதை! மரணம் என்பது இல்லாவிடில் நரகம் என்பது எப்படித் தெரியும்! அப்பொழுது அவனது சிறு மனம் குறிஞ்சிப்பாடிக்கு மேல் விரிந்து, அகில லோகத்தையும் கட்டி ஆள்வதற்கான மூல சக்திகளின் சூட்சுமக் கயிற்றைக் கைக்குள் அடக்க வேண்டும் ...
155
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
குழந்தையை உறங்க வைத்து விட்டு, எழுந்து, குகையை நோக்கி நடக்கலானான். காற்றற்று, அசைவில்லாது நிற்கும் மரங்களிடையே ஒரு துயரம் பொதிந்த பெருமூச்சு எழுந்தது. சற்று நின்று, சுற்றுமுற்றும் கவனித்தான். அவனைத் தவிர வேறு யார் இருக்கப் போகிறார்கள்? குகை வாயிலின் பக்கம் போனதும் தேக மாத்யந்தமும் காரணமற்றுக் குலுங்கியது. மயிர்க்கால்க...
156
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
படலம் போல் ஏதோ ஒன்று கண்களை மறைந்தது. இருட்டையும் நிசப்தத்தையும் தவிர அவன் இந்திரியங்கள் வேறொன்றையும் உணரவில்லை. எத்தனை காலம் கழிந்ததோ அவனுக்கு உணர்வில்லை. மந்திரத்தால் கட்டுண்டு, பின்னர் அதிலிருந்து விலகிய சர்ப்பம் போல் எழுந்து நடந்தான். கால்கள் தள்ளாடின. குகையின் வெளியில் வருவதற்குள் அவனுக்குப் பெரிய பாடாகிவிட்டது. இ...
157
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
அதை நெருங்க நெருங்க, முந்திய நாள் இரவு இருட்டிலே குகைக்குள் நுழைந்த சமயம் ஏற்பட்ட, விவரிக்க முடியாத, உள்ளத்தை விறைத்துப் போகச்செய்யும், உணர்ச்சிகள் தோன்றலாயின. ஆனால் அவன் ஒன்றையும் பொருட்படுத்தாது நெருங்கினான். அப்பொழுது குகையின் எந்த இடைவெளியிலிருந்தோ ஒரு சிறு சூரிய கிரணம் வந்து எலும்புக்கூட்டின் வலக் கண் குழியில் வி...
158
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
உயரத்தில் சுவரின் மேல் இருந்தன. கற்பலகையில், எலும்புக்கூட்டிற்கும் சுவருக்கும் உள்ள ஒரு சிறு இடைவெளியில், சுவரில் இருப்பதைப் போலவே யந்திரம் செதுக்கப்பட்டு அதன் மையத்திலும் ஒரு செந்தாமரைப் புஷ்பம் செதுக்கப்பட்டிருந்தது. கற்பலகையில் வரையப்பட்ட யந்திரம் இருளில் பொன்னிறமாக மின்னியது. தாமரை மலர் வெண்மையான பளிங்கினால் செய்து...
159
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
மாக இருந்தன. அவற்றை அப்படியே சுமந்துகொண்டு குகைக்கு வெளியே வந்தான். அச்சமயத்தில்தான் நன்னய பட்டனுக்குப் ‘பூலோகத்தில் இருக்கிறோம்’ என்ற உணர்வு ஏற்பட்டது. அத்தனை நேரம், ஜன்னி கண்ட நிலையில், உள்ளுக்குள் போராடும் பயத்தை அமுக்கி அந்தக் குகை இரகசியங்களைத் துருவிக் கொண்டிருந்தான். குழந்தை, ஒரு மர நிழலில் தவழ்ந்து விளையாடிக்கொ...
160
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
ிருக்கிறதா! இனிமேல் என் இரகசியத்தைக் கேள்! பிரபஞ்ச இரகசியத்தை அறிய எங்கெல்லாம் சென்றேன், தெரியுமா? மிசிர தேசம் வரை. அக புராணம் வழிகாட்டியது! செமிராமிஸ், காலத்தின் கதியை நிறுத்தும் வித்தையைக் கற்பித்தான். உண்மையில் ஒரு படி அது! அதற்கு மேல் எத்தனை! மூளை குழம்பாது நீ என்னுடன் வருவாயா? அப்படியானால்… குகைக்குள் மூலையில் தொங...
161
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
பின்னர், ஒளியிழந்து மங்கி ஒரே நிலையில் நின்ற முதலையின் கண்களில் சிறிது பச்சை ஒளி வீசியது. மெதுவாக அதன் உடல் அசைந்தது. திறந்தபடியே இருந்த வாய் மெதுவாக மூடியது. முதலை அவனை நோக்கி நகர ஆரம்பித்து விட்டது. அதே சமயம் ‘களுக்’ என்ற ஒரு பெண்ணின் சிரிப்பு. ஏறிட்டுப் பார்த்தான் நன்னய பட்டன். எதிரே குகை வாயிலில் தவழுந் தனது குழந்த...
162
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
தொங்கியது ஒரு சிறு சடை! நன்னய பட்டன்! நன்னய பட்டனா அவன்? அவன் முகமும் உடலும் ஏன் இக்கோர உருப்பெற்றுவிட்டன! கையில் நீண்ட நகம்; தேகத்தில் சடை மயிர், வாயில் வச்சிர தந்தம், உதடுகள் நெஞ்சுவரை தொங்குகின்றன! பேய்ப் பாய்ச்சலில் சென்று, மறையும் ஒரு பெண்ணுருவின் சடையைப் பிடித்துத் திரும்பி, குகையுள் மறைந்தான். வெளியே என்ன ஆச்சர...
163
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
வீச்சு, கம்பிகள் வழியாகப் பாய்ந்து குகை முழுதும் ஒரே பிரகாசமாக்கிக் கண்ணைப் பறித்தது. “தொட்டுப் பார்!” என்றது அக்குரல் மறுபடியும். நன்னய பட்டன் அணுகினான். பலிபீடத்தின் மீதிருந்த உருவத்தைத் தொட்டான்! என்ன ஆச்சரியம்! வெறும் களிமண், சதைக் கோளமாக மாறிவிட்டது! “அதன் நாபியிலும் இதயத்திலும் ஜீவ ரசத்தைத் தடவு!” நன்னய பட்டன் அ...
164
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
என்ற அதிகாரத் தொனியுள்ள குரல்! உருகிய பிழம்புகள் பாதங்கள் வழியாக இதயத்தை நோக்கிப் பாய்வது போல் ஒரு சிறு வினாடி நினைத்தான். அவ்வளவுதான்: மற்றொரு பேரிடி! நீட்டின கையை மடக்க முடியவில்லை. ஒரு கணத்தில் மூன்று எலும்புக்கூடுகள்தான் பலி பீடத்தின் மீது கிடந்தன! ஏக்கமான பெருமூச்சு குகையினின்று வெளிப்பட்டு வானவெளியில் மறைந்தது. இ...
165
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
கண்களில், எதிலும் ஆசை பூர்த்தியாகாத நோக்கு. அறியவேண்டிய அவா. ஐந்து நிமிஷம் சும்மாயிருப்பது சாவுக்கு நிகர் என்று உழைப்பில் நாட்டம் மிகுந்த தேகப் படபடப்பு. பொதுவிலே, அந்தப் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்குத் தங்கள் இரத்தத்தையும் வாழ்க்கையையும் அர்ப்பணம் செய்தார்களே, அந்த நாடோ டிகள், இந்த மகத்தான கூட்டத்தின் தனிக் குணம் இந்த...
166
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
நம்ப முடியவில்லை. அவரும் சிரித்துக்கொண்டு, “நானும் பயந்திருக்கிறேன். நீங்கள் ஏன் சந்தேகப்படவேண்டும்?” என்று கொண்டே தன் பையிலிருந்த ஒரு சுங்கானை எடுத்து நிரப்பி விட்டு, ஒரு இழுப்பு இழுத்து, புகையை மிகுந்த ஆர்வத்துடன் ரஸித்தார். கண்கள் ஏதோ யோசிப்பது போல் கனவு கண்டன. “ஆமாம், நான் பயந்திருக்கிறேன். நான் சொல்லுகிறதைக் கேளுங...
167
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
மௌனம். “அப்பொழுது நடந்ததுதான். நான் தெற்கு ஊர்க் காள் பாலைவனத்தைக் கடந்துவிட்டேன். உலகத்திலுள்ள பிரதேசங்களிலே அது பார்க்கவேண்டிய இடம். பாலைவனம் என்றால், இந்தக் கடற்கரையோரத்திலே கோவணம் மாதிரி நீண்டு கிடக்கிறதே இப்படியிருக்குமென்றா நினைத்துக் கொண்டீர்! அது மணல் சமுத்திரம், எங்கு பார்த்தாலும், மணல், மணல், மணல். திடீரென்று...
168
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
நண்பன் குதிரையிலிருந்து விழுந்தான். சூரிய கிரணத்தினால் தாக்கப்பட்டு, அவனை உயிர்ப்பிக்க வெகு கஷ்டப்பட்டோ ம். முரசொலி, டம், டம், டம் என்று காதைத் தொளைத்தது. எனது இறந்த நண்பனைக் கூர்ந்து கவனித்தேன். பயம் தோன்றியது. “பயம்! “நெஞ்சை அப்படியே அமுக்கி உயிரைக் கசக்கிவிடும் பயம்! அதற்குச் சந்தேகமில்லை. பயந்தான். “சுற்றி நாலுபுற...
169
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
இரண்டு புத்திரர்களும் அவர்களுடைய மனைவிகளுடன் வசித்து வருகிறார்கள். இது அந்தக் குடியானவன் எனக்குப் போகும் பொழுது கூறினான். “இருள் அதிகமாகி விட்டதால் எனக்கு ஒன்றும் தெரியவில்லை. கடைசியாகத் தூரத்திலே சற்று வெளிச்சம். நெருங்கினோம். ஒரு குடிசை கொஞ்சம் பெரியதுதான். வழிகாட்டி கதவைத் தட்டினான். உள்ளிருந்து பயத்தினால் திக்கு ம...
170
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
படுக்கப்போக எழுந்தேன். அப்பொழுது அந்தக் கிழக்காவல்காரன், ஒரே பாய்ச்சலில் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு, ‘அதோ வந்துவிட்டான்! வந்துவிட்டான்! காத்திருக்கிறேன்!’ என்று கூக்குரலிட்டான். உடனே பெண்களும் ஓடிப்போய் முன்போல் சுவருடன் ஒட்டி நின்றார்கள். கிழவனுடைய புத்திரர்கள், மறுபடியும் கோடாலியைத் தூக்கிக் கொண்டார்கள். அவர்களைச் ...
171
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
தோன்றிற்று. தொடுவதுபோல் திறக்க முயல்வது போல் தெரிந்தது. பிறகு… மறுபடியும் தெரிந்தது. பிரகாசமான கண்கள்! ஏதோ ஒரு குரல், ஈனஸ்வரத்தில். “சமையற்கட்டின் பக்கம் ஏதோ அமளி. அந்தக் கிழவன் சுட்டான். அவன் புத்திரர்கள் ஓடிவந்து கதவையடைத்து அதன்மீது மேஜையைச் சாத்தினர். அந்த துப்பாக்கிச் சத்தத்தில் எனது உயிரே போய்த் திரும்பியது. பயம...
172
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
கழிப்பதற்காக ஒரே பாட்டைத் திருப்பித் திருப்பிப் புரட்டிக்கொண்டிருந்தார். சிறிது நேரமாயிற்று. திரை எழவேயில்லை. நான் மேடையின் பின்புறத்திலிருந்து வெளியே வந்து முதல் வரிசையிலிருந்த டாக்டர் சம்பத் பக்கத்தில் உட்கார்ந்திருந்தேன். அவ்வளவு தாமதத்திற்கு என்ன காரணமென்று பார்த்து வரலாமென்று ஆசனத்திலிருந்து எழுந்தேன். அதே சமயம் ஸ...
173
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
டிப்டி கமிஷனர் திரும்பி வந்து சேர்ந்தார். அவர் டாக்டர் சொன்ன கடைசி வாக்கியத்தைத் தொடருவதுபோல் நேராகப் பால் வைத்திருந்த கூஜாவினிடம் சென்றார். அந்தக் கூஜா ஒரு ஸ்டூலின் மேல் தனியாக இருந்தது. டிப்டி கமிஷனர் அதிலிருந்து ஒரு சொட்டுப் பாலையெடுத்துக் கையில் விட்டுப் பார்த்தார். டாக்டரும் அவரருகில் போய் அதைப் பார்த்தார். கூஜாவை...
174
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
இப்படி வா நடேசா, பயப்படாதே, இன்று எங்கே சர்க்கரை வாங்கினாய்?” என்றார். “மாமூலுப்போல எதுத்தாப்போல இருக்கற சாயபு கடையிலேதாங்க.” “சர்க்கரை மடித்து வந்த காகிதம் இங்கே எங்காவது இருக்கும். யாராவது தேடிப்பாருங்கள்.” அதுவரை சிலைகள்போல சுவாசத்தைக்கூட அளந்து விட்டுக்கொண்டிருந்த நடிகர்களிடையே கொஞ்சம் அசைவு தோன்றியது. ஒருவர் பின்ப...
175
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
வுடன் டாக்டர் சம்பத் புன்னகை செய்து வரவேற்று, ஆஸ்பத்திரி டாக்டரிடம், “இவர்தான் என் நண்பர் ரெங்கசாமி, உல்லாசனி சபையின் தமிழ் கண்டக்டர் (போதகர்)” என்று அறிமுகம் செய்துவைத்தார். நான் ஆவலுடன், “பிரேத பரிசோதனை முடிந்ததா?” என்றேன். “ஆம், முடிந்தது. கடைசியில் சபேசய்யர் விஷத்தால் இறக்கவில்லையென்று தெரிந்தது!” “ஆனால்…?” “எங்களு...
176
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
உடனே டாக்டர் “நீங்கள் போய் மோட்டாரில் உட்காருங்கள்” என்று சொல்லிவிட்டு, திரும்பி மேடையை நோக்கி வேகமாக நடந்தார். நான் அவர் சொல்லியபடி மோட்டாருக்குப் போகாமல் அவரைப் பின்பற்றினேன். 3 மூன்றாவதுநாள் காலையில் நான் போலீஸ் டிப்டி கமிஷனருடன் டெலிபோனில் பேசி, கொலையாளியைப் பற்றி ஏதாவது தகவல் கிடைத்ததா என்று கேட்டுவிட்டு டெலிபோனை...
177
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
இதில் உமக்கு யார் மேல் சந்தேகம், சொல்லும் பார்க்கலாம்.” “முதலில் சபேசய்யர் எப்படி இறந்தார் என்று தெரியவேயில்லையே!” “ஆ! அதை மறந்துவிட்டேன். உமக்குத் தெரிந்திருக்குமென்று நினைத்தல்லவா கேட்டுவிட்டேன். சபேசய்யர் விஷத்தால் இறக்கவில்லை. மின்சாரத் தாக்குதலால் இறந்திருக்கிறார். அவர் பாலைக் குடித்துவிட்டுப் படுத்த மஞ்சத்தில்…” ...
178
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
பரீட்சித்தபோது சபேசய்யர் விஷத்தால் இறக்கவில்லையென்பதுதான் தெரிந்ததேயல்லாமல் வேறொன்றும் தெரியவில்லை. மறுநாள் ஜெனரல் ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனையின்போது கூட அவர் மின்சார சக்தியால் மாண்டிருப்பார் என்று நான் சந்தேகிக்கவேயில்லை. அவர் கழுத்தில் ஒரு கறுத்த வடு மாத்திரம் இருப்பதைக் கண்டேன். ஆனால் ஆஸ்பத்திரி டாக்டர் பிரேதத்த...
179
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
தள்ளி வைத்தது முதல் எல்லாவற்றையும் வரிசைப்படுத்தினேன். ஆனால் நீர் கொலை செய்வதற்குக் காரணம் ஏதாவது வேண்டுமே. மேலே விசாரணை செய்தேன். நான் காரணம் சொல்ல வேண்டுமா?" என்று நிறுத்தினார். என் தொண்டையிலிருந்து ஒரு சப்தம்தான் வந்தது. நெஞ்சு உலர்ந்துவிட்டது. அவர் முகத்தை நேரே பார்க்கவும் மாட்டாமல் முகத்தை மேஜை மேலிருந்த என் கைகள...
180
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
முயல். தான் வசிப்பது கலெக்டர் வீடு என்பதை அது அறிந்து கொண்ட வரலாற்றை ஒரு ரசமான இதிகாசம் என்று சொல்ல வேண்டும். கலெக்டர் யுகத்தில் இதிகாச கர்த்தர்களுக்கு இடம் இல்லாமல் போனது இதிகாச கர்த்தர்களின் துரதிருஷ்டமே தவிர முயலின் துரதிருஷ்டம் என்று அதன்மேல் பழி சாற்ற முடியாது. ஏனென்றால் ஜோதிஷர்கள் சொல்லக்கூடிய மிக மிகச் சிறந்த ந...
181
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
ீய நியாயத்தை நிர்த்தாரணம் செய்வது போல முயல் தன் வாலை ஆட்டிவிட்டு, அருகில் உள்ள வலைக்குள் சரேலென்று அந்தர்த்தானம் ஆகிவிடும். ஓடிஓடிச் சலித்துப் போன கிழவன் மாலிக்கு ஒரு யுக்தி தோன்றியது. ஒரு கறுப்பு நாயை இந்த உத்தியோகத்துக்கு அமர்த்தினான். நிலாக்காலங்களில் தவிர மற்ற நாட்களில் இருட்டுடன் இருட்டாக உலாவலாமாகையால் அதற்கு அந்...
182
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
அதைக் குலை நடுக்கமெடுத்து அவ்வாறு ஓடும்படி தூண்டியது. முயல் தர்க்க சாஸ்திரம் படித்த பிராணியாகையினாலே, இம் மாதிரி இரண்டு மூன்று தடவை ஓடின பிற்பாடு, இம்மாதிரி ஓடி ஒளிவது அதற்குப் பிடிக்கவில்லை. வளைக்குள் பதைக்கப் பதைக்க ஓடி, இண்டில் உட்கார்ந்து கொண்டு ஆசுஊசென்று வரும் இரைப்பும் சுவாசமும் நிதானப்பட்டு, படக்குப்படக்கு என்...
183
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
தெரியவில்லை. இப்படிக் கொஞ்சம் வாரும், பார்ப்போம்” என்றது முயல். சுற்றுமுற்றும் பார்த்து எதுவும் தென்படாமல், “எங்கே இருக்கிறீர்? நீர் யார்?” என்று கொஞ்சம் மரியாதையாகக் கேட்டது ஸ்பெஷல் ரோந்து உத்தியோகஸ்தர். “இதோ இப்படி இந்த வளையண்டை வாரும். நான் தான் முயல். நீர் விரட்டுவதற்காக இங்கே வெகு காலமாக இருந்து வருகிறவன். எனக்கு...
184
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
பிலாக்கணம் வைக்க ஆரம்பித்துவிட்டது. அதற்கு என்ன செய்வதென்று புரியவில்லை. “ஓய், என் வீட்டுவாசலில் உட்கார்ந்துகொண்டு பிலாக்கணம் வைக்காதேயும். உமக்கு வேலை போகக் கூடாது. அவ்வளவுதானே உம்முடைய கவலை? நான் சொல்லுகிறபடி சத்தியம் செய்து கொடுப்பீரா?” என்று கேட்டது முயல். “ஆகட்டும், ஆகட்டும்” என்றது நாய். “அதிருக்கட்டும், நீர் சுத...
185
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
சூரிய கிரணங்கள் மூடிய இமை வழியாக அதன் கண்ணுக்குள் இந்திர ஜாலங்களைக் காட்டிக் கொண்டிருந்தன. கீரைப் பச்சையும் டொமாட்டோ ச் சிவப்பும் அடிக்கடி தோன்றி, கலெக்டர் பங்களாக் காய்கறி தோட்டத்துக்கு அதன் மனசை இழுத்துச் சென்றன. நேற்றுப் பார்த்த இடத்தில் முயல் அகப்படுமா, அதை மறுபடியும் பார்க்க முடியுமா என்று கவலைப்பட்டுக்கொண்டு கறு...
186
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
என்று கேட்டது முயல். “அது தான் என்னால் முடியாது என்று அப்போதே சொன்னேனே; நான் செத்துப்போன பிற்பாடு எனக்கு வேலை இருந்து என்ன, போய் என்ன? கலெக்டர் கூட என்னைப் போலத்தானே சாப்பிடுகிறார்?” என்றது நாய். “நீரோ மாமிசத்தை விட முடியாது என்கிறீர்; என்னைத் தின்ன மாட்டேன் என்றாவது சத்தியம் செய்து கொடுப்பீரா?” என்று கேட்டது முயல். “...
187
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
ஓடி வந்துவிட்டது கறுப்பு நாய். முயல் சொல்லி அனுப்பின காரியத்தைக் கேட்டு வருவதற்குக்கூட முடியவில்லையே, அதன் முகத்தில் எப்படி விழிப்பது என்று குன்றிப் போய், பங்களாவுக்குள் நுழைந்த சமயத்தில் பட்டப் பகலாகிவிட்டது. சாப்பாட்டுக்காக, தோட்டக்காரன் குடிசைப் பக்கமாகப் போயிற்று. சாப்பிடும் தட்டை மோந்து பார்த்தது. வெறும் தட்டுதான்...
188
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
வீட்டு வேலைக்காரர்களும் கோம்பையும் போய் விரட்டினார்கள்” என்றது முயலினி. “நம்முடைய பங்களாவுக்கு வாயேன்” என்றது முயல். “என்ன, நாள் நக்ஷத்திரம் பார்க்காமலா? வேதசாஸ்திரம் படித்த தாங்களா இப்படிச் சொல்லுவது?” என்றது முயலினி. 4 சேதி கேட்டு வருவதாகப் போன நாய் திரும்பியே வரவில்லையே என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்தது முயல். காலைய...
189
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
. “போடா போ, உனக்குப் புத்தி கித்தி இல்லை! காரியமா அனுப்பினால் திரும்பியே தலைகாட்டுகிறதில்லை. வழக்குக் கொண்டு வந்துட்டான் வழக்கு. எனக்குக் கல்யாணமாகி இன்னும் அரைமணிப் பொழுது கழியவில்லை. அதற்குள் இந்த நரியோடே ஏண்டா சண்டை போட்டுக் கொண்டாய்?” என்று அதட்டியது முயல். “ஓய் முயலாரே, உம்முடைய உயிருக்காகப் பயப்பட வேண்டாம். இன்னு...
190
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
நரி. “கலெக்டரையா! விரட்டுகிறதா!” என்று பிரமித்துப் போயிற்று நாய். “கலெக்டரை விரட்டி, இந்தப் பங்களாவுக்கு உம்மையே ராஜாவாகப் பண்ணுகிறேன். ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் உருப்படாது என்ற ஜனங்கள் நினைக்கிறது உமக்குத் தெரியுமா? முயலைக் கேட்டுப் பாரும். ஆமாம் என்று சொல்லும். எனக்கு ஒரு சிநேகிதன் ஆமை இருக்கிறது. அதை...
191
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
க் குரல் வளைக்குள்ளிருந்து கேட்டது. 5 அதிகாலையிலே எழுந்திருந்து முயல் சூரிய நமஸ்காரம் பண்ணிக் கொண்டிருந்தது. அந்தச் சமயத்திலே நரி குலைதெறிக்க ஓடிவந்தது. முயல் வெகுவேகமாக வளைக்குள் சென்று உட்கார்ந்துகொண்டு தலையை மட்டிலும் வாசல் பக்கம் வைத்துக் கொண்டது. “என்ன, உமக்கு என்மேல் இன்னும் சந்தேகமா?” என்று கேட்டுவிட்டு “மகாராஜா...
192
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
இனிமேல் தாங்களே ராஜ்ய பாரத்தை ஏற்று நடத்த வேண்டும்” என்றது நரி. “அதற்கென்ன, செய்தால் போகிறது. ஆனால் ஒரு நிபந்தனை. பகலில் நீ இங்கே தலைகாட்டக் கூடாது” என்றது முயல். ‘அதுவும் அப்படியா? அதற்கும் ஒரு வழி பண்ணுகிறேன்’ என்று எண்ணமிட்டு, “ஆகட்டும் மகாராஜா” என்றது. அன்று ராத்திரி நல்ல நிலா. கலெக்டர் ஓடிப் போகவில்லை கிழட்டுத் த...
193
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
ையும் செல்வாக்கையும் ஆளவந்த ஏகபுத்திரன். காசி, ராமேசுவர யாத்திரைப் பயன் என்பது அவன் தகப்பனார் எண்ணம். குழந்தை பிறந்ததும் தகப்பனாருக்கு மனம் இடிந்துவிட்டது. பத்திரகாளியையும் கூசாது எதிர்த்துப் பார்க்கும் அவர் கண்கள் தரையை நோக்கின. ஆகக்கூடி, உள்ளூர் ஜோசியனும், வைத்தியனும் இந்த அற்புதமான சிசுவைப் பற்றிச் சொன்னவை கூடப் பொய...
194
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் சென்றதுதான். “ஒத்தைக்கொரு பிள்ளை என்றால் புத்திக்கூடக் கட்டையாப் போகுமா?” என்று ஊர்க்காரர்கள் கூடச் சிரித்தார்கள். பள்ளிக்கூட வாத்தியாருக்கு அதிகமாக ஒன்றும் தெரியாவிட்டாலும், அவர் படிப்பு, ஊர்க்காரர்களைப் பிரமிக்க வைப்பதற்குப் போதுமானது. மேலும், அநுபவம் நிறைந்தவர். பையனுக்குப் படிப்பு வராத...
195
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
என்று அந்த இருண்ட சித்தத்தில் மின்வெட்டுக்கள் போல் தோன்றலாயிற்று. அச்சமயத்தில் அவனுக்கு வயது பதினைந்து. ‘அப்பா’ ‘அம்மா’ என்ற இரண்டு சொற்களுடன் இப்பொழுது ‘கருப்பாயி’ என்ற வார்த்தையும் தெரியும். குறுமலைக்குன்றின் காடுகளும் அவனுக்குத் தெரியும். 2 குறுமலைச் சாரலில் பிரம்மாண்டமான விருட்சங்களும் கண்ணுக்கு ரம்மியமாகச் செழித்த...
196
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
, மாட்டுக்காரப் பையன்கள் அந்தத் திக்கிற்குச் செல்லவே மாட்டார்கள். இந்த அசட்டுப் பிள்ளைக்குத் தாகம் அதிகரித்தது. அறிவு, சுடர் விளக்காகவும், பயத்தை விரட்டும் கருவியாகவும் இருக்கலாம். ஆனால், அறிவு, சலனம் இல்லாது இருண்டு விட்டால், பயம் என்பதே ஏன் தோன்றப் போகிறது? பையன் இருண்ட குகைக்குள் சென்று இரண்டு சிரங்கை ஜலம் வாரிக் கு...
197
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
கண்களில் ஒரு கணம் சிந்தனை தேங்கியது. அசட்டுக் குழந்தையின் கண்களையே அது கூர்ந்து கவனித்தது. ஸ்பரிசத்திலே புளகாங்கிதமடைந்த குழந்தையின் சிரிப்பு, படிப்படியாக மறைந்தது. கண்களில் அறிவுச் சுடர் ததும்பியது. “என்னுடன் வா!” என்று குழந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு வந்த வழியே திரும்பியது உருவம். குகையில் படிப்படியாக இருள் கவிய...
198
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
வை போல் சாவதானமாக நெளிகின்றன. பல பல வகையில் ஒளிவிட்டுக் கண்களைப் பறிக்கும் மணலில் அங்கங்கே உலகத்து ஜீவராசிகளின் எலும்புக் கூடுகள் பாதி புதையுண்டு கிடக்கின்றன. குழந்தையை அழைத்து வந்த சித்தரின் பிரதிபிம்பங்கள் போல் அச்சு அசல் மாறாத உருவங்கள் ஒவ்வொரு மரத்தடியிலும் நிஷ்டையில் ஆழ்ந்து சலனமற்றிருக்கின்றன. அந்த இயற்கைக்கு விர...
199
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2
அதாவது அஸ்தமிக்கும் செங்கோளமான சூரியனின் கிரணங்கள் மொட்டைக் கோபுரத்தின் மீதும் மாந்தோப்பின் மீதும் விழுந்து பளபளக்கும் சமயத்தில், நான் ஏன் சைத்திரிகனாகப் பிறந்திருக்கக்கூடாது என்று படும். ஊருக்கும் அந்த ரஸ்தாவுக்கும் ஏறக்குறைய அரை மைல் தூரம் இருக்கும். கோபுரத்தைத் தவிர அங்கு மனித வாழ்வின் சின்னங்களைக் காண்பதே அருமை. தூ...
200
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2