text stringlengths 515 1.8k | chunk_id int64 1 246 | author stringclasses 1
value | book stringclasses 1
value |
|---|---|---|---|
புதுமைப்பித்தன் படைப்புகள்
புதுமைப்பித்தன் படைப்புகள்
Acknowledgements:
பாகம் 1
அகல்யை
செல்லம்மாள்
கோபாலய்யங்காரின் மனைவி
இது மிஷின் யுகம்
கடவுளின் பிரதிநிதி
கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்
படபடப்பு
ஒரு நாள் கழிந்தது
தெரு விளக்கு
காலனும் கிழவியும்
பொன்னகரம்
இரண்டு உலகங்கள்
மனித யந்திரம்... | 1 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
கள்; புல்வெளிகள்; இடையிடையே சிறு சிறு குடிசைகளில் மனிதக் கூட்டங்கள். எங்கெங்கோ, அதிக நெருக்கமாக, ஜாஸ்தியாக மனிதக் கூட்டங்கள் வசிக்கும் இடம் நகரம் என்ற ஹோதாவில் விளங்கும் அதில் அரசன் இருப்பான் அதனால் அது தலைநகர்.
இவ்வளவும் தாண்டி ஜன சஞ்சாரமே இல்லாத பாகம். சிந்து நதி ஹிமயத்தின் மடியைவிட்டுச் சமவெளிக்கு வர ஆரம்பிக்கும் இட... | 2 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
அகல்யை. அவர் ஆணுக்கு இலட்சியம் என்றால், இவள் பெண் குலத்திற்கு வெற்றி. மருண்ட பார்வை, அவரைக் காணுந்தோறும் காதல் பொங்கும் கண்கள். அவரைத் தனது உள்ளத்தில் மட்டும் வைத்துவிடவில்லை. அவளது ஒவ்வொரு செயலும் அவரது இன்பத்திற்காகவே. அதிலே அவளுக்கு ஓர் இன்பம்.
கௌதமரும் இவளைக் காதலிக்கிறார். ஆனால் அவர் காதல் காட்டாறு போன்றதன்று சாந்... | 3 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
வெகு துரிதமாக நடக்கின்றன.
உடைகளையெல்லாம் களைந்து பாறையின் மீது வைத்துவிட்டு நீரில் குதிக்கிறாள். அந்தக் குளிர்ந்த நீரில் நீந்தி விளையாடுவதில் என்ன இன்பமோ! ஆழமான சிந்துவில் முக்குளிப்பதும், மறுபடியும் பாறையில் ஏறிக் குதித்து நீந்துவதுமாக அதிலேயே லயித்துப் போய் விட்டாள்.
அப்பொழுது எங்கிருந்தோ இந்திரன் எதிர்க் கரையில் வந... | 4 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
ஈடேறச் சமயம் எதிர்ப்பார்த்திருந்தான்.
இதெல்லாம் அகல்யைக்குத் தெரியாது. ஏதோ ஒரு பெருங்குற்றத்தை, மனத்திற்கு ஒவ்வாத குற்றத்தைச் செய்ததுபோல் அவள் உள்ளம் கொந்தளித்துக் கொண்டிருந்தது.
கௌதமருடைய அன்பும் காதலும் அவளைத் தேற்றின. அன்று அவர்கள் தூங்க நெடுநேரம் சென்றது.
“உனக்காக எல்லாரும் குருடராக இருக்க முடியுமா?” என்றார் கௌதமர... | 5 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
அறிவு வருகிறது. தன் பைத்தியக்காரத்தனம், தன் மிருகத்தனமான கொடுமை!…அவன் உள்ளமே வெடித்துவிடும் போல் இருக்கிறது!
நதிக்குச் சென்ற கௌதமர் இன்னும் விடியாததைக் கண்டு, ஏதோ சூது நடந்திருக்கிறதென்று விரைந்து வருகிறார்.
உள்ளே சரேலென்று நுழைந்ததும், அகல்யை கிடக்கும் கோலத்தில், காரியம் மிஞ்சிவிட்டது என்று அறிந்தார். உடனே தம் மனைவிய... | 6 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
நெஞ்சின் மேல் மடித்து வைத்தார். இடது கால் சற்று ஒரு புறமாக மடிந்து கோணியிருந்தது. அதை நிமிர்த்தி, இரண்டு கால்களையும் சேர்த்துவைத்துக் கிடத்தினார். வாயிதழ் சற்றுத் திறந்திருந்தது. அதையும் மூடினார். செல்லம்மாள் இறந்துவிட்டாள் என்று உள்மன உணர்ச்சி இருந்ததே ஒழிய, ஸ்பரிசத்தில் அவருக்குப் புலப்படவில்லை. அப்பொழுதுதான் மூச்சு... | 7 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
அவருக்கு இருந்த பொருள் வசதி, மகன் ஊரைவிட்டு ஐந்நூறு அறுநூறு மைல் எட்டி வந்தும், பட்டினி கிடக்காமல் மட்டும் பார்த்துக் கொள்ளக் கூடிய அளவுக்கே கல்வி வசதி அளித்தது. உற்ற பருவத்தில் பிரமநாயகம் பிள்ளைக்குச் செல்லம்மாள் கையைப் பிடித்து, அம்மி மிதித்து அருந்ததி பார்க்க வைக்கும் பாக்கியம் கிடைத்தது.
பிரமநாயகம் பிள்ளையின் தகப்ப... | 8 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
அத்தியாவசியமாக முளைத்த வேறு ஒன்றுக்காகச் செலவழித்துவிட்டு, பாம்பு தன் வாலைத் தானே விழுங்க முயலும் சாதுர்யத்துடன் பிரமநாயகம் பிள்ளை தமது வாழ்வின் ஜீவனோபாய வசதிகளைத் தேவை என்ற எல்லை காணமுடியாத பாலைவனத்தைப் பாசனம் செய்ய, தவணை என்ற வடிகால்களை உபயோகிக்கிறார்.
செல்லம்மாளுக்கு உடம்பு இற்றுப் போயிற்று. இடைவிடாத மன உளைச்சலும் ப... | 9 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
, தரையிட்டுவிடும். மேலும் அங்கு எப்படியெல்லாம் இருக்குமோ என்ற பயம் அவருடைய மனசை வெருட்டியது.
சங்கடங்களை நிவர்த்தித்துக் கொள்ளும் மார்க்கங்களைப் பற்றி அவர், அதோ கிடத்தி இருக்கிறதே அந்தச் சடலத்துடன், அதில் மூச்சு ஓடிக்கொண்டு பேசாத சில சமயங்களில், உல்லாசமாக ஊருக்குப் போய்விடுவதில் உள்ள சுகங்களைப் பற்றிப் பேசியதும் உண்டு. ... | 10 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
வரும்போது நெல்லிக்காய் அடையும், ஒரு படி முருக்க வத்தலும் எடுத்துக்கிட்டு வரணும்” என்று சொல்லி விட்டாள்.
பேச்சிலே வார்த்தைகள் மேன்மையாகத்தான் இருந்தன. அதைவிட அவள் புலிப் பால் கொண்டுவரும்படி கேட்டிருக்கலாம்; பிரம்ம வித்தை கற்று வரும்படி சொல்லியிருக்கலாம். அவை அவருக்கு எட்டாக் கனவாகப் பட்டிரா.
“அதற்கு என்ன, பார்த்துக் கொ... | 11 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
க் கடவுளுக்கு லக்ஷார்ச்சனை செய்து கொண்டிருந்தார் பிரமநாயகம் பிள்ளை.
மாலை ஒன்பது மணிக்கு முதலாளிப் பிள்ளையவர்களிடம் தயங்கித் தயங்கித் தமது தேவையை எடுத்துச் சொல்லி, மாதிரி காட்டுவதற்காக மூன்று சேலைகளைப் பதிவு செய்துவிட்டு, மேல் வேட்டியில் முடிந்தவராக வீடு நோக்கி நடந்தார்.
நடைப்படியருகில், பிரமநாயகம் பிள்ளை வந்து மூட்டையை... | 12 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
ண்டித் திருத்தி ஏற்றினார். பக்கத்திலிருந்த மாடத்திலிருந்து ஒரு சுக்குத் துண்டையும் நெருப்புப் பெட்டியையும் எடுத்துக் கொண்டு உள்கட்டுக்குத் திரும்பி வந்தார்.
சுவரின் பக்கத்திலிருந்த குத்துவிளக்கை ஏற்றிவைத்துவிட்டு, செல்லம்மாளருகில் வந்து உட்கார்ந்தார். கையும் காலும் ஜில்லிட்டிருந்தன. கற்பூரத் தைலத்தை உள்ளங்கையில் ஊற்றி,... | 13 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
புரண்டு கிடந்த பிரக்ஞையைத் தெளிவிப்பதில் நிபுணர். கேள்விகளுக்குச் சரியான பதில் சொல்ல வேண்டும் என்பதில்லை; கேட்டதற்கு உரிய பதில் சொன்னால் போதும்.
திடீரென்று செல்லம்மாள் அவரது கையை எட்டிப் பிடித்துக் கொண்டு, “அம்மா, அம்மா, ஊருக்குப் போயிடுவோம். அந்தத் துரோகி வந்தா புடிச்சுக் கட்டிப் போட்டு விடுவான்… துரோகி! துரோகி…” என்... | 14 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
மெதுவாக ஓடிக்கொண்டிருந்தது.
செல்லம்மாள் செத்துப் போவாளோ என்ற பயம் பிரமநாயகம் பிள்ளையின் மனசில் லேசாக ஊசலாடியது.
அந்தப் பயத்திலே மன உளைச்சலோ சொல்லை மீறும் துக்கத்தின் வலியோ இல்லை. வியாதியஸ்தனின் நாக்கு உணரும் ஒரு கைப்பும், அதற்குச் சற்று ஆழமாக ஒரு நிம்மதியும் இருந்தன. எவ்வளவு கஷ்டப்பட்டும் என்ன பலன் என்ற ஒரு மலைப்பு.
ச... | 15 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
க் கொடுத்துவிட்டு மெதுவாகப் படுக்க வைத்தார்.
கண்ணை மூடிச் சில விநாடிகள் கழித்ததும், “உங்களைத்தானே; எப்ப வந்திய? சாப்பிட்டியளா?” என்றாள்.
“நான் சாப்பிட்டாச்சு. நீ படுத்துத் தூங்கு; சும்மா ஒண்ணை மாத்தி ஒண்ணை நெனச்சுக்காதே” என்றார் பிரமநாயகம் பிள்ளை. பதில் அவள் செவியில் விழுந்தது; பிரக்ஞையில் பதியவில்லை. செல்லம் தூங்கிவிட... | 16 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
தலையைச் சற்று இறக்கி, உச்சியைச் சொறிந்தபடி, புருவத்தை நெறித்துக் கொண்டு சொன்னாள்.
“அடுப்பிலே கருப்பட்டிக் காப்பிப் போட்டிருக்கேன்; பல்லைத் தேச்சுப்பிட்டுச் சாப்பிட்டாப் போகுது; பல் தேய்க்க வெந்நி எடுத்துத் தரட்டுமா?” என்றார்.
“வெந்நியெ எடுத்துப் பொறவாசல்லெ வச்சிருங்க. நான் போய்த் தேச்சுக்கிடுதேன்” என்றாள் செல்லம்மாள்.
... | 17 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
பாத்திரத்தில் இன்னும் கொஞ்சம் எடுத்துவந்து தந்தார்.
காப்பியை எடுத்து நெஞ்சுக்கு இதமாக ஒற்றடமிட்டுக்கொண்டு, சாவகாசமாக ஒவ்வொரு மிடறாகக் குடித்துக் கொண்டிருந்த செல்லம்மாள், “நீங்க என்ன சாப்பிட்டிய?” என்றாள்.
“பழையது இருந்தது. ஓர் உருண்டை சாப்பிட்டேன். நீ காப்பியைச் சீக்கிரம் குடி. நேரமாகுது. வைத்தியனைப் போய்ப் பார்த்துக்க... | 18 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
அவளைக் கையைப் பிடித்துத் தூக்கினார்.
“இதெக் கல்லை விட்டு எடுத்துப் போட்டு வருகிறேன்.”
“நீ ஏந்திரி” என்று சொல்லிக்கொண்டே வெந்து கொண்டிருந்த தோசையுடன் கல்லைச் சட்டுவத்தால் ஏந்தி எடுத்து அகற்றினார்.
“நீங்க போங்க. நானே வருதேன்” என்று குலைந்த உடையைச் சீர்திருத்திக்கொண்டு, தள்ளாடிப் பின் தொடர்ந்து வந்து பாயில் உட்கார்ந்தாள்... | 19 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
யா? அந்த எதிர்ச் சரகத்திலே ஒரு மாட்டுத் தொழுவம் இருக்குது பாரு; அங்கே பால்கார நாயுடு இருப்பார். நான் கொஞ்சம் கூப்பிட்டேன் என்று கூட்டிக்கொண்டு வா” என்று அனுப்பினார்.
“என் பேரிலே பளியெப் போட்டுக் கடைக்குப் போகாமே இருக்க வேண்டாம். போய்ச் சம்பளப் பணத்தெ வாங்கிக்கிட்டு வாருங்க” என்றாள் செல்லம்மாள்.
“அடெடே! மறந்தே போயிட்டேன... | 20 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
நீரை விட்டுக் கலக்கி அவளுக்குக் கொடுக்க முயன்றார். பலவீனத்தினால் அரோசிகம் அதிகமாகிவிடவே உடனே வாந்தி எடுத்து விட்டது. ஆனால் குமட்டல் நிற்கவில்லை. செல்லம்மாள் நினைத்து நினைத்து வாயிலெடுக்க ஆரம்பித்தாள். உடல் தளர்ச்சி மிகுந்துவிட, மறுபடியும் பழைய கோளாறுகள் தலை தூக்க ஆரம்பித்தன.
அருகில் இருந்து கொண்டு காலையும் கையையும் பிட... | 21 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
வெளியே புறப்பட்டார்.
“சுருங்க வந்து சேருங்க; எனக்கு ஒருபடியா வருது” என்று மூடிய கண்களைத் திறக்காதபடி சொன்னாள் செல்லம்மாள். அவ்வளவு தளர்ச்சி. வெளிக்கதவு கிறீச்சிட்டு, பிரமநாயகம் பிள்ளை புறப்பட்டுவிட்டதை அறிவித்தது.
அவர் திரும்பி வரும்போது பொழுது கருக்கிவிட்டது. எவரோ ஓர் ஒன்றரையணா எல்.எம்.பி.யின் வீட்டு வாசலில் அவரது வர... | 22 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
மறந்துவிட்டு அடுப்பங்கரைக்கு ஓடினார். அவரது வருகைக்காகக் காத்திருப்பதற்காக மோட்டுவளையைப் பார்க்க முயன்ற டாக்டரின் கண்களுக்கு மாடத்து நெருப்புப் பெட்டி தெரிந்தது. எடுத்து ‘ஸ்பிரிட்’ விளக்கை ஏற்றி மருந்து குத்தும் ஊசியை நெருப்பில் சுடவைத்துச் சுத்தப்படுத்தினார். கையில் நெருப்புப் பெட்டியுடன் அசடு வழிய வேர்வை வழிய நின்று ... | 23 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
பறந்து, எங்கு அமர்வது என்று பிடிபடாதது போல வட்டமிட்டுப் பறந்தது. கடைசியாக அவளுடைய உதட்டின் மேல் உட்கார்ந்தது.
“தூ தூ” என்று துப்பிக்கொண்டு உதட்டைப் புறங்கையால் தேய்த்தபடி செல்லம்மாள் விழித்துக் கொண்டாள்.
சற்று நேரம் அவரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“உங்களுக்குக் கொஞ்சங்கூட இரக்கமே இல்லை. என்னை இப்படிப் போட்டு... | 24 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
. மெதுவாக அவள் கைகள் இரண்டையும் பிடித்துக் கொண்டு முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். செல்லம்மாளுக்குக் காலையிலிருந்த முகப்பொலிவு மங்கிவிட்டது. உதடுகள் சற்று நீலம் பாரித்துவிட்டன. அடிக்கடி வறட்சியைத் தவிர்க்க உதட்டை நக்கிக் கொண்டாள்.
“நெஞ்சில் என்னமாவோ படபடவென்று அடிக்குது” என்றாள் மறுபடியும்.
“எல்லாம் தளர்ச்சியின் கோ... | 25 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
” என்பது தெரிந்தும் தவிட்டு ஒற்றடம் கொடுத்துப் பார்த்தார்.
அவரது நெற்றியின் வியர்வை அந்த உடலின் கண் இமையில் சொட்டியது.
அரைக்கண் போட்டிருந்த அதை நன்றாக மூடினார். குரக்குவலி இழுத்த காலை நிமிர்த்திக் கிடத்தினார். கைகளை நெஞ்சில் மடித்து வைத்தார்.
அருகில் உட்கார்ந்திருந்தவர் பிரக்ஞையில் தளதளவென்று கொதிக்கும் வெந்நீரின் அழைப... | 26 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
நோட்டுகளை நீட்டினான்; “அம்மாவுக்கு எப்படி இருக்கு?” என்றான்.
“அம்மா தவறிப் போயிட்டாங்க. நீ இந்த நோட்டை வச்சுக்க; ஒரு தந்தி எளுதித் தாரேன். அதெக் குடுத்துப்புட்டு, முதலாளி ஐயா வீட்டிலே சொல்லு. வரும்போது அம்பட்டனுக்கும் சொல்லிவிட்டு வா” என்றார்.
நிதானமாகவே பேசினார்; குரலில் உளைச்சல் தொனிக்கவில்லை.
பிரமித்துப்போன முனிசாமி... | 27 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
பேச்சு. எதிரில் பேச முடியுமா? அதுவும் அந்தக் காலத்தில்; அதுவும் தஞ்சாவூரில். சிலர் போயும் போயும் இடைச்சிதானா அகப்பட்டாள் என்று பேசிக் கொண்டார்கள். படியாதவர்கள், யாரோ இடைச்சியை இழுத்து வந்து வைப்பாக வைத்திருக்கிறார் என்று அபிப்பிராயப்பட்டார்கள். ஆனால் பத்திரிகைகளில் பிரசுரமான் செய்தி என்பதால் வேறு வழியின்றி நம்பிக் கொண்... | 28 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
இருக்கும் ஒரு இலட்சியம் என்று கருதியவள். எட்டாதது என்ற நினைப்பில் பிறந்த பயம் கணவன் இஷ்டப்படி நடக்கத் தூண்டியதேயல்லாது அவரிடம் தன்னை மறந்த பாசம், லயம் பிறப்பித்ததே கிடையாது.
“என்ன மீனா! உனக்கு எத்தனை தரம் அப்படிக் கூப்பிடக் கூடாது என்று சொல்லியிருக்கிறேன். கண்ணா! இப்படி வா! என்ன இப்படி கறிக்குழம்பு வைத்தாய்?” என்றார்.... | 29 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
ாரகனை நியமித்தார். சம்பளம் இருபத்தைந்து ரூபாய் என்ற ஆசையும், கலெக்டர் அய்யங்கார் என்ற பயமும் இருந்தால் ஒரு ஏழைப் பிராமணன் அகப்படாமலா போகிறான்?
ஆனால் கலெக்டருக்கும் பரிசாரகனுக்கும் ஒரு சமரச ஒப்பந்தம். கோபாலய்யங்கார் தஞ்சை ஜில்லாவிற்குப் பூராவாகவும் எதேச்சாதிகாரியாக இருப்பது என்றும், சமயலறையைப் பொறுத்தமட்டில் பரிசாரகன் ச... | 30 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
அது ஒண்ணும் கெடையாது இப்போ?” என்றாள்.
கோபாலய்யங்காருக்குச் சுறுக்கென்று தைத்தது. நல்ல காலமாக சுப்புவைய்யர் காப்பியைக் கொண்டு வந்து கொடுக்க உள்ளே நுழைந்தார். கோபம் அவர் மேல் பாய்ந்தது.
“தடியா! காப்பியை வைத்துவிட்டுப் போ!” என்று இரைந்தார்.
அய்யங்காருக்கு கொஞ்சம் ‘டோஸ்’ ஜாஸ்தி போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டு போய்விட... | 31 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
.
கோபாலய்யங்காரின் மனைவி
3
கோபாலய்யங்கார் மாமிசப்பட்சணியான பிறகு சுப்புவைய்யரின் எதேச்சாதிகாரம் தொலைந்தது. மீனாள் உண்மையில் கிரகலட்சுமியானாள்.
இரண்டு வருஷ காலம் அவர்களுக்கு சிட்டாகப் பறந்தது. மீனாளின் துணைக்கருவியாக கோபாலய்யங்காரின் மேல்நாட்டுச் சரக்குகள் உபயோகிக்கப்பட்டன.
தம்பதிகள் இருவரும் அதில் ஈடுபட்டதினால் மூப்பு ... | 32 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
அவன் பட்டியலில் இல்லாதது. முகத்தில் ஏதாவது குறி தோன்ற வேண்டுமே! உள்ளே போகிறான்.
“ஒரு ஐஸ் வாட்டர்!”
“என்னப்பா, எவ்வளவு நேரம் காத்திருக்கிறது?”
“என்ன கிருஷ்ணா, அவர் எவ்வளவு நேரம் காத்திருக்கிறது?”
“இதோ வந்துவிட்டது, ஸார்!” என்று ஓர் அதிகாரக் குரல் கெஞ்சலில் முடிந்தது.
“காப்பி இரண்டு கப்!”
இவ்வளவுக்கும் இடையில் கிருஷ்ணன்... | 33 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
மணிக்கொடி, 25.11.1934
1
சிற்றூர் உண்மையிலேயே சிற்றூர்தான்.
அதன் எல்லை எல்லாம் ஒரே தெருவிற்குள். அந்தத் தெருவும் இடையிடையில் பல்விழுந்த கிழவியின் பொக்கை வாய் மாதிரி இடிந்தும் தகர்ந்தும் சிதறிய வீடுகள். அவ்வளவும் பிராமண வீடுகள். விவசாயம் என்று சம்பிரதாயமாக மண்ணைக் கிளறும் மண்ணைக் கவ்வும் சோம்பேறித்தனம். தெருவின் மேற்குக... | 34 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
பொறுத்தமட்டிலும் வீட்டில் பட்டினியானாலும் நல்ல மதிப்பு உண்டு. வேத அத்தியயனத்தில் சிறிது பயிற்சி. பூஜை மந்திரங்கள் மனப்பாடம். வேதத்தின் அர்த்தம் அவருக்கும் தெரியாது. பரமசாது. தெரியாததினால் அதில் பக்தி.
கோவிலில் வரும் சிறு வரும்படிகளில் காலம் தள்ளி வந்தார். கோவில் சேவையில் கிடைக்கும் கூலி நியாயமாகப் பெற வேண்டியதுதான் என்... | 35 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
ம் தளும்பியது.
பிறகு
ஹரிஜனங்களைக் கோவில்களில் அனுமதிக்க வேண்டும் என்றும் அதைத் தடை செய்வதைப் போல் மகத்தான பாபம் கிடையாது என்றும் விஸ்தரிக்கலானார்.
சுப்பு சாஸ்திரிகளுக்கு நெஞ்சில் யாரோ சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது.
கோவிலுக்குள்ளா?
“அடா பாபி! உன் நாக்கு வெந்துபோகாதா?” என்றார்.
“காந்தி அப்படிச் சொல்லியிருக்கமாட்டார... | 36 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
கல்லை எறிந்துவிட்டு ஓடிவிடுகிறார்கள். ஒரு கல் அவர் மண்டையில் விழுந்து காயத்தை உண்டு பண்ணி விட்டது.
இதை எதிர்பார்க்கவில்லை.
திரும்பிப் பார்க்குமுன் தலைசுற்றி மயங்கி விழுகிறார்.
3
சுப்பு சாஸ்திரிகளுக்கு அன்று ஒன்றும் ஓடவில்லை. திரு.சங்கருக்கு அவர் வீட்டில் சாப்பாடு என்று அவர் சொல்லியிருந்தார்.
அதிதியின் கொள்கைகள் எப்படி... | 37 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
மேகங்கள் ஒன்றாகக்கூடி கர்ஜித்துச் சிரித்தன.
கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்
கலைமகள், அக்டோ பர், நவம்பர் 1943 1
மேலகரம் மே. க. ராமசாமிப் பிள்ளை அவர்களின் ஏகபுத்திரனும் செல்லப்பா என்பவருமான மேலகரம் மே. க. ரா. கந்தசாமிப் பிள்ளையவர்கள், ‘பிராட்வே’யும் ’எஸ்பிளனேடு’ம் கூடுகிற சந்தியில் ஆபத்தில்லாத ஓரத்தில் நின்றுகொண்டு வெகு... | 38 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
ரிப்பேர் செய்யும் சக்கிலியன் பக்கமாக இருவரும் ஒதுங்கி நின்றார்கள்.
மேலகரம் ராமசாமிப் பிள்ளையின் வாரிசுக்கு நாற்பத்தைந்து வயசு; நாற்பத்தைந்து வருஷங்களாக அன்ன ஆகாரமில்லாமல் வளர்ந்தவர் போன்ற தேகக் கட்டு; சில கறுப்பு மயிர்களும் உள்ள நரைத்த தலை; இரண்டு வாரங்களாக க்ஷவரம் செய்யாத முகவெட்டு; எந்த ஜனக் கும்பலிலும், எவ்வளவு தூரத... | 39 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
கந்தசாமிப் பிள்ளையின் சங்கற்பம்.
இருவரும் ஒரு பெரிய ஹோட்டலுக்குள் நுழைந்தனர். கடவுள் கந்தசாமிப் பிள்ளையின் பின்புறமாக ஒண்டிக்கொண்டு பின் தொடர்ந்தார்.
இருவரும் ஒரு மேஜையருகில் உட்கார்ந்தார்கள். பையனுக்கு மனப்பாடம் ஒப்பிக்க இடங் கொடுக்காமல், “சூடா, ஸ்ட்ராங்கா இரண்டு கப் காப்பி!” என்று தலையை உலுக்கினார் கந்தசாமிப் பிள்ளை.... | 40 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
கொண்டிருந்தது.
“இதோ இருக்கிறதே!” என்றார் கடவுள். உதவி செய்வதற்காக விரலை நீட்டினார். அது பறந்துவிட்டது. ஆனால் எச்சில் காப்பி அவர் விரலில் பட்டது.
“என்ன ஐயா, எச்சிலைத் தொட்டுவிட்டீரே! இந்த ஜலத்தை எடுத்து மேஜைக்குக் கீழே கழுவும்” என்றார் பிள்ளை.
“ஈயை வரவிடக்கூடாது, ஆனால் மேஜையின் கீழே கழுவ வேண்டும் என்பது சுகாதாரம்” என்று... | 41 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
ூன்று சரியா? பார்த்துக்கொள்ளும் சாமியாரே!”
“நீங்கள் சொல்லிவிட்டால் நமக்கும் சரிதான்; எனக்குக் கணக்கு வராது” என்றார் கடவுள்.
ஒரு போலிப் பத்து ரூபாய் நோட்டைத் தள்ளிவிட்டதில் கடைக்காரருக்கு ஒரு திருப்தி.
வெளியே இருவரும் வந்தார்கள். வாசலில் அவ்வளவு கூட்டமில்லை. இருவரும் நின்றார்கள்.
கடவுள், தம் கையில் கற்றையாக அடுக்கியிருந... | 42 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
.
பொழுது மங்கி, மின்சார வெளிச்சம் மிஞ்சியது.
“இவ்வளவு சீக்கிரத்தில் அன்னியோன்னியமாகி விட்டோ மே! நீங்கள் யார் என்றுகூட எனக்குத் தெரியாது; நான் யார் என்று உங்களுக்குத் தெரியாது. பட்டணத்துச் சந்தை இரைச்சலிலே இப்படிச் சந்திக்க வேண்டுமென்றால்…”
கடவுள் சிரித்தார். பல், இருட்டில் மோகனமாக மின்னியது. “நான் யார் என்பது இருக்கட்ட... | 43 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
. அப்புறம் ஜீவிய சந்தாவைப் பார்க்கலாம்” என்று கடவுளைச் சந்தாதாராகச் சேர்க்கவும் முயன்றார்.
‘பதினேழு வால்யூம்கள் தவிர, இன்னும் இருபத்தைந்து ரூபாயை வாங்கிக்கொண்டு ஓட ஓட விரட்டலாம் என்று நினைக்கிறாரா? அதற்கு ஒரு நாளும் இடம் கொடுக்கக் கூடாது’ என்று யோசித்து விட்டு, “யாருடைய ஜீவியம்?” என்று கேட்டார் கடவுள்.
“உங்கள் ஆயுள்தான... | 44 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
ஒன்றுமில்லை. மேலும் உங்களுக்கு, நான் வைத்தியத்தை ஜீவனோபாயமாக வைத்திருக்கிறேன் என்பது ஞாபகம் இருக்க வேண்டும். வியாதியும் கூடுமானவரையில் அகன்றுவிடக்கூடாது. ஆசாமியும் தீர்ந்துவிடக்கூடாது. அப்பொழுதுதான், சிகிச்சைக்கு வந்தவனிடம் வியாதியை ஒரு வியாபாரமாக வைத்து நடத்த முடியும். ஆள் அல்லது வியாது என்று முரட்டுத்தனமாகச் சிகிச்சை... | 45 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
கொண்டு தாடியை நெருடினார்.
கந்தசாமிப் பிள்ளை திடுக்கிட்டார். கடவுளாவது, வருவதாவது!
“பூலோகத்தைப் பார்க்க வந்தேன்; நான் இன்னும் சில நாட்களுக்கு உம்முடைய அதிதி.”
கந்தசாமிப் பிள்ளை பதற்றத்துடன் பேசினார். “எத்தனை நாள் வேண்டுமானாலும் இரும்; அதற்கு ஆட்சேபம் இல்லை. நீர் மட்டும் உம்மைக் கடவுள் என்று தயவு செய்து வெளியில் சொல்லிக்... | 46 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
இழுத்துச் சென்றான்.
கடவுள் வாய்விட்டு உரக்கச் சிரித்தார். விழுந்து விழுந்து சிரித்தார். மனசிலே மகிழ்ச்சி, குளிர்ச்சி.
“இதுதான் பூலோகம்” என்றார் கந்தசாமிப் பிள்ளை.
“இவ்வளவுதானா!” என்றார் கடவுள்.
இருவரும் வீட்டை நோக்கி நடந்தார்கள்.
வீட்டுக்கு எதிரில் உள்ள லாந்தல் கம்பத்தின் பக்கத்தில் வந்ததும் கடவுள் நின்றார்.
கந்தசாமிப்... | 47 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
முறை வைத்துக் கூப்பிடுவேன்; உடன்பட வேணும்” என்றார் கந்தசாமிப் பிள்ளை.
“அப்பா என்று வேண்டாமப்பா; பெரியப்பா என்று கூப்பிடும். அப்போதுதான் என் சொத்துக்கு ஆபத்தில்லை” என்று சிரித்தார் கடவுள். பூலோக வளமுறைப்படி நடப்பது என்று தீர்மானித்தபடி சற்று ஜாக்கிரதையாக இருந்து கொள்ள வேண்டும் என்று பட்டது கடவுளுக்கு.
“அப்படி உங்கள் சொத... | 48 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
என்று கேட்டது.
“என்னைத்தான் கொண்டாந்தேன்” என்றார் கந்தசாமிப் பிள்ளை.
“என்னப்பா, தினந்தினம் உன்னியேத்தானே கொண்டாரே; பொரி கடலையாவது கொண்டாரப்படாது?” என்று சிணுங்கியது குழந்தை.
“பொரி கடலை உடம்புக்காகாது; இதோ பார். உனக்கு ஒரு தாத்தாவைக் கொண்டு வந்திருக்கிறேன்” என்றார் கந்தசாமிப் பிள்ளை.
“இதுதான் உம்முடைய குழந்தையோ?” என்று... | 49 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
உடலே குளுகுளுத்தது.
“கூச்சமா இருக்கு” என்று உடம்பை நெளித்தார் கடவுள்.
“ஏன் தாத்தா, களுத்திலே நெருப்பு கிருப்புப் பட்டு பொத்துப் போச்சா? எனக்கும் இந்தா பாரு” என்று தன் விரல் நுனியில் கன்றிக் கறுத்துப் போன கொப்புளத்தைக் காட்டியது.
“பாப்பா, அது நாகப்பளந்தாண்டி யம்மா; முந்தி ஒரு தரம் எல்லாரும் கொடுத்தாளேன்னு வாங்கி வாயிலே... | 50 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
காந்திமதி அம்மையாருக்கு (அதுதான் கந்தசாமிப் பிள்ளை மனைவியின் பெயர்) என்றும் அநுபவித்திராத உள்ள நிறைவு ஏற்பட்டது. மனமும் குளிர்ந்தது. கண்ணும் நனைந்தது.
“வாசலில் இருக்கற அரிசி மூட்டையை அப்படியே போட்டு வச்சிருந்தா?” என்று ஞாபகமூட்டினார் கடவுள்.
“இவுகளுக்கு மறதிதான் சொல்லி முடியாது. அரிசி வாங்கியாச்சான்னு இப்பந்தான் கேட்டே... | 51 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
என்றார் கந்தசாமிப் பிள்ளை.
“என்னையுமா தூங்கச் சொல்லுகிறீர்?” என்று கேட்டார் கடவுள்.
“மனுஷாள்கூடப் பழகினால் அவர்களைப் போலத்தான் நடந்தாகணும்; தூங்க இஷ்டமில்லை என்றால் பேசாமல் படுத்துக்கொண்டிருங்கள். ராத்திரியில் நடமாடினால் அபவாதத்துக்கு இடமாகும்” என்றார் கந்தசாமிப் பிள்ளை.
3
கந்தசாமிப் பிள்ளை பவழக்காரத் தெரு சித்தாந்த த... | 52 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
? யார் நன்மைக்கு?” என்று சிரித்தார் கடவுள்.
“தானம் வாங்கவும் பிரியமில்லை; கடன் வாங்கும் யோசனையும் இல்லை; அதனால் தான் வியாபாரார்த்தமாக இருக்கட்டும் என்கிறேன். நன்மையைப் பற்றிப் பிரமாதமாகப் பேசிவிட்டீர்களே! இந்தப் பூலோகத்திலே நெய் முதல் நல்லெண்ணம் வரையில் எல்லாம் கலப்படம் தான். இது உங்களுக்குத் தெரியாதா?” என்று ஒரு போடு ... | 53 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
“அவ்வளவுமா! எனக்கா!” என்று கேட்டது குழந்தை.
“ஆமாம். உனக்கே உனக்கு” என்றார் கடவுள்.
“அப்புறம் பசிக்காதே! சாப்பிடாட்டா அம்மா அடிப்பாங்களே! அப்பா லேவியம் குடுப்பாங்களே!” என்று கவலைப்பட்டது குழந்தை.
“பசிக்கும்; பயப்படாதே!” என்றார் கடவுள்.
“தாங்கள் வாங்கிக் கொடுத்திருந்தாலும், அது ஹோட்டல் பட்சணம். ஞாபகம் இருக்கட்டும்” என்றா... | 54 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
கால்மணிப் போது கழித்து மூன்று பேர் திவான் பகதூர் பிரகதீசுவர சாஸ்திரிகள் பங்களாவுக்குள் நுழைந்தனர். ஒருவர் கந்தசாமிப் பிள்ளை; மற்றொருவர் கடவுள்; மூன்றாவது பெண் தேவி.
“நான் இவருக்குத் தங்கபஸ்பம் செய்து கொடுத்து வருகிறேன். நான் சொன்னால் கேட்பார்” என்று விளக்கிக் கொண்டே முன் வராந்தாப் படிக்கட்டுகளில் ஏறினார் பிள்ளை; இருவரு... | 55 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
ிருக்கிறீர்களா?” என்று தேவியைப் பார்த்துக் கொண்டு கூத்தனாரிடம் திவான் பகதூர் கேட்டார்.
கடவுளுக்கு வாய் திறக்கச் சந்தர்ப்பம் கொடுக்காமல் “நாங்கள் ஆடாத இடம் இல்லை” என்றாள் தேவி.
“என்னவோ என் கண்ணில் படவில்லை. இருக்கட்டும்; அம்மா ரொம்பக் கறுப்பா இருக்காங்களே, சதஸிலே சோபிக்காதே என்று தான் யோசிக்கிறேன்” என்றார் வர்ணபேத திவான... | 56 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
யும் சடையும் பின்னிப் புரள, கண்மூடிச் சிலையாக நின்றிருந்தார்.
மறுபடியும் இசை, மின்னலைச் சிக்கலெடுத்து உதறியது போல, ஒரு வெட்டு வெட்டித் திரும்புகையில் கடவுள் கையில் சூலம் மின்னிக் குதித்தது; கண்களில் வெறியும், உதட்டில் சிரிப்பும் புரண்டோ ட, காலைத் தூக்கினார்.
கந்தசாமிப் பிள்ளைக்கு நெஞ்சில் உதைப்பு எடுத்துக் கொண்டது. கடவ... | 57 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
கொண்டிருந்தது.
இரண்டு பேரும் மௌனமாக இருந்தார்கள். “தெரிந்த தொழிலைக் கொண்டு லோகத்தில் பிழைக்க முடியாது போல இருக்கே!” என்றார் கடவுள்.
“நான் சொன்னது உங்களுக்குப் பிடிக்கவில்லை; உங்களுக்குப் பிடித்தது லோகத்துக்குப் பிடிக்கவில்லை; வேணும் என்றால் தேவாரப் பாடசாலை நடத்திப் பார்க்கிறதுதானே!”
கடவுள், ‘ச்சு’ என்று நாக்கைச் சூள் ... | 58 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
, நோய் நோஞ்சான், நகை நட்டு முதலிய சகல சுமைகளையும் தபால் வண்டிகள் என்ற இரட்டை மாட்டு வண்டிகள் பத்திரமாக, மெதுவாக வேற்றிடங்களுக்கு சுமந்து சென்று கொண்டிருந்தன. பெட்ரோல் கட்டுப்பாடு சிலரைக் கட்டுப்படுத்தவில்லை; மாட்டு வண்டிச் சாரைகளை விலக்கிக் கொண்டு மின்வெட்டி மறைவது போலவும், அரசியல் துறையில் சந்தர்ப்ப விசேஷத்தைத் தொத்தி... | 59 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
காணுமுன் காதலித்த மாதிரி, நேரில் அனுபவிக்குமுன் மனசிற்குள் புகுந்துவிட்டது. அதிகாலையில் ஆற்றங் கரையில் நின்று கொண்டு, முதல் முழுக்கு போடும் வரை உலகெல்லாம் பரந்து கிடக்கும் குளிர் ஒருங்கே திரண்டு ஆற்றுப் பிரவாகமாக ஓடுவதாக நினைத்து உடல் நடுக்கம் கொள்வதுபோல, ஜனங்கள் நரம்பிலே எப்பொழுதும் ஒரு படபடப்பை கொடுத்து வந்தது. தூங்... | 60 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
யல் புரிவார்கள். ஆனால் இப்போது, சாதாரண காரியம், வியாபாரம், பேச்சு, வியவகாரம் எல்லாம் இருட்டில் கதவடைத்து நடக்கிறது. கடைக்காரன் சாமான் கொடுக்கவில்லை. தன் மனசில் உள்ள குழப்பத்தை, நாடியில் ஓடும் படபடப்பைப் பகிர்ந்து கொள்ளுகிறான். தூரத்திலே நகரத்தின் ஜீவாதாரத் தேவைகளை முன்னிட்டு கடவுளைப் போல் தொண்டு புரியும் இரும்பு யந்திர... | 61 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
உலகம் என்பது என்ன? பூகோள புஸ்தகத்தில் படிப்பதா? அல்லவே அல்ல. அனுபவ கிரந்தத்தில் படிப்பதேயாகும். அது இரண்டரைச் சதுர மைல் விஸ்தீரணமுள்ள ஓட்டப் பட்டியாக இருக்கலாம். அல்லது நியுயார்க் மாதிரி ஒரு சின்ன பிரபஞ்சமாக இருக்கலாம். அல்லது நாலு முழத்தொட்டிலாக இருக்கலாம். பக்குவத்துக்கு ஏற்றபடி அதுதான் உலகம். அந்த உலகத்தைத்தான் ஆதி... | 62 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
உள்ளே வந்து கெடிகாரத்தை எடுத்துப் பார்த்தேன். அதற்கு ரேடியம் டயல். அது கொள்ளிக் கண் தீயுமிழ, ஏற்கனவே விடிந்துவிட்டது என உறுமியது. விடிந்துவிட்டது என்பதில் ஆசுவாசம்; நிம்மதி; அலமறலும் அடங்கியது. அப்புறம் ஒரு அமைதி… பிரலாபத்தின் விபரீத நாதத்தைவிட பயங்கரமாக இருந்தது அந்த அமைதி. மனசு நிதானப்படுவதற்காக வெற்றிலைப் பெட்டியை எ... | 63 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
11937
“கமலம்! அந்தக் கூஜாவிலே தண்ணீர் எடுத்தா! வெற்றிலைச் செல்லம் எங்கே? வச்சது வச்ச இடத்தில் இருந்தால்தானே?” என்று முணுமுணுத்தார் முருகதாசர்.
கையில் இருக்கும் கோரைப் பாயை விரிப்பதே ஒரு ஜாலவித்தை. நெடுநாள் உண்மையாக உழைத்தும் பென்ஷன் கொடுக்கப் படாததால் அது நடு மத்தியில் இரண்டாகக் கிழிந்து ஒரு கோடியில் மட்டிலும் ஒட்டிக் ... | 64 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
ித்தே அதில் குடியிருக்கலாம் என்று துணிந்தார். அதனால், தமக்கும் தம் சகதர்மிணிக்கும் இப்படி நிரந்தரமான ‘பிளவு’ இருக்கும் என்று சிறிதும் எட்டி யோசிக்கவில்லை; மேலும் அவர் யோசிக்கக் கூடியவரும் அல்லர்.
பக்கத்தில் இருந்த அரிக்கன் விளக்கை எடுத்துக் கொண்டு அவர் சமையல் பகுதியை நோக்கிப் பிரயாணமானார்.
இடைவழியில், குழாயடியில், உள்ள... | 65 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
ஒங்களைத்தானே! கொஞ்சம் நல்லெண்ணை வாங்கிட்டு வாருங்களேன்!”
“எங்கிட்ட இப்பொ துட்டுமில்லே, காசுமிலே!” என்று திரும்பி நின்று பதிலளித்தார் முருகதாசர்.
“அதுவும் அப்படியா! இன்னா இந்த மிளவொட்டியிலே(மிளகுப் பெட்டி ஐந்தரைப் பெட்டி) மூணு துட்டு (ஓர் அணா; ஒரு துட்டு நான்கு பாண்டி நாட்டு தம்பிடி) இருக்கு. அதெ எடுத்துகிட்டுப் போங்க!”... | 66 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
ாவரம் பெற்ற’ கதைகளும் எழுதுவார். அந்தத் திறமையை உத்தேசித்து, ஒரு விளம்பரக் கம்பெனி மாதம் முப்பது ரூபாய்க்கு வானத்தையளக்கும் அவரது கற்பனைத் திறமையைக் குத்தகை எடுத்துக் கொண்டது. அதனால் அவர் வீர புருஷர்களையும், அழியாத சித்திரங்களையும் எழுத்தோவியமாகத் தீட்டுவதை விட்டு விட்டு, சோயாபீன் முதல் மெழுகுவர்த்தி வரையிலும் வெளிநாடு... | 67 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
செய்விக்க, ‘சாகாவரம் பெற்ற’ கதைகளை எழுதுவதைக் கொஞ்சம் கட்டி வைத்துவிட்டு, இந்த ‘லிப்டன் தேயிலை’, காப்பி கொக்கோ ஆகியவற்றின் மான்மியங்களை அவர் எழுத ஆரம்பித்தார். ஒரு பெரிய நாவல் மட்டிலும் எழுதிவிட்டால் அது ஒரு பொன் காய்க்கும் மரமாகிவிடும் என்று அவர் நெஞ்சழுத்தத்துடன் நினைத்த காலங்களும் உண்டு. இப்பொழுது அது ஒரு நெடுந்தூர... | 68 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
னுங்க. வீட்டுக்கு வண்டியிலே கொண்டாந்து வுடணுமுண்ணு மொண்டி பண்ணுதுங்க. எனக்குக் காலுலே சுளுக்கு. அந்தச் சின்னாம்பயலே காணும்…” என்று நீட்டிக் கொண்டே போனான் ரிக்ஷாக்காரன்.
“அப்பா, அவன் பங்கஜத்தே மாத்ரம் கூட்டிக்கிட்டே போரானே!” என்றாள் அலமு. பங்கஜம் எதிர்வீட்டு சப்ரிஜிஸ்திரார் குழந்தை. அது ரிக்ஷாவிலும் போகும், மோட்டாரிலும்... | 69 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
என்றார்.
“நீதான் கோவிச்சுக்கிறியே, அப்பா! நான் சொல்லமாட்டேன். போ!”
“கோவம் என்னடி, கோவம்! சும்மா சொல்லு!”
“அதோ பார். பல்லு மாமா!”
முருகதாசரின் நண்பர் சுப்பிரமணிய பிள்ளைக்குக் கொஞ்சம் உயர்ந்த பற்கள். அவை வெளியே நீண்டு கொண்டு, தமது இருப்பை, அனாவசியமாக உலகத்திற்கு அறிவித்துக் கொண்டிருந்தன. அதனால் அலமு அவருக்கு இட்ட காரண இட... | 70 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
சகிக்கலே. அங்கேதான் கொண்டு தள்ளணும். வயசு கொஞ்சம் ஆகட்டுமே என்று பார்க்கிறேன்” என்றார் முருகதாசர். விளக்குத் திரியை உயர்த்திக் கொண்டே.
“நேத்து பீச்சுக்குப் போயிருந்தேன்! சுந்தரத்தைப் பார்த்தேன்…” என்று ஆரம்பித்தார் சுப்பிரமணிய பிள்ளை.
“அந்த ராஸ்கல் வந்துட்டானா! என்றைக்கும் அவன் தொல்லைதான் பெரிய தொல்லையாக இருக்கிறது. இ... | 71 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
பேசிக்கொண்டிருந்தோம். நீயும் வந்தாய்! காப்பி போடச் சொல்லட்டுமா? அலமு! அலமு!” என்று உரக்கக் கூவினார் முருகதாசர்.
எங்கிருந்தோ, “என்னப்பா!” என்று அலமுவின் குரல் வந்தது.
“அம்மாவை மூணு கப் காப்பி போடச் சொல்லு. சீக்கிரம் ஆகணும்!”
“நீ என்ன பத்திரிகையையே விட்டுவிட்டாயாமே! இப்பத்தான் கேள்விப்பட்டேன்.”
“வயிற்றுப் பிழைப்பிற்கு எத... | 72 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
“வலிக்காதே!” என்று மறுபடியும் ஆரம்பித்தாள்.
முருகதாசரும் மேல் துண்டின் உதவியால் ஒரு செம்பை ஏந்திய வண்ணம் உள்ளே நுழைந்தார்.
“என்னப்பா, மூணு டம்ளர் கொண்டாந்தே! எனக்கில்லையா?”
“உனக்கென்னடி இங்கே! அம்மாகூடப் போய்ச் சாப்பிடு.”
“மாட்டேன்” என்று ஒரு டம்ளரை எடுத்து வைத்துக் கொண்டது குழந்தை.
முருகதாசர் காப்பியை ஆற்றி, சுந்தரம்... | 73 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
“அதற்கென்ன!” பர்ஸை எடுத்துப் பார்த்துவிட்டு “இப்போ என் கையில் இது தான் இருக்கிறது!” என்று ஓர் எட்டணாவைக் கொடுத்தார் சுப்பிரமணியம்.
“இது போதாதே!” என்று சொல்லி, அதையும் வாங்கி வைத்துக் கொண்டார் முருகதாசர்.
“அப்பொ…” என்று மீண்டும் ஏதோ ஆரம்பித்தார்.
“பார்ப்போம்! எனக்குக் கொஞ்சம் வேலையிருக்கிறது” என்று சுப்பிரமணியமும் விடை ... | 74 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
த்தை நினைத்தானா?
காற்று அடித்தால் உயிரை ஒரேயடியாகவாவது போக்கிவிடுகிறதா? குற்றுயிராய்த் துடிக்க வைத்து அதைக் கொல்லுகிறதே!
கொஞ்சமாவது மங்கிய வெளிச்சத்தைக் கொடுக்கிறதென்று இந்தக் காற்றிற்கு நன்றி இருக்கிறதா?
போய்விட்டது! பிறகு மழையில் அதன் குளிரை யார் கவனிக்கிறார்கள்?
அது காற்றிற்குத் தெரியுமா?
இனிமேல் விளக்கு அந்தப் பக்க... | 75 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
ஆனால் அது ஒரு கிராமமும் கூட. கிராம முனிஸீபு முதலிய சம்பிரமங்கள் எல்லாம் உண்டு. ஊர் என்னமோ அப்படி அப்படித்தான். ‘வெள்ளைக்கோயிலுக்குப் போகிறேன்’ என்றால் உலகத்திடம் செலவு பெற்றுக்கொள்வது என்பது அந்தப் பகுதி வாசிகளின் வியாக்கியானம். ஆனால், வெள்ளைக்கோயிலுக்குப் போய்த் திரும்பி வருகிறவர்களும் பலர் உண்டு. ஏன், சுப்பு நாடான் ... | 76 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
ன் பேரன். கிடாவும், நன்றாகக் கருகருவென்று ஊரார் வயலை மேய்ந்து கொழுத்து வளர்ந்திருந்தது. வாங்குவதற்கு ஆள் வருவதை மாடசாமி எதிர்பார்த்திருந்தான்.
மாடசாமி அவளுடைய கடைக்குட்டிப் பெண்வழிப் பேரன். கொஞ்சம் துடியான பயல். பாட்டனின் ரத்தம் கொஞ்சம் ஜாஸ்தி. அதனால்தான் மாடு மேய்க்கிற ‘சாக்கில்’ கிழவியைக் குடிசையில் போட்டுவிட்டுப் போ... | 77 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
ிக்குக் கிடைக்கப் போகும் பெருமையைக் கண்டு பொறாமைப் புகையைக் கக்கித் தன்னையழித்துக் கொண்டது. எங்கிருந்தோ ஒரு கூகையின் அலறல்.
ஓடிப் போய்ப் பேயாக மாறியாவது தனக்குக் கிடைக்கப் போகும் சித்திரவதைகளிலிருந்து தப்ப முயலும் வாத்தியார் உயிரை மறித்து, தூண்டிலில் மாட்டி, மேல் நோக்கிப் பறக்கும் கிங்கரர்கள், மகாராஜா தூரத்திலே வருவதைக... | 78 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
அந்த வெத்திலைச் சருகை இப்பிடித் தள்ளிப் போடு!” என்றாள் கிழவி.
வெற்றிலையை எடுத்துக்கொடுத்துவிட்டு, “அதிருக்கட்டும் கிழவி, நான் யார் தெரியுமா? என்னை நல்லாப் பாரு! நான் தான்…” என்று ஆரம்பித்தான் எமன்.
“என்ன குடிச்சுப்பிட்டு வந்தியாலே! எனக்கென்ன கண்ணு பொட்டையாப் போச்சுன்னு நினைச்சிக்கிட்டியாலே!” கிழவிக்கு அவன் நின்ற நிலைய... | 79 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
முதுகில் போட்டிருக்கிற பாசக் கயிற்றை எடுத்துக் கொண்டு மறுபடியும் உள்ளே நுழைந்தான் யமன். பாசத்தால் அவளைக் கட்டிவிடலாம் என்று நம்பினான். பாவம்!
“ஏலே, கயிறு நல்லா உறுதியாக இருக்கே, எங்கலே வாங்கினே? ஒங்க பாட்டனிருந்தாருல்லே, அவருக்கு அப்பங்க காலத்துலேதான் இது மாதிரி கெடைக்கும். அங்கென சுத்தி ஒரு கொடியாக் கட்டிப் போட்டு வய... | 80 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
கூட்டிக்கிட்டுப் போவ ஒனக்குத் தெறமை யிருக்கா? ஒனக்குப் பாதி வேலேகூட சரியாச் செய்யத் தெரியாதே. என்னெக் கட்டோ டெ கூட்டிக்கிட்டுப் போவ ஒனக்கு முடியுமா?”
“எனக்கு முடியாத ஒன்று இருக்கிறதா? நான் இதுவரை எத்தனை பேரை அழைத்துச் சென்றிருக்கிறேன். அது உனக்கெப்படித் தெரியும்? நீ என்ன புராணம் இதிகாசம் படிக்கக் கூடிய ஜாதியில் பிறந்த... | 81 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
ம்கூட அவனுக்கு அன்று வெற்றி மாதிரியே புலப்பட்டது.
யமராஜனின் தோல்வியைக் கண்டு தன்னைக் காப்பாற்றிக் கொள்ளப் போய்ப் பதுங்கியது போலப் பேய்க் காற்றும் ஓய்ந்து நின்றது. மாடசாமி எருமையை ஓட்டிக் கொண்டு வந்து சேர்ந்தான். கட்டுத்தறியில் தீனி போட்டுப் பருத்தி விதை வைத்துத் தயாராக இருந்ததைக் கண்டான். குருட்டுக் கிழவிக்கு வெறும் இட... | 82 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
சேற்றுக் குழம்புகள். சாலையோரமாக ‘முனிசிபல் கங்கை’ அல்ல, யமுனைதானே கறுப்பாக இருக்கும்? அதுதான். பிறகு ஓர் இரும்பு வேலி, அதற்குச் சற்று உயரத் தள்ளி அந்த ரயில்வே தண்டவாளம்.
மறுபக்கம், வரிசையாக மனிதக் கூடுகள் ஆமாம், வசிப்பதற்குத்தான்!
தண்ணீர்க் குழாய்கள்? இருக்கின்றன. மின்சார விளக்கு? ஞாபகமில்லை சாதாரண எண்ணெய் விளக்கு, அதா... | 83 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
பாக்டீரியா, விஷக் கிருமிகள், காலரா இத்யாதி அங்கிருந்துதானே உற்பத்தி செய்யப் படுகின்றன! எப்படியாவது உயிர் வாழ வேண்டும் என்று ஆசையிருந்தால் எல்லாம் நடக்கும். பழைய கற்காலத்து மனிதன், புலி சிங்கங்களுடன் குகையில் வாழ்ந்து வந்தான்; அவைகளும் அவனைக் கொன்றன; அவனும் அவைகளைக் கொன்றான். அதற்காக வலிமையற்று, வம்சத்தை விருத்திசெய்யா... | 84 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
பூசினாள் அம்மாளு. அப்பொழுதுதான் சற்று பேசினான். அவனுக்குப் பால் கஞ்சி வேண்டுமாம்! அம்மாளுவுக்குக் கூலிபோட இன்னும் இரண்டு நாள் இருக்கிறது. வீட்டில் காசேது?
அம்மாளு தண்ணீர் எடுக்க வருகிறாள்.
’கும்’மிருட்டு பஞ்சாங்கத்தின்படி இன்றைக்குச் சந்திரன் வரவேண்டும். ஆனால் அது மேகத்தில் மறைந்து கொண்டால் முனிசிபாலிடி என்ன செய்ய முட... | 85 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
என்றால் அடங்காத பெருமை, ஆசை. இன்னும் என்னென்னவோ அவள் மனதில் எழுந்து அவள் உடல் முழுவதும் பரவசப்படுத்தும். அவர்களுடைய குழந்தை, ஒன்றரை வயதுக் குழந்தை, அதுதான் தனது கணவன் கொடுத்த செல்வங்களைக் காட்டிலும் மகத்தான பொக்கிஷம் என்று நினைத்துக்கொண்டிருப்பவள்.
அன்று ஒருநாள் அவருக்கு ரஸல் எழுதிய புஸ்தகம் கிடைத்தது. அது அவருடைய மனத... | 86 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
என்ன மாதிரி உண்மையைச் சொல்லியிருக்கிறான் தெரியுமா?” என்றார்.
ராஜம் ஒரு அசட்டுச் சிரிப்புச் சிரித்தாள். மெதுவாக ஒரு பெருமூச்சு வந்தது. அவள் கடைக்கண்ணில் சற்று ஒளிவிட்டுப் பிரகாசித்ததே, அவள் முந்தானையால் துடைக்குமுன்….
“ராஜம், மனிதனுக்கு மூன்று குணங்கள்தான் இயற்கை. முதலில் பசி. இரண்டாவது தன் குடும்பத்தை விருத்தி செய்வது.... | 87 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
அவள் கைகள் குழந்தையை இறுக அணைத்துக்கொண்டன.
ராமசாமி பிள்ளைக்கு இதைக் கவனிக்க நேரமில்லை. தமது சுகாதாரத்திற்கு, தமது குடும்ப சுகாதாரத்திற்கு அவசியமான கடற்காற்று வாங்க அவசரமாக உடைகளை மாட்டிக்கொண்டார்.
“என்ன ராஜம், புறப்படலியா?” என்பதற்கு முன் “இதோ வந்தேன்” என்று குழந்தைக்கு ஒரு மாற்றுச் சட்டையணிந்து, அதை இடையில் எடுத்துக்க... | 88 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
கத்திக் கொண்டு சென்று விட்டான்.
“ராஜம்! இதைப் பார்த்தியா? சமுத்திரக் கரையிலே எந்தக் கடலை பட்டாணி விக்கிறவன் கிட்டக் கேட்டாலும் இந்தப் பதில்தான். இது எது மாதிரி என்றால் அன்றைக்கு ஒரு ஜோரான ரஷ்யக் கதை படித்தேன். அதிலே விபசாரி வீட்டுக்குப் போகிறவனைப் பற்றி எழுதுகிறான். அங்கே போகும்பொழுது ஒவ்வொருவரும் முதல்லெ ‘உன் பேரென்ன?... | 89 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
மணிக்கொடி, 25041937
1
ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஒரு ஸ்டோர் குமாஸ்தா. அவர் உப்புப் புளி பற்றுவரவு கணக்கின் மூலமாகவும் படிக்கல்லின் மூலமாகவும் மனித வர்க்கத்தின் சோக நாடகங்களையும் மனித சித்தத்தின் விசித்திர ஓட்டங்களையும் அளந்தவர்.
அவருக்குச் சென்ற நாற்பத்தைந்து வருஷங்களாக அதே பாதை, அதே வீடு, அதே பலசரக்குக் கடையின் கமறல... | 90 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
ம் சந்திலிருந்து ராஜபாட்டையில் திரும்பி, மறுபடியும் ஒற்றைத் தெரு என்ற சந்தில் நுழைவதைக் காணலாம்.
மழையானாலும் பனியானாலும் ஈர வேஷ்டியைச் சற்று உயர்த்திய கைகளால் பின்புறம் பறக்கவிட்டுக் கொண்டு, உலர்ந்தும் உலராத நெற்றியில் சுப்பிரமணிய சுவாமி கோவில் விபூதி, குங்குமம், சந்தனம் விகசிக்க அவர் செல்லும் காட்சியைச் சென்ற நாற்பத்த... | 91 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
போல் ஆசை பூதாகாரமாய் விரிந்து, அவரது சித்தப் பிரபஞ்சத்தையே கவித்து ஆக்கிரமித்துக் கொண்டது. தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகச் செயல் திறமையிழந்தவன் செய்வது போல் ஆசைப் பேய்க்குப் பூசையும் பலியும் கொடுத்து மகா யக்ஞம் செய்ய எந்தப் பக்தனாலும் முடியாது.
இந்த மனம் இருக்கிறதே, அப்பா! ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளைக்கு... | 92 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
கடைக்குக் கூப்பிடுகிற தூரத்தில் இருக்கும் ரயில்வே ஸ்டேஷனில் ஐந்து நிமிஷம் நின்றுவிட்டுத் தூத்துக்குடி ஷட்டில் வண்டி புறப்படுகிறது. டிக்கட் வாங்கிக் கொண்டு ராத்திரியோடு ராத்திரியாகக் கம்பி நீட்டிவிடலாம். டிக்கட்டுக்கு மட்டிலும் பணம் எடுக்கத் தினசரி கடையில் பணம் புரளும். ஆனால், அந்தப் போலீஸ்காரப் பயல் இருக்கிறானே! நினைக... | 93 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
வியாதி இது.
மூலைத் தெருவில் மற்ற இடங்களெல்லாம் ஒடுங்கிவிட்டன. ஸ்டோ ரில் பெட்டியடி மேல் ஒற்றை மின்சார விளக்குப் பிரகாசிக்கிறது. பிள்ளையவர்கள் ஓலைப் பாயில் உட்கார்ந்துகொண்டு மேஜையின் மேலுள்ள சிட்டைப் புத்தகத்தில் ஏதோ பதிந்து கொண்டு இருக்கிறார்.
“சுப்புப் பிள்ளையா? நாலு, நாலரை, நாலரையே மாகாணி, நாலரையே மாகாணியும் ஒரு சல்ல... | 94 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
க்களிம்பால் பச்சை ஏறிப்போன புன்னைக்காய் எண்ணெயிருக்கும் செப்புப் பாத்திரத்தண்டை சென்றார். குனியுமுன் தலையை விரித்து உதறி, இடது கையால் அள்ளிச் சொருகிக்கொண்டு, கட்டை விரலுக்கும் நடுவிரலுக்கும் இடையில் பிடித்து வீசம் படியில் எண்ணெயை எடுத்துக் கொண்டு திரும்பினார்.
“தம்பி!” என்று கொண்டே நீட்டினார்.
மாவடியா பிள்ளை கையில் இரு... | 95 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
நேரமாகுது!” என்று எண்ணெயை எடுத்துக் கொண்டு புறப்பட்டு விட்டார்.
“தம்பி! விசாளக்கெளமையை மறக்காமே!” என்றார் பிள்ளை.
“மறப்பனா!” என்று கொண்டே இருட்டில் மறைந்தார் மாவடியா பிள்ளை.
பிள்ளையவர்களுக்கு அப்புறம் கணக்கில் மனம் லயிக்கவில்லை. ராதாபுரத்துப் பிள்ளை ஆரம்பிக்கப்போகும் காசுக் கடையிலும், அதில் மாவடியா பிள்ளைக்குக் கிடைக்... | 96 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
எடுத்து மடியில் கொட்டிக் கொண்டு, விளக்கை அணைத்து, மடக்குக் கதவுகளைப் பூட்டினார்.
சாவிக் கொத்து கையில் இருக்கிற உணர்வு கூட இல்லாமல் வேகமாக ஸ்டேஷனை நோக்கி நடந்தார். நாற்பத்தைந்து வருஷமாக உழைத்துப் போட்டும் என்ன பலன்? நாக்குக்கு ருசியாக சாப்பிட முடிந்ததா? என்ன பண்ணிவிடுவான்? கொஞ்ச தூரம் சென்ற பிறகுதான் செருப்பைக் கூடக் க... | 97 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
அண்டையில் உட்கார்ந்தார். ஜன்னல் பக்கம் இருந்த நிம்மதி இவரது மனத்தைத் துருதுரு என்று வாட்டியது. எழுந்து பிளாட்பாரத்தின் பக்கத்திலிருக்கும் ஜன்னல் பக்கம் வந்து உட்கார்ந்து கொண்டு, வண்டி எப்பொழுது புறப்படும் என்பதை ஆவலாக அறிய எஞ்சின் பக்கம் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார்.
“பிள்ளைவாள்! ஏது இந்த ராத்திரியில்!” என்றது ... | 98 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
பிள்ளை.
மெதுவாக, நிதானமாக ஸ்டேஷனைவிட்டு வெளியேறி ஸ்டோ ர் பக்கமாக நடந்தார் பிள்ளை. வழியில் சிறிது தூரம் செல்லுகையில் தான் பாஸ் இல்லாமல் எப்படிக் கப்பலில் செல்வது என்ற ஞாபகம் வந்தது பிள்ளைக்கு. ‘புத்தியைச் செருப்பால்தான் அடிக்கணும்!’ என்று சொல்லிக் கொண்டார் பிள்ளை. அவருக்குத் தமது ஆபத்தான நிலைமை அப்பொழுதுதான் தெளிவாயிற்... | 99 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
னிவாசன் பெற்றோர்கள் பெரியவர்களாகியும், குழந்தைப் பருவம் நீங்காது பொம்மைக் கலியாணம் செய்ய ஆசைப்பட்டார்கள். வெறும் மரப் பொம்மையை விட, தங்கள் நாலு வயதுக் குழந்தை சீமாச்சு மேல் என்று பட்டது. பிறகு என்ன? பெண் கிடைக்காமலா போய்விடும்? ஆத்தூர்ப் பண்ணை ஐயர் மகள் ருக்மிணிக்கு இரண்டு வயது. கலியாணம் ஏக தடபுடல். பெற்றோர் மடியிலிருந... | 100 | புதுமைப்பித்தன் | புதுமைப்பித்தன் படைப்புகள் – சிறுகதைகள் – தொகுப்பு – 1 & 2 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.