[ { "song_number": 549, "padal": "உரைத்தன வற்கரி ஒன்று மூடிய\nநிரைத்த இராசி நிரைமுறை எண்ணிப்\nபிரைச்சதம் எட்டையும் பேசியே நந்தி\nநிரைத்த இயமம் நியமஞ்செய் தானே.", "vilakam": "குருநாதராகிய சிவபெருமான் அட்டங்க யோகத்தை அருளத் திருவுள்ளங் கொண்டு தீமையைப் போக்குவதற்கும் (இயமம்) நன்மையைப் பெறுவதற்கும் (நியமம்) வழிவகை செய்தருளி பிராணாயாமம் மூலம் மூச்சுக் காற்றை இழுக்கவும் அடக்கி வைக்கவும் விடவும் வேண்டிய அளவு பன்னிரண்டங்குலம் முதலான பலவகைகளை முறைப்படுத்தி அவற்றை எட்டு அங்கங்களைக் கொண்ட யோகங்களாக அமைத்து அருளினான்.", "vilakam_en": "Lord Siva, the revered Guru, with divine compassion, graciously bestowed the Ashtanga Yoga to guide beings—through Yama (restraints) to remove evil and Niyama (observances) to cultivate virtue. He instructed the regulation of breath through Pranayama, involving the measured process of inhaling, holding, and exhaling the breath—such as the twelve-finger span (prāṇa length) and other variations—systematically arranging them into the eight-limbed practices of Yoga." }, { "song_number": 550, "padal": "செய்த இயம நியமஞ் சமாதிசென்\nறுய்யப் பராசத்தி உத்தர பூருவ\nமெய்த கவச நியாசங்கள் முத்திரை\nஎய்தவே உரைசெய்வன் இந்நிலை தானே.", "vilakam": "உயிர்கள் தீயவற்றை போக்கி நன்மை தரக்கூடியவற்றே செய்து இறை நினைப்பில் தன்னையே மறந்து சமாதி நிலையை அடைந்து ஆதியிலிருந்தே பரம்பொருளாக இருக்கும் இறைவனை அடைவதற்கு துணையாக கவசம், நியாசம், முத்திரை ஆகிய மூன்று யோகங்கள் முன்னும் பின்னும் பாதுகாப்பாக உடன் வரும். இந்த உயர்ந்த நிலையை உயிர்கள் அடைய வேண்டும் என்பதற்காக இந்த யோக வழிகளைப் பற்றி யாம் கூறுவோம்.\n\nகவசம் – சமாதி நிலையில் உயிர்களுக்குப் பாதுகாப்பாக உடலை மூடியிருக்கும் கோசங்களை மந்திர ஜபம் செய்து அடக்கியாள்வது.\n\nநியாசம் – தமது உடல் உறுப்புகளையே இறைவனது உறுப்புகளாக பாவனை செய்வது.\n\nமுத்திரை – கை விரல்கள் மூலம் முத்திரைகளை (யோக நிலை எண்ணங்களை கை விரல்கள் மூலம் அபிநயம் செய்து காட்டுதல்) செய்யும் யோக நிலை.", "vilakam_en": "By removing evil and performing only what brings good, the soul forgets itself in divine contemplation, attaining the state of Samadhi, and ultimately reaching the Supreme Being who exists from the very beginning. To aid in this, three yogic practices—Kavacham, Nyasam, and Mudra—serve as protective companions before and after, safeguarding the practitioner. For souls to attain this exalted state, we shall now speak of these yogic methods.\n\nKavacham – In the state of Samadhi, controlling and protecting the body’s sheaths (koshas) through mantra chanting.\n\nNyasam – Meditating on one’s own body parts as the divine limbs of God.\n\nMudra – Yogic gestures made by positioning the fingers of the hands to express specific states of yoga." }, { "song_number": 551, "padal": "அந்நெறி இந்நெறி என்னாதட் டாங்கந்\nதன்நெறி சென்று சமாதியி லேநின்மின்\nநன்னெறி செல்வார்க்கு ஞானத்தி லேகலாம்\nபுன்னெறி யாகத்திற் போக்கில்லை யாகுமே.", "vilakam": "இறைவனை அடைய நாம் செல்லும் வழி நன்றானதா இல்லை வேறு வழி நன்றானதா என்று சந்தேகப் படாமல் எந்த வழிக்கும் தேவைப்படுகின்ற அட்டாங்க யோகங்களின் வழியிலே சென்று சமாதி நிலையில் (இறைவனை நினைத்து தன்னை மறந்திருக்கும் நிலை) இருங்கள். இத்தகைய நல்ல வழியில் செல்பவர்களுக்கு ஞான யோகம் கைகூடிச் சிவப்பேறு அடைவது மட்டுமில்லாமல் அந்த ஞானத்தின் பயனாக இனிப் பிறவி என்பது இல்லை.", "vilakam_en": "Without doubting whether the path we take to reach God is the right one or if some other path is better, follow the way of the Ashtanga Yogas necessary for any path, and remain in the state of Samadhi (the state of forgetting oneself in remembrance of God). Those who walk in such a noble path not only attain the grace of Siva through Jnana Yoga, but as the fruit of that wisdom, they are freed from the cycle of birth forever. " }, { "song_number": 552, "padal": "இயம நியமமே எண்ணிலா ஆதனம்\nநயமுறு பிராணாயா மம்பிரத்தி யாகாரஞ்\nசயமிகு தாரணை தியானஞ் சமாதி\nஅயமுறும் அட்டாங்க மாவது மாமே.", "vilakam": "இமயம், நியமம், மற்றும் பலவகையான ஆசனங்களும், நன்மையைத் தரும் பிராணாயாமமும், பிரத்தியாகாரம், வெற்றி மிக்க தாரணையும், தியானமும், சமாதியும், ஆகிய எட்டுவகைப் பகுதிகளைக் கொண்ட அட்டாங்க யோக வழி முறைகள் நல்வினை உள்ளவர்களுக்குக் கிடைக்கும் நல்வழியாகும்.\n\nமுதலாவது இயமம்: தீமைகளைப் போக்குவது. இதில் ஐந்து பிரிவுகள் உள்ளன:\n\nஇரண்டாவது நியமம்: நன்மைகளைப் பெறுவது. தவம், ஜபம், சந்தோஷம், தெய்வ நம்பிக்கை, தானம், சிவ விரதம், சித்தாந்தக் கேள்வி, சிவ பூசை, ஞான அறிவு, நாணம், ஆகிய பத்துக் காரியங்களையும் தவறாது மேற்கொள்ளுதல் நியமம் ஆகும். இவற்றை மேற்கொள்ளும்போது ஒளியாகிய சிவத்தையும் அந்த ஒளியின் ஆற்றலாகிய சத்தியை தியானித்தலும் நியமம் ஆகும்.\n\nமூன்றாவது ஆசனம்: உடலை அமர்த்தும் நிலை. இடுப்பு, தோள்கள், தலை இவற்றை நேராக வைத்து, முதுகுத் தண்டுக்குத் தொந்தரவு கொடுக்காமல் அதற்கு விடுதலை அளித்தல்.\n\nநான்காவது பிராணாயாமம்: மூச்சைச் சரிவர அடக்கியாளுதல் (பிராணன் என்னும் உயிர்ச் சக்தியை அடக்கியாள்வது)\n\nஐந்தாவது பிரத்தியாகாரம்: மனதை வெளியே புலன்கள் வழி செல்லாது தடுத்து (கண்கள் வழியே தவறானவற்றைப் பார்க்காமலும், காது வழியே தவறானவற்றைக் கேட்காமலும், வாய் வழியாகத் தவறான வார்த்தைகளைப் பேசாமலும், நாக்கின் மூலம் பாதகமான உணவுகளை ருசிக்காமலும், உடல் வழியே தவறானவற்றைச் செய்யாமலும்), மனதை உள்முகமாகத் திருப்பி மனதில் உள்ள அரும்பொருளை அறியச் சிந்தித்தல்.\n\nஆறாவது தாரணை: ஒரு பொருளின் மீது மனத்தைக் குவித்தல். தன்னைத்தானே உணர்வது.\n\nஏழாவது தியானம்: மனதை ஒருமுகப்படுத்தி இடைவிடாது சிந்தித்தல்.\n\nஎட்டாவது சமாதி: நமது முயற்சிகள் அனைத்திற்கும் குறிக்கோளான ஞான ஒளியைப் பெறுதல். கடவுளை அடைய விரும்புகின்றவன் உடலாலும், மனத்தாலும், அறத்தாலும் (நற்குணங்களாலும்), ஞானத்தாலும் வலிமை பெற்று இருக்க வேண்டுவது.", "vilakam_en": "The Ashtanga Yoga path, consisting of Yama, Niyama, various beneficial Asanas, Pranayama, Pratyahara, successful Dharana, Dhyana, and Samadhi, is the righteous way for those with virtuous deeds.\n\nFirst – Yama: Removing evils. This consists of five divisions.\n\nSecond – Niyama: Cultivating virtues. Performing without fail ten practices—penance, chanting, contentment, faith in God, charity, Siva vows, study of Siddhanta, Siva worship, knowledge of wisdom, and modesty. While practicing these, meditating on the light that is Siva and on Sakti, the power of that light, is also part of Niyama.\n\nThird – Asana: The posture of seating the body. Keep the waist, shoulders, and head upright, without straining the spine, allowing it freedom.\n\nFourth – Pranayama: Proper regulation and control of breath (controlling the life force called prana).\n\nFifth – Pratyahara: Restraining the mind from going outward through the senses (not seeing wrong through the eyes, not hearing wrong through the ears, not speaking wrong through the mouth, not tasting harmful foods with the tongue, not doing wrong through the body), turning the mind inward to reflect upon the truth within.\n\nSixth – Dharana: Concentrating the mind on a single object; realizing the self.\n\nSeventh – Dhyana: Focusing the mind continuously without distraction.\n\nEighth – Samadhi: Attaining the light of wisdom, which is the goal of all our efforts. One who wishes to reach God must be strong in body, mind, virtue, and wisdom. " }, { "song_number": 553, "padal": "எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையுஞ்\nசெழுந்த ணியமங்கள் செய்மினென் றண்ணல்\nகொழுந்தண் பவளக் குளிர்சடை யோடே\nஅழுந்திய நால்வர்க் கருள்புரிந் தானே.", "vilakam": "பவளம் போல் ஜொலிக்கும் குளிர்ந்த சடையுடைய இறைவனை முழுமையாக உணர்ந்த சனகர், சதானந்தர், சனாநந்தர் மற்றும் சனத்குமாரர் ஆகிய நால்வர்களுக்கும் எட்டுத்திசையிலும் சூழ்ந்து மூழ்கும் அளவிற்கு பெருமழை பெய்தாலும் செழுமையான குளிர்ந்த இயமங்களை (பாடல் #552 இல் இயமத்தின் விளக்கம் காண்க) தவறாமல் செய்யுங்கள் என்று இறைவன் கூறினார்", "vilakam_en": "The Lord, whose cool matted hair shines like coral, told the four sages—Sanaka, Sadananda, Sanananda, and Sanatkumara—who had fully realized Him, to diligently and unfailingly practice the serene and enriching Yamas (see explanation of Yama in verse #552), just as abundant, cooling rain surrounds and immerses all eight directions. " }, { "song_number": 554, "padal": "கொல்லான் பொய்கூறான் களவிலான் எண்குணன்\nநல்லான் அடக்க முடையான் நடுச்செய்ய\nவல்லான் பகுந்துண்பான் மாசிலான் கட்காமம்\nஇல்லா னியமத் திடைநின் றானே.", "vilakam": "எவருக்கும் மனதளவிலும் தீங்கு நினைக்காதவன், பொய் கூறாதவன், களவு (திருடு) செய்யாதவன், எட்டு குணங்களை கொண்டவன் (1. அன்பு, 2. அமைதி, 3. பொறாமையின்மை, 4. சுத்தமாக இருத்தல், 5. மனதினால் சிரமப்படாமல் எதையும் சுலபமாக எடுத்துக் கொள்ளுதல், 6. ஆனந்தத்தைக் கொடுப்பது, 7. தர்ம சிந்தனை, 8. ஆசையின்மை), நன்மை மட்டுமே நினைப்பவன், பணிவுடையவன், நீதி தவறாமல் இருக்கக் கூடியவன், பகிர்ந்து கொடுத்து உண்பவன், குற்றம் இல்லாதவன், கள், காமம் இல்லாத தன்மையுடையவன், ஆகிய இவர்கள் இயம ஒழுக்கத்தின்படி இருப்பவர்கள் ஆவார்கள்.", "vilakam_en": "Those who harbor no ill thoughts toward anyone, do not speak falsehood, do not steal, possess eight virtues (1. love, 2. peace, 3. freedom from jealousy, 4. cleanliness, 5. an easy-going mind free from mental strain, 6. giving joy to others, 7. righteous thinking, 8. freedom from desire), think only of good, are humble, never stray from justice, share their food with others, are without fault, and are free from intoxication and lust—such persons live according to the discipline of Yama." }, { "song_number": 555, "padal": "ஆதியை வேதத்தின் அகப்பொரு ளானைச்\nசோதியை அங்கே சுடுகின்ற அங்கியைப்\nபாதியுள் மன்னும் பராசத்தி யோடுடன்\nநீதியை உணர்ந்து நியமத்த னாமே.", "vilakam": "ஆதியாய் முதற் பொருளானவனை, வேதத்தின் பொருளாக உள்ளவனை, அக்கினி சொரூபமானவனை, அக்கினியின் வெப்பமானவனை, திருமேனியில் சரிபாதியாக பராசத்தியோடு இருக்கும் இறைவனை உணர்ந்து சத்தியத்தை கடைபிடிப்பவனே நியமத்தைக் கடைபிடிப்பவன் ஆவான்.", "vilakam_en": "One who realizes the Primal Being, the First Cause, who is the essence of the Vedas, who is of the nature of fire and the heat of that fire, and who, in His divine form, abides with Parasakti as His equal half, and who upholds truth steadfastly—such a person is one who follows Niyama. " }, { "song_number": 556, "padal": "தூய்மை அருளூண் சுருக்கம் பொறைசெவ்வை\nவாய்மை நிலைமை வளர்த்தலே மற்றிவை\nகாமம் களவு கொலையெனக் காண்பவை\nநேமியீ ரைந்து நியமத்த னாமே.", "vilakam": "தூய்மையாக இருத்தல் 2. இறையருளோடு இருத்தல் 3. அளவான உணவு 4. பொறுமையோடு இருத்தல் 5. நேர்மையுடன் இருத்தல் 6. பொய் பேசாது சத்தியத்தைக் கடைபிடித்தல் 7. சத்தியத்திற்காக வைராக்கியத்தை வளர்த்தல், 8. காமத்தை எண்ணாதிருத்தல் 9. களவு (திருடு) எண்ணாமலிருத்தல் 10. கொலை எண்ணாமலிருத்தல் ஆகிய பத்து குணங்களையும் கொண்டவரே நியமத்தின் வழியின்படி இருப்பவர்.", "vilakam_en": "Those who possess the ten qualities—1. cleanliness, 2. living in divine grace, 3. moderation in food, 4. patience, 5. honesty, 6. not lying and upholding truth, 7. cultivating detachment for the sake of truth, 8. freedom from lustful thoughts, 9. freedom from thoughts of stealing, and 10. freedom from thoughts of killing—are the ones who live according to the path of Niyama." }, { "song_number": 557, "padal": "தவஞ்செபஞ் சந்தோடம் ஆத்திகந் தானஞ்\nசிவன்றன் விரதமே சித்தாந்தக் கேள்வி\nமகஞ்சிவ பூசையொண் மதிசொல்லீ ரைந்து\nநிவம்பல செய்யின் நியமத்த னாமே.", "vilakam": "1.தவம் செய்தல், 2. ஜெபித்தல், 3. பேரின்பம் அடைதல், 4. தெய்வ நம்பிக்கையோடிருத்தல், 5. தானம் செய்தல், 6. சிவ விரதம் கடைபிடித்தல், 7. ஞானத்தைப் பற்றிய உண்மையைக் கேட்டறிதல், 8. யாகம் செய்தல், 9. சிவ பூஜை செய்தல், 10. எண்ணத்தையும் இறைவனையும் இரண்டறக் கலத்தல் ஆகிய பத்தையும் உணர்ந்து பிறருக்குக் அறியக் கூறவும் செய்பவனே நியமத்தின் வழி நடப்பவனாவான்.", "vilakam_en": "One who practices the ten virtues—1. performing penance, 2. chanting (japa), 3. attaining supreme bliss, 4. living with faith in God, 5. giving in charity, 6. observing Siva vows, 7. inquiring into and understanding the truth of wisdom, 8. performing sacrificial rites (yajna), 9. performing Siva worship, and 10. merging thought and God as one without distinction—and who also teaches and shares these with others, is the one who walks the path of Niyama." }, { "song_number": 558, "padal": "பங்கய மாதி பரந்தபல் ஆதனம்\nஅங்குள வாம்இரு நாலும் அவற்றினுள்\nசொங்கில்லை யாகச் சுவத்திகத் தின்மிகத்\nதங்க இருப்பவர் தலைவனு மாமே.", "vilakam": "பத்மாசனம் முதல் பல ஆசனங்கள் உள்ளன. அவற்றுள் எட்டு ஆசனங்கள் முக்கியமானவை ஆகும். அந்த எட்டில் முதலானது சுவத்திகாசனம் ஆகும் (இதை சுகாசனம் என்றும் கூறுவர்). இதைத் தவறாமல் தினம் செய்து உணர்ந்து இருப்பவர் எட்டு ஆசனங்களின் தலைவராவார்.", "vilakam_en": "From Padmasana to many other postures, there are eight asanas that are considered most important. The first among these is Svastikasana (also known as Sukhasana). One who practices this daily without fail and remains aware in it becomes the master of the eight asanas." }, { "song_number": 559, "padal": "ஓரணை யப்பத மூருவின் மேலேறிட்\nடார வலித்ததன் மேல்வைத் தழகுறச்\nசீர்திகழ் கைகள் அதனைத்தன் மேல்வைக்கப்\nபார்திகழ் பத்மா சனமென லாகுமே.", "vilakam": "ஒரு பக்க காலை எடுத்து மறு பக்க காலின் மேல் அணைத்து வைத்து அது போலவே இன்னொரு பக்க காலையும் செய்து அமர்ந்து அழகாக கைகள் இரண்டையும் மேல் நோக்கி மலர்த்தி இரு தொடைகளின் மேல் வைத்து அமர்ந்திருப்பதே உலகம் புகழும் பத்மாசனம் ஆகும்.\n\nபாடலில் உள்ளவாறு பத்மாசனம் செய்யும் முறை:", "vilakam_en": "Padmasana, praised throughout the world, is performed by placing one leg over the opposite thigh and then the other leg over the opposite thigh in the same way, sitting upright, and placing both hands facing upward like a blossomed flower on the thighs. This is the method of performing Padmasana as described in the verse." }, { "song_number": 560, "padal": "துரிசில் வலக்காலைத் தோன்றவே மேல்வைத்\nதரிய முழந்தாளில் கைகளை நீட்டி\nஉருகி யிடுமுடற் செவ்வே யிருத்திப்\nபரிசு பெற்றிடில் பத்திரா சனமே.", "vilakam": "குற்றமில்லாத வலது காலை மேலே தெரியும்படி வைத்து அருமையான கால் முட்டிகளில் இரண்டு கைகளையும் நீட்டி வைத்து தளர்ந்து இருக்கும் உடம்பை நேராக்கி நிமிர்ந்து அமர்ந்து அதனால் ஏற்படும் பயன்களைப் பெறுவதே பத்திராசனம் ஆகும்.\n\nபத்திராசனம் செய்யும் முறை:\n\nமுதலில் கால்களை நீட்டி அமரவும். பின்னர் முடிந்தளவு கால்களை அகட்டி கைகளை முன் பக்கம் ஊன்றி அப்படியே குதிகால்களில் அமர்ந்து கால் விரல்களை உயர்த்திக் கொள்ளவும்.\n\nபத்திராசனத்தின் பயன்கள்:\n\nமனதை ஒருமுகப்படுவதற்கு இந்த ஆசனம் உதவும். தியானம் பழக ஏற்ற ஆசனம் இது.", "vilakam_en": "Bhadrasana is performed by placing the flawless right leg visible on top, extending both hands over the fine knees, straightening the relaxed body to sit upright, and thus gaining its benefits.\n\nMethod of Bhadrasana:\nFirst, sit with the legs extended forward. Then spread the legs as far as possible, place the hands in front for support, sit on the heels, and raise the toes.\n\nBenefits of Bhadrasana:\nThis posture helps focus the mind and is well-suited for practicing meditation. " }, { "song_number": 561, "padal": "ஒக்க அடியிணை யூருவில் ஏறிட்டு\nமுக்கி யுடலை முழங்கை தனில்ஏற்றித்\nதொக்க அறிந்து துளங்கா திருந்திடிற்\nகுக்குட ஆசனமுங் கொள்ளலு மாமே.", "vilakam": "பத்மாசனத்தில் உள்ளது போல் பாதங்கள் இரண்டையும் தொடையின் மேல் மாற்றி வைத்து கைகள் இரண்டையும் அத்தொடைகளின் இடைவெளியில் நுழைத்துத் தரையில் ஊன்றி முக்கிக் கொண்டு உடம்பின் பாரத்தைக் கைகளில் தாங்கி உடலைத் தூக்கி நிறுத்தி அசையாமல் இருப்பதே குக்குட ஆசனம் செய்யும் முறை ஆகும்.\n\nகுக்குட ஆசனத்தின் பலன்கள்:\n\nதியானம் மற்றும் யோக வழிகளில் செல்பவர்களுக்கு ஏற்படும் செரிமானப் பிரச்சினைகளை சரிசெய்து வயிற்றில் ஏற்படும் சூட்டையும் தணிக்க குக்குட ஆசனம் உதவும்.", "vilakam_en": "Kukkuta Asana is performed by placing both feet over the thighs as in Padmasana, inserting both hands through the gap between the thighs, pressing them onto the ground, and lifting the body so that its weight is supported by the hands, remaining steady without movement.\n\nBenefits of Kukkuta Asana:\nThis posture helps those on the path of meditation and yoga by correcting digestive issues and reducing heat in the stomach." }, { "song_number": 562, "padal": "பாத முழந்தாளிற் பாணி களைநீட்டி\nஆதர வோடும்வாய் அங்காந் தழகுறக்\nகோதில் நயனங் கொடிமூக்கி லேயுறச்\nசீர்திகழ் சிங்கா தனமெனச் செப்புமே.", "vilakam": "பாத நுனிகள் தரையில் அழுந்தும்படி வைத்து முழந்தாளிட்டு காலின் மேல் அமர்ந்து கைகளை பின்புறமாக பாதங்களில் படும்படி நீட்டி வைத்து ஆதரவாக இருக்க வாயை ஆவெனப் பிளந்து கொண்டு அழகாக கண்களை வேறெங்கும் சுழற்றாமல் மூக்கின் நுனியை நோக்கி பார்த்துக் கொண்டு இருப்பது புகழ் பெற்ற சிங்காசனம் என்று கூறப்படும்.\n\nசிங்காசனம் ஆசனத்தின் பயன்கள்:\n\nநன்கு பசியெடுக்கும். முகதாடை நாக்கு தொண்டையை ஒட்டிய நாக்கின் தொடக்கப்பகுதி ஆகியவற்றிற்கு நன்கு பயிற்சி கிடைக்கிறது. கண்களுக்கு நல்ல கூர்மையான நோக்கும் சக்தி கிடைக்கிறது. காது, மூக்கு தொண்டைக்கு ஆரோக்கியம் கிடைக்கிறது. வயிற்றில் ஜீரண சுரப்பிகள் வேலை செய்யும். நாக்கை வெளியில் இழுப்பதால் தொண்டை மூக்கில் சுத்த ரத்தம் பாயும். உணவு நன்கு ஜீரணமாகும். நாக்கை வெளியில் நீட்டுவதால் நரம்புகள் இழுக்கப்பட்டு தாடைகள் இறுக்கம் குறைந்து பலப்படுகின்றன. விக்கல் வியாதி தடுக்கப்படுகிறது. சிங்காசனத்தை தொடர்ந்து செய்து பழகிய பின் முழங்கால் தொடை சதைபிடிப்பு நீங்கி பலமுள்ளதாக ஆகின்றன. தன்னுள் சிங்கத்தின் பலம் வருவது போல பாவனை செய்தால் எல்லா அங்கங்களும் வலிமை பெற்றுவிடும். இவ்வாறு தியானம் செய்தால் மன உறுதி கிடைக்கும். சக்தி பெருகும்.", "vilakam_en": "Simhasana is performed by placing the toes firmly on the ground, sitting on the heels, extending the hands backward to rest on the feet for support, opening the mouth wide, and fixing the gaze steadily on the tip of the nose without looking elsewhere.\n\nBenefits of Simhasana:\nThis posture stimulates appetite, strengthens the jaws, tongue, and throat, sharpens eyesight, and promotes the health of the ears, nose, and throat. It activates digestive glands, improves digestion, and ensures proper blood circulation to the throat and nose by extending the tongue outward. The posture tones facial nerves, strengthens jaw muscles, and helps prevent hiccups. With regular practice, it reduces thigh and knee stiffness, strengthens the legs, and fosters an inner feeling of lion-like strength. Meditating in this pose enhances mental determination and energy." }, { "song_number": 563, "padal": "பத்திரங் கோமுகம் பங்கயங் கேசரி\nசொத்திரம் வீரஞ் சுகாதனம் ஓரேழும்\nஉத்தம மாமுது ஆசனம் எட்டெட்டுப்\nபத்தொடு நூறு பலஆ சனமே.", "vilakam": "1.பத்திரம் (பத்திராசனம்) 2. கோமுகம் (கோமுகாசனம்) 3. பங்கயம் (பத்மாசனம்) 4. கேசரி (சிங்காசனம்) 5. சொத்திரம் (குக்குட ஆசனம்) 6. வீரம் (வீராசனம்) 7. சுகாதனம் ஆகிய ஏழு ஆசனங்களோடு மிகவும் சிறப்பான சுவத்திகாசனம் சேர்த்து எட்டு ஆசனங்கள் இறைவனை அடைய உதவும் அட்டங்க யோகத்திற்கு முக்கியமானவை ஆகும். மற்ற ஆசனங்கள் எட்டும் சேர்ந்து பதினாறு அவற்றோடு நூற்றிப் பத்தும் சேர்ந்து மொத்தம் 126 ஆசனங்கள் உள்ளது.", "vilakam_en": "The eight principal postures that aid in attaining the Divine in the path of Ashtanga Yoga are: 1. Bhadrasana (Auspicious Pose), 2. Gomukhasana (Cow Face Pose), 3. Padmasana (Lotus Pose), 4. Simhasana (Lion Pose), 5. Kukutasana (Rooster Pose), 6. Virasana (Hero Pose), 7. Sukhasana (Easy Pose), and the most special Svastikasana (Auspicious Cross-Legged Pose). In addition to these eight, there are another eight postures, making sixteen, and with 110 more, the total comes to 126 postures." }, { "song_number": 564, "padal": "ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன்\nஉய்யக் கொண்டேறுங் குதிரைமற் றொன்றுண்டு\nமெய்யர்க்குப் பற்றுக் கொடுக்கும் கொடாதுபோய்ப்\nபொய்யரைத் துள்ளி விழுத்திவிடுந் தானே.", "vilakam": "உடலின் ஐம்புலன்களான 1. பார்த்தல், 2. கேட்டல், 3. முகர்தல், 4. சுவைத்தல், 5. தொடு உணர்ச்சி ஆகிய ஐந்து புலன்களையும் வைத்துள்ள உடம்பின் தலைவனாக இருக்கக்கூடிய ஆத்மாவானது இறைவனை அடைய மேல் நிலைக்கு செல்ல மனதுடன் மூச்சுக்காற்று ஒன்று உள்ளது, அந்த மூச்சுக்காற்று பயிற்சி செய்து உண்மையான இறைவனை அடைய எண்ணம் கொண்டோர்க்கு மனதை ஒருநிலைப்படுத்த நன்கு உதவும். இறைவுணர்வு இல்லாமல் தேவையில்லாதவறை நினைத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு மூச்சுக்காற்று அடங்காமல் அவர்களை கீழ் நிலைக்கு கொண்டு செல்லும்.", "vilakam_en": "Among the five senses of the body — sight, hearing, smell, taste, and touch — the soul is the master that governs them. To reach a higher state and attain the Divine, the soul works together with the mind and the breath. This breath, when practiced and regulated, greatly helps those who have the intention to realize the true God by steadying the mind. But for those who dwell on unnecessary thoughts without divine awareness, the breath becomes unsteady and leads them downward." }, { "song_number": 565, "padal": "ஆரிய னல்லன் குதிரை இரண்டுள\nவீசிப் பிடிக்கும் விரகறி வாரில்லை\nகூரிய நாதன் குருவின் அருள்பெற்றால்\nவாரிப் பிடிக்க வசப்படுந் தானே.", "vilakam": "மனம் என்னும் ஆரியன் மிகவும் நல்லவன் அவனிடம் இடகலை ( மூக்கின் இடது நாசி துவாரத்தின் வழியே நடைபெறும் சுவாசம் இடகலை எனப்படும்) பிங்கலை (மூக்கின் வலதுநாசி துவாரத்தின் வழியே நடைபெறும் சுவாசம் பிங்கலை எனப்படும்) என இரண்டு சுவாசங்கள் உள்ளது. அந்த சுவாசத்தை வெளியே விட்டு உள்ளே நிறுத்தி வைக்கும் திறமையை அறிபவர் யாரும் இல்லை. சீடனைப் பற்றி அனைத்தும் அறிந்த குருவின் அருள் பெற்றால் இடகலை, பிங்கலை ஆகிய இரண்டு சுவாசங்களையும் அடக்கி மனதை ஒருநிலைப்படுத்தி நிலையாக வைக்கலாம்.", "vilakam_en": "The mind, which is like a noble master, has two breaths — Ida (the breath flowing through the left nostril) and Pingala (the breath flowing through the right nostril). There is no one who naturally knows the skill of exhaling and then holding the breath inside. Only with the grace of a guru, who knows everything about the disciple, can one control both Ida and Pingala, steadying and stabilizing the mind." }, { "song_number": 566, "padal": "புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டாற்\nகள்ளுண்ணவும் வேண்டாந் தானே களிதருந்\nதுள்ளி நடப்பிக்குஞ் சோம்பு தவிர்ப்பிக்கும்\nஉள்ளது சொன்னோம் உணர்வுடை யோர்க்கே.", "vilakam": "பறவையை விட வேகமாகச் செல்லக்கூடிய சுவாசத்தை பிராணாயாம் செய்து தலையிலுள்ள சகஸ்ரதளத்தை நோக்கி எடுத்துச் சென்றால் கள் (போதைப்பொருள்) அருந்தாமலேயை மனம் மகிழ்ச்சி (தன்னை மறந்த நிலை) அடையும். உடல் சுறுசுறுப்புடன் இருக்கும். உடல் சோர்வு நீங்கும். இறைவனை உணர வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களுக்கே இந்த உண்மையை கூறுகிறோம்.", "vilakam_en": "If the breath, which can move faster than a bird, is guided through pranayama towards the Sahasrara at the crown of the head, the mind will experience bliss (a state of self-forgetfulness) without consuming any intoxicants. The body will remain energetic, fatigue will vanish, and this truth is revealed only to those who have the desire to realize God." }, { "song_number": 567, "padal": "பிராணன் மனத்தொடும் பேரா தடங்கிப்\nபிராண னிருக்கிற் பிறப்பிறப் பில்லை\nபிராணன் மடைமாறிப் பேச்சறி வித்துப்\nபிராண னடைபேறு பெற்றுண்டீர் நீரே.", "vilakam": "பிராணாயாமத்தின் மூலமாக சுவாசத்தையும் மனத்தையும் ஒன்றாக சேர்த்து ஒரு நிலைப்படுத்தி மூச்சுக்காற்றை இடகலை பிங்கலை ஆகிய இரண்டு சுவாசத்தின் வழியாகச் செலுத்தி சமாதி நிலையை (தன்னை மறந்த நிலை) அடைந்தால் இனி வேறு பிறப்பின்றி பிராணாயாமத்தினால் அடையக்கூடிய பலன்கள் அனைத்தையும் பெற்று இன்புற்று இருப்பீர்கள்.\n\nகுறிப்பு: மூக்கின் இடது நாசி துவாரத்தின் வழியே நடைபெறும் சுவாசம் இடகலை எனப்படும்.\n\nமூக்கின் வலதுநாசி துவாரத்தின் வழியே நடைபெறும் சுவாசம் பிங்கலை எனப்படும்.", "vilakam_en": "Through pranayama, if the breath and the mind are united and stabilized, and the breath is directed through the two channels of Ida (left nostril) and Pingala (right nostril) to reach the state of samadhi (self-forgetfulness), there will be no further rebirth. You will enjoy all the benefits that pranayama can bestow and remain in bliss." }, { "song_number": 568, "padal": "ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்\nஆறுதல் கும்பகம் அறுபத்து நான்கில்\nஊறுதல் முப்பத் திரண்டதி ரேசகம்\nமாறுதல் ஒன்றின்கண் வஞ்சகமு மாமே.", "vilakam": "ஒரு மடங்கு அளவு (பதினாறு வினாடிகள்) காற்றை இடது மூக்குத்துவாரத்தின் வழியாக இழுத்தல் பூரகம் ஆகும். அந்த மூச்சுக்காற்றை உள்ளுக்குள்ளேயே நான்கு மடங்கு அளவு (அறுபத்து நான்கு வினாடிகள்) அடக்கி வைத்திருத்தல் கும்பகம் ஆகும். அப்படி அடக்கிய மூச்சுக்காற்றை இரண்டு மடங்கு அளவு (முப்பத்து இரண்டு வினாடிகள்) வலது மூக்குத்துவாரத்தின் வழியாக மெல்ல வெளியே விடுதல் இரேசகம் ஆகும். இவ்வாறு செய்வதே பிராணாயமம் செய்யும் வழிமுறையாகும். பிராணாயாமத்தை இவ்வாறு சரியாகச் செய்வதால் உடல் தூய்மை பெற்று ஆற்றல் மிகுந்து நற்பண்புகள் கைகூடும். இவ்வாறு செய்யாமல் வலது மூக்குத்துவாரத்தின் வழியாக முதலில் இழுத்து இடது மூக்குத்துவாரத்தின் வழியாக மாற்றி விடுதல் கெடுதல் ஆகும்.\n\nகுறிப்பு: பிராணாயாமம் செய்ய ஆரம்பிக்கும் போது முதலில் இடது பக்கம் முதலில் மூச்சுக் காற்றை இழுத்து வலது பக்கம் மூக்குத் துவாரத்தின் வழியாக மாற்றி விட்டு பயிற்சி செய்ய வேண்டும். முதலில் வலது பக்கம் முதலில் மூச்சுக் காற்றை இழுத்து இடது பக்கம் மூக்குத்துவாரத்தின் வழியாக மாற்றி விட்டு பயிற்சி செய்தால் உடலுக்கு தீங்கு உண்டாகும்.", "vilakam_en": "In pranayama practice, inhaling through the left nostril for one measure (sixteen seconds) is called Puraka. Retaining that breath inside for four measures (sixty-four seconds) is called Kumbhaka. Then, exhaling slowly through the right nostril for two measures (thirty-two seconds) is called Rechaka. Practicing pranayama in this proper sequence purifies the body, increases energy, and cultivates good qualities. If done incorrectly—starting by inhaling through the right nostril and exhaling through the left—it will cause harm. Note: In the correct method, one must begin by inhaling through the left nostril and then exhaling through the right during initial practice. Reversing this order in the beginning will be harmful to the body." }, { "song_number": 569, "padal": "வளியினை வாங்கி வயத்தில் அடக்கில்\nபளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம்\nதெளியக் குருவின் திருவருள் பெற்றால்\nவளியினும் வேட்டு வளியனு மாமே.", "vilakam": "பாடல் #568 இல் உள்ள பிராணாயம முறைப்படி மூச்சுக்காற்றை வயிற்றில் அடக்கி வைத்திருந்தால் உடம்புக்கு அதன் வயதுக்கு ஏற்ப ஏற்படும் முதுமை வெளியே தெரிந்தாலும் உள்ளே முதுமைத் தன்மை சிறிதும் இல்லாமல் இளமையாக பளிங்கு போன்ற வலிமைப் பெற்று இருக்கும். அந்த உணர்வு தெளிவை பெற்று ஞான குருவின் அருளையும் பெற்றுவிட்டால் காற்றைவிட இலேசாகி மிதக்கும் நிலையை உடல் பெற்றுவிடும்.", "vilakam_en": "According to the pranayama method described in verse #568, if the breath is retained in the stomach, the body may outwardly show signs of aging according to its age, but inwardly it will remain youthful, strong, and radiant like crystal. With that clarity of awareness and the grace of the enlightened guru, the body will become lighter than air and attain a state of levitation." }, { "song_number": 570, "padal": "எங்கே இருக்கினும் பூரி இடத்திலே\nஅங்கே யதுசெய்ய ஆக்கைக் கழிவில்லை\nஅங்கே பிடித்தது விட்டள வுஞ்செல்லச்\nசங்கே குறிக்கவும் தலைவனு மாமே.", "vilakam": "எந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடத்திலேயே பிராணாயாம முறைப்படி (பாடல் #568 இல் உள்ளபடி) இடது மூக்குத்துவாரத்தின் வழியாக மூச்சுக்காற்றை இழுத்து பூரகத்தை செய்தால் உடலுக்கு அழிவு இல்லை. அப்படி இழுத்த மூச்சுக்காற்றை கும்பக முறைப்படி அடக்கி வைத்து இரேசக முறைப்படி அளவாக வெளியே விட்டால் உள்ளுக்குள் ஓங்காரமாகிய ஓம் எனும் ஒலி கேட்டு மேன்மையை அடையலாம்.", "vilakam_en": "Wherever you may be, if you practice pranayama as described in verse #568—drawing breath through the left nostril in the puraka method—the body will remain unharmed. Retaining that breath in the kumbhaka method and then releasing it in the rechaka method at the right measure will allow you to hear the inner sound of Om and attain a higher state." }, { "song_number": 571, "padal": "ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்\nகாற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லை\nகாற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்\nகூற்றை யுதைக்குங் குறியுமது வாமே.", "vilakam": "பிராணாயம முறைப்படி (பாடல் #568 இல் உள்ளபடி) பூரக முறையில் மூச்சுக்காற்றை இடது மூக்குத்துவாரத்தின் வழியாக இழுத்து இரேசக முறையில் வலது மூக்குத்துவாரத்தின் வழியாக மெல்ல வெளியே விட்டு கும்பக முறையில் வயிற்றில் அடக்கி வைத்திருக்கும் அளவுகளைத் தெரிந்தவர்கள் யாரும் இல்லை. அவ்வாறு மூன்று முறைகளின்படி மூச்சுக்காற்றை இழுத்து அடக்கி வெளியே விடும் அளவுகளைத் தெரிந்தவர்களுக்கு எமனையே காலால் எட்டி உதைக்கும் ஆற்றல் உண்டாகும்.", "vilakam_en": "In the pranayama method (as described in verse #568), no one truly knows the exact measures for drawing breath through the left nostril in the puraka method, releasing it slowly through the right nostril in the rechaka method, and retaining it in the kumbhaka method within the stomach. Those who do know the exact measures for inhaling, holding, and exhaling in these three methods will have the power to strike Yama (the god of death) with their very foot." }, { "song_number": 572, "padal": "மேல்கீழ் நடுப்பக்க மிக்குறப் பூரித்துப்\nபாலாம் இரேசகத் தானுட் பதிவித்து\nமாலாகி யுந்தியுட் கும்பித்து வாங்கவே\nஆலாலம் உண்டானின் அருள்பெற லாமே.", "vilakam": "1.தலை, கண், காதுகள், கழுத்து வரை உள்ளவை மேல் பகுதியாகும். 2. கழுத்திலிருந்து அடிவயிறு வரை, நெஞ்சு, தொப்புள் முதலானவை நடுப் பகுதியாகும். 3. அடிவயிறு முதல் கால் பெருவிரல் வரை உள்ளவை கீழ் பகுதியாகும். பிராணாயாம முறைப்படி (பாடல் #568 இல் உள்ளபடி) மூச்சுக்காற்றை பூரக முறைப்படி உள்ளிழுத்து அந்தக் காற்றை கும்பக முறைப்படி உள்ளே அடக்கிவைத்து மேலே கூறிய மூன்று பகுதிகளுக்கும் அந்த மூச்சுக்காற்றைச் செலுத்தி அந்த மூன்று பகுதிகளுக்குள் வியாபிக்க (நிறைத்து) வைத்திருந்தால் நாம் செய்யும் தீய செயல்களால் வரும் கர்ம வினையாகிய நஞ்சை அழித்து நம்மைக் காப்பாற்றும். சிவபெருமானின் அருளைப் பெறலாம்", "vilakam_en": "1. The head, eyes, ears, and neck are the upper part of the body. 2. From the neck to the lower abdomen, including the chest and navel, is the middle part. 3. From the lower abdomen to the big toes is the lower part. In the pranayama method (as described in verse #568), if one inhales through the puraka method, retains the breath inside through the kumbhaka method, and directs that breath into all three parts of the body—filling them completely—it will destroy the poison of karma caused by our wrongdoings and protect us. One will also receive the grace of Lord Shiva." }, { "song_number": 573, "padal": "வாமத்தில் ஈரெட்டு மாத்திரை பூரித்தே\nஏமுற்ற முப்பத் திரண்டும் இரேசித்துக்\nகாமுற்ற பிங்கலைக் கண்ணாக இவ்விரண்\nடோமத்தால் எட்டெட்டுக் கும்பிக்க உண்மையே.", "vilakam": "இடகலை (மூக்கின் இடது நாசி துவாரத்தின் வழியே நடைபெறும் சுவாசம் இடகலை எனப்படும்) வழியாக பூரக முறைப்படி ஒரு பங்கு (பதினாறு வினாடிகள்) அளவிற்கு மூச்சுக்காற்றை உள்ளிழுத்து கும்பக முறைப்படி நான்கு பங்கு (அறுபத்து நான்கு வினாடிகள்) அளவிற்கு மூச்சுக்காற்றை அடக்கிவைத்து பிங்கலை (மூக்கின் வலதுநாசி துவாரத்தின் வழியே நடைபெறும் சுவாசம் பிங்கலை எனப்படும்) வழியாக இரேசக முறைப்படி இரண்டு பங்கு (முப்பத்து இரண்டு வினாடிகள்) அளவிற்கு மூச்சுக்காற்றை மெதுவாக வெளியே விடுவதன் மூலம் பாதுகாப்பான பிராணாயாமத்தின் உண்மை கூறப்படுகின்றது. கும்பக முறை 64 வினாடிகள் வரை மட்டுமே பாதுகாப்பானது. அதற்கு மேல் செய்தால் மூளைக்குச் செல்லும் பிராண வாயுவின் அளவு குறைந்து தலைச் சுற்றல் மயக்கம் போன்றவை ஏற்படக்கூடும். எனவே எக்காரணம் கொண்டும் 64 வினாடி நேரத்திற்கு மேல் கும்பகம் செய்யக்கூடாது என்பதையே இப்பாடல் விளக்குகின்றது.\n\nபிராணாயமத்தைக் கற்றுக்கொள்ளும் முறை:\n\nமூச்சுப் பயிற்சி செய்யத் துவங்கும் ஆரம்ப கால கட்டங்களில் இந்த 16:64:32 என்ற காலக் கணக்கில் பயிற்சி செய்வது இயலாத காரியமாக இருக்கும். தொடர்ந்த பயிற்சிகளின் மூலமே இது கைகூடும். பயிற்சியைத் துவங்கும்போது 8:32:16 என்ற கால அளவில் துவங்கி படிப்படி யாக நேரத்தை அதிகரிக்கலாம். திருமூலர் கூறும் 16:64:32 என்ற கால அளவை எட்டிப் பிடிக்க குறைந்த பட்சம் ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரையில் ஆகலாம். ஒரு குருவின் மேற்பார்வையில் இந்த பயிற்சியைத் துவங்கினால் எளிதில் கைகூடும்.", "vilakam_en": "Through Ida (breathing through the left nostril), inhale in the puraka method for one unit (sixteen seconds), retain the breath in the kumbhaka method for four units (sixty-four seconds), and exhale slowly through Pingala (breathing through the right nostril) in the rechaka method for two units (thirty-two seconds). This is explained as the safe practice of pranayama. Kumbhaka is safe only up to sixty-four seconds; exceeding this can reduce the flow of prana to the brain and cause dizziness or fainting. Therefore, under no circumstances should kumbhaka be done beyond sixty-four seconds. \n\nHow to learn pranayama:\n\nIn the initial stages of breath training, practicing with the 16:64:32 time ratio will be difficult. It can be achieved only through consistent practice. Beginners may start with an 8:32:16 ratio and gradually increase the time. It may take at least six months to one year to reach the 16:64:32 ratio mentioned by Thirumoolar. Beginning this training under the supervision of a guru will make progress easier." }, { "song_number": 574, "padal": "இட்ட தவ்வீ டிளகா திரேசித்துப்\nபுட்டிப் படத்தச நாடியும் பூரித்து\nகொட்டிப் பிராணன் அபானனுங் கும்பித்து\nநட்டம் இருக்க நமனில்லை தானே.", "vilakam": "இறைவன் வழங்கிய இந்த உடல் சோர்வாக இல்லாத போது இரேசக முறைப்படி (பாடல் #568 இல் உள்ளபடி) மூச்சுக்காற்றை வெளியே விட்டுவிட்டு பத்து நாடிகளும் (1. இடகலை – (இடப்பக்க நரம்பு), 2. பிங்கலை – (வலப்பக்க நரம்பு), 3. சுமுழுனை – (நடுநரம்பு), 4. சிகுவை – (உள்நாக்கு நரம்பு), 5. புருடன் – (வலக்கண் நரம்பு), 6. காந்தாரி – (இடக்கண் நரம்பு), 7. அத்தி – ( வலச்செவி நரம்பு), 8. அலம்புடை – (இடச்செவி நரம்பு), 9. சங்கினி – (கருவாய் நரம்பு), 10. குகு – (மலவாய் நரம்பு)) நிரம்புமாறு மூச்சுக்காற்றை உள்ளிழுத்து அந்த மூச்சை அடக்கி மலவாயையும் சுருக்கி அக்காற்றை கும்பக முறைப்படி (பாடல் #568 இல் உள்ளபடி) வைத்து உடலை நேராக நிமிர்த்தி வைத்திருந்தால் இறப்பு என்றும் இல்லை.", "vilakam_en": "When the body given by God is free from fatigue, exhale in the rechaka method (as explained in verse #568), then inhale so that all ten nadis—1. Ida (left nerve), 2. Pingala (right nerve), 3. Sushumna (central nerve), 4. Siguvai (inner tongue nerve), 5. Purudan (right eye nerve), 6. Gandhari (left eye nerve), 7. Aththi (right ear nerve), 8. Alampudai (left ear nerve), 9. Sangini (genital nerve), 10. Gugu (anal nerve)—are filled. Retain this breath while contracting the anal sphincter in the kumbhaka method (as explained in verse #568), keeping the body upright. If practiced, death will never occur." }, { "song_number": 575, "padal": "புறப்பட்டுப் புக்குத் திரியும் வாயுவை\nநெறிப்படவே உள்ளே நின்மல மாக்கில்\nஉறுப்புச் சிவக்கும் உரோமங் கறுக்கும்\nபுறப்பட்டுப் போகான் புரிசடை யோனே.", "vilakam": "வெளியில் சுற்றித் திரியும் பிராணவாயுவை பிராணாயாம முறைப்படி (பாடல் #568 இல் உள்ளபடி) உள்ளே இழுத்து வைத்திருந்தால் அந்தக் காற்று உள்ளே சுத்தமாகி விடும். உடலுறுப்புக்கள் சிவப்பாகி முடிகள் கருப்பாகி அழகாக விளங்குவதோடு மட்டுமின்றி முறைப்படி பிராணாயாமத்தைச் செய்பவரின் உள்ளத்திலிருக்கும் கயிறு போல் முறுக்கிய சடையணிந்த சிவபெருமான் வெளியே செல்லாமல் இருப்பான்.", "vilakam_en": "If the prana (life force) that moves outside is drawn in and retained through the method of pranayama (as explained in verse #568), that air will be purified within. The body parts will become radiant, the hair will remain black and lustrous, and more importantly, Lord Shiva, with matted locks twisted like a rope, will dwell within the heart of the one who practices pranayama correctly, without ever leaving." }, { "song_number": 576, "padal": "கூடம் எடுத்துக் குடிபுக்க மங்கையர்\nஓடுவர் மீளுவர் பன்னிரண் டங்குலம்\nநீடுவர் எண்விரல் கண்டிப்பர் நால்விரல்\nகூடிக் கொளிறில்கோல அஞ்செழுத் தாமே.", "vilakam": "முறைப்படி பிராணாயாமம் செய்பவர்களின் ஆரம்பகாலத்தில் உடலை இடமாகக் கொண்டிருக்கும் இடகலை பிங்கலை (பாடல் #567 இல் உள்ளபடி) ஆகிய பிராண சக்திகள் பன்னிரண்டு அங்குல அளவிற்கு உள்ளுக்குள் வந்தும் வெளியே சென்றும் இருக்கும். பிற்காலத்தில் அந்த சக்திகள் இரண்டும் தொண்டைக்குழியிலிருந்து தலை உச்சிவரை இருக்கின்ற நான்கு அங்குல அளவிற்குச் செல்லாமல் கழுத்துக்குக் கீழே எட்டு அங்குல அளவிற்கு மட்டுமே சென்றுகொண்டு இருக்கும். தொண்டைக்குழியிலிருந்து தலை உச்சிவரை உள்ள இடத்துக்குச் செல்லாமல் இருக்கும் மூச்சுக்காற்றை அந்த இடத்திற்கும் செல்லுமாறு மொத்தம் பன்னிரண்டு அங்குல அளவிற்கும் பிராணாயாமம் செய்பவர்கள் பஞ்சாக்கர மந்திரத்தின் (நமசிவாய) வடிவாக மாறுவார்கள்.", "vilakam_en": "In the early stages for those who practice pranayama correctly, the pranic energies called Ida and Pingala (as explained in verse #567) move within the body up to a span of twelve inches, flowing in and out. Later, these two energies no longer reach the four inches from the throat to the crown of the head, instead moving only up to eight inches below the neck. By guiding the breath so that it also reaches the area from the throat to the crown—making it span the full twelve inches—practitioners of pranayama will transform into the very embodiment of the Panchakshara mantra (Namashivaya)." }, { "song_number": 577, "padal": "பன்னிரண் டானைக்குப் பகல்இர வுள்ளது\nபன்னிரண் டானையைப் பாகன் அறிகிலன்\nபன்னிரண் டானையைப் பாகன் அறிந்தபின்\nபன்னிரண் டானைக்குப் பகல்இர வில்லையே.", "vilakam": "நமது உடலின் மூக்குத்துவாரத்திலிருந்து அடிவயிறு வரை பன்னிரண்டு அங்குல அளவிற்குச் சென்று வரும் மூச்சுக்காற்று உள்ளே வருவதும் வெளியே செல்லுவதுமாகிய இரண்டு செயல்களை மட்டுமே செய்து வருகின்றது. இச்செயல்களை ஆன்மா அறியவில்லை. மூக்கிலிருந்து வயிற்றை நோக்கிக் கீழ்ச் செல்லும் மூச்சுக்காற்றை மூக்கிலிருந்து தலை உச்சி நோக்கி மேலே செல்ல பிராணாயாமத்தின் மூலம் முயற்சித்தால் நமது உடலுக்கு இறப்பும் பிறப்பும் இல்லை.", "vilakam_en": "The breath in our body moves within a span of twelve inches, from the nostrils down to the lower abdomen, performing only two actions—entering and exiting. The soul is unaware of these actions. If, through pranayama, we direct the breath that normally travels downward from the nose to the abdomen to instead move upward from the nose to the crown of the head, then our body will be free from both death and rebirth." }, { "song_number": 578, "padal": "கண்டுகண் டுள்ளே கருத்துற வாங்கிடிற்\nகொண்டுகொண் டுள்ளே குணம்பல காணலாம்\nபண்டுகந் தெங்கும் பழமறை தேடியை\nஇன்றுகண் டிங்கே இருக்கலு மாமே.", "vilakam": "வெளியே சென்று ஓடுகின்ற மனதை உள்ளே ஒரு நிலைப்படுத்தி விட்டால் இறைவனுடைய எட்டுவித குணங்களை நமக்குள்ளே உணரலாம். அவ்வாறு உள்ளே மனதை ஒரு நிலைப்படுத்தி வைத்து இருந்தால் ஆதிகாலம் முதல் பழமையான வேதங்களைக் கற்றறிந்தவர்களால் தமக்குள் தேடப்பட்ட இறைவனை அப்பொழுதே நமக்குள் கண்டு உணரலாம்.\n\nஇறைவனின் எட்டுவித குணங்கள்: 1. தன்வயத்தன் ஆதல், 2. தூய உடம்புடைமை, 3. அளவிலா ஆற்றல் உடைமை, 4. பாசங்களில் இருந்து நீங்கியிருப்பது, 5. பேரருள் உடைமை, 6. இயற்கை உணர்வு கொண்டிருத்தல், 7. முக்காலத்தையும் உணர்ந்திருத்தல், 8. அளவிலா ஆனந்தம் உடைமை)", "vilakam_en": "If the mind, which usually runs outward, is stabilized and turned inward, we can experience the eight divine qualities of God within ourselves. When the mind is held steady inward in this way, we can instantly perceive and realize the God that sages, who have mastered the ancient Vedas since time immemorial, sought within themselves. The eight qualities of God are: 1. Self-existence, 2. Possession of a pure body, 3. Infinite power, 4. Freedom from attachments, 5. Great compassion, 6. Natural awareness, 7. Awareness of all three periods of time (past, present, future), 8. Infinite bliss." }, { "song_number": 579, "padal": "நாபிக்குக் கீழே பன்னிரண் டங்குலத்தில்\nதாபிக்கு மந்திரந் தன்னை அறிகிலர்\nதாபிக்கு மந்திரந் தன்னை அறிந்தபின்\nகூவிக்கொண்டு ஈசன் குடியிருந் தானே.", "vilakam": "தொப்புளுக்குக் கீழே பன்னிரண்டு அங்குலம் தூரத்தில் உள்ள மூலாதாரத்தில் இருக்கும் ஓம் எனும் மந்திரத்தை அறிந்தவர்கள் யாருமில்லை. அந்த ஓம் என்னும் மந்திரத்தை உணர்ந்துவிட்டால் அந்த மந்திர ஒலியாய் இருக்கும் சிவபெருமானை நமக்குள் உணரலாம்.", "vilakam_en": "No one knows the Om mantra that resides in the Mooladhara, located twelve inches below the navel. Once this Om mantra is realized, we can experience Lord Shiva within ourselves, as He exists in the form of that sacred sound." }, { "song_number": 580, "padal": "மூலத் திருவிரல் மேலுக்கு முன்நின்ற\nபாலித்த யோனிக் கிருவிரற் கீழ்நின்ற\nகோலித்த குண்டலி யுள்ளெழுஞ் செஞ்சுடர்\nஞாலத்து நாபிக்கு நால்விரற் கீழதே.", "vilakam": "மூலாதாரத்திலிருந்து இரண்டு அங்குலம் அளவிற்கு மேலும் பிறப்பு உறுப்பிலிருந்து இரண்டு அங்குலம் அளவிற்குக் கீழும் உள்ள இடத்தில் வட்ட வடிவமாக இருக்கும் குண்டலினி சக்தியின் மையப்புள்ளி உள்ளது. அந்த குண்டலினி சக்தியிலிருந்து வெளிப்படும் செம்மையான ஒளி தொப்புள் குழியிலிருந்து நான்கு அங்குலம் அளவிற்குக் கீழே இருக்கும் இடம் வரை பரவியுள்ளது.", "vilakam_en": "The central point of the Kundalini energy, which is circular in shape, is located two inches above the Mooladhara and two inches below the reproductive organ. The radiant red light that emanates from this Kundalini energy spreads up to a point four inches below the navel." }, { "song_number": 581, "padal": "நாசிக் கதோமுகம் பன்னிரண் டங்குலம்\nநீசித்தம் வைத்து நினையவும் வல்லையேல்\nமாசித்த மாயோகம் வந்து தலைப்பெய்துந்\nதேகத்துக் கென்றுஞ் சிதைவில்லை யாகுமே.", "vilakam": "மூக்கிலிருந்து பன்னிரண்டு அங்குலம் அளவிற்குக் கீழே உள்ள இடத்தில் வைத்து (நான்காவது சக்கரமான அநாகதம் இருக்கும் இடமான நெஞ்சுக் குழி) நிர்மூலமாக இறைவனை தியானிக்கும் சக்தியுள்ளவர்களுக்கு எட்டு வகையான சித்திகளையும் கொடுக்கும் மாபெரும் யோகங்களும் வந்து சேரும். அப்படி சேர்ந்தபின் உடம்பிற்கு எப்போதும் அழிவு என்பது இல்லை.", "vilakam_en": "At a point twelve inches below the nose—where the fourth chakra, the Anahata, is located in the chest cavity—if one meditates firmly and unwaveringly on God, they will attain great yogic powers and all eight types of siddhis. Once these are attained, the body will never face destruction." }, { "song_number": 582, "padal": "சோதி இரேகைச் சுடரொளி தோன்றிடிற்\nகோதில் பரானந்தம் என்றே குறிக்கொண்மின்\nநேர்திகழ் கண்டத்தே நிலவொளி எய்தினால்\nஓதிய தன்னுடல் உன்மத்த மாமே.", "vilakam": "மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினி சக்தி தலை உச்சிக்குச் சென்றபின் பிராகாசமான ஒளி தோன்றி அந்த ஒளிக்கதிர் உடலெங்கும் பரவி பேரின்பம் கிடைக்கும் என்று மனதை ஒருமுகப்படுத்தி தியானம் செய்து, தலை உச்சிக்கு நேராகக் கீழே இருக்கும் கழுத்தில் அந்த ஒளிக் கதிர் தெரியும் நிலையை அடைந்தால் அவ்வாறு தியானித்த உடல் தன்னை மறந்த நிலையில் பேரானந்தமாக இருக்கும்.", "vilakam_en": "When the Kundalini energy in the Muladhara reaches the crown of the head, a radiant light appears, and its rays spread throughout the body, bringing supreme bliss. By meditating with a one-pointed mind and reaching the state where these rays are visible at the neck, directly below the crown, the body enters a state of self-forgetfulness, immersed in boundless bliss." }, { "song_number": 583, "padal": "மூலத் துவாரத்தை முக்கார மிட்டிரு\nமேலைத் துவாரத்தின் மேல்மனம் வைத்திரு\nவேலொத்த கண்ணை வெளியில் விழித்திரு\nகாலத்தை வெல்லுங் கருத்திது தானே.", "vilakam": "மூலாதாரத்திலிருக்கும் துளையை (மலத்துவாரம்) சதைகளால் இறுக்கி அடைத்துக் கொண்டு புருவங்களுக்கு நடுவில் இருக்கும் இடத்தில் (ஆக்ஞா சக்கரம் இருக்கும் இடம்) மனதை வைத்து உடல் உணர்வுகளை மறந்த நிலையில் தியானித்து இருப்பதே இறவாமல் இருக்கும் வழியாகும்.", "vilakam_en": "By tightening the opening in the Muladhara (anus) with the muscles and focusing the mind on the point between the eyebrows (the location of the Ajna chakra), meditating in a state where bodily sensations are forgotten is the path to becoming deathless." }, { "song_number": 584, "padal": "எருவிடும் வாசற் கிருவிரன் மேலே\nகருவிடும் வாசற் கிருவிரற் கீழே\nஉருவிடும் சோதியை உள்கவல் லார்க்குக்\nகருவிடுஞ் சோதி கலந்துநின் றானே.", "vilakam": "மலதுவாரத்திற்கு இரண்டு அங்குலம் மேலும் பிறப்புறுப்புக்கு இரண்டு அங்குலம் கீழும் உள்ள இடத்தில் இருக்கும் ஜோதியை (குண்டலினி சக்தி) உணர்ந்து தியானிக்க முடிந்தவர்களோடு உடலுக்கு உயிர் கொடுக்கும் இறைவன் கலந்து நிற்பான்.", "vilakam_en": "The Lord who gives life to the body will dwell united with those who can perceive and meditate upon the light (Kundalini Shakti) located two inches above the anus and two inches below the reproductive organ." }, { "song_number": 585, "padal": "ஒருக்கால் உபாதியை ஒண்சோதி தன்னைப்\nபிரித்துணர் வந்த உபாதிப் பிரிவைக்\nகரைத்துணர் வுன்னல் கரைதல்உள் நோக்கல்\nபிரத்தியா காரப் பெருமைய தாமே.", "vilakam": "பிரத்தியாகாரத்தின் மூலம் மிகவும் கடினத்துடன் மனதை ஒருநிலைப்படுத்தி கர்மாவினால் உண்டான உடலின் தொடக்கத்தையும் ஆன்மாவின் அறிவையும் பிரித்துப் பார்க்கும் திறனை அடைவதும், தனித்தனியாகப் பார்க்கும் பல இறை உருவங்களை மெல்ல மறந்து அறிவு வடிவாகிய ஒரே இறைவனை உணர்வதும் அந்த உணர்வினால் இறைவனின் மேல் அன்பு அதிகமாவதும் அவ்வாறு அதிகமாகிய அன்பினால் இறைவனை எப்பொதும் மறக்காமல் இருப்பதும் ஆகிய இவையே பிரத்தியாகாரத்தால் அடையும் பெரும் பயன்களாம்.", "vilakam_en": "Through Pratyahara, with great difficulty, one can steady the mind and gain the ability to discern between the origin of the body born of karma and the awareness of the soul. Gradually forgetting the many divine forms seen separately, one realizes the single God who is pure consciousness. This realization increases love towards God, and with such deepened love, one never forgets Him. These are the great benefits attained through Pratyahara." }, { "song_number": 586, "padal": "புறப்பட்ட வாயுப் புகவிடா வண்ணந்\nதிறப்பட்டு நிச்சயஞ் சேர்ந்துடன் நின்றால்\nஉறப்பட்டு நின்றது உள்ளமும் அங்கே\nபுறப்பட்டுப் போகான் பெருந்தகை யானே.", "vilakam": "உள்ளிழுத்து வெளியே விட்ட மூச்சுக்காற்றை மீண்டும் உள்ளிழுக்காமல் ஒரு குறிப்பிட்ட கால அளவு (தியான முறைப்படி) மன உறுதியுடன் இருந்தால் உள்ளம் இறைவனின் மேல் ஈர்க்கப்பட்டு இருக்கும். அவ்வாறு ஈர்க்கப்பட்டு இருக்கும் உள்ளத்துடன் பெருங் கருணையுடைய இறைவன் எப்போதும் கலந்தே இருப்பான்.", "vilakam_en": "If, after exhaling, one refrains from inhaling again for a certain period (as in meditation), with steadfast mental resolve, the mind remains drawn towards God. With such a heart drawn towards Him, the compassionate Lord will always be united with the practitioner." }, { "song_number": 587, "padal": "குறிப்பினின் உள்ளே குவலயந் தோன்றும்\nவெறுப்பிருள் நீங்கி விகிர்தனை நாடுஞ்\nசிறப்புறு சிந்தையைச் சிக்கென் றுணரில்\nஅறிப்புறு காட்சி அமரரு மாமே.", "vilakam": "பிரத்தியாகாரம் கூறும் மூன்று சக்கர இடங்களில் (மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம்) மனதை ஒருமுகப்படுத்துவன் உலகம் தோன்றிய நாள் முதல் இறைவனை அடையத் தடையாக இருக்கும் மாயை எனும் அறியாமையாகிய இருளை அகற்றி இறைவனை தேடிச் செல்லலாம். அவ்வாறு இறைவனை விரும்பித் தேட வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக இருந்தால் காணக் கிடைக்காத அரிய இறைக் காட்சியைக் கண்டு அழிவில்லாத நிலையை அடையலாம்.", "vilakam_en": "By focusing the mind on the three chakra points mentioned in Pratyahara (Muladhara, Swadhisthana, and Manipura), one can remove the darkness of ignorance—known as Maya—which has been an obstacle to realizing God since the dawn of creation, and proceed in search of Him. If one remains steadfast in the desire to seek God in this way, one can behold the rare and otherwise unseen divine vision and attain the state of immortality." }, { "song_number": 588, "padal": "கோணா மனத்தைக் குறிக்கொண்டு கீழ்க்கட்டி\nவீணாத்தண் டூடே வெளியுறத் தானோக்கிக்\nகாணாக்கண் கேளாச் செவியென் றிருப்பார்க்கு\nவாணாள் அடைக்கும் வழியுமது வாமே.", "vilakam": "பிரத்தியாகாரம் மூலம் உள்ளே ஒருநிலைப்படுத்திய மனதை மீண்டும் முன்பு இருந்தபடி அலைபாயவிடாமல் வைத்து மனக் கண்ணை முதுகெலும்பின் வழியே செல்லும் சுழுமுனை சென்றுசேரும் இடமாகிய தலை உச்சிக்குச் சிறிது மேலே (தோராயமாக 9 அங்குலம் அளவு) உள்ள வெற்று இடத்தில் வைத்து கண்ணால் காணும் காட்சிகளும் காதால் கேட்கும் ஒலிகளும் மனதை பாதிக்காத வண்ணம் உணர்வில்லாமல் இருந்தால் இந்தப் பிறவியின் ஆயுள் முடியாமல் இருக்கலாம்.", "vilakam_en": "Through Pratyahara, by keeping the inwardly stabilized mind from wandering again as it did before, and placing the mind’s eye at the empty space slightly above the crown of the head (approximately 9 inches), where the Sushumna passing through the spine reaches, one remains unaffected by sights seen by the eyes or sounds heard by the ears, staying in a state without sensory responses. In this way, the lifespan of this birth may remain unended." }, { "song_number": 589, "padal": "மலையார் சிரத்திடை வானீர் அருவி\nநிலையாரப் பாயும் நெடுநாடி யூடுபோய்ச்\nசிலையார் பொதுவில் திருநட மாடுந்\nதொலையாத ஆனந்தச் சோதிகண் டேனே.", "vilakam": "மலை போன்ற தலையின் உச்சியில் வானத்திலிருந்து வரும் மழை போல அமிர்தம் எப்போதும் பொழிந்துகொண்டு இருக்கின்ற சுழுமுனை நாடியின் வழியாக மனதைச் செலுத்தி அம்பலத்தில் ஆடும் சிவபெருமானின் என்றும் தெவிட்டாத பேரின்பம் தரும் ஆனந்தக் கூத்தைக் கண்டேன்.", "vilakam_en": "By directing the mind along the Sushumna nadi, which is like a mountain peak constantly showered with nectar-like rain from the sky, I witnessed the eternal blissful dance of Lord Shiva in the cosmic hall, granting unfading supreme joy." }, { "song_number": 590, "padal": "மேலை நிலத்தினாள் வேதகப் பெண்பிள்ளை\nமூல நிலத்தில் எழுகின்ற மூர்த்தியை\nஏல எழுப்பி இவளுடன் சந்திக்கப்\nபாலனும் ஆவான் பார்நந்தியின் ஆணையே.", "vilakam": "மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினியாகிய இறைவனை சுழுமுனை வழியே மேல் நோக்கி எடுத்துச் சென்று தலை உச்சியிலிருக்கும் சகஸ்ரதளத்தில் இருக்கும் சக்தியுடன் சேர்த்துவிட்டால் அமுதம் சுரந்து அதன் விளைவாக வயதானவரும் வாலிபனாக மாறி என்றும் இளமையுடன் இருப்பார். இது உலகாளும் நந்தியின் ஆணை.", "vilakam_en": "By guiding the Kundalini energy residing in the Muladhara upward through the Sushumna and uniting it with the power at the Sahasrara located at the crown of the head, nectar is produced. As a result, even the elderly become youthful and remain forever young. This is the command of the world and Nandi." }, { "song_number": 591, "padal": "கடைவாச லைக்கட்டிக் காலை எழுப்பி\nஇடைவாசல் நோக்கி இனிதுள் இருத்தி\nமடைவாயிற் கொக்குப்போல் வந்தித் திருப்பார்க்\nகுடையாமல் ஊழி இருக்கலு மாமே.", "vilakam": "மூலாதாரத்திலிருக்கும் துவாரமாகிய மலத்துவாரத்தை இறுக்கி வைத்து உள்ளே இழுத்த மூச்சுக்காற்றை முதுகெலும்பின் வழியே செல்லும் சுழுமுனை வழியே செலுத்தி தொப்புளுக்குக் கீழே இருக்கும் மூன்று சக்கரங்களின் நடுவில் மனதை வைத்து இறையருளால் கிடைக்கும் ஒளியை அடையும் வரை இறைவனை வணங்கி இருப்பவர்களுக்கு உலகம் அழியும் காலம் வரை உடல் அழிவின்றி இருக்க முடியும்.", "vilakam_en": "By tightening the Muladhara door (anus), drawing in the breath, and directing it through the Sushumna along the spine, placing the mind between the three chakras below the chest, and worshipping God until one attains the divine light received by grace, the body can remain immortal until the end of the world." }, { "song_number": 592, "padal": "கலந்த உயிருடன் காலம் அறியில்\nகலந்த உயிரது காலின் நெருக்கங்\nகலந்த உயிரது காலது கட்டிற்\nகலந்த உயிருடன் காலமும் நிற்குமே.", "vilakam": "உயிருடன் கலந்த உடலினுள்ளே செல்லும் மூச்சுக்காற்றைத் தெரிந்துகொண்டு அந்த மூச்சுக்காற்றுடன் உயிருக்கும் உடலுடக்கும் நெருக்கத்தை ஏற்படுத்தி அந்த மூச்சுக்காற்றை வெளியே சென்றுவிடாமல் அடக்கி வைத்திருந்தால் அந்த மூச்சுக்காற்று உயிருடன் கலந்த உடலோடு எப்போதும் கலந்து இருக்கும்.", "vilakam_en": "By understanding the breath that enters the body united with life, creating an intimate connection between the breath, life, and body, and restraining that breath from leaving, the breath remains forever united with the living body." }, { "song_number": 593, "padal": "வாய்திற வாதார் மனத்திலோர் மாடுண்டு\nவாய்திறப் பாரே வளியிட்டுப் பாய்ச்சுவர்\nவாய்திற வாதார் மதியிட்டு மூட்டுவர்\nகோய்திற வாவிடிற் கோழையு மாமே.", "vilakam": "பேசாமல் மெளன நிலையில் இருப்பவர்களின் மனதில் பிராணன் என்னும் பெரும் செல்வம் உள்ளது. அவ்வாறு மெளன நிலையில் இல்லாமல் பேசிக்கொண்டே இருப்பவர்கள் அந்தப் பிராணனாகிய செல்வத்தை வீணாக்குகின்றார்கள். பேசாமல் மெளன நிலையில் இருப்பவர்கள் தங்கள் அறிவை அந்தப் பிராணனாகிய செல்வத்தின் மீது செலுத்தி அதை சுழுமுனை வழியாகத் தலை உச்சியிலிருக்கும் சகஸ்ரதளத்திற்கு கொண்டு சென்று அந்தச் செல்வத்தை அடைவார்கள். அவ்வாறு பிராணனாகிய செல்வத்தை சுழுமுனை வழியாக மேலே உள்ள சகஸ்ரதளத்திற்குக் கொண்டு செல்லும் பயிற்சியை செய்யாமல், பெரும் செல்வத்தை மட்டும் அடைய நினைப்பவர்கள் கோழையாவார்கள்.", "vilakam_en": "Those who remain silent without speaking possess a great wealth called Prana in their minds. Those who keep talking waste that wealth of Prana. Silent ones direct their intellect onto this wealth of Prana, guiding it upward through the Sushumna to the Sahasrara at the crown of the head, thereby attaining this wealth. Those who seek only the great wealth without practicing the process of raising Prana through the Sushumna to the Sahasrara are fools." }, { "song_number": 594, "padal": "வாழலு மாம்பல காலும் மனத்திடைப்\nபோழ்கின்ற வாயு புறம்படாப் பாய்ச்சுறில்\nஏழுசா லேகம் இரண்டு பெருவாய்தல்\nபாழி பெரியதோர் பள்ளி அறையிலே.", "vilakam": "உள்ளிழுத்த மூச்சுக்காற்றை வெளியே விட்டுவிடாமல் மனதை ஒருமுகப்படுத்தி சுழுமுனை வழியாக அந்த மூச்சுக்காற்றை மேலே ஏற்றி தலை உச்சியிலுள்ள சகஸ்ரதளத்திற்குக் கொண்டு சென்றுவிட்டால் ஒன்பது துவாரங்களைக் கொண்ட இந்த உடம்பில் நீண்ட காலம் அழியாமல் பேரானந்த நிலையில் இருக்கலாம்.", "vilakam_en": "By restraining the inhaled breath from escaping, focusing the mind single-pointedly, and raising that breath upward through the Sushumna to the Sahasrara at the crown of the head, one can remain in a state of great bliss without the body decaying for a long time in this body that has nine openings." }, { "song_number": 595, "padal": "நிரம்பிய ஈரைந்தில் ஐந்திவை போனால்\nஇரங்கி விழித்திருந் தென்செய்வை பேதாய்\nவரம்பினைக் கோலி வழிசெய்கு வார்க்குக்\nகுரங்கினைக் கோட்டை பொதியலு மாமே.", "vilakam": "உடம்பில் உள்ள பத்துவித வாயுக்களில் முக்கியமான ஐந்து வாயுக்களை பிராணாயாம முறைப்படி கட்டுப்படுத்தி வெளியே விடாமல் வீணாக வெளியேற்றுபவர்கள் இந்த உலகில் வெறுமனே உயிர் வாழ்ந்து எந்தப் பயனையும் அடையமாட்டார்கள். அந்த ஐந்து வாயுக்களையும் வீணாக்காமல் பிராணாயாம முறையில் கூறிய அளவுகளின்படி அடக்கி வெளியே விடுபவர்களுக்கு மனமாகிய குரங்கை ஒருமுகப்படுத்தி உடம்பின் உள்ளேயே நிலைத்திருக்கும்படி வைக்க முடியும்.\n\nஉடலிலுள்ள பத்துவித வாயுக்கள்:\n\nமுறைப்படி கட்டுப்படுத்தி வெளியே விடவேண்டிய ஐந்து வாயுக்கள்:", "vilakam_en": "Among the ten types of vital airs in the body, controlling the five important airs through the pranayama method without letting them escape wastefully is essential. Those who merely live without controlling these five airs achieve no real benefit in this world. By restraining these five airs properly according to the prescribed pranayama measures and not letting them escape, one can focus the mind as a single point like a monkey and keep it stable within the body.\n\nThe ten types of vital airs in the body:\n\nThe five airs that must be properly controlled and released:" }, { "song_number": 596, "padal": "முன்னமே வந்தனர் எல்லாம் முடிந்தனர்\nபின்னையும் வந்தவர்க் கென்ன பிரமாணம்\nமுன்னூறு கோடி உறுகதி பேசிடில்\nஎன்ன மாயம் இடிகரையும் நிற்குமே.", "vilakam": "நமக்கு முன்பு வந்தவர்களெல்லாம் மனதை ஒருமுகப்படுத்தி நிலைத்து வைக்காமல் இறந்து போய்விட்டார்கள். பின்பு பிறந்த நாமும் அவ்வாறே மனதை ஒருமுகப்படுத்தாமல் அழிந்து விடுவோம் என்பது நிச்சயம் இல்லை. முன்பு வந்த முன்னூறு கோடி மனிதர்களும் அடைந்த கதியைப் பற்றிப் பேசி ஒரு பயனும் இல்லை. மனதை ஒருமுகப்படுத்தி நிலைத்து வைத்தால் அழியக்கூடியதாக இருக்கும் இந்த உடல் அழியாததாக மாற்ற முடியும்.", "vilakam_en": "All those who came before us died without focusing and stabilizing the mind. It is not certain that we who are born later will also perish without focusing the mind. Talking about the stories of the three hundred crore people who came before is of no use. If the mind is focused and stabilized, this body, which is otherwise perishable, can be made imperishable." }, { "song_number": 597, "padal": "அரித்த வுடலைஐம் பூதத்தில் வைத்து\nபொருத்தஐம் பூதஞ்சத் தாதியிற் போந்து\nதெரித்த மனாதிசத் தாதியிற் செல்லத்\nதரித்தது தாரணை தற்பரத் தோடே.", "vilakam": "ஆற்று வெள்ளம் கரையினை அரித்துப் பாழாக்குவது போல ஐம்பூதங்களான மெய் (உணர்வது) கண் (பார்ப்பது) காது (கேட்பது) மூக்கு (நுகர்வது) வாய் (சுவைப்பது) ஆகிய ஐம்புலன்கள் உடம்பினை அரித்துப் பாழாக்குகின்றது. ஐம்புலன்களும் உடலுக்குள் அடங்கும் முறையை உணர்ந்தால் உலகம் அழியக்கூடியது சிவமே அழியாதது என்ற உண்மையை உணரலாம். அவ்வாறு உணர்ந்து விட்டால் உலகப்பற்று அறுந்துவிடும். உடலைக் கட்டுப்படுத்தும் ஐம்பூதங்களையும் மனதால் கட்டுப்படுத்த வேண்டும். வெளியே உள்ள ஐம்பூதங்களின் (உணர்ச்சி, காட்சி, சத்தம், வாசனை, சுவை) உணர்வுகளை உள்ளுக்குள் உணர வேண்டும். மனதை மூலாதாரத்தில் ஒருநிலைப்படுத்த வேண்டும். உடலில் இருக்கும் ஆத்மாவை இறைவனோடு சேர்த்தல் வேண்டும். இவை அனைத்தும் செய்வதே தாரணை எனப்படும்.", "vilakam_en": "Just as a flood destroys the riverbank, the five elements—matter (substance), and the five senses—eye (seeing), ear (hearing), nose (smelling), and mouth (tasting)—wear down and destroy the body. Understanding how the five senses are contained within the body reveals the truth that while the world can perish, Shiva remains eternal. Once this is realized, worldly attachments fade away. The five elements controlling the body must also be controlled by the mind. The external five elements (sensations, sights, sounds, smells, tastes) should be inwardly experienced. The mind should be stabilized at the Muladhara (root chakra). The soul within the body must be united with the divine. Doing all these is called Dharana (concentration)." }, { "song_number": 598, "padal": "வருமாதி யீரெட்டுள் வந்த தியானம்\nபொருவாத புந்தி புலன்போக மேவல்\nஉருவாய சத்தி பரத்தியான முன்னுங்\nகுருவார் சிவத்தியானம் யோகக் கூறே.", "vilakam": "ஆதியிலிருந்து வரும் பூதங்கள் ஐந்தும் (நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்) புலன்கள் ஐந்தும் (பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல், தொடுதல்) அந்தக் கரணங்கள் நான்கும் (மனம், புத்தி, சித்தம், அகங்காரம்) மாயை ஒன்றும் ஆத்மா ஒன்றும் ஆகிய 16 உண்மைகளையும் நினைப்பது ஆருயிர்த் தியானம் ஆகும். சாதாரண நிலையில் அறிவு புலன்களின் மேல் பற்றுகொண்டு இருக்கும். அந்த அறிவை புலன்களை விட்டு விலக்கி வைத்தால் வருவது முதல் பிரிவான அம்மை அப்பனாகிய இரண்டு சக்திகளும் பரத்தியானம் ஆகும். அறிவில் குருவாக சிவனை வைத்துவிட்டால் வருவது இரண்டாம் பிரிவான சிவத்தியானம் ஆகும். பரத்தியானம், சிவத்தியானம் ஆகிய இவையே யோகத்தின் இரண்டு பிரிவுகளாகும்.", "vilakam_en": "Contemplating the sixteen realities—the five elements from the beginning (earth, water, fire, air, space), the five senses (seeing, hearing, smelling, tasting, touching), the four inner faculties (mind, intellect, consciousness, ego), the one illusion (maya), and the one soul (atma)—is called Aroodhir Dhyana (Life Meditation). In ordinary states, the intellect clings to the senses. When the intellect separates from the senses, the first phase called Parathiyanam, which consists of two supreme energies, arises. When Shiva is placed as the guru within the intellect, the second phase called Sivathiyanam arises. Parathiyanam and Sivathiyanam are the two divisions of Yoga." }, { "song_number": 599, "padal": "கண்ணாக்கு மூக்குச் செவிஞானக் கூட்டத்துட்\nபண்ணாக்கி நின்ற பழம்பொருள் ஒன்றுண்டு\nஅண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளிகாட்டிப்\nபுண்ணாக்கி நம்மையும் பிழைப்பித்த வாறே.", "vilakam": "கண், நாக்கு, மூக்கு, காது ஆகிய நான்கின் உணர்வுகளை உணர்த்தும் ஞானமாகிய கூட்டத்தில் ஓம் என்னும் ஒலியை உருவாக்கி நிற்கின்ற பரம்பொருள் ஒன்று உண்டு. அந்தப் பரம்பொருளை நினைத்து உடலை வருத்தி தியானம் செய்பவர்களின் உள் நாக்கின் உள்ளே அகண்ட பேரொளியைக் காட்டுவது மட்டுமன்றி அவ்வாறு உடலை வருத்தி தியானத்தை செய்தவர்களுக்கு இறப்பில்லாத நிலையையும் கொடுக்கும்.", "vilakam_en": "There is a supreme entity that creates the sound 'Om,' which arises from the collective knowledge of the senses—eye, tongue, nose, and ear. Meditating on this supreme entity with bodily effort reveals an immense inner light within the inner tongue and grants the practitioner an immortal state." }, { "song_number": 600, "padal": "ஒண்ணா நயனத்தில் உற்ற ஒளிதன்னைக்\nகண்ணாரப் பார்த்துக் கலந்தங் கிருந்திடில்\nவிண்ணாறு வந்து வெளிகண் டிடவோடிப்\nபண்ணாமல் நின்றதுவும் பார்க்கலு மாமே.", "vilakam": "இரண்டு கண்களையும் மூடி மனதை ஒரு நிலைப்படுத்தி தியானம் செய்து ஞானக் கண்ணில் (புருவ மத்தியில்) உள்ள ஜோதியைப் பார்த்து அதிலேயே மனதை வைத்தால் தலைக்கு மேல் ஆகாய கங்கை பாய்வது போன்ற உணர்வுடன் தானே தோன்றிய சுயம்புவாகிய சிவனையும் பார்க்கலாம்.", "vilakam_en": "By closing both eyes, stabilizing the mind, and meditating while focusing on the light (jyothi) located in the wisdom eye (between the eyebrows), one can experience a sensation like the celestial river flowing above the head and naturally perceive the self-manifested Shiva." }, { "song_number": 601, "padal": "ஒருபொழு துன்னார் உடலோ டுயிரை\nஒருபொழு துன்னார் உயிருட் சிவனை\nஒருபொழு துன்னார் சிவனுறை சிந்தையை\nஒருபொழு துன்னார் சந்திரப் பூவையே.", "vilakam": "உடலோடு கலந்துள்ள உயிரை ஒரு பொழுதும் நினைக்காதவர்கள் உயிருக்கு உயிராய் இருக்கும் சிவனை ஒரு பொழுதும் நினைக்காதவர்கள் சிவனின் மேல் சிந்தனையை ஒரு பொழுதும் வைக்காதவர்கள் நெற்றிக்கு நடுவில் உள்ள சக்தியை ஒரு பொழுதும் உணர மாட்டார்கள்.", "vilakam_en": "Those who never think about the life force that dwells within the body, those who never remember Shiva who is the life of life, and those who never place their thoughts upon Shiva will never perceive the power located at the center of the forehead even for a moment." }, { "song_number": 602, "padal": "மனத்து விளக்கினை மாண்பட ஏற்றிச்\nசினத்து விளக்கினைச் செல்ல நெருக்கி\nஅனைத்து விளக்குந் திரியொக்கத் தூண்ட\nமனத்து விளக்கது மாயா விளக்கே.", "vilakam": "தியானத்தின் மூலம் மனதில் இருக்கும் ஒளியை பிரகாசமாக மேல் நோக்கி செலுத்தி கோபமாகிய அக்கினியை வெளியே போகும்படி செய்து அனைத்தையும் அறிந்து இருக்கும் சிவ ஒளியை பற்றியிருக்கும் சுழுமுனை (முதுகுத்தண்டு) என்னும் திரியை தியானத்தின் மூலம் தூண்டிவிட மனதில் இருக்கும் சிவம் என்னும் ஓளி அணையாமல் இருக்கும்.", "vilakam_en": "Through meditation, by directing the inner light in the mind upward and causing the fiery energy of anger to be expelled, one can awaken the Śiva light residing in the spiral (the spinal column). This practice ensures that the divine light of Śiva within the mind remains ever burning and undiminished." }, { "song_number": 603, "padal": "எண்ணா யிரத்தாண்டு யோகம் இருக்கினும்\nகண்ணா ரமுதினைக் கண்டறி வாரில்லை\nஉண்ணாடியில் உள்ளே ஒளிபெற நோக்கில்\nகண்ணாடியில் போலக் கலந்துநின் றானே.", "vilakam": "எண்ணிலடங்காத ஆண்டுகள் யோக நிலையில் இருந்தாலும் இறைவனை வெளியே கண்டு அறிந்தவர்கள் யாரும் இல்லை. உள்ளுக்குள் இருக்கும் சகஸ்ரதளத்திலுள்ள ஒளியின் மேல் எண்ணத்தை வைத்து தியானித்தால் கண்ணாடியில் உருவம் கலந்து இருப்பது போல உள்ளுக்குள் கலந்து இருக்கும் இறைவனை உணரலாம்.", "vilakam_en": "No one has ever truly seen or realized God outwardly, even after countless years in yoga. By meditating with the mind focused on the light within the Sahasrara inside, one can perceive God within, just as an image is reflected and blended in a mirror." }, { "song_number": 604, "padal": "நாட்டம் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில்\nவாட்டமும் இல்லை மனைக்கும் அழிவில்லை\nஓட்டமும் இல்லை உணர்வில்லை தானில்லை\nதேட்டமும் இல்லை சிவனுமவ னாமே.", "vilakam": "இரண்டு கண்களையும் புருவ மத்தியிலுள்ள மூக்கின் நுனியில் வைத்து தியானம் செய்தால் உடலில் இருக்கும் சோர்வு நீங்கிவிடும். உடலுக்கு அழிவும் வராது. மனது ஒரு நிலையாக இருக்கும். உலக உணர்வு இருக்காது. தன்னை மறந்த நிலையில் உடல் இருக்கும். எதன் மீதும் நாட்டம் வராது. இந்த நிலையிலிருப்பவர்கள் சிவ நிலையில் இருப்பவர்களாவர்.", "vilakam_en": "If one meditates by focusing both eyes on the tip of the nose between the eyebrows, physical fatigue will disappear. The body will not deteriorate. The mind will remain steady. There will be no worldly awareness. The body will be in a state of self-forgetting. No attachment to anything will arise. Those who remain in this state dwell in the state of Shiva." }, { "song_number": 605, "padal": "நயனம் இரண்டும் நாசிமேல் வைத்திட்\nடுயர்வெழா வாயுவை உள்ளே அடக்கித்\nதுயரற நாடியே தூங்கவல் லார்க்குப்\nபயனிது காயம் பயமில்லை தானே.", "vilakam": "இரண்டு கண்களையும் புருவ மத்தியிலுள்ள மூக்கின் மேல் வைத்து உள்ளிழுத்த மூச்சுக்காற்றை வெளியே விடாமல் அடக்கி வைத்து கர்மாவினால் வரும் உடல் மற்றும் மன துன்பங்கள் நீங்க வேண்டி தியானம் செய்தால் அதன் பயனாக உடலுக்குத் துன்பம் எதுவும் வராது. மனதில் எந்த பயமும் இருக்காது.", "vilakam_en": "By placing both eyes above the nose between the eyebrows, inhaling breath and holding it without exhaling, and meditating to remove physical and mental sufferings caused by karma, the body will experience no pain. The mind will be free from fear." }, { "song_number": 606, "padal": "மணிகடல் யானை வளர்குழல் மேகம்\nஅணிவண்டு தும்பி வளைபேரி கையாழ்\nதணிந்தெழு நாதங்கள் தாமிவை பத்தும்\nபணிந்தவர்க் கல்லது பார்க்கஒண் ணாதே.", "vilakam": "தியானம் செய்வதால் உள்ளுக்குள் கேட்கக்கூடிய பத்துவித ஓசைகளாகிய 1. மணியோசை 2. கடல் அலையோசை 3. யானை பிளிறும் ஓசை 4. புல்லாங்குழலோசை 5. இடியோசை 6. வண்டின் ரீங்கார ஓசை 7. தும்பியின் முரலோசை 8. சங்கொலி 9. பேரிகை ஓசை 10. யாழிசை ஆகிய ஓசைகள் அனைத்தும் சிவனை பணிந்து தியானம் செய்பவர்களுக்கு மட்டுமே உருவாகும்.", "vilakam_en": "Through meditation, ten types of inner sounds can be heard: 1. Bell sound, 2. Sound of ocean waves, 3. Elephant trumpeting, 4. Sound of flute, 5. Thunder sound, 6. Sound of a cart’s wheels, 7. Dragonfly’s flute-like sound, 8. Conch shell sound, 9. Large drum sound, 10. Sound of a lute. All these sounds arise only for those who worship Shiva and meditate." }, { "song_number": 607, "padal": "கடலொடு மேகங் களிறொடும் ஓசை\nஅடவெழும் வீணையும் அண்டரண் டத்துச்\nசுடர்மனு வேணுச் சுரிசங்கின் ஓசை\nதிடமறி யோகிக்கல் லாற்றெரி யாதே.", "vilakam": "கடலின் அலையோசை மேகத்தின் இடியோசை யானை பிளிறும் ஓசை ஆகிய வன்மையான ஓசைகளில் ஆரம்பித்து வீணையின் ஓசை அண்டமெல்லாம் கலந்து இருக்கும் ஓம் எனும் ஓசை புல்லாங்குழலின் மெல்லிய ஓசை சிறிய துளையுடைய சங்கொலி ஆகிய மென்மையான ஓசைகளில் முடியும் இந்த ஓசைகளை மன உறுதியோடு தியானம் செய்யும் யோகியர்களால் மட்டுமே அறிந்துகொள்ள முடியும்.", "vilakam_en": "The sounds begin with the violent noises like the ocean waves, thunder of clouds, and elephant trumpeting, then end with gentle sounds like the veena’s melody filling the surroundings, the subtle sound of the flute, and the conch with its small opening. Only yogis who meditate with strong mental focus can perceive these sounds." }, { "song_number": 608, "padal": "ஈசன் இயல்பும் இமையவர் ஈட்டமும்\nபாசம் இயங்கும் பரிந்துயி ராய்நிற்கும்\nஓசை யதன்மணம் போல விடுவதோர்\nஓசையாம் ஈசனை உணரவல் லார்க்கே.", "vilakam": "மனதை ஒருநிலைப்படுத்தி தியானம் செய்து சிவபெருமானை உணரக் கூடியவர்களின் உள்ளிருந்து வெளிவரும் ஓசையானது பூவிலிருந்து வெளிவரும் நறுமணம் போலவும் சிவபெருமானின் ஓசை என்னும் சொரூபமாகவும் தேவர்கள் முதலிய அனைத்து உயிர்களுக்குள்ளும் பாசம் என்னும் உணர்வாகவும் அந்தப் பாசத்தின் கருணையால் உயிருக்கு உயிராகவும் கலந்து நிற்கும்.", "vilakam_en": "The sound that arises from within the minds of those who concentrate and meditate to realize Lord Shiva is like the fragrance emitted by a flower. This sound is the form of Shiva’s own voice and evokes a feeling of affection in all beings including gods. Through the compassion of that affection, it mingles as life with life." }, { "song_number": 609, "padal": "நாத முடிவிலே நல்லாள் இருப்பது\nநாத முடிவிலே யோகம் இருப்பது\nநாத முடிவிலே நாட்டம் இருப்பது\nநாத முடிவிலே நஞ்சுண்ட கண்டனே.", "vilakam": "தியானத்தினால் உள்ளிருந்து வெளிவரும் ஓசையின் இறுதியில் உண்மை என்னும் இறை சக்தியை உணரலாம். நல்ல யோகத்தினால் இறைவனுடன் கலந்து இருப்பதை உணரலாம். இறைவனைத் தவிர வேறு சிந்தனை இருக்காது. கர்மங்கள் நீங்கித் தூய்மையான சிவனை உணரலாம்.", "vilakam_en": "Through meditation, at the end of the inner and outer sounds, one can realize the divine power called Truth. With good yoga practice, one can feel union with the divine. No other thoughts remain except God. Karma is purified, and one can realize the pure Shiva." }, { "song_number": 610, "padal": "உதிக்கின்ற ஆறினும் உள்ளங்கி ஐந்துந்\nதுதிக்கின்ற தேசுடைத் தூங்கிருள் நீங்கி\nஅதிக்கின்ற ஐவருள் நாதம் ஒடுங்கக்\nகதிக்கொன்றை ஈசன் கழல்சேர லாமே.", "vilakam": "தியானத்தினால் ஆறு சக்கரத்திலும் அடங்கியிருக்கும் குண்டலினி சக்தியிலிருந்து வெளிவரும் ஐந்து வகை அக்கினிகளான மூலாக்கினி, வடவாக்கினி, மின்னல் அக்கினி, கதிராவன் அக்கினி, திங்கள் அக்கினி ஆகியவை பிரகாசிக்கும் போது மும்மலங்களான ஆணவம், கன்மம், மாயை ஆகிய இருள்கள் நீங்கும். அதன்பின் ஐந்து புலன்களாகிய சுவைத்தல், பார்த்தல், கேட்டல், முகர்தல், தொடுதல் ஆகிய உணர்வுகள் நீங்கப் பெற்று சிவபெருமானை அடையலாம்.", "vilakam_en": "Through meditation, when the five types of fires—Moolakini, Vadavakini, Lightning fire, Sun fire, and Moon fire—emanate from the Kundalini energy contained within the six chakras, the three great impurities of anger, karma, and illusion are removed. Then, the five senses of taste, sight, hearing, speech, and touch dissolve, enabling one to attain Lord Shiva." }, { "song_number": 611, "padal": "பள்ளி அறையிற் பகலே இருளில்லை\nகொள்ளி அறையிற் கொளுந்தாமற் காக்கலாம்\nஒள்ளி தறியிலோ ரோசனை நீளிது\nவெள்ளி அறையில் விடிவில்லை தானே.", "vilakam": "தியானம் செய்பவர்களுக்கு உள்ளம் ஒளிமயமாக இருக்கும். அங்கே இருள் கிடையாது. அவர்களுக்கு மரணம் பற்றிய பயம் இருக்காது. இந்த நுண்ணறிவைப் பெற்ற யோகியர்கள் தங்களுக்குள் காணும் உள்ளொளி ஒரு யோசனை தூரம் பரவியிருக்கும். அந்த ஒளிமயமான வெள்ளி அறையாகிய மனதில் பயத்திற்கு இடமிருக்காது.", "vilakam_en": "Those who meditate have a mind filled with light. There is no darkness there. They do not fear death. Yogis who attain this subtle knowledge see an inner light that spreads as far as the mind can conceive. In that luminous silver chamber-like mind, there is no room for fear." }, { "song_number": 612, "padal": "கொண்ட விரதங் குறையாமற் றானொன்றித்\nதண்டுடன் ஓடித் தலைப்பட்ட யோகிக்கு\nமண்டலம் மூன்றினும் ஒக்க வளர்ந்தபின்\nபிண்டமும் ஊழி பிரியா திருக்குமே.", "vilakam": "யோகியர்கள் தாங்கள் எடுத்துக் கொண்ட வைராக்கியம் குறையாமல் தியானத்தில் ஒன்றியபடி இருந்தால் மூலாதார அக்கினியும், ஆக்ஞா சந்திரனும், சகஸ்ரதள சூரியனும் ஆகிய மூன்றும் ஒரு சேர வளர்ந்து முதுகுத்தண்டு வழியாக குண்டலினியை மேலே ஏற்றினால் அவர்களின் உடல் உயிரை விட்டு பிரியாது நிலைத்து இருக்கும்.", "vilakam_en": "If yogis maintain their chosen renunciation without decrease and remain united in meditation, the Muladhara fire, Ajna moon, and Sahasrara sun all grow together. Rising upward through the spinal column, they raise the Kundalini, ensuring their body remains steadfastly connected to life and does not depart." }, { "song_number": 613, "padal": "அவ்வவர் மண்டல மாம்பரி சொன்றுண்டு\nஅவ்வவர் மண்டலத் தவ்வவர் தேவராம்\nஅவ்வவர் மண்டலம் அவ்வவர்க் கேவரில்\nஅவ்வவர் மண்டல மாயமற் றோர்க்கே.", "vilakam": "தலை உச்சியிலுள்ள சகஸ்ரதள சூரியனுக்கு பிரம்மாவும் நெற்றிக்கு நடுவிலுள்ள ஆக்ஞா சந்திரனுக்கு விஷ்ணுவும் மூலாதார அக்கினிக்கு உருத்திரனும் தலைவர்களாக இருக்கின்றார்கள். அவர்களை அவர்கள் இருக்கும் இடத்திலேயே வைத்து தியானிப்பவர்களுக்கு தியானம் கைகூட அவர்கள் உதவுவார்கள்.", "vilakam_en": "Brahma is the leader of the Sahasrara sun at the crown of the head, Vishnu leads the Ajna moon located between the eyebrows, and Rudra leads the Muladhara fire. Those who meditate by placing these deities in their respective locations will succeed in meditation, aided by their divine presence." }, { "song_number": 614, "padal": "இளைக்கின்ற நெஞ்சத் திருட்டறை உள்ளே\nமுளைக்கின்ற மண்டலம் மூன்றினும் ஒன்றித்\nதுளைப்பெரும் பாசந் துருவிடு மாகில்\nஇளைப்பின்றி மார்கழி ஏற்றம தாமே.", "vilakam": "அறியாமை என்னும் மாயையால் மனம் தளர்ந்து இருளாக இருக்கின்றது. அந்த இருள் நீங்க மூன்று சக்கரங்களிலும் (மூலாதாரம், ஆக்ஞா, சகஸ்ரதளம்) தியானம் செய்து முதுகுத்தண்டு வழியாக குண்டலினியை மேலே ஏற்றி அறியாமை நீங்கப் பெறலாம். அப்படிச் செய்தால் மும்மலங்களான ஆணவம், கன்மம், மாயை ஆகிய இருள்கள் நீங்கி ஏற்றம் பெறலாம்.", "vilakam_en": "The mind is weakened and enveloped in darkness due to ignorance called Maya. This darkness can be dispelled by meditating on the three chakras (Muladhara, Ajna, Sahasrara) and raising the Kundalini upward through the spinal cord. By doing so, the three great impurities—ego, karma, and illusion—are removed, leading to liberation." }, { "song_number": 615, "padal": "முக்குண மூடற வாயுவை மூலத்தே\nசிக்கென மூடித் திரித்துப் பிடித்திட்டுத்\nதக்க வலமிடம் நாழிகை சாதிக்க\nவைக்கும் உயிர்நிலை வானவர் கோனே.", "vilakam": "மூன்று குணங்களான இராஜசம் (கோபம்) தாமசம் (சமரசம்) சாத்வீகம் (சாந்தம்) ஆகியவற்றால் ஏற்படும் மாயை என்னும் இருள் நீங்க தினமும் அதிகாலையில் ஒரு நாழிகை (24 நிமிஷம்) நேரம் மூலாதாரத்திலுள்ள காற்றை இடகலை பிங்கலை நாடிகள் (பாடல் #567 இல் உள்ளபடி) வழியாக மூச்சுப்பயிற்சி செய்தால் உடம்பில் உயிரை அழியாது சிவபெருமான் வைப்பார்.", "vilakam_en": "The darkness called Maya, caused by the three qualities—Rajasic (anger), Tamasic (inertia), and Sattvic (peace)—can be dispelled by practicing breath control for one Nazhigai (24 minutes) every morning. This practice involves controlling the breath through the Ida and Pingala nadis located at the Muladhara chakra (as described in verse #567). By doing so, the life force in the body remains intact, and Lord Shiva protects the practitioner." }, { "song_number": 616, "padal": "நடலித்த நாபிக்கு நால்விரல் மேலே\nமடலித்த வாணிக் கிருவிரல் உள்ளே\nகடலித் திருந்து கருதவல் லார்கள்\nசடலத் தலைவனைத் தாமறிந் தாரே.", "vilakam": "தொப்புள் குழியிலிருந்து நாலு அங்குலத்திற்கு மேலும் நெஞ்சுக்குழிக்கு இரண்டு அங்குலத்திற்கு உள்ளேயும் உள்ள இடத்தில் மனதை வைத்துத் தியானம் செய்யக் கூடியவர்களுக்கு அங்கே இருக்கும் உடலின் தலைவனான இறைவனை அறிய முடியும்.", "vilakam_en": "Those who can place their mind in the space located four angulas above the perineum and two angulas below the heart center and meditate there can know the lord of the body who resides in that place." }, { "song_number": 617, "padal": "அறிவாயசத் தென்னு மாறா றகன்று\nசெறிவான மாயை சிதைத்தரு ளாலே\nபிறியாத பேரரு ளாயிடும் பெற்றி\nநெறியான அன்பர் நிலையறிந் தாரே.", "vilakam": "மனம் தியானத்தில் நிலைக்கப் பெற்றால் நிலையில்லாத முப்பத்தாறு தத்துவங்கள் நீங்குவதை உணரலாம். வலிமையான மாயை சிவனருளாலே அழியும். அந்த சிவபெருமானை விட்டு என்றும் பிரியாதிருக்கும் பேரருளைப் பெற்றிடலாம். தியானத்தின் வழியை விட்டு விலகாமல் செல்பவர்கள் இந்த நிலையை உணர்ந்திடலாம்.\n\nகுறிப்பு: திருமந்திரம் – பாடல் #467 ல் முப்பத்தாறு தத்துவங்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.", "vilakam_en": "When the mind attains steadiness in meditation, one can realize the dissolution of the thirty-six impermanent philosophies. The powerful illusion (maya) is destroyed only by the grace of Shiva. One can receive the great grace of never being separated from that Shiva. Those who persistently follow the path of meditation without deviation can realize this state. \n\nNote: The thirty-six philosophies are explained in Thirumandiram – Song #467." }, { "song_number": 618, "padal": "சமாதிய மாதியிற் றான்சொல்லக் கேட்டிற்\nசமாதிய மாதியிற் றானெட்டுச் சித்தி\nசமாதிய மாதியில் தங்கினோர்க் கன்றே\nசமாதிய மாதி தலைப்படுந் தானே.", "vilakam": "அட்டாங்க யோகத்தில் கூறியுள்ள இயமம் முதலான ஏழு யோகங்களையும் (பாடல் #549 இல் உள்ளபடி) முறையாக செய்வது மட்டுமன்றி அந்த யோகங்களையும் தவறாமல் கடைபிடித்தால் எட்டாவது யோகமான சமாதியும் கைகூடும். அவ்வாறு கைகூடிவிட்டால் எட்டுவித சித்திகளும் கைவரப் பெறும்.", "vilakam_en": "In Attanga Yoga, properly practicing the seven yogas including Yama (as explained in Song #549) without fail will lead to attaining the eighth yoga, Samadhi. Once Samadhi is attained, one will also gain the eight types of Siddhis (spiritual powers)." }, { "song_number": 619, "padal": "விந்துவும் நாதமும் மேருவில் ஓங்கிடில்\nசந்தியி லான சமாதியிற் கூடிடும்\nஅந்தமி லாத அறிவின் அரும்பொருள்\nசுந்தரச் சோதியுந் தோன்றிடுந் தானே.", "vilakam": "சக்தியாகிய ஒளியையும் சிவமாகிய ஒலியையும் புருவமத்தியில் ஒருமுகப்படுத்தி ஆழ்ந்து இருந்தால் அட்டாங்க யோகத்தின் இறுதியான சமாதி கைகூடும். அவ்வாறு சமாதி நிலையை அடைந்துவிட்டால் அழிவில்லாத அறிவின் உண்மைப் பொருளான சிவம் அழகிய ஜோதியாய் தமக்குள்ளேயே தோன்றிடும்.", "vilakam_en": "If one focuses deeply on the power-filled light and the Shiva-like sound in the forehead center, they will attain the final Samadhi of Attanga Yoga. Upon reaching this Samadhi state, the eternal truth of consciousness, Shiva, will manifest within as a beautiful divine light." }, { "song_number": 620, "padal": "மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு\nமன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை\nமன்மனத் துள்ளே மகிழ்ந்திருப் பார்க்கு\nமன்மனத் துள்ளே மனோலய மாமே.", "vilakam": "இறைவனையே சிந்தித்திருக்கும் மனம் எங்கிருக்கின்றதோ அங்கு பிராணவாயு நிலைத்து இருக்கும். இறைவனை சிந்திக்காத மனம் எங்கிருக்கின்றதோ அங்கு பிராணவாயு நிலைத்து இருக்காது. இறைவனையே நினைத்து பேரானந்தத்தில் இருப்பவர்களின் மனதோடு இறைவனும் கலந்து இருப்பான்.", "vilakam_en": "Wherever the mind thinks only of God, the life force (prana) remains steady there. Where the mind does not think of God, the life force does not settle. God dwells united with the minds of those who think only of Him and live in supreme bliss." }, { "song_number": 621, "padal": "விண்டலர் கூபமும் விஞ்சத் தடவியுங்\nகண்டுணர் வாகக் கருதியிருப் பார்கள்\nசெண்டு வெளியிற் செழுங்கிரி யத்திடை\nகொண்டு குதிரை குசைசெறுத் தாரே.", "vilakam": "குதிரையில் ஏறி பல இடங்களைச் சுற்றிப் பார்த்து புல்வெளியில் ஓடவிட்டு பின்பு குதிரையை பசுமையான மலையடிவாரத்தில் கட்டி வைப்பது போல மனமாகிய குதிரையை பிராணவாயுவாகிய கடிவாளத்தின் மூலம் மேல் நோக்கி செலுத்தி சுழுமுனை சேரும் இடத்தையும் அதைச் சுற்றியுள்ள தலை உச்சியையும் சுற்றிப் பார்த்துவிட்டு தலை உச்சிக்கு மேலுள்ள வெற்று வெளியில் செலுத்தி அங்கே வியாபித்திருக்கின்ற சிவபெருமானிடம் கட்டி வைத்து அதன் மூலம் இறைவனை கண்டு உணர்ந்து இறை நினைப்பிலேயே லயித்து இருப்பது சமாதி நிலை ஆகும்.", "vilakam_en": "Like riding a horse to explore many places, then tying the horse at the lush mountain foothills, the mind’s horse, the Prana, is directed upward through the nerve called the Kativala to the point where the Sushumna meets and around the crown of the head. It is then taken beyond the crown to the empty space above, where it is tied to the residing Shiva. By perceiving and realizing God through this, and merging in the divine thought, one attains the state of Samadhi." }, { "song_number": 622, "padal": "மூல நாடி முகட்டல குச்சியுள்\nநாலு வாசல் நடுவுள் இருப்பீர்காள்\nமேலை வாசல் வெளியுறக் கண்டபின்\nகாலன் வார்த்தை கனாவிலும் இல்லையே.", "vilakam": "மூலாதாரத்திருந்து தலை உச்சிக்குச் செல்லும் பாதையின் நடுவில் இருக்கும் கண், காது, மூக்கு, நாக்கு ஆகிய நான்கு உணர்வுகளும் ஒன்று கூடி இருக்கும் புருவ மத்தியில் மனதை வைத்து தலைக்கு உச்சியிலுள்ள சகஸ்ரதளத்திற்கு மேலே அண்ட வெளியில் வியாபித்திருக்கும் சிவபெருமானைத் தரிசித்தப் பிறகு இறப்பு எனும் எண்ணம் கனவிலும் இல்லை.", "vilakam_en": "Place the mind at the middle point of the path from the Muladhara (base) to the crown of the head, where the four senses—eyes, ears, nose, and tongue—converge. After perceiving Lord Shiva who resides above the crown at the Sahasrara and in the surrounding space, the very thought of death will not even arise in a dream." }, { "song_number": 623, "padal": "மண்டலம் ஐந்து வரைகளும் ஈராறு\nகொண்டிட நிற்குங் குடிகளும் ஆறெண்மர்\nகண்டிட நிற்குங் கருத்து நடுவாக\nஉண்டு நிலாவிடும் ஓடும் பதத்தையே.", "vilakam": "தியான நிலையில் பஞ்ச பூதங்களான ஐந்து மண்டலங்கள், அவைகள் இருக்கும் பன்னிரண்டு இடங்கள் ஆறு ஆதாரச் சக்கரங்களில் உள்ள அட்சரங்களை இடமாகக் கொண்ட நாற்பத்தெட்டு தேவதைகள் அனைத்தும் காணலாம். அவைகள் அனைத்திற்கும் நடுவில் ஓடும் இறைவன் மேல் மனதை ஒருமுகப்படுத்தினால் சமாதி அடையலாம்.\n\nஐந்து மண்டலங்கள்: 1. பிருத்வி மண்டலம் – நிலம் 2. அப்பு மண்டலம் – நீர் 3. ஆகாய மண்டலம் – வானம் 4. வாயு மண்டலம் – காற்று 5. தேயு மண்டலம் – நெருப்பு\n\nபன்னிரண்டு இடங்கள்: 1. மூலாதாரம் 2. சுவாதிஷ்டானம் 3. மணிப்பூரகம் 4. அநாகதம் 5. விசுத்தி 6. அண்ணம் (வாயின் உட்புற மேல்பகுதி) 7. ஆக்ஞா 8. சகஸ்ரதளம் 9. சிரசுக்கு மேலிடம் 10. துவாதசாந்தம் ஆகிய சித்தாந்த சரவெளிகளும் (அறிவிற்கு உட்பட்ட இடம்), அதற்கு மேலுள்ள பரவெளியிலுள்ள இரண்டு ஆதாரங்களான தியானபிந்துவும் ஆகும்.", "vilakam_en": "In meditation, one can see the five elements—Pancha Bhootas—and their twelve locations, the sixty-four deities residing in the six foundational chakras, and the letters associated with them. If the mind is focused upward on the supreme Lord who flows amidst all these, samadhi can be attained.\n\nThe five elements are: 1. Prithvi Mandalam – Earth, 2. Appu Mandalam – Water, 3. Aakasha Mandalam – Sky, 4. Vaayu Mandalam – Air, 5. Teju Mandalam – Fire.\n\nThe twelve locations are: 1. Muladhara, 2. Swadhisthana, 3. Manipura, 4. Anahata, 5. Vishuddhi, 6. Annam (upper inside of the throat), 7. Ajna, 8. Sahasrara, 9. Above the head, 10. Dvadashanta. These form the philosophical boundaries of consciousness, beyond which lie two foundational supports—the Dhyanabindu." }, { "song_number": 624, "padal": "பூட்டொத்து மெய்யிற் பொறிப்பட்ட வாயுவைத்\nதேட்டற்ற வந்நிலஞ் சேரும் படிவைத்து\nநாட்டத்தை மீட்டு நயனத் திருப்பார்க்குத்\nதோட்டத்து மாம்பழந் தூங்கலு மாமே.", "vilakam": "கட்டுப்பாடின்றி உடம்பின் மேலும் கீழும் செல்லும் பிராணவாயுவை வீட்டைப் பூட்டி வீட்டை தன் கட்டுப்பாட்டில் வைப்பது போல உடம்பினுள் பிராணவாயுவைக் கட்டுப்படுத்தி வைத்து ஆசைப்பட்டு வெளியே அலையும் மனதை ஒருமுகப்படுத்தி வெளியில் பார்க்கும் பார்வையை உள் நோக்கி செலுத்தி தியானத்தில் அமர்ந்திருந்தால் மாம்பழமும் இனிப்பும் போன்று இறைவனுடன் ஒன்றி சமாதியில் இருக்கலாம்.", "vilakam_en": "Just as one locks the house and keeps it under control, by restraining the Prana flowing uncontrolled throughout the body and focusing the wandering mind inward, turning the outward gaze inward and sitting in meditation, one can unite with God in Samadhi, as sweet and delightful as a mango fruit." }, { "song_number": 625, "padal": "உருவறி யும்பரி சொன்றுண்டு வானோர்\nகருவரை பற்றிக் கடைந்தமு துண்டார்\nஅருவரை யேறி அமுதுண்ண மாட்டார்\nதிருவரை யாமனந் தீர்ந்தற்ற வாறே.", "vilakam": "உயிர்களுக்கு தியானத்தின் மூலம் உண்மை நிலையை அறிந்து கொள்ளும் வாய்ப்பு திருவருளால் பரிசாக உள்ளது. இது தேவர்களுக்கும் கிடைக்காதது. குண்டலினியினை சிரசில் ஏற்றி தியானித்திருந்தால் உச்சியில் அமுதம் ஊறும். அவ்வமுதினை உண்போர்க்கு முடிவில்லாத ஆசை கொண்ட மனம் அடங்கப்பெற்று சமாதி நிலை வாய்க்கும். இந்த முறை அறியாத தேவர்கள் திருப்பாற்கடலைக் கடைந்து அமுது உண்டார்கள். தேவர்கள் பாற்கடல் கடைந்து எடுத்த அமுதை விட நாம் தியானம் செய்து உச்சியில் ஊறச்செய்யும் அமுதம் உயர்வானது.", "vilakam_en": "Living beings are blessed by divine grace with the opportunity to realize the true state through meditation. This blessing is not granted even to the gods. If one raises the Kundalini to the head and meditates, nectar will flow at the crown. Those who drink this nectar experience a mind free from endless desires and attain the state of Samadhi. The gods, unaware of this method, drink nectar obtained by crossing the ocean of milk. The nectar produced through our meditation at the crown is superior to the nectar the gods obtained by crossing the ocean." }, { "song_number": 626, "padal": "நம்பனை யாதியை நான்மறை ஓதியைச்\nசெம்பொனின் உள்ளே திகழ்கின்ற சோதியை\nஅன்பினை யாக்கி யருத்தி ஒடுக்கிப்போய்க்\nகொம்பேறிக் கும்பிட்டுக் கூட்டமிட் டாரே.", "vilakam": "நம்பிக்கைக்கு உரியவனும் முதற்பொருளாக விளங்குபவனும் நான்கு வேதங்களாலும் ஒதப்படுபவனும் தங்கத்தின் ஜொலிப்பு போல உள்ளே விளங்கும் சோதியும் ஆன சிவபெருமான் மீது அன்பு செலுத்தி ஆசைகளை அடக்கி மனதை சுழுமுனை வழியாக உச்சியில் ஏறுமாறு செய்து தலை உச்சியுள்ள சகஸ்ரதளத்தில் தியானித்திருந்தால் அங்கு இருக்கும் சிவபெருமானைக் வணங்கி அவனுடன் கலந்து இருக்கலாம்.", "vilakam_en": "The one who is worthy of trust, who manifests as the prime cause, who is praised in the four Vedas, and whose inner light shines like gold is Lord Shiva. By loving Him, controlling desires, and directing the mind through the spiral (Sushumna) to the crown chakra (Sahasrara), and meditating there, one can worship Lord Shiva present there and unite with Him." }, { "song_number": 627, "padal": "மூலத்து மேலது முற்சது ரத்தது\nகாலத் திசையிற் கலக்கின்ற சந்தினில்\nமேலைப் பிறையினில் நெற்றிநேர் நின்ற\nகோலத்தின் கோலங்கள் வெவ்வேறு கொண்டதே.", "vilakam": "மூலாதாரத்திற்கு மேலுள்ள சுவாதிஷ்டானத்தில் கும்பக முறைப்படி அடக்கி வைத்த மூச்சுக்காற்றை அதற்கு மேலுள்ள மணிப்பூரகத்தில் கலந்து பின்பு சுழுமுனை வழியே மேலே ஏற்றிச் சென்று புருவ மத்தியிலிருக்கும் ஆக்ஞா சக்கரத்துடன் சேர்த்தால் அங்கே நெற்றிக்கு நேரில் அண்டவெளி அழகிய வடிவங்களாக காட்சியளிக்கும். அந்தக் காட்சியுடன் மனதை ஒன்றி இருப்பது சமாதி நிலை ஆகும்.", "vilakam_en": "If the breath held by the kumbhaka method at the Swadhisthana chakra above the Muladhara is mixed at the Manipura chakra above it, then directed upward through the Sushumna to unite with the Ajna chakra located between the eyebrows, beautiful cosmic forms appear directly in front of the forehead. Uniting the mind with this vision is the state of Samadhi." }, { "song_number": 628, "padal": "கற்பனை யற்றுக் கனல்வழி யேசென்று\nசிற்பனை எல்லாஞ் சிருட்டித்த பேரொளிப்\nபொற்பினை நாடிப் புணர்மதி யோடுற்றுத்\nதற்பர மாகத் தகுந்தண் சமாதியே.", "vilakam": "எண்ணங்களைச் சிதறவிடாமல் மனதை ஒருமுகப்படுத்தி குண்டலினி சக்தியின் மேல் வைத்து அதை சுழுமுனை வழியே மேலேற்றிச் சென்று இந்த உலகையெல்லாம் அழகாக செதுக்கி உருவாக்கிய பேரொளியாகிய இறைவனின் பொன் போன்ற அழகிய பாதத்தை நாடி அறிவால் இறைவனை உணர்ந்து சிவமும் தாமும் இரண்டாக இல்லாமல் ஒன்றாகக் கலந்து இருத்தல் சமாதி நிலையாகும்.", "vilakam_en": "By focusing the mind steadily without letting thoughts scatter, placing it upon the Kundalini energy, and raising it upward through the Sushumna to seek the golden beautiful path of the great light who has beautifully sculpted and created this world—knowing God through wisdom and merging Shiva and Shakti inseparably—one attains the state of Samadhi." }, { "song_number": 629, "padal": "தலைப்பட் டிருந்திடத் தத்துவங் கூடும்\nவலைப்பட் டிருந்திடும் மாதுநல் லாளுங்\nகுலைப்பட் டிருந்திடுங் கோபம் அகலுந்\nதுலைப்பட் டிருந்திடந் தூங்கவல் லார்க்கே.", "vilakam": "மனதை ஒருமுகப்படுத்தி இறை நினைப்பிலேயே ஒன்றி சமாதி நிலையில் இருக்கக் கூடியவர்களுக்கு தான் யார் என்பதை உணர்ந்து தனக்குள் இருக்கும் சிவமும் உலகங்களை இயக்கிக்கொண்டிருக்கும் சக்தியும் ஒன்றாக சேர்ந்து இருக்கும். மாயை நீங்கி அருள்சக்திக்கு எதிரான காமம், கோபம், அகங்காரம் அகன்றுவிடும்.", "vilakam_en": "Those who focus their mind steadily and remain in Samadhi united in the thought of God realize who they truly are; within themselves, Shiva and the power that governs the worlds merge into one. Illusion is removed, and desires, anger, and ego that oppose divine grace dissolve." }, { "song_number": 630, "padal": "சோதித் தனிச்சுட ராய்நின்ற தேவனும்\nஆதியும் உள்நின்ற சீவனு மாகுமால்\nஆதிப் பிரமன் பெருங்கடல் வண்ணனும்\nஆதி அடிபணிந் தன்புறு வாரே.", "vilakam": "சமாதி நிலையில் நம்முடைய ஆன்மா ஈடு இணையில்லாத பேரொளியாய் விளங்கும் சிவபெருமானோடும் ஆதி சக்தியோடும் ஒன்றாகக் கலந்து விடும். அந்நிலையில் படைப்புக்கு முதல்வனான பிரமனும் கடல் போன்ற நீல நிற மேனியுடைய திருமாலும் ஆதிக்கடவுளான சிவபெருமானிடம் அடிபணிந்து அன்பு செலுத்துவதை நாம் உணரலாம்.", "vilakam_en": "In the state of Samadhi, our soul merges inseparably with the great light of Lord Shiva and the primal energy. In this condition, we can realize how Brahma, the creator, and Thirumal, the blue-skinned Lord of the ocean, bow with devotion and love before Shiva, the supreme deity." }, { "song_number": 631, "padal": "சமாதிசெய் வார்க்குத் தகும்பல யோகஞ்\nசமாதிகள் வேண்டாம் இறையுட னேகிற்\nசமாதிதா னில்லை தானவ னாகிற்\nசமாதியில் எட்டெட்டுச் சித்தியும் எய்துமே.", "vilakam": "சமாதி நிலையை அடைபவர்களுக்கு பலவிதமான யோகங்களோடு அறுபத்து நான்கு விதமான சித்திகளும் கிடைக்கும். இறைவனுடன் ஒன்றாகக் கலந்து தாமே சிவமாகிய பின் சமாதி நிலையே தேவையில்லை.", "vilakam_en": "Those who attain the state of Samadhi receive many types of yogas along with sixty-four varieties of Siddhis. Once merged with God and having become Shiva Himself, the state of Samadhi is no longer necessary." }, { "song_number": 632, "padal": "போதுகந் தேறும் புரிசடை யானடி\nயாதுகந் தாரம ராபதிக் கேசெல்வர்\nஏதுகந் தானிவன் என்றருள் செய்திடு\nமாதுகந் தாடிடு மால்விடை யோனே.", "vilakam": "காளையை வாகனமாகக் கொண்டவனும் உமையவள் காண ஆனந்த நடனம் புரிபவனும் அழகிய மலரின் நறுமனம் கமழும் படர்ந்த சடையுடையவனுமாகிய சிவபெருமானின் திருவடிகள் எப்படி இருக்கும் என்று காண விருப்பம் கொண்டு தேடுபவர்கள் அமரர்களின் தலைவனாகிய இறைவன் இருக்கும் இடத்திற்கே செல்வார்கள். அவ்வாறு வருபவர்களுக்கு என்ன வேண்டும் என்று அறிந்து அதை அருள்புரிவான் சிவபெருமான்.", "vilakam_en": "Those who desire to see the sacred feet of Lord Shiva—who rides the bull, dances the blissful Ananda Tandava with Goddess Uma, and is adorned with the fragrance of beautiful flowers—will go to the place where the Lord, the leader of sages, resides. For those who come thus, Lord Shiva knows their needs and grants them blessings." }, { "song_number": 633, "padal": "பற்றிப் பதத்தன்பு வைத்துப் பரன்புகழ்\nகற்றிருந் தாங்கே கருது மவர்கட்கு\nமுற்றெழுந் தாங்கே முனிவர் எதிர்வரத்\nதெற்றுஞ் சிவபதஞ் சேரலு மாமே.", "vilakam": "சிவத்தின் திருவடியை அன்போடு பற்றிக்கொண்டு அவரின் புகழை கற்று அறிந்துகொண்டு அவரின் சிறப்புகளிலேயே எண்ணத்தை வைத்து இருப்பவர்களை இறைவனிடம் இருக்கும் முனிவரெல்லாம் எதிர்கொண்டு அழைப்பார்கள். அவர்கள் மனத் தெளிவு பெற்று சிவபதம் அடைவார்கள்.", "vilakam_en": "All sages residing with the Lord will welcome and invite those who lovingly hold Lord Shiva's sacred feet, learn about His glory, and keep their thoughts focused on His virtues. Such people will gain mental clarity and attain the path of Shiva." }, { "song_number": 634, "padal": "வருந்தித் தவஞ்செய்து வானவர் கோவாய்த்\nதிருந்தம ராபதிச் செல்வன் இவனெனத்\nதருந்தண் முழவங் குழலும் இயம்ப\nஇருந்தின்பம் எய்துவர் ஈசன் அருளே.", "vilakam": "சிவபெருமானை நோக்கித் தன்னை வருத்தி ஆசனங்கள் வழியாகத் தவம் செய்பவர்களை தேவர்களுக்கு அரசனாக இருந்து பிறவியில்லா உலகத்திற்கு செல்வார் இவர் என குளிர்ந்த சந்தனத்தால் ஆன முரசும் புல்லாங்குழலும் இசைத்துக் கூற சிவபெருமானின் அருளால் இன்பம் பெறுவார்கள்.\n\nகருத்து: சிவனை நோக்கி ஆசனங்கள் வழியாகத் தவம் செய்தவர் பிறவியில்லா நிலையை அடைவர்.", "vilakam_en": "Those who meditate on Lord Shiva with devotion, performing austerities through yogic postures, will be kings among the gods and attain a birthless world. By the grace of Lord Shiva, who is praised by the cool sandalwood-scented drum and the sound of the flute, they will experience bliss.\n\nNote: Those who meditate on Shiva through yogic postures will attain the birthless state." }, { "song_number": 635, "padal": "செம்பொற் சிவகதி சென்றெய்துங் காலத்துக்\n\nகும்பத் தமரர் குழாம்வந் தெதிர்கொள்ள\n\nஎம்பொற் றலைவன் இவனா மெனச்சொல்ல\n\nஇன்பக் கலவி இருக்கலு மாமே.", "vilakam": "பிராணாயாம முறைப்படி தியானம் செய்தவர்கள் சிவகதி சென்று அடையும் காலத்தில் பூரண கும்பத்தோடு தேவர்கள் கூட்டமாக எதிரே வந்து பொன் போல போற்றத்தக்க எங்கள் தலைவர் இவர் என்று சொல்லி வரவேற்பார்கள். அவர்களுடன் இன்பத்தில் கலந்து இருப்பார்கள்.", "vilakam_en": "Those who meditate according to the pranayama method will, upon reaching Shiva’s abode, be welcomed by a gathering of gods holding full pots, praising them like gold and declaring, 'This is our leader.' They will joyfully mingle with the gods." }, { "song_number": 636, "padal": "சேருறு காலந் திசைநின்ற தேவர்கள்\n\nஆரிவன் என்ன அரனாம் இவனென்ன\n\nஏருறு தேவர்கள் எல்லாம் எதிர்கொள்ளக்\n\nகாருறு கண்டனை மெய்கண்ட வாறே.", "vilakam": "பிரத்தியாகாரம் மூலம் வெளியே செல்லும் மனதை உள்ளே நிறுத்தித் தியானம் செய்தவர்கள் இறைவனின் திருவடி சேரும் காலத்தில் சிவரூபம் பெற்று விளங்குவதால் எட்டுத் திசைகளுக்கும் அதிபதியாக நிற்கும் தேவர்கள் யாரிவர் என்று ஆச்சரியத்துடன் எதிர்கொண்டு வரவேற்று அவரின் உடலில் நீலகண்டனாகிய சிவபெருமானை தேவர்கள் தரிசிப்பார்கள்.", "vilakam_en": "Those who meditate by controlling the outgoing mind through Pratyahara will, upon reaching the divine feet of God, take on the form of Shiva and shine brightly. The gods, amazed, will welcome them as rulers of the eight directions and behold Lord Shiva as Neelakantan within their body." }, { "song_number": 637, "padal": "நல்வழி நாடி நமன்வழி மாற்றிடுஞ்\nசொல்வழி யாளர் சுருங்காப் பெருங்கொடை\nஇல்வழி யாளர் இமையவர் எண்டிசைப்\nபல்வழி எய்தினும் பார்வழி யாகுமே.", "vilakam": "நல் வழியாகிய தாரணை மூலம் அடங்கிய மனதை உள்ளே இருக்கும் இறைவன் மீது ஒருநிலைபெறச் செய்தவர்களுக்கு மரணத்திற்குச் செல்லும் வழியை மாற்றிவிடும். இறைவனால் கொடுக்கப்படும் ஞானமாகிய குறைவில்லாத பெரும் கொடையை அடைந்தவர்கள் இறைவனை அடையக்கூடிய அனைத்து வழிகளிலும் இந்த உலகத்திலிருந்தே செல்லக்கூடியவர்கள் ஆவார்கள்.", "vilakam_en": "Those who have attained a steady mind focused on the inner God through the virtuous practice of Dharana can change the path leading to death. Those who have received the infinite great gift of wisdom granted by God are able to traverse all paths that lead to God, even while still in this world." }, { "song_number": 638, "padal": "தூங்கவல் லார்க்குந் துணையேழ் புவனமும்\nவாங்கவல் லார்க்கும் வலிசெய்து நின்றிட்டுத்\nதேங்கவல் லார்க்குந் திளைக்கும் அமுதமுந்\nதாங்கவல் லார்க்குந் தன்னிட மாமே.", "vilakam": "ஏழு உலகங்களையும் தாங்கக்கூடிய வலிமையைக் கொண்டு நிற்பவனும், இறைவனை மனதில் வைத்து தியானம் செய்பவர்களுக்குள்ளே அமுதமாய் லயித்திருப்பவனுமாகிய இறைவன் சமாதி நிலையை அடைந்தவர்களைத் தனது இருப்பிடமாகக் கொண்டு அவர்களுக்குத் துணையாக இருக்கின்றான்.", "vilakam_en": "The Lord, who possesses the strength to sustain the seven worlds and who dwells as nectar within the hearts of those who meditate on Him, takes the state of Samadhi as His abode and supports those who have attained that supreme state." }, { "song_number": 639, "padal": "காரிய மான உபாதியைத் தான்கடந்\nதாரிய காரணம் ஏழுந்தன் பாலுற\nவாரிய காரண மாயத் தவத்திடைத்\nதாரியல் தற்பரஞ் சேர்தல் சமாதியே.", "vilakam": "இந்த உலகத்தில் துன்பம் தரக்கூடிய காரணங்களாகிய தனு, கரணம், புவனம், போகம் ஆகிய பந்தங்களைக் கடந்து சென்று ஏழுவகையான சிவ தத்துவங்களையும் தன் அறிவாலேயே உணர்ந்து பெற்று ஜென்ம ஜென்மமாய்த் தொடர்ந்து வரும் மாயையைத் தவத்தால் வெற்றி பெற்று இறைவனின் திருவடியைச் சேருதல் சமாதியால் பெறும் பயனாகும்.\n\nநான்கு வகை பந்தங்கள்:\n\nதனு – தன் உடலின் மேல் இருக்கும் பற்று\nகரணம் – ஆசைப்படும் மனது\nபுவனம் – உலகப் பற்று\nபோகம் – உலகப் பொருள்களை அனுபவித்தல்\n\nஏழுவகை சிவ தத்துவங்கள்:\n\nஇறைமை – இறைவனாக தன்னை உணர்தல்\nமுற்றறிவு உடைமை – அனைத்தையும் அறிந்தவனாக இருத்தல்\nஎங்கும் தானாதல் – எங்கும் வியாபித்து இருத்தல்\nஇயல்பாகவே மாயையின்மை – மாயையே இல்லாது இருத்தல்\nவரம்பில்லாத ஆற்றல் – எல்லையில்லா சக்தியைக் கொண்டிருத்தல்\nதன்வயத்தன் ஆதல் – எதனாலும் கட்டுப்படாமல் தன் கட்டுப்பாட்டிலேயே இருத்தல்\nஒன்றியுணர்தல் – அனைத்திலும் ஒன்றி இருப்பதாக உணர்தல்\n\nகருத்து: சமாதி நிலையை அடைந்தால் அனைத்துவித துன்பங்கள் மற்றும் மாயையிலிருந்து விடுதலை பெற்று சிவ தத்துவங்களை உணரலாம்.", "vilakam_en": "In this world, by overcoming the bonds that cause suffering—body, mind, world, and enjoyment—and through one’s own knowledge understanding the sevenfold Shiva principles, one can, by penance, conquer the continuous cycle of birth and death caused by illusion, and attain the feet of the Divine through Samadhi. \n\nThe four types of bonds are:\n\nDanu – Attachment to one’s own body\nKaranam – Desiring mind\nBhuvanam – Worldly attachment\nBhokam – Enjoyment of worldly things\n\nThe sevenfold Shiva principles are:\n\nIraimai – Realizing oneself as the Divine\nMutrarivu Udaiyam – Being all-knowing\nEngum Thanadal – Permeating everywhere\nIyalpagaave Maayaiyinmai – Natural absence of illusion\nVarambiladha Aatral – Possessing limitless power\nThanvayathan Aathal – Remaining under one’s own control without being controlled by anything\nOndriunarthal – Realizing unity in all things\n\nNote: Upon attaining Samadhi, all kinds of suffering and illusion are transcended, and the Shiva principles can be truly realized." }, { "song_number": 640, "padal": "பணிந்தெண் திசையும் பரமனை நாடித்\n\nதுணிந்தெண் திசையுந் தொழுதெம் பிரானை\n\nஅணிந்தெண் திசையினும் அட்டமா சித்தி\n\nதணிந்தெண் திசைசென்று தாபித்த வாறே.", "vilakam": "சிவபெருமானைத் தேடி எட்டுத் திசைகளிலும் பணிந்து அவனே பரம் பொருள் என்று அறிந்ததால் தைரியமுடன் எட்டுத் திசையிலும் சிவத்தை வணங்க அதனால் உள்ளம் குளிர்ந்த சிவபெருமான் தன் அருளால் எட்டு சித்திகளும் அவருக்குள் நிலைபெறச் செய்வார்.\n\nகருத்து: எதையும் சிவமாய்ப் பணிந்து வணங்குபவர்களுக்கு சிவபெருமான் எட்டுவித சித்திகளும் கொடுத்து அருள்வான்.", "vilakam_en": "Seeking Lord Shiva, serving Him in all eight directions, and knowing Him as the supreme reality, one boldly worships Shiva in all eight directions. As a result, the heart becomes cool, and by His grace, Lord Shiva bestows the eight siddhis within the devotee.\n\nNote: Those who worship everything as Shiva and serve Him with devotion are granted the eight types of siddhis by Lord Shiva." }, { "song_number": 641, "padal": "பரிசறி வானவர் பண்பன் அடியெனத்\nதுரிசற நாடியே தூவெளி கண்டேன்\nஅரிய தெனக்கில்லை அட்டமா சித்தி\nபெரிதருள் செய்து பிறப்பறுத் தானே.", "vilakam": "தேவர்கள் முதலான அனைத்து உயிர்களின் தன்மையையும் அறிந்து கொள்கின்ற பண்பாளனாகிய இறைவனின் திருவடியை தூய எண்ணத்துடன் சரண் அடைந்து தூய்மையான பரவெளியைக் (அண்ட சராசரங்கள்) கண்டேன். ஆதலால் இறைவன் தனது பேரருளால் அரிதான எட்டுவித சித்திகளையும் எனக்கு வழங்கி எனது பிறப்பை அறுத்து அருளினான்.\n\nகருத்து: சிவபெருமானின் திருவடியை சரணடைந்தால் எட்டுவித சித்திகளும் பெற்று பிறவி இல்லாத நிலையை அடையலாம்.", "vilakam_en": "I sought refuge in the divine feet of the Lord, the master who understands the nature of all living beings, with a pure mind, and beheld the pure vast space (cosmic realms). Therefore, by His great grace, the Lord granted me the rare eight types of siddhis and blessed me by ending my cycle of birth.\n\nNote: By taking refuge in Lord Shiva's divine feet, one can obtain the eight siddhis and attain a state beyond rebirth." }, { "song_number": 642, "padal": "குரவன் அருளிற் குறிவழி மூலப்\nபரையின் மணமிகு சங்கட்டம் பார்த்துத்\nதெரிதரு சாம்பவி கேசரி சேரப்\nபெரிய சிவகதி பேறெட்டாஞ் சித்தியே.", "vilakam": "குருவின் அருளினால் அவர் காட்டிய வழியிலேயே மூலாதார அக்கினியை ஏழாவது சக்கரமான சகஸ்ரதளத்திற்கு கொண்டு சேர்ப்பதற்கு தனக்குள்ளேயே அலையும் எண்ணங்களையும் (கேசரி யோகம்) வெளியே அலையும் எண்ணங்களையும் (சாம்பவி யோகம்) கடினத்துடன் ஒன்றாகச் சேர்த்து ஒருமுகப்படுத்தி வைத்தால் சிவகதிப் பேறான எட்டுவித சித்திகளில் எட்டாவது சித்தியான வசித்துவம் (அனைத்தையும் வசியப்படுத்துதல்) கைவரப் பெறும்.\n\nகருத்து: குரு அருளிய வழியில் மனதை ஒருமுகப்படுத்தி தியானித்தால் எட்டாவது சித்தியான அனைத்தையும் வசியப்படுத்தும் நிலையை அடையலாம்.", "vilakam_en": "By the grace of the Guru, following the path shown by him, if one intensely unifies the restless thoughts within (Kesari Yoga) and the wandering thoughts outside (Saambhavi Yoga) into a single focus to raise the Muladhara fire to the seventh chakra, Sahasrara, then among the eight siddhis of the Shiva path, the eighth siddhi, Vasitthuvam (the power to control all), will be attained.\n\nNote: By focusing the mind in meditation following the Guru's grace, one can achieve the eighth siddhi—the ability to command all things." }, { "song_number": 643, "padal": "காயாதி பூதங் கலைகால மாயையில்\nஆயா தகல அறிவொன் றனாதியே\nஓயாப் பதியதன் உண்மையைக் கூடினால்\nவீயாப் பரகாயம் மேவலு மாமே.", "vilakam": "ஆகாயம், நிலம், நீர், காற்று, நெருப்பு ஆகிய பஞ்ச பூதங்களிலும் அறுபத்து நான்கு கலைகள், மூன்று காலங்கள் (இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம்) மாயை ஆகிய தத்துவங்களிலும் சேராமல் விலகி ஒன்றுபட்டு இருக்கும் அறிவை ஆத்மாவிற்கும் பரமாத்மாவிற்கும் இருக்கும் தொடர்பை உண்மையென அறிந்து அதிலேயே கலந்திருந்தால் என்றும் அழியாத உடலை அடையலாம்.\n\nகருத்து: நிலையில்லாத உலகை விட்டு நிலையான இறைவனோடு கலந்திருந்தால் என்றும் அழியாத உடலை அடையலாம்.", "vilakam_en": "If one transcends the five elements—sky, earth, water, air, fire—as well as the sixty-four arts, the three times (past, present, future), and illusion, and attains a unified consciousness that truly understands the connection between the soul (Atma) and the supreme soul (Paramatma), then by merging in that truth, one can attain an immortal body.\n\nNote: By leaving the transient world and uniting with the eternal divine, one can achieve an imperishable body." }, { "song_number": 644, "padal": "இருபதி னாயிரத் தெண்ணூறு பேதம்\nமருவிய கன்ம மாமந்த யோகந்\nதருமிவை காய உழைப்பாகுந் தானே\nஅருமிரு நான்காய் அட்டமா சித்திக்கே.", "vilakam": "விருப்பத்தோடு மனதை ஒருமுகப்படுத்தி செய்யும் செயல்கள் கர்ம யோகமாகும். அது இருபதாயிரத்து எண்ணூறு பிரிவுகளைக் கொண்டது. கர்ம யோகம் உடம்பினால் செய்யப்படும் அருமையான உழைப்பினால் நிறைவு பெறும். அவ்வாறு நிறைவு பெறுவதால் பெறக்கூடிய சித்திகள் எட்டுவித சித்திகளாகும்.\n\nகருத்து: கர்ம யோகத்தை மனதை ஒருமுகப்படுத்தி உடல் உழைப்பால் செய்து முடித்தவர்களுக்கு எட்டுவித சித்திகளும் கிடைக்கும்.", "vilakam_en": "Actions performed with a focused mind willingly are called Karma Yoga. It consists of twenty-two branches. Karma Yoga is accomplished through excellent physical effort. The accomplishments gained by completing it are known as the eight types of siddhis.\n\nNote: Those who perform Karma Yoga with a focused mind and physical effort will attain the eight types of siddhis." }, { "song_number": 645, "padal": "மதிதனில் ஈராறாய் மன்னுங் கலையின்\nஉதய மதுநா லொழியவோ ரெட்டுப்\nபதியும்ஈ ராறாண்டு பற்றறப் பார்க்கில்\nதிதமான ஈராறு சித்திக ளாமே.", "vilakam": "சந்திர நாடியாகிய இடைகலையில் (இடது நாசி) பன்னிரண்டு அங்குல அளவாய் இழுக்கப் பெறும் மூச்சுக்காற்றில் சூரிய நாடியாகிய பிங்கலை (வலது நாசி) வழியாக நாலங்குல அளவு மூச்சுக்காற்று வெளியே போக மீதியுள்ள எட்டங்குல அளவு மூச்சுக்காற்று உள்ளே தங்கும். இதனைப் பன்னிரண்டு ஆண்டுகள் உலகப்பற்றை விட்டுக் கவனித்து வந்தால் உறுதியாக அட்டமா சித்திகளை அடையலாம்.\n\nகருத்து: பன்னிரண்டு ஆண்டுகள் முறைப்படி பிராணாயாமம் செய்து வந்தால் எட்டுவித சித்திகளையும் உறுதியாக அடையலாம்.", "vilakam_en": "In the Ida Nadi (left nostril) known as the moon channel, breath is drawn in for twelve angulas (units). Through the Pingala Nadi (right nostril) known as the sun channel, breath equivalent to four angulas is exhaled, and the remaining eight angulas of breath stay inside. If one practices this diligently for twelve years, they can surely attain the Attama siddhis (eight supreme powers).\n\nNote: By practicing pranayama properly for twelve years, one can firmly attain the eight siddhis." }, { "song_number": 646, "padal": "நாடும் பிணியாகு நஞ்சனஞ் சூழ்ந்தக்கால்\nநீடுங் கலைகல்வி நீள்மேதை கூர்ஞானம்\nபீடொன்றி னால்வாயாச் சித்திபே தத்தின்\nநீடுந் துரங்கேட்டல் நீண்முடி வீராறே.", "vilakam": "எண்ணிலடங்காத நோய்கள் போன்ற பிறப்புகளில் நம்மைச் சூழ்ந்து பற்றிக் கொண்டிருக்கும் உறவுகளும், நிலைத்திருக்கும் கலை உணர்வுகளும், அந்த உணர்வுகளைத் தரும் கல்விகளும், அந்தக் கல்விகளால் வரும் தெளிவும், அந்தத் தெளிவால் பெறப்படும் நுட்பமான உணர்வுகளும், அந்த உணர்வினால் அடையும் பெருமைகளாலும் எட்டுவித சித்திகளும் கிடைப்பதில்லை. பன்னிரண்டு ஆண்டுகள் ஆத்ம குரு கூறிய வழியைக் கேட்டு அதன்படி பொறுமையுடன் நடந்துவந்தால் எட்டுவித சித்திகளும் கிடைக்கும்.\n\nகருத்து: உலகத்தில் கிடைக்கும் எதனாலும் சித்திகள் கிடைப்பதில்லை. பன்னிரண்டு ஆண்டுகள் குரு கூறிய வழியைக் கடைபிடித்தால் எட்டுவித சித்திகளும் கிடைக்கும்.", "vilakam_en": "In births plagued by countless diseases, surrounded by attachments, persistent arts, the knowledge that gives those feelings, the clarity gained from that knowledge, the subtle perceptions gained from that clarity, and the greatness achieved through those perceptions, the eight siddhis cannot be attained. However, if one patiently follows the path taught by the Atma Guru for twelve years, the eight siddhis will be attained.\n\nNote: No siddhis can be gained from anything in the world. Only by following the Guru's path for twelve years can the eight siddhis be attained." }, { "song_number": 647, "padal": "மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)\n\nஏழா னதிற்சண்ட வாயுவின் வேகியாந்\nதாழா நடைபல யோசனை சார்ந்திடுஞ்\nசூழான ஓரெட்டில் தோன்றா நரைதிரை\nதாழான ஒன்பதிற் றான்பர காயமே.", "vilakam": "பாடல் #644 #645 #646 இல் உள்ள முறைகளில் ஏதேனும் ஒன்றை கடைபிடித்தால் ஏழாவது ஆண்டில் சூறாவளிக் காற்றைவிட வேகமாக செல்லக்கூடிய தன்மையும் உடல் தளராது நெடுந்தூரம் நடந்து செல்லக்கூடிய வலிமையும் கிடைக்கும். எட்டாவது ஆண்டில் வயோதிகத்தால் வரும் நரைமுடியும் உடல் சுருக்கங்களும் மறைந்து இளமை கிடைக்கும். ஒன்பதாவது ஆண்டில் என்றும் அழியாத உடல் கிடைக்கும்.\n\nகருத்து: குரு அருளிய யோக முறையைக் கடைபிடித்தால் 7,8,9 ஆம் ஆண்டுகளில் வேகமும் வலிமையும் இளமையும் அழியாத உடலும் கிடைக்கும்.", "vilakam_en": "By following any one of the methods described in songs #644, #645, or #646, in the seventh year, one will gain the ability to move faster than a storm wind and the strength to walk long distances without the body becoming weak. In the eighth year, aging-related wrinkles and body contractions disappear, and youthfulness is attained. In the ninth year, one attains an imperishable body.\n\nNote: By following the yoga methods taught by the Guru, speed, strength, youthfulness, and an imperishable body are attained in the 7th, 8th, and 9th years respectively." }, { "song_number": 648, "padal": "ஈரைந்திற் பூரித்துத் தியான உருத்திரன்\nஏர்வொன்று பன்னொன்றில் ஈராறாம் எண்சித்தி\nசீரொன்று மேலேழ் கீழேழ் புவிச்சென்\nஏரொன்று வியாபியாய் நிற்றல்ஈ ராறே.", "vilakam": "பாடல் #644 #645 #646 ல் உள்ள முறைகளில் ஏதேனும் ஒன்றை கடைபிடித்து வந்தால் பத்தாவது ஆண்டில் தியானத்திலிருக்கும் சிவ நிலையை அடையலாம். பதினோராவது ஆண்டில் எட்டுவித சித்திகளும் கிடைக்கும். பன்னிரண்டாவது ஆண்டில் மேலிருக்கும் ஏழு உலகங்களுக்கும் கீழிருக்கும் ஏழு உலகங்களுக்கும் சென்று அங்கிங்கெனாதபடி எங்கும் பரந்து இருக்கும் நிலையை அடையலாம்.\n\nகருத்து: குரு அருளிய யோக முறையைக் கடைபிடித்தால் 10,11,12 ஆம் ஆண்டுகளில் சிவ நிலையும் எட்டுவித சித்திகளையும் எங்கும் பரந்து இருக்கும் நிலையையும் அடையலாம்.", "vilakam_en": "By consistently following any one of the methods described in songs #644, #645, or #646, one can attain the state of Shiva in meditation by the tenth year. In the eleventh year, one will gain the eightfold siddhis (supernatural powers). By the twelfth year, one attains the state of omnipresence, spreading across the seven upper and seven lower worlds without being bound to any place.\n\nNote: By following the yoga methods taught by the Guru, one can achieve Shiva's state, the eight siddhis, and omnipresence in the 10th, 11th, and 12th years respectively." }, { "song_number": 649, "padal": "தானே அணுவுஞ் சகத்துத்தன் நோன்மையும்\nமானாக் கனமும் பரகாயத் தேகமுந்\nதானாவ தும்பர காயஞ்சேர் தன்மையும்\nஆனாத வுண்மையும் வியாபியு மாம்எட்டே.", "vilakam": "தானே அணிமாவும் உலகமாகிய மகிமாவும் கனமுடையதாகிய கரிமாவும் எல்லவற்றிலும் அடங்கிய ஆகாயமாகிய லகிமாவும் அழியா உடலையடைதலாகிய பிரப்தியும் தானே ஆதலாகிய பரகாயத்தை அடையும் பிராகாமியமும் அமையாத உண்மையாகிய ஈசத்துவமும் வியாப்பியமாகிய வசித்துவமும் ஆகியவை அட்டமா சித்திகள் ஆகும்.\n\nஎட்டுவித சித்திகள்:\n\nகருத்து: எட்டுவித சித்திகளாவன அணிமா, மகிமா, கரிமா, இலகிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம்.", "vilakam_en": "Anima (the ability to become minute), Mahima (the ability to become vast like the universe), Garima (the power of heaviness), Laghima (the power of lightness or levitation), Prapti (the ability to reach anywhere), Prakamya (the power of realization or omnipresence), Isatvam (the quality of being the lord or divine), and Vasitvam (the power of control or mastery) are the eight great siddhis (spiritual powers).\n\nNote: The eight siddhis are Anima, Mahima, Garima, Laghima, Prapti, Prakamya, Isatvam, and Vasitvam." }, { "song_number": 650, "padal": "தாங்கிய தன்மையுந் தானணுப் பல்லுயிர்\nவாங்கிய காலத்து மற்றோர் குறையில்லை\nயாங்கே எழுந்தோம் அவற்றுள் எழுந்துமிக்\nகோங்கி வரமுத்தி முந்திய வாறே.", "vilakam": "சிவயோகியாகி அணு அளவு மாறினாலும் பல உயிர்களைத் தாங்கும் தன்மையைப் பெறுவார். அவ்வுயிர்களைத் தமக்குள் கலந்து இருந்த போதும் தமக்குள் எந்தவித மாற்றமும் இல்லை. தமக்குள் இருக்கும் அவ்வுயிர்கள் ஓம் எனும் நாதமாக எழுந்து உச்சிக்கு சென்று முக்தி பெறுகின்றன.\n\nகருத்து: அட்டமா சித்தியடைந்தவர் எவ்வுயிரையும் தமக்குள் எடுத்து முக்தி பெறச் செய்வார்.", "vilakam_en": "By becoming a Sivayogi, even if the body changes to the atomic level, one attains the capacity to hold many lives within. Though these lives merge within him, no change occurs in himself. The lives within rise as the sound 'Om', ascend to the crown (head), and attain liberation (mukti).\n\nNote: One who attains the Attama Siddhi can absorb many lives within and help them achieve liberation." }, { "song_number": 651, "padal": "முந்திய முந்நூற் றறுபது காலமும்\nவந்தது நாழிகை வான்முத லாயிடச்\nசிந்தைசெய் மண்முதல் தேர்ந்தறி வார்வல\nருந்தியுள் நின்று வுதித்தெழு மாறே.", "vilakam": "வானம் முதல் பூமி வரையுள்ள அனைத்திலும் சிவனையே கண்டு சிந்தித்து ஆராய்ந்து அறிந்து கொள்பவர்களுக்கு 360 நாள்களில் தொப்புள் குழிக்கு அருகில் இருக்கும் மணிப்பூரக சக்கரத்தில் ஒளி எழும்பி மேலெழுந்து செல்லும்.\n\nகருத்து: பார்ப்பவைகள் அனைத்திலும் சிவனையே கண்டு சிந்திப்பவர்களுக்கு 360 நாட்களில் மணிப்பூரகச் சக்கரத்திலிருந்து ஒளி எழும்பும்.", "vilakam_en": "Those who perceive, meditate upon, investigate, and understand Lord Shiva in everything from the sky to the earth will, within 360 days, experience light rising and ascending from the Manipura chakra located near the throat cavity.\n\nNote: For those who see Shiva in all things and meditate upon Him, light will rise from the Manipura chakra within 360 days." }, { "song_number": 652, "padal": "சித்தந் திரிந்து சிவமய மாகியே\nமுத்தந் தெரிந்துற்ற மோனர் சிவமுத்தர்\nசுத்தம் பெறலாம் ஐந்தில் தொடக்கற்றோர்\nசித்தம் பரத்தில் திருநடத் தோரே.", "vilakam": "ஐம்புலன்களாகிய பார்த்தல், கேட்டல், சுவைத்தல், நுகர்தல், உணர்தல் ஆகியவற்றில் செல்லும் எண்ணங்கள் எல்லாம் சிவமாய் உணர்ந்து முக்தி நிலையை அறிந்து அதிலேயே லயித்து இருப்பவர்கள் சிவ முக்தர்கள் ஆவார்கள். இவர்கள் ஐந்து புலன்களின் உணர்விலும் தொடர்பில்லாதவர்கள் ஆகையால் தூய நிலையை அடைந்து அவர்களின் எண்ணம் சிவனோடு ஒன்றுபட்டு ஆனந்த நிலையில் நடனம் ஆடுவார்கள்.\n\nகருத்து: சிவயோகியர் உடம்பை மறந்து மேல் நிலையில் இன்புற்று இருப்பார்கள்.", "vilakam_en": "Those who perceive all thoughts passing through the five senses—seeing, hearing, tasting, touching, and feeling—as Shiva, realize the state of liberation (mukti) and merge into it. Such beings are called Shiva-muktas (liberated in Shiva). They are detached from the sensations of the five senses and having attained a pure state, their mind becomes one with Shiva, and they dance in bliss.\n\nNote: Shiva yogis transcend the body and dwell in the supreme blissful state." }, { "song_number": 653, "padal": "ஒத்தஇவ் வொன்பது வாயுவும் ஒத்தன\nஒத்தஇவ் வொன்பதின் மிக்க தனஞ்செயன்\nஒத்தஇவ் வொன்பதில் ஒக்க இருந்திட\nஒத்த வுடலும் உயிரும் இருந்ததே.", "vilakam": "பிராணன், அபானன், வியானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், உதானன் ஆகிய ஒன்பது வாயுக்களும், இடகலை, பிங்கலை, சிகுவை, புருடன், காந்தாரி, அத்தி, அலம்புடை, சங்கினி, குகு ஆகிய ஒன்பது நாடிகளில் (நரம்புகளில்) அதிகமாகாமலும் குறையாமலும் சரிசமமாக இருந்தால் பத்தாவது நாடியான சுழுமுனை வழியே செல்லும் பத்தாவது வாயுவான தனஞ்செயன் என்னும் வாயு உடலோடும் உயிரோடும் ஒன்றுபட்டு பிரியாமல் இருக்கும்.\n\nகருத்து: உடலிலுள்ள ஒன்பது வாயுக்களும் சமமாக இருந்தால் உடலை விட்டு உயிர் பிரியாது இருக்கும்.", "vilakam_en": "The nine vital airs—Pranan, Abanan, Vyanan, Samanan, Nagan, Kurman, Grugaran, Devadattan, and Udanan—and the nine energy channels (nadis)—Idakali, Pingali, Siguvai, Purudan, Kanthari, Aththi, Alambudai, Sangini, and Gugu—when maintained in perfect balance without excess or deficiency, allow the tenth vital air, called Thananjeyan, flowing through the tenth channel, the Sushumna, to unite inseparably with the body and soul.\n\nNote: When the nine vital airs in the body are balanced, the soul does not separate from the body." }, { "song_number": 654, "padal": "இருக்குந் தனஞ்செயன் ஒன்பது காலில்\nஇருக்கும் இருநூற் றிருபத்து நான்காய்\nஇருக்கு முடலி லிருந்தில வாகில்\nஇருக்கும் உடலது வீங்கி வெடித்ததே.", "vilakam": "தனஞ்செயன் என்னும் வாயு உடம்பில் இருக்கும் ஒன்பது வாயுக்களோடு கலந்து உடலில் உள்ள இருநூற்று இருபத்து நான்கு நரம்புகள் வழியே சென்று கொண்டு இருக்கும். அவ்வாறு செல்லாமல் இருந்தால் உடம்பு வீங்கி வெடித்துவிடும்.\n\nகருத்து: தனஞ்செயன் என்னும் வாயு உடலில் உள்ளவரை உடல் அழியாது.", "vilakam_en": "The vital air called Thananjeyan merges with the nine vital airs in the body and travels through the 224 nerves present within the body. If this flow is obstructed, the body will swell and burst.\n\nNote: As long as the vital air Thananjeyan resides in the body, the body does not perish." }, { "song_number": 655, "padal": "வீங்குங் கழலை சிரங்கொடு குட்டமும்\nவீங்கும் வியாதிகள் சோகை பலவதாய்\nவீங்கிய வாதமுங் கூனும் முடமதாய்\nவீங்கு வியாதிகள் கண்ணில் மருவியே.", "vilakam": "வயிற்றுக் கட்டி அல்லது வீக்கம், சிரங்கு, குஷ்டம், உறுப்புகள் வீக்கம், பலவகை சோகைகள், வாதம் (நரம்பு தளர்ச்சி) கூன், முடம் (ஊனம்) கண் நோய்கள் ஆகிய வியாதிகள் உடலிலுள்ள தனஞ்செயன் என்னும் வாயு குறைவதால் உருவாகும்.\n\nகருத்து: உடலுக்கு வரும் வியாதிகளில் பல தனஞ்செயன் என்னும் வாயு குறைவதால் வருகின்றன.", "vilakam_en": "Diseases such as abdominal swelling or bloating, scabies, leprosy, joint swelling, various aches, vatha (nerve weakness), hunched posture, emaciation, and eye diseases arise due to a deficiency of the vital air called Thananjeyan in the body.\n\nNote: Many ailments in the body are caused by a lack of the vital air Thananjeyan." }, { "song_number": 656, "padal": "கண்ணில் வியாதி யுரோகந் தனஞ்செயன்\nகண்ணிலிவ் வாணிகள் காச மவனல்லன்\nகண்ணினிற் கூர்மன் கலந்தில னாதலாற்\nகண்ணினிற் சோதி கலந்ததும் இல்லையே.", "vilakam": "கண்ணில் வியாதிகளைக் கொடுக்கும் தனஞ்செயன் கண்ணில் பூ விழுதல் (கருவிழியில் வெள்ளை நிறம் தோன்றி கண் பார்வை போதல்) காசம் (கண்ணில் சீழ் வழிதல்) ஆகியவற்றிற்கு காரணம் இல்லை. கண்ணிலிருந்து ஒளியை மூளைக்குக் கொண்டு செல்லும் கூர்மன் என்னும் வாயு குறைபாட்டால் இவ்விரு வியாதிகள் வருகின்றன. இந்த வாயுவின் குறைபாட்டால் பார்வையில் ஒளி இல்லாமலும் ஆகும்.\n\nகருத்து: கூர்மன் என்னும் வாயு குறைபாட்டால் கண்ணில் பூ விழுதல் காசம் ஆகிய இரு நோய்கள் உண்டாகும்.", "vilakam_en": "The vital air called Thananjeyan does not cause eye diseases such as cataracts (whitish opacity on the cornea causing poor vision) and glaucoma (increased fluid pressure in the eye). These two diseases occur due to a deficiency of the vital air called Koorman, which carries light from the eye to the brain. This deficiency results in the absence of light perception in vision.\n\nNote: Deficiency of the vital air Koorman causes cataracts and glaucoma." }, { "song_number": 657, "padal": "நாடியின் ஓசை நயனம் இருதயந்\nதூடி யளவுஞ் சுடர்விடு சோதியைத்\nதேவருள் ஈசன் திருமால் பிரமனும்\nஓவற நின்றங் குணர்ந்திருந் தாரே.", "vilakam": "மூலாதாரத்திலிருந்து தலை உச்சிக்கு செல்லும் குண்டலினி சக்தியின் ஜோதியை அகக் கண்ணால் கண்டு அந்த ஜோதியின் ஒளிர்விடும் ஓசையை இதயத்துடிப்பால் உணர்ந்து இருப்பவர்களை தேவர்களுள் முதல்வர்களான உருத்ரன், திருமால், பிரம்மன் ஆகிய மூவரும் இடைவிடாது உள்ளுக்குள் உணர்ந்திருப்பார்கள்.\n\nகருத்து: குண்டலியின் ஜோதியையும் அதன் ஓசையும் தமக்குள் உணர்ந்தவர்களை முப்பெரும் தேவர்களும் உணர்ந்து இருப்பார்கள்.", "vilakam_en": "Those who can see the light of the Kundalini energy that travels from the Muladhara (root chakra) to the crown of the head with the inner eye, and sense the vibration of that light with their heartbeat, are continuously recognized and perceived by the three great gods—Rudra, Vishnu (Thirumal), and Brahma—within themselves.\n\nNote: The three great gods acknowledge those who perceive the light and vibration of the Kundalini within themselves." }, { "song_number": 658, "padal": "ஒன்பது வாசல் உடையதோர் பிண்டத்துள்\nஒன்பது நாடி யுடையதோ ரோரிடம்\nஒன்பது நாடி ஒருங்கவல் லார்கட்கு\nஒன்பது வாசல் உலைநல மாமே.", "vilakam": "ஒன்பது துவாரங்களைக் (இரண்டு கண், இரண்டு காது, வாய், மூக்கு, மலத் துவாரம், சிறுநீர்த் துவாரம்) கொண்ட மனித உடலில் இருக்கும் ஒன்பது வித நாடிகளை (இடகலை, பிங்கலை, சிகுவை, புருடன், காந்தாரி, அத்தி, அலம்புடை, சங்கினி, குகு) புருவ மத்தியில் ஒருமுகப்படுத்தி தவம் செய்யக்கூடியவர்களின் உடலுக்கு என்றும் அழிவில்லை.\n\nகருத்து: ஒன்பது நாடிகளையும் ஒருமுகப்படுத்தி தவம் செய்பவர்களுக்கு உடல் என்றும் அழியாமல் இருக்கும்.", "vilakam_en": "Those who are able to focus all nine vital nerve channels (Ida, Pingala, Sushumna, Purudan, Gandhari, Athi, Alambudai, Sangini, and Kuhu) — which correspond to the nine openings of the human body (two eyes, two ears, mouth, nose, anus, and urinary opening) — at the center of the forehead and meditate deeply, will have a body that never decays.\n\nNote: The body of one who concentrates all nine energy channels in meditation remains imperishable." }, { "song_number": 659, "padal": "ஓங்கிய அங்கிக்கீழ் ஒண்சுழு னைச்செல்ல\nவாங்கி இரவி மதிவழி ஓடிடத்\nதாங்கி உலகங்கள் ஏழுந் தரித்திட\nஆங்கது சொன்னோம் அருள்வழி யோர்க்கே.", "vilakam": "மூலாதாரத்தில் உள்ள குண்டலினி அக்கினியை எழுப்பிச் சுழுமுனை நாடி வழியே தலை உச்சிக்கு இழுத்து பிராணாயம முறைப்படி சூரியகலை (வலது நாசி), சந்திரகலை (இடது நாசி) வழியாக உள்ளிழுக்கும் மூச்சுக்காற்றால் தாங்கி ஏழு உலகங்களிலும் வியாபித்து இருக்கும் ஆற்றலை அடையலாம். இம்முறையை சிவனது அருள்வழியில் செல்பவர்களுக்கு யாம் கூறினோம்.\n\nகருத்து: ஏழு உலகங்களிலும் வியாபித்து இருக்கும் ஆற்றலை அடையும் வழியை சிவ வழியில் செல்வோர்க்கு கூறுகிறார்.", "vilakam_en": "By awakening the Kundalini fire at the Muladhara and drawing it up through the Sushumna nadi to the crown of the head, and by sustaining it through the practice of pranayama—controlling the breath through the solar (right nostril) and lunar (left nostril) channels—one can attain the energy that pervades all seven worlds. This path is revealed to those who follow the way of Shiva’s grace." }, { "song_number": 660, "padal": "தலைப்பட்ட வாறண்ணல் தையலை நாடி\n\nவலைப்பட்ட பாசத்து வன்பிணை மான்போல்\n\nதுலைப்பட்ட நாடியைத் தூவழி செய்தால்\n\nவிலைக்குண்ண வைத்ததோர் வித்தது வாமே.", "vilakam": "இடகலை பிங்கலை நாடிகளுக்கு நடுவிலுள்ள சுழுமுனை நாடியை பிராணாயாமத்தின் மூலம் திறக்க வைத்தால் வலையில் சிக்கிய மானைத் தேடி ஓடிவரும் அதன் துணை மானைப் போல குண்டலினி சக்தியானது சகஸ்ரதளத்திலுள்ள சிவத்தை தேடி அடையும். அடைந்தபின் சேமித்து வைத்த உணவு பண்டம் எப்போதும் உண்ண உதவுவதுபோல அந்நாக்கில் ஊறும் அமுதமானது உடலோடு உயிர் நீடித்திருக்க வைத்திருக்கும்.\n\nகருத்து: குண்டலினி சக்தியை தலை உச்சியில் சேர்த்தால் அமுதம் ஊறி உடலோடு உயிர் நீண்டகாலம் நீடித்திருக்கும்.", "vilakam_en": "When the Sushumna nadi, located between the Ida and Pingala nadis, is opened through pranayama, the Kundalini energy, like a deer chasing its companion trapped in a net, rises in search of Shiva who resides in the Sahasrara (crown chakra). Once it reaches and unites with Shiva, the nectar (amrita) that begins to drip from the tongue sustains both body and life, just as stored food nourishes the body over time." }, { "song_number": 661, "padal": "ஓடிச்சென் றங்கே ஒருபொருள் கண்டவர்\n\nநாடியி னுள்ளாக நாதம் எழுப்புவர்\n\nதேடிச்சென் றங்கே தேனை முகந்துண்டு\n\nபாடியுள் நின்ற பகைவரைக் கட்டுமே.", "vilakam": "மூலாதாரத்திலிருந்து குண்டலினியை எழுப்பி சகஸ்ரதளத்திற்கு விரைவாக அடைந்து அங்கு சிவத்தை தரிசித்தவர்கள் அங்குள்ள நாடியினுள்ளே ஓங்கார ஒலியை எழுப்புவார்கள். அதன்பிறகு அமுதம் ஊறுகின்ற அன்னாக்கைத் தேடிச் சென்று அங்கே ஊறும் அமுதத்தை பருகியவர்களுக்கு இறைவனை அடையத் தடையாயிருக்கின்ற மாயை, அகங்காரம், ஆணவம், காமம், குரோதம் ஆகிய ஐந்துவித பகைவர்களும் அடங்கி இருப்பார்கள்.\n\nகருத்து: குண்டலினி சக்தியின் மூலம் இறைவனை தரிசித்தவர்களுக்கு இறைவனை அடையத் தடையாயிருக்கும் அனைத்தும் அடங்கியிருக்கும்.", "vilakam_en": "Those who awaken Kundalini from the root, quickly reach the Sahasratala and see Shiva there, will raise the sound of Omkara within the nadi there. After that, those who go in search of the nectar-bearing Annak and drink the nectar-bearing Annak there will be subdued by the five types of enemies that hinder them from reaching God: delusion, ego, pride, lust, and hatred.\n\nComment: Those who have seen God through the power of Kundalini will have subdued by all the obstacles that hinder them from reaching God." }, { "song_number": 662, "padal": "கட்டிட்ட தாமரை நாளத்தில் ஒன்பது\n\nமட்டிட்ட கன்னியர் மாதுடன் சேர்ந்தனர்\n\nதட்டிட்டு நின்று தளங்களி னூடுபோய்ப்\n\nபொட்டிட்டு நின்றது பூரண மானதே.", "vilakam": "உடலிலுள்ள ஒன்பதுவித சக்திகளும் சகஸ்ரதளத் தாமரையின் தண்டாகிய சுழுமுனை வழியே குண்டலினி சக்தியோடு இணைந்து சென்று சகஸ்ரதளத்தை அடைந்து அங்கு இருக்கும் பராசக்தியோடு சேர்ந்து பூரண சக்தியாகி (முழுமையான சக்தியாகி) நிரந்தரமாக இருக்கும்.\n\nஒன்பது சக்திகள்:\n\nகருத்து: குண்டலினியை சகஸ்ரதளத்தோடு சேர்ப்பவர்களுக்கு உடலிலுள்ள ஒன்பது சக்திகளும் பராசக்தியோடு இணைந்து நிரந்தரமாக இருக்கும்.", "vilakam_en": "The nine types of energies in the body merge with the Kundalini energy through the stem of the Sahasratala lotus, the Shubhumuna, and reach the Sahasratala, where they merge with the Parashakti present there, becoming Purana Shakti (complete energy) and remaining permanent.\n\nNine Energies:\n\nComment: For those who merge the Kundalini with the Sahasratala, all nine energies in the body merge with the Parashakti permanently." }, { "song_number": 663, "padal": "பூரண சத்தி எழுமூன் றறையாக\n\nஏரணி கன்னியர் ஏழ்நூற்றஞ் சாயினர்\n\nநாரணன் நான்முக னாதிய ஐவர்க்குங்\n\nகாரண மாகிக் கலந்து விரிந்ததே.", "vilakam": "ஒன்பது சக்திளும் இணைந்த பராசக்தியானது (பாடல் #663 இல் உள்ளபடி) உடலில் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய தொழில்களைச் செய்யும் ஐந்து மூர்த்திகளையும் உணர்கின்ற ஐந்து இடங்களுக்கும் இருபத்து ஒருவராக பிரிந்து மொத்தம் நூற்று ஐவராக கலந்து இருக்கின்றார்கள்.\n\nகருத்து: உடலில் ஐந்தொழில்களையும் செய்கின்ற ஐந்து இடங்களிலும் சக்தியாக பூரணசக்தி கலந்து இருக்கின்றது.", "vilakam_en": "The Parasakthi, which is the combination of all nine powers (as stated in Song #663), is divided into twenty-one in each of the five places where the five deities perform the functions of creation, preservation, destruction, concealment, and grace in the body, and is present in a total of one hundred and five.\n\nComment: The Puranasakthi is present as the power in the five places where the five functions are performed in the body." }, { "song_number": 664, "padal": "விரிந்து குவிந்து விளைந்தஇம் மங்கை\n\nகரந்துள் எழுந்து கரந்தங் கிருக்கிற்\n\nபரந்து குவிந்தது பார்முதற் பூதம்\n\nஇரைந்தெழு வாயு விடத்தினில் ஒடுங்கே.", "vilakam": "உடலில் நூற்று ஐந்தாக பிரிந்து இருக்கின்ற சக்தி (பாடல் #664 இல் உள்ளபடி) பரிபூரணமாய் ஒருநிலைப்பட்டு மறைந்தவாறு உடலுக்குள் எழுந்து அங்கே மறைந்து உடலெங்கும் பரவி உடலிலுள்ள பஞ்ச பூதங்களுடன் ஒருமுகப்பட்டு உடலிலுள்ள பத்துவித வாயுக்களோடு ஒடுங்கி இருக்கும்.\n\nகருத்து: உடலிலுள்ள பஞ்ச பூதங்களோடும் பத்துவித வாயுக்களோடும் பூரணசக்தி கலந்து இருக்கும்.", "vilakam_en": "The energy that is divided into one hundred and five parts in the body (as in song #664) becomes perfectly unified and disappears, rising within the body, disappearing there, spreading throughout the body, merging with the five elements in the body and condensing with the ten types of gases in the body.\n\nComment: The complete energy is mixed with the five elements and the ten types of gases in the body." }, { "song_number": 665, "padal": "இடையொடு பிங்கலை என்னும் இரண்டு\n\nமடைபடு வாயுவு மாறியே நிற்குந்\n\nதடையவை யாறெழுந் தண்கட ருள்ளே\n\nமிடைவளர் மின்கொடி தன்னில் ஒடுங்கே.", "vilakam": "உடம்பில் அடங்கியிருக்கும் மூச்சுக்காற்றை இடகலை, பிங்கலை மூச்சுப்பயிற்சி முறைப்படி பிராணாயாமம் செய்து மாற்றி சுழுமுனை வழியே மேலெழும்புமாறு செய்தால் குளிர்ந்த கடலில் மழை பெய்யும் பொழுது ஏற்படும் கொடி போன்ற மின்னலும் கடலும் சேர்ந்து ஒன்றாகத் தெரிவது போல குண்டலினி சக்தி ஆறு சக்கரங்களைக் கடந்து ஏழாவது சக்கரமான சகஸ்ரதளத்தோடு மனம் ஒடுங்கும்.\n\nகருத்து: பிராணாயாமப் பயிற்சியை முறைப்படி செய்தால் குண்டலினி சக்தி சகஸ்ரதளத்தோடு மனமும் ஒன்றிவிடும்.", "vilakam_en": "If you transform the breath contained in the body through the Itakalai and Pingala breathing exercises and make it rise through the vortex, just as lightning and the ocean appear together when it rains on a cold ocean, the Kundalini energy will cross the six chakras and merge with the seventh chakra, the Sahasrara.\n\nComment: If you practice Pranayama properly, the Kundalini energy and the mind will merge with the Sahasrara." }, { "song_number": 666, "padal": "ஒடுங்கி ஒருங்கி யுணர்ந்தங் கிருக்கின்\n\nஅடங்கி அடங்கிடும் வாயு வதனுள்\n\nமடங்கி மடங்கிடு மன்னுயி ருள்ளே\n\nநடங்கொண்ட கூத்தனும் நாடுகின் றானே.", "vilakam": "பாடல் #665 ல் உள்ளபடி ஒடுங்கிய மனதில் இருக்கும் இறைவனை உணர்ந்து லயித்திருந்தால் மூச்சுக்காற்றும் அதனோடு அடங்கியிருக்கும். அவ்வாறு அனைத்தும் அடங்கியிருக்கும் உடம்போடு உயிர் நிலைபெற்று இருக்கும். அவ்வாறு நிலைபெற்ற உயிரில் நடனத்திற்குத் தலைவனான இறைவனே நாடி வந்து இருப்பான்.\n\nகருத்து: குண்டலினி சக்தியும் மூச்சுக்காற்றும் மனமும் ஒருமுகப்பட்டு இருக்கும் உயிரில் இறைவன் நாடி வந்து இருப்பான்.", "vilakam_en": "As in song #665, if one realizes and merges with the Lord in the concentrated mind, even the breath will be contained with it. In such a settled body, the soul will be established. In such a settled soul, the Lord, the master of the dance, will have sought it.\n\nComment: In a soul where the Kundalini energy, breath and mind are focused, the Lord will have sought it." }, { "song_number": 667, "padal": "நாடியின் உள்ளே நாதத் தொனியுடன்\n\nதேடி யுடன்சென்றத் திருவினைக் கைக்கொண்டு\n\nபாடியுள் நின்ற பகைவரைக் கட்டிட்டு\n\nமாடில் ஒருகை மணிவிளக் கானதே.", "vilakam": "பாடல் #666 ல் உள்ளபடி உயிரைத் தேடி வந்த இறைவன் சுழுமுனை நாடியின் உள்ளே ஓம் எனும் நாதமாய் நின்று இறைவனை அடையத் தடையாயிருக்கின்ற மாயை, அகங்காரம், ஆணவம், காமம், குரோதம் ஆகிய ஐந்துவித பகைவர்களையும் அவன் அருளால் அடக்கிவிட்டு என்றும் அணையாமல் வெளிச்சம் கொடுக்கும் விளக்குபோல என்றும் ஜோதியாய் விளங்குவான்.\n\nகருத்து: உயிரோடு கலந்த இறைவன் அவனை அடையத் தடையாயிருக்கின்ற ஐந்துவித பகைவர்களை அடக்கி என்றும் அணையாத ஜோதியாய் இருப்பான்.", "vilakam_en": "As in song #666, the Lord, who came in search of life, stands as the sound of Om within the spiral nadi, and by His grace He subdues the five types of enemies that hinder the attainment of God: delusion, ego, pride, lust, and hatred, and thus becomes a lamp that never goes out.\n\nComment: The Lord, who is mingled with life, subdues the five types of enemies that hinder the attainment of Him, and thus becomes a lamp that never goes out." }, { "song_number": 668, "padal": "அணுமாதி சித்திக ளானவை கூறில்\n\nஅணுவில் அணுவின் பெருமையில் நேர்மை\n\nஇணுகாத வேகார் பரகாய மேவல்\n\nஅணுவத் தனையெங்குந் தானாத லென்றெட்டே.", "vilakam": "பாடல் #667 ல் உள்ளபடி உயிருக்குள் இறைவன் ஜோதியாய் விளங்கினால் அவ்வுயிருக்குக் கிடைக்கக் கூடிய எட்டுவித சித்திகளான, 1. அணிமா – அணுவைப் போல் உடலை சிறிதாக்கும் ஆற்றல். 2. மகிமா – மலையைப் போல் உடலை பெரிதாக்கும் ஆற்றல். 3. கரிமா – மலை போல எதனாலும் அசைக்க முடியாத அளவு உடலை கனமாக்கும் ஆற்றல். 4. இலகிமா – காற்றைப் போல் இலேசாய் உடலை மாற்றி எங்கும் செல்லும் ஆற்றல். 5. பிராப்தி – தூரத்திலிருப்பதையும் இருக்கும் இடத்திலேயே பார்க்கவும், மனதினால் நினைத்தவை யாவையும் அடையவும் பெறும் ஆற்றல். 6. பிராகாமியம் – எதையும் நினைத்தவுடன் அதாகவே தன்னை மாற்றிக் கொள்ளும் ஆற்றல். 7. ஈசத்துவம் – ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களைத் தன் ஆளுகைக்குட்பட்டுச் செய்தல். 8. வசித்துவம் – ஈரேழு பதினான்கு உலகங்களிலும் கலந்து அங்கிங்கெனாதபடி எங்கும் வியாபித்து இருக்கும் ஆற்றல் ஆகியவனவாகும்.\n\nகருத்து: உயிருக்குள் இறைவன் ஜோதியாய் விளங்கினால் எட்டுவித சித்திகளும் கிடைக்கும்.", "vilakam_en": "As mentioned in Song #667, if God is the light within the soul, then the eight types of siddhis that the soul can attain are: 1. Anima – The power to make the body as small as an atom. 2. Mahima – The power to make the body as large as a mountain. 3. Karima – The power to make the body as heavy as a mountain so that nothing can move it. 4. Ilakhima – The power to change the body as light as the wind and go anywhere. 5. Prabhiti – The power to see what is far away and to achieve whatever the mind thinks of. 6. Brahmamiya – The power to change oneself as soon as one thinks of anything. 7. Eesathuvam – The power to perform the five functions of creation, preservation, destruction, concealment, and grace under one's control. 8. Vasituvam – The power to mix with all the fourteen worlds and pervade everywhere without being separated.\n\nComment: God within the soul is the power to be everywhere without being separated.If you become a Jyothi, you will attain all eight types of Siddhis." }, { "song_number": 669, "padal": "எட்டா கியசித்தி யோரெட்டி யோகத்தாற்\n\nகிட்டாப் பிராணனே செய்தாற் கிடைத்திடும்\n\nஒட்டா நடுநாடி மூலத்த னல்பானு\n\nவிட்டான் மதியுண்ண வும்வரு மேலதே.", "vilakam": "இயல்பாக எளிதில் அடங்காத மூச்சுக் காற்று அட்டாங்க யோகத்திலுள்ள பிராணாயாமத்தை முறைப்படி செய்வதன் மூலம் அடங்குவதோடு மட்டுமல்லாது எட்டுவிதமான சித்திகளும் கிடைப்பதற்கு வழிவகுக்கும். அதன் பின்னர் மூலாதாரத்திலிருக்கும் குண்டலினி சக்தி அக்கினிப் பிழம்பாய் கிளம்பி நடு நாடியாகிய சுழுமுனை வழியே மேலே சென்று சகஸ்ரதளத்தை அடைந்து பேரறிவாகிய இறைவனை உணரலாம்.\n\nகருத்து: பேரறிவான இறைவனை உணர்வதற்கும் எட்டுவித சித்திகளை அடைவதற்கும் பிராணாயமம் உதவும்.", "vilakam_en": "The breath, which is naturally difficult to control, can be controlled by properly performing the pranayama in Attanga Yoga, and can also lead to the attainment of eight types of siddhis. After that, the kundalini energy in the root of the root rises like a fiery flame and goes up through the middle nadi, the Suzhumuna, to reach the Sahasratha and realize the Supreme Being.\n\nComment: Pranayama helps in realizing the Supreme Being and attaining eight types of siddhis." }, { "song_number": 670, "padal": "சித்திக ளெட்டன்றிச் சேரெட்டி யோகத்தாற்\nபுத்திக ளானவை எல்லாம் புலப்படுஞ்\nசித்திகள் எண்சித்தி தானாந் திரிபுரைச்\nசத்தி அருள்தரத் தானுள வாகுமே.", "vilakam": "அட்டாங்க யோகத்தை முறைப்படி செய்பவர்களுக்கு எட்டு சித்திகள் கிடைப்பது மட்டுமன்றி ஆத்ம அறிவு முதல் அண்டசராசரங்கள் வரை அறிந்துகொள்ள முடியும். நமக்குள் இருக்கும் இறைவனது அருளால் அந்த இறைவனின் சக்தியானது நமக்குள்ளே எட்டுவித சித்திகளையும் உணர்த்திவிடும்.\n\nகருத்து: அட்டாங்க யோகத்தை முறைப்படி செய்தால் இறைவனின் அருளால் எட்டுவித சித்திகளையும் பெற்று பேரறிவையும் அறியலாம்.", "vilakam_en": "Those who practice Atanga Yoga properly not only gain eight Siddhis, but can also understand everything from spiritual knowledge to the universe. By the grace of God within us, the power of that God will make us realize all eight Siddhis within us.\n\nComment: If we practice Atanga Yoga properly, we can acquire all eight Siddhis and know great knowledge by the grace of God." }, { "song_number": 671, "padal": "எட்டிவை தன்னோ டெழிற்பரங் கைகூடப்\nபட்டவர் சித்தர் பரலோகஞ் சேர்தலால்\nஇட்டம துள்ளே இருக்கல்பர காட்சி\nஎட்டு வரப்பு மிடந்தானின் றெட்டுமே.", "vilakam": "அட்டமா சித்திகளோடு அழகுமிகுந்த பரம்பொருளான இறைவனும் தனக்குள் வரப் பெற்றவரே சித்தர் ஆவார். இவர்கள் தாம் இருக்கும் இடத்திலிருந்தே பரலோகத்தோடு ஒன்றி தம் உள்ளத்துள் பரம்பொருளான இறைவனை தரிசிக்கக்கூடியவர்கள். இவ்வருள் பெற்றவர்கள் இருக்கும் இடம் தேடி அட்டமா சித்திகளைச் சார்ந்த பல சித்திகளும் தானே வந்து சேரும்.\n\nகருத்து: அட்டமா சித்திகளோடு இறைவனையும் தமக்குள் பெற்றவரே சித்தர் ஆவார்.", "vilakam_en": "A Siddha is one who has attained the supreme power along with the Atma Siddhis and the beautiful Supreme Being within himself. These are those who are able to unite with the heavens from the very place they are and see the Supreme Being within themselves. Many Siddhas related to the Atma Siddhis will automatically arrive at the place where those who have attained this grace are.\n\nComment: A Siddha is one who has attained the supreme power along with the Atma Siddhis and the Supreme Being within himself." }, { "song_number": 672, "padal": "மந்தர மேறு மதிபானு வைமாற்றிக்\nகந்தாய்க் குழியிற் கசடற வல்லார்க்குத்\nதந்தின்றி நற்காமிய லோகஞ் சார்வாகும்\nஅந்த வுலகம் அணிமாதி யாமே.", "vilakam": "மூலாதாரத்திலிருந்து குண்டலினி சக்தியை சுழுமுனை நாடி வழியே மேலே ஏற்றிச் செல்வதால் கிடைக்கும் சக்தியானது நமது சிற்றறிவை மாற்றி பேரறிவைக் கொடுக்கும். அதன்பின் அந்நாக்கில் அமுதம் ஊறியவுடன் தீமைகளை அகற்றி யோகத்திலிருக்க வல்லவர்களுக்கு அவர்கள் எந்த உலகத்திற்குச் சென்றாலும் அதைச் சார்ந்திருக்கக்கூடிய நல்ல உடம்பு கிடைக்கும். அவ்வாறு வெவ்வேறு உலகங்களுக்கு ஏற்ப உடலை மாற்ற முடிவதே அணிமா என்னும் சித்தியாகும்.\n\nகருத்து: குண்டலினி சக்தியை சகஸ்ரதளத்திற்கு ஏற்றுபவர்களுக்கு எல்லா உலகத்தையும் சார்ந்திருக்கக்கூடிய உடல் என்னும் அணிமா சித்தி கிடைக்கும்.", "vilakam_en": "The power obtained by raising the Kundalini energy from the source up through the Suhumuna Nadi transforms our subtle knowledge and gives us greater knowledge. After that, once the elixir is absorbed in the tongue, those who are able to remove evils and remain in yoga will get a good body that can be relied on in any world they go to. The ability to change the body according to different worlds in this way is the Siddhi called Anima.\n\nComment: Those who raise the Kundalini energy to the Sahasratha level will get the Siddhi called Anima, a body that can be relied on in all worlds." }, { "song_number": 673, "padal": "முடிந்திட்டு வைத்து முயங்கிலோ ராண்டில்\nஅணிந்த அணிமாகை தானாம் இவனுந்\nதணிந்தவப் பஞ்சினுந் தானொய்ய தாகி\nமெலிந்தங் கிருந்திடும் வெல்லவொண் ணாதே.", "vilakam": "அணிமா சக்தி கைவரப் பெற்றபின் ஓராண்டு யோகப் பயிற்சிகளை விடாமல் செய்து வந்தால் அணிமா சித்தியானது நிரந்தரமாகக் கைவரப் பெறும். அவ்வாறு பெற்றபின் யோகப் பயிற்சி செய்தவரின் உடல் பஞ்சைவிட மெலியதாகி இருந்தாலும் வலிமையானதாகவும் எவராலும் வெல்ல முடியாததாகவும் இருக்கும்.\n\nகருத்து: அணிமா சித்தி கைவரப் பெற்றபின் ஓராண்டு விடாமல் பயிற்சி செய்துவர நிரந்தரமாகி உடல் பஞ்சைவிட மெலியதாகி எவராலும் வெல்லமுடியாமல் இருக்கும்.", "vilakam_en": "After acquiring the power of Anima, if one practices yoga continuously for a year, the attainment of Anima Siddhi will be permanent. After acquiring it, the body of the person who practices yoga will become thinner than cotton, but will be strong and invincible.\n\nComment: After acquiring the power of Anima, if one practices continuously for a year, it will become permanent and the body will become thinner than cotton, and invincible." }, { "song_number": 674, "padal": "ஆகின்ற வத்தனி நாயகி தன்னுடன்\nபோகின்ற தத்துவம் எங்கும் புகலதாய்ச்\nசாகின்ற காலங்கள் தன்வழி நின்றிடின்\nமாய்கின்ற வையாண்டின் மாலகு வாகுமே.", "vilakam": "அணிமா என்கின்ற சக்தியானது கைவரப் பெற்ற பின்னும் விட்டுவிடாமல் யோகப் பயிற்சி செய்து முடிந்த ஐந்தாண்டு காலமும் தான் பயிற்சி செய்யும் யோகத்தின் வழியிலிருந்து மாறாது இருக்க இலகிமா என்கின்ற சித்தியும் கிடைக்கும்.\n\nகருத்து: அணிமா என்னும் சித்தி கிடைத்தபின் ஐந்தாண்டுகள் இடைவிடாமல் யோகப் பயிற்சி செய்தால் இலகிமா என்னும் சித்தி கிடைக்கும்.", "vilakam_en": "After acquiring the power of Anima, if one continues to practice yoga for five years without giving up, one will attain the Siddhi of Lakhima.\n\nComment: After acquiring the Siddhi of Anima, one will attain the Siddhi of Lakhima if one continues to practice yoga for five years without stopping." }, { "song_number": 675, "padal": "மாலகு வாகிய மாயனைக் கண்டபின்\nதானொளி யாகித் தழைத்தங் கிருந்திடும்\nபாலொளி யாகிப் பரந்தெங்கு நின்றது\nமேலொளி யாகிய மெய்ப்பொருள் காணுமே.", "vilakam": "இலகிமா என்னும் சித்தி கிடைத்து இறைவனை தரிசித்தபின் தாமே ஒளி உடம்பாய் மாறி ஒளி உடம்போடு இருக்கப் பால் போன்ற வெண்மையான ஒளியாகி எங்கும் பரந்து இருக்கும் பேரொளியாய் உண்மைப் பொருளாகவும் உள்ள இறைவனை தரிசிக்கலாம்.\n\nகருத்து: இலகிமா சித்தியடைந்தபின் வெண்மையான ஒளி உடம்பாய் மாறி உண்மைப் பொருளான இறைவனை தரிசிக்கலாம்.", "vilakam_en": "After attaining the siddhi of Ilakhima and having darshan of the Lord, one can transform oneself into a body of light, become a white light like milk, and have darshan of the Lord, who is the true substance and the great light that pervades everywhere.\n\nComment: After attaining the siddhi of Ilakhima, one can transform oneself into a body of white light and have darshan of the Lord, who is the true substance." }, { "song_number": 676, "padal": "மெய்ப்பொருள் சொல்லிய மெல்லிய லாளுடன்\nதற்பொரு ளாகிய தத்துவங் கூடிடக்\nகைப்பொரு ளாகக் கலந்திடு மோராண்டின்\nமைப்பொரு ளாகு மகிமாவ தாகுமே.", "vilakam": "அணிமாவும் இலகிமாவும் கிடைத்தபின் உண்டான உண்மை ஞானமாகிய பேரறிவை உணர்த்தும் அருள் சக்தியுடன் தமக்குள் தத்துவமாய் இருக்கும் இறைவனுடன் கலந்து ஒரு வருடம் இருந்தால் மாயை விலகி மறைந்திருந்த மகிமா எனும் சித்தி நமக்குக் கிடைக்கும்.\n\nகருத்து: உண்மை ஞானமாகிய பேரறிவும் தமக்குள் தத்துவமாய் இருக்கும் இறைவனுடன் கலந்து ஒரு வருடம் இருந்தால் மகிமா எனும் சித்தி கிடைக்கும்.", "vilakam_en": "If we spend a year with the grace of the Supreme Wisdom, which is the true wisdom that arises after we have attained Anima and Ilakhima, and merge with the God who is the essence within us, we will attain the siddhi called Mahima, which was hidden by the removal of Maya.\n\nComment: If we spend a year with the Supreme Wisdom, which is the true wisdom that arises, and merge with the God who is the essence within us, we will attain the siddhi called Mahima." }, { "song_number": 677, "padal": "ஆகின்ற காலொளி யாவது கண்டபின்\nபோகின்ற காலங்கள் போவது மில்லையாம்\nமேனின்ற காலம் வெளியுற நின்றபின்\nதானின்ற காலங்கள் தன்வழி யாகுமே.", "vilakam": "பிராணாயாம முறைப்படி மூச்சுக்காற்றை சுழுமுனை நாடி வழியே மேலேற்றிச் சென்று அது சகஸ்ரதளத்தோடு கலந்து ஜோதியானதை அகக் கண்ணால் கண்டபின் மகிமா எனும் சித்தி கிடைக்கும். அதன்பின் வரும் காலங்கள் நமது ஆயுள் காலத்தை அழிப்பது இல்லை. உலகத்திலுள்ள அனைத்தையும் விட பெரியதாகிய காலத்தை மகிமா எனும் சித்தியால் வென்று காலத்தால் நாம் பாதிக்கப்படாமல் இருக்கலாம். அவ்வாறு இருக்கும் காலங்களை நமது எண்ணப்படி அமைக்கலாம்.\n\nகருத்து: சகஸ்ரதளத்தில் ஜோதி தரிசனம் கண்டபின் மகிமா எனும் சித்தி கைவரப்பெற்று காலத்தை வெல்லலாம்.", "vilakam_en": "According to the method of Pranayama, after the breath is taken up through the Sukhmunai Nadi and seen with the inner eye that it has mixed with the Sahasratala and become Jyoti, the Siddhi called Mahima is obtained. The times that come after that do not destroy our lifespan. We can conquer time, which is greater than anything in the world, with the Siddhi called Mahima and not be affected by time. We can arrange the times that exist according to our thoughts.\n\nComment: After seeing the Jyoti Darshan at the Sahasratala, we can acquire the Siddhi called Mahima and conquer time." }, { "song_number": 678, "padal": "தன்வழி யாகத் தழைத்திடு ஞானமுந்\nதன்வழி யாகத் தழைத்திடு வையகந்\nதன்வழி யாகத் தழைத்த பொருளெல்லாந்\nதன்வழி தன்னரு ளாகிநின் றானே.", "vilakam": "தான் என்னும் அகங்காரத்தை விட்டு தானே சிவம் என்பதை உணர்ந்தவன் மூலம் உலகத்தார் ஞானம் செழித்து ஓங்கும். உலகமும் செழிப்புற்று விளங்கும். அவன் வழியால் செழித்த பொருட்களெல்லாம் அவன் வசப்பட்டு நிற்கும். உலகத்தைவிட பெரியவனாக அவன் இருப்பதால் மகிமா எனும் சித்தியைக் குறிக்கின்றது.\n\nகருத்து: மகிமா சித்தி கைவரப் பெற்றவரின் அருளால் உலகத்தில் ஞானமும் வளங்களும் செழித்து இருக்கும்.", "vilakam_en": "The world will prosper and flourish through the one who abandons his ego and realizes that he is Shiva. The world will also prosper. All the things that prosper through him will be under his control. Since he is greater than the world, he represents the virtue of glory.\n\nComment: By the grace of the one who has attained the virtue of glory, wisdom and wealth will flourish in the world." }, { "song_number": 679, "padal": "நின்றன தத்துவ நாயகி தன்னுடன்\nகண்டன பூதப் படையவை யெல்லாங்\nகொண்டவை யோராண்டு கூட இருந்திடில்\nவிண்டது வேநல்ல பிராத்திய தாகுமே.", "vilakam": "நம்மைக் கட்டுப்படுத்தும் பஞ்ச பூதங்கள் முதலான பல்வேறு தத்துவங்களை உணர்ந்து அனைத்திற்கும் தலைவியான அருள் சக்தியுடன் மனதை ஒருமுகப்படுத்தி வைத்து அதிலேயே லயித்து யோகப் பயிற்சியில் ஒரு வருடம் இருந்தால் அந்தத் தத்துவங்களை வெல்லலாம். அவ்வாறு அனைத்து தத்துவங்களையும் வென்றவருக்கு பிராத்தி எனும் சித்தி கிடைக்கும்.\n\nகருத்து: உலகத் தத்துவங்களிலிருந்து விலகி ஒரு வருடம் யோகப் பயிற்சி செய்தால் பிராத்தி எனும் சித்தி கிடைக்கும். பிராப்தி என்பது தூரத்திலிருப்பதை இருக்கும் இடத்திலேயே பார்க்கவும் மனதினால் நினைத்தவை யாவையும் அடையவும் பெறும் ஆற்றல்.", "vilakam_en": "If we realize the various philosophies that control us, such as the five elements, and concentrate our mind on the grace that is the leader of all, and immerse ourselves in them for a year in yoga practice, we can conquer those philosophies. One who conquers all philosophies in this way will obtain the siddhi called prati.\n\nComment: If we practice yoga for a year, detaching ourselves from worldly philosophies, we will obtain the siddhi called prati. Prati is the ability to see things that are far away right where they are and to achieve whatever we think of with our minds." }, { "song_number": 680, "padal": "ஆகின்ற மின்னொளி யாவது கண்டபின்\nபாகின்ற பூவிற் பரப்பவை காணலாம்\nமேகின்ற காலம் வெளியுற நின்றது\nபோகின்ற காலங்கள் போவது மில்லையே.", "vilakam": "பிராணாயாம முறைப்படி மூச்சுக்காற்றை சுழுமுனை நாடி வழியே மேலேற்றிச் சென்று அது சகஸ்ரதளத்தோடு கலந்து ஜோதியானதை அகக் கண்ணால் கண்டபின் கரிமா எனும் சித்தி கிடைக்கும். அதன்பின் வரும் காலங்கள் நமது ஆயுள் காலத்தை அழிப்பது இல்லை. அவ்வாறு கரிமா எனும் சித்தியால் காலத்தை வெல்பவர்கள் மலைபோல அசைக்கமுடியாமல் இருப்பார்கள்.\n\nகருத்து: சகஸ்ரதளத்தில் ஜோதி தரிசனம் கண்டபின் கரிமா எனும் சித்தி கைவரப்பெற்று காலத்தால் அசைக்கமுடியாமல் இருக்கலாம்.", "vilakam_en": "According to the method of Pranayama, after the breath is taken up through the Sukhmunai Nadi and mixed with the Sahasratala and becomes Jyoti, the Siddhi called Karima is attained. The times that come after that do not destroy our lifespan. Those who conquer time with the Siddhi called Karima are like mountains that cannot be moved.\n\nComment: After seeing the Jyoti Darshan at the Sahasratala, the Siddhi called Karima may be attained and cannot be moved by time." }, { "song_number": 681, "padal": "போவதொன் றில்லை வருவது தானில்லை\nசாவதொன் றில்லை தழைப்பது தானில்லை\nதாமத மில்லை தமரகத் தின்னொளி\nயாவது மில்லை யறிந்துகொள் வார்க்கே.", "vilakam": "கரிமா சித்தி பெற்றவர்களுக்கு காலங்கள் அழிவது இல்லை. காலங்கள் புதிதாக வருவதும் இல்லை. இறப்பு இல்லை. ஆகவே பிறப்பும் இல்லை. அவர்கள் நிகழ்காலத்திலேயே எப்போதும் தனக்குள் இருக்கும் ஒளியுடனே லயித்து எவற்றாலும் பாதிக்கப்படாமல் இருப்பார்கள்.\n\nகருத்து: கரிமா சித்தி பெற்றவர்களுக்கு காலத்தினால் பாதிப்புகள் வருவது இல்லை.", "vilakam_en": "For those who have attained Karima Siddhi, time does not pass away. Time does not come again. There is no death. Therefore, there is no birth. They remain in the present moment with the light that is always within them and are unaffected by anything.\n\nComment: Those who have attained Karima Siddhi are not affected by time." }, { "song_number": 682, "padal": "அறிந்த பராசத்தி யுள்ளே அமரில்\nபறிந்தது பூதப் படையவை யெல்லாங்\nகுவிந்தவை யோராண்டு கூட இருக்கில்\nவிரிந்த பரகாய மேவலு மாமே.", "vilakam": "இறை சக்தியை நமக்குள்ளே உணர்ந்து அதனோடு ஒரு ஆண்டு மனதை ஒருமுகப்படுத்தி ஒன்றியிருந்தால் நம்மைக் கட்டுப்படுத்தும் பஞ்ச பூதங்கள் முதலான பல்வேறு தத்துவங்கள் அனைத்தும் விலகிவிடும். அவ்வாறு விலகியபின் எதையும் நினைத்தவுடன் அதாகவே தன்னை மாற்றிக் கொள்ளும் பிராகாமியம் என்னும் சித்தி கிடைக்கும்.\n\nகருத்து: இறை சக்தியோடு ஒரு ஆண்டு ஒன்றியிருந்தால் உலகத் தத்துவங்களிலிருந்து விலகி பிராகாமியம் எனும் சித்தியை அடையலாம்.", "vilakam_en": "If we realize the divine power within ourselves and concentrate our minds on it for a year, all the various philosophies that control us, such as the five elements, will disappear. After such a separation, we will attain the virtue of Brahmanism, which transforms us into that which we think of as soon as we think of it.\n\nComment: If we remain united with the divine power for a year, we can detach ourselves from worldly philosophies and attain the virtue of Brahmanism." }, { "song_number": 683, "padal": "ஆன விளக்கொளி யாவ தறிகிலர்\nமூல விளக்கொளி முன்னே யுடையவர்\nகான விளக்கொளி கண்டுகொள் வார்கட்கு\nமேலை விளக்கொளி வீடெளி தாநின்றே.", "vilakam": "எதையும் நமக்கு உணரவைக்கும் சிவத்தின் ஒளி நமது புருவ மத்தியில் ஆக்ஞா ஒளியாக இருப்பதை யாரும் அறியவில்லை. மூலாதாரத்திலிருக்கும் அக்கினியை மேலேற்றிச் சென்று சகஸ்ரதளத்தில் ஒளிமயமாக பார்க்க முடிந்தவர்களுக்கு ஜோதியாய் இருக்கும் சதாசிவத்தை தரிசிப்பதும் அதன் மூலம் முக்தியை அடைவதும் எளிதாகும்.\n\nகருத்து: மூலாதாரத்திலிருக்கும் அக்கினியை சகஸ்ரதளத்திற்கு கொண்டு செல்ல முடிந்தவர்களுக்கு ஜோதி தரிசனமும் முக்தியும் எளிதாகும்.", "vilakam_en": "No one knows that the light of Shiva, which makes us feel everything, is the agni light between our eyebrows. For those who are able to raise the fire in the source and see it brightly in the Sahasratala, it is easy to see the eternal Shiva who is the light and through that attain salvation.\n\nComment: For those who are able to take the fire in the source to the Sahasratala, the vision of the light and salvation become easy." }, { "song_number": 684, "padal": "நின்ற சதாசிவ நாயகி தன்னுடன்\nகண்டன பூதப் படையவை எல்லாங்\nகொண்டவை யோராண்டு கூடி யிருந்திடிற்\nபண்டையவ் வீசன் தத்துவ மாகுமே.", "vilakam": "நமக்குள் அனைத்தையும் செயல்படுத்தும் சதாசிவ சக்தியின் மேல் மனதை ஒருமுகப்படுத்தி வைத்து அதிலேயே லயித்து அனைத்து தத்துவங்களாலும் பாதிக்கப்படாமல் யோகப் பயிற்சியில் ஒரு வருடம் இருந்தால் அந்தத் தத்துவங்களை வெல்லலாம். அவ்வாறு அனைத்து தத்துவங்களையும் வென்றவருக்கு ஈசத்துவம் (ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களைத் தன் ஆளுகைக்குட்பட்டுச் செய்தல்) எனும் சித்தி கிடைக்கும்.\n\nகருத்து: சதாசிவ சக்தியின் மேல் ஒரு வருடம் மனதை ஒருமுகப்படுத்தி இருந்தால் ஈசத்துவம் எனும் சித்தி கிடைக்கும்.", "vilakam_en": "If we concentrate our mind on the Sadashiva Shakti, which activates everything within us, and remain absorbed in it, and practice yoga for a year without being affected by all the principles, we can conquer those principles. One who conquers all the principles in this way will attain the siddhi of Ishathuvam (performing the five functions of creation, preservation, destruction, concealment, and grace under his control).\n\nComment: If we concentrate our mind on the Sadashiva Shakti for a year, we will attain the siddhi of Ishathuvam." }, { "song_number": 685, "padal": "ஆகின்ற சந்திரன் தன்னொளி யாயவன்\nஆகின்ற சந்திரன் தட்பமு மாயிடும்\nஆகின்ற சந்திரன் தன்கலை கூடிடில்\nஆகின்ற சந்திரன் தானவ னாமே.", "vilakam": "புருவ மத்தியிலுள்ள ஆக்ஞா சக்கரத்தில் பேரொளியைக் கண்ட யோகி அங்கே காணப் பெறுகின்ற சந்திரனது குளிர்ந்த ஒளியாவான். அதன்பின் அந்த சந்திர மண்டலத்தின் பகுதிகளான நெற்றி தலையின் முற்பக்கம், பிற்பக்கம், வலப்பக்கம், இடப் பக்கம், பிரமரந்திரம் ஆகிய அனைத்தையும் ஒவ்வொன்றாக உணர்ந்தால் இறுதியில் அந்த ஆக்ஞா சக்கரத்திலுள்ள சந்திரனாகவே மாறிவிடுவான்.\n\nகருத்து: சந்திர மண்டலத்தை உணர்ந்து பேரொளியைக் கண்டவன் சந்திரனாகவே மாறிவிடுவான்.", "vilakam_en": "The yogi who sees the light in the ajna chakra between the eyebrows becomes the cold light of the moon that is seen there. Then, if he perceives the parts of that lunar region, the front, back, right, left sides of the forehead, and the brahmaranda, one by one, he ultimately becomes the moon in that ajna chakra.\n\nComment: He who perceives the lunar region and sees the light becomes the moon." }, { "song_number": 686, "padal": "தானே படைத்திட வல்லவ னாயிடுந்\nதானே யளித்திட வல்லவ னாயிடுந்\nதானே சங்காரத் தலைவனு மாயிடுந்\nதானே யிவனெனுந் தன்மைய னாமே.", "vilakam": "ஈசத்துவம் பெற்றவர் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய தொழில்கள் அனைத்தையும் தன் ஆளுகைக்கு உட்பட்டுச் செய்யக்கூடியவர் ஆவார். அவ்வாறு முத்தொழில்களைச் செய்வதால் சதாசிவத்தின் தன்மையைப் பெறுவார்.\n\nகருத்து: ஈசத்துவம் சித்தியைப் பெற்றவர் சதாசிவத்தின் தன்மையைப் பெற்று முத்தொழில்களை செய்யக்கூடியவர் ஆவார்.", "vilakam_en": "A person who has attained the state of being is capable of performing all the activities of creation, preservation, and destruction under his control. By performing such three activities, he acquires the nature of Sadasiva.\n\nComment: A person who has attained the state of being is capable of performing the three activities by acquiring the nature of Sadasiva." }, { "song_number": 687, "padal": "தண்மைய தாகத் தழைத்த கலையினுள்\nபண்மைய தாகப் பரந்தஐம் பூதத்தை\nவன்மைய தாக மறித்திடில் ஓராண்டின்\nமென்மைய தாகிய மெய்ப்பொருள் காணுமே.", "vilakam": "புருவ மத்தியிலுள்ள குளிர்ச்சியான ஆக்ஞா சக்கரத்தின் பேரறிவின் மூலம் உடலெங்கும் பலவாறாக வியாபித்திருக்கின்ற ஐம்பூதங்களையும் கடினப்பட்டு கட்டுப்படுத்தி ஓராண்டு வைத்திருந்தால் அனைத்திற்கும் மேலான உண்மைப் பொருளாகிய சதாசிவத்தை உணரலாம்.\n\nகருத்து: பேரறிவின் மூலம் உடலிலுள்ள ஐம்பூதங்களையும் கட்டுப்படுத்தி ஓராண்டு வைத்திருந்தால் உண்மைப் பொருளை உணரலாம்.", "vilakam_en": "If you control the five elements that are spread throughout the body in various ways through the great wisdom of the cool Ajna Chakra between the eyebrows and keep it for a year, you can realize the supreme true object, the eternal Shiva.\n\nComment: If you control the five elements in the body through the great wisdom of the cool Ajna Chakra between the eyebrows and keep it for a year, you can realize the true object." }, { "song_number": 688, "padal": "மெய்ப்பொரு ளாக விளைந்தது வேதெனின்\nநற்பொரு ளாகிய நல்ல வசித்துவங்\nகைப்பொரு ளாகக் கலந்த உயிர்க்கெலாந்\nதற்பொரு ளாகிய தன்மைய னாகுமே.", "vilakam": "பாடல் #687 இல் உள்ளபடி உணர்ந்த உண்மைப் பொருளான சதாசிவம் எது என்று பார்த்தால் நல்ல வசித்துவம் எனும் சித்தியாகும். அவ்வாறு வசித்துவம் எனும் சித்தியை அடைந்தவர்கள் தன்னுடைய உயிர் எது என்று உணர்ந்தது போல எல்லா உயிர்களையும் உணர்ந்து தாமே சிவமாகி அந்த உயிர்களோடு கலந்து இருப்பார்கள்.\n\nகருத்து: வசித்துவம் எனும் சித்தி பெற்றவர்கள் சிவ தன்மையை அடைந்து அனைத்து உயிர்களோடும் கலந்து இருப்பார்கள்.", "vilakam_en": "If we look at what the true meaning of Sadasivam is, as stated in Song #687, it is the Siddhi of good Vasitvam. Those who have thus attained the Siddhi of Vasitvam will have realized all beings, just as they have realized what their own being is, and will have become Shiva and merged with those beings.\n\nComment: Those who have attained the Siddhi of Vasitvam will have attained the nature of Shiva and merged with all beings." }, { "song_number": 689, "padal": "தன்மைய தாகத் தழைத்த பகலவன்\nமென்மைய தாகிய மெய்ப்பொருள் கண்டிடின்\nபொன்மைய தாகப் புலன்களும் போயிட\nநன்மைய தாகிய நற்கொடி காணுமே.", "vilakam": "வசித்துவம் எனும் சித்தியைப் பெற்று சிவமாக மாறியபின் சூரியனைப் போன்ற பிராகாசத்துடன் விளங்கும் யோகி அனைத்திற்கும் மேலான உண்மைப் பொருளான சதாசிவத்தை தரிசித்தபின் உலகப் பற்றை விட்டது போலவே உடலின் ஐம்புலன்களின் பற்றையும் விட்டுவிட நன்மை தரும் சதாசிவத்தின் சக்தியை தரிசிக்கலாம்.\n\nகருத்து: வசித்துவம் எனும் சித்திபெற்ற யோகி ஐம்புலன்களின் மேலிருக்கும் பற்றை விட்டுவிட்டால் சதாசிவத்தின் சக்தியை தரிசிக்கலாம்.", "vilakam_en": "As mentioned in song #689, if one sees the power of Sadasiva and realizes that power within oneself and practices yoga for a year, then through the already acquired Vasitva Siddhi, one can not only travel to all worlds as one wishes, but also mix with all the beings in those worlds and attract those beings to oneself.\n\nComment: If one meditates on the power of Sadasiva for a year, one can attract the beings in all worlds to oneself." }, { "song_number": 690, "padal": "நற்கொடி யாகிய நாயகி தன்னுடன்\nஅக்கொடி யாகம் அறிந்திடில் ஓராண்டு\nபொற்கொடி யாகிய புவனங்கள் போய்வருங்\nகற்கொடி யாகிய காமுக னாமே.", "vilakam": "பாடல் #689 இல் உள்ளபடி சதாசிவத்தின் சக்தியைத் தரிசித்தபின் அச்சக்த்தியைத் தனக்குள்ளேயே உணர்ந்து அதிலேயே மனதை வைத்து ஒரு வருடம் யோகப் பயிற்சி செய்தால் ஏற்கனவே பெற்ற வசித்துவ சித்தியின் மூலம் எல்லா உலகங்களுக்கும் தன் விருப்பம் போல சென்று வருவது மட்டுமின்றி அவ்வுலகங்களில் இருக்கும் எல்லா உயிர்களோடும் கலந்து அந்த உயிர்களை தன்வசம் ஈர்க்கவும் முடியும்.\n\nகருத்து: சதாசிவ சக்தியை ஒரு வருடம் தியானம் செய்தால் எல்லா உலகங்களிலுள்ள உயிர்களையும் தன்வசப்படுத்த முடியும்.", "vilakam_en": "As mentioned in song #689, if one sees the power of Sadasiva and realizes that power within oneself and practices yoga for a year, then through the already acquired Vasitva Siddhi, one can not only travel to all worlds as one wishes, but also mix with all the beings in those worlds and attract those beings to oneself.\n\nComment: If one meditates on the power of Sadasiva for a year, one can attract the beings in all worlds to oneself." }, { "song_number": 691, "padal": "காமரு தத்துவ மானது வந்தபின்\nபூமரு கந்தம் புவனம தாயிடும்\nமாமரு வுன்னிட மெய்திடு மானனாய்\nநாமரு வும்ஒளி நாயக மானதே.", "vilakam": "பாடல் #690 இல் உள்ளபடி எல்லா உயிர்களையும் தன்வசப்படுத்தும் சக்தியைப் பெற்றபின் உயிர்களைத் தன் விருப்பத்திற்கேற்ப செயல்படுத்தி உலகத்தை மாற்றலாம். ஆனாலும் அனைத்தையும் தன்வசப்படுத்தும் பெருஞ்சக்தியான சதாசிவத்தை ஒளியாக தன் உள்ளத்தில் வைத்திருந்தால் அந்த ஒளியே நம்மை வசப்படுத்தும் சதாசிவமாகிவிடும்.\n\nகருத்து: வசித்துவம் சித்தி பெற்றவர் உலகத்தை தன் எண்ணத்திற்கேற்ப மாற்றும் ஆற்றலைப் பெறுவார்.", "vilakam_en": "As stated in Song #690, after acquiring the power to control all beings, one can manipulate beings according to one's will and change the world. However, if one keeps the great power of Sadasiva, which controls everything, as light in one's heart, that light will become the Sadasiva that controls us.\n\nComment: One who has attained Vasitva Siddhi will acquire the power to change the world according to one's will." }, { "song_number": 692, "padal": "நாயக மாகிய நல்லொளி கண்டபின்\nதாயக மாகத் தழைத்தங் கிருந்திடும்\nபோயக மான புவனங்கள் கண்டபின்\nபேயக மாகிய பேரொளி காணுமே.", "vilakam": "பாடல் #691 இல் உள்ளபடி சதாசிவமாகிய ஒளியை உணர்ந்தபின் ஆன்மாவின் பிறப்பிடமாகிய சதாசிவம் தமக்குள்ளேயே தழைத்து இருக்கும். உலகப் பற்றுகள் அனைத்தும் தம்மை விட்டு விலகுவதைக் உணர்ந்தபின் தமக்குள் இருக்கும் இருள் அனைத்தையும் விலக்கும் பேரொளியைக் காணலாம்.\n\nகருத்து: உலகப் பற்றுகள் தம்மை விட்டு விலகுவதை உணர்ந்தபின் அனைத்து இருளையும் அகற்றும் பேரொளியைத் தரிசிக்கலாம்.", "vilakam_en": "As stated in Song #691, after realizing the light that is eternal Shiva, the origin of the soul, will flourish within oneself. After realizing that all worldly attachments have left one, one can see the great light that dispels all the darkness within oneself.\n\nComment: After realizing that all worldly attachments have left one, one can see the great light that dispels all the darkness." }, { "song_number": 693, "padal": "பேரொளி யாகிய பெரியஅவ் வேட்டையும்\nபாரொளி யாகப் பதைப்பறக் கண்டவன்\nதாரொளி யாகத் தரணி முழுதுமாம்\nஓரொளி யாகிய காலொளி காணுமே.", "vilakam": "சகஸ்ரதளத்தின் மேலே இருக்கும் பெரிய தாமரை மலர் போன்ற பேரொளியைத் தரிசிக்கக் கூடிய சக்தியைப் பெற்றவன் தனது மூச்சுக்காற்று ஒரு ஒளியாக மாறி அது பிரபஞ்சம் முழுவதும் பரவியிருப்பதைக் காண முடியும்.\n\nகருத்து: பேரொளியைத் தரிசிக்கும் சக்தியுடையவன் தனது மூச்சுக்காற்றை பிரபஞ்சம் முழுவதும் பரவும் ஒளியாகக் காண முடியும்.", "vilakam_en": "One who has the power to see the great light like a large lotus flower above the sahasratala can see his breath becoming a light that spreads throughout the universe.\n\nComment: One who has the power to see the great light can see his breath as a light that spreads throughout the universe." }, { "song_number": 694, "padal": "காலோ டுயிருங் கலக்கும் வகைசொல்லிற்\nகாலது அக்கொடி நாயகி தன்னுடன்\nகாலது ஐஞ்ஞூற் றொருபத்து மூன்றையும்\nகாலது வேமண்டிக் கொண்டஇவ் வாறே.", "vilakam": "மூச்சுக்காற்றோடு உயிர் கலக்கும் முறை என்னவென்றால் உடம்பில் மொத்தம் உள்ளதாக யோக நூல்கள் கூறும் எழுபதாயிரம் நாடிகளில் ஐநூறு நாடிகள் சிறப்பானவை. இவற்றில் பத்து நாடிகள் மிகவும் சிறப்பானவை (பாடல் #595 இல் உள்ளபடி). அதிலும் சிறப்பானவை இடைகலை, பிங்கலை, சுழுமுனை ஆகிய மூன்று நாடிகளாகும். இந்த ஐநூற்று பதிமூன்று நாடிகளும் சுழுமுனை நாடியிலிருக்கும் சிவசக்தியோடு கலந்து இருந்தால் மூச்சுக்காற்றோடு உயிர் கலந்து இருக்கும்.\n\nகருத்து: சிறப்பான ஐநூற்றி பதிமூன்று நாடிகளும் சிவசக்தியோடு கலந்திருந்தால் மூச்சுக்காற்றோடு உயிர் கலந்து இருக்கும்.", "vilakam_en": "The method of mixing life with breath is that out of the seventy thousand nadis that yoga texts say are present in the body in total, five hundred nadis are special. Of these, ten nadis are very special (as stated in song #595). The three nadis that are especially special are the Ida Kalai, Pingalai, and Suzumunai. If all these five hundred and thirteen nadis are mixed with the Shiva energy present in the Suzumunai Nadi, life will be mixed with breath.\n\nComment: If all the five hundred and thirteen special nadis are mixed with Shiva energy, life will be mixed with breath." }, { "song_number": 695, "padal": "ஆறது வாகும் அமிர்தத் தலையினுள்\nஆறது ஆயிர முந்நூற் றொடைஞ்சுள\nஆறது வாயிர மாகு மருவழி\nஆறது வாக வளர்ப்ப திரண்டே.", "vilakam": "தலைக்கு உள்ளே ஆறு போல உண்டாகின்ற அமுதம் ஆயிரத்து முந்நூற்று ஐந்து நரம்புத் தொகுதிகள் வழியாக செல்கின்றன. அவ்வாறு செல்லும் அமுதம் அந்த நரம்புத் தொகுதிகளின் மறுபகுதியில் உள்ள சகஸ்ரதளத்தை அடைந்து உயிரை பக்குவப்படுத்தி மேல்நிலைக்கு கொண்டு செல்வது சிவசத்திகளே ஆகும்.\n\nகருத்து : சிவசக்திகளே அமுதத்தை நரம்புத்தொகுதிகளின் வழியாக சகஸ்ரதளத்திற்கு கொண்டு சென்று உயிரை பக்குவப்படுத்துகிறார்கள்.", "vilakam_en": "The nectar that flows like a river inside the head passes through one thousand three hundred and five nerve blocks. The nectar that passes through that way reaches the Sahasratala on the other side of those nerve blocks and matures the life and takes it to the higher level.\n\nComment: It is the Shiva Shaktis who carry the nectar through the nerve blocks to the Sahasratala and matures the life." }, { "song_number": 696, "padal": "இரண்டினின் மேலே சதாசிவ நாயகி\nஇரண்டது கால்கொண் டெழுவகை சொல்லில்\nஇரண்டது ஆயிரம் ஐம்பதொ டொன்றாய்த்\nதிரண்டது காலம் எடுத்தது அஞ்சே.", "vilakam": "இடைகலை பிங்கலை நாடிகளின் மேல் சுழுமுனைத் தலையில் இருக்கும் சிவசத்தி இடைகலை பிங்கலை இரண்டு நாடிகள் வழியாக மூச்சுக்காற்று செயல் புரிகின்ற முறையைக் கூறினால் உடலில் உள்ள மண்டலங்களையும் நரம்புத் தொகுதிகளையும் தாண்டி ஆறு சக்கரங்களில் உள்ள ஐம்பத்தொன்று கைகள் வழியாக கலந்து ஆயிரம் தாமரை இதழ்களைக் கொண்ட சகஸ்ரதளத்தை அடைகின்றன. காலத்தைக் கடப்பதற்குத் துணை செய்வது ஐம்முகச் சக்தி ஆகும். இந்நிலையில் உயிரின் காலத்தைக் கடக்கச் செய்வதும் ஐம்முகங்களோடு கூடிய சதாசிவனின் நாயகியாகும்.", "vilakam_en": "If we talk about the way in which the breath works through the two nadis of the Idaikal Pingala, the Shivasatti, which is located at the top of the spiral head, crosses the zones and nerve groups in the body, mixes with the fifty-one hands in the six chakras, and reaches the Sahasratala, which has a thousand lotus petals. The five-faced power helps in overcoming time. In this case, the heroine of Sadashiva with the five faces also helps in overcoming the time of life." }, { "song_number": 697, "padal": "அஞ்சுடன் அஞ்சு முகமுள நாயகி\nஅஞ்சுடன் அஞ்சது வாயுத மாவது\nஅஞ்சது வன்றி இரண்டது வாயிரம்\nஅஞ்சது காலம் எடுத்தருளும் ஒன்றே.", "vilakam": "பத்துத் திசைகளையும் பத்து முகங்களாகக் கொண்டிருக்கும் சதாசிவசக்திக்கு உயிரின் மூச்சிக்காற்றுடன் உடலில் இருக்கும் பத்து வாயுக்களும் பத்து ஆயுதங்களாகும். இந்த பத்து ஆயுதங்களும் கீழே பார்த்த சகஸ்ரதளம் மேலே பார்த்த சகஸ்ரதளம் என்று இரண்டு ஆயுதங்களான அச்சக்தியுடன் உருவமற்ற நிலையில் ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலராக இருக்கும் சகஸ்ரார தளத்தில் என்றும் ஒடுங்கியே இருந்து பலகாலங்கள் பேரின்பத்தில் திளைத்திருக்க வைத்து அருளுவது சதாசிவமூர்த்தியாகிய ஒரு சக்தியே ஆகும்.\n\nகருத்து: ஆயிரம் இதழ்கள் கொண்ட மலர்ந்த தாமரை மலராத தாமரை ஆகிய இரண்டுவித சக்திகளையும் பத்து திசைகளாகிய முகங்களையும் பத்து வாயுக்களாகிய ஆயுதங்களையும் கொண்டிருக்கும் சதாசிவமூர்த்தியாகிய இறை சக்தி ஒன்றுதான் எட்டுவிதமான சித்திகள் அடைந்தவர்களுக்கு அனைத்தையும் அருளுகின்றது.\n\nபத்துவித காற்றுக்கள்:", "vilakam_en": "The Sadashiva Shakti, who has ten faces in the ten directions, along with the breath of life, and the ten winds in the body, are ten weapons. These ten weapons, the Sahasrara floor seen from below and the Sahasrara floor seen from above, are the two weapons of that power, which are the formless Sahasrara floor, which is a lotus flower with a thousand petals, and which remains in a state of bliss for many ages, are bestowed by the one power, the Sadashiva Murthy.\n\nComment: The divine power, the Sadashiva Murthy, who has two types of powers, the blooming lotus with a thousand petals and the unblooming lotus, the faces of the ten directions and the weapons of the ten winds, bestows everything on those who have attained eight types of siddhis.\n\nThe ten types of winds:" }, { "song_number": 698, "padal": "ஒன்றது வாகிய தத்துவ நாயகி\nஒன்றது கால்கொண்டு ஊர்வகை சொல்லிடில்\nஒன்றது வென்றிகொள் ஆயிரம் ஆயிரம்\nஒன்றது காலம் எடுத்தருளும் முன்னே.", "vilakam": "தனக்கு நிகராக ஒன்றும் இல்லாமல் தானே தனிப்பொருளாய் இருக்கும் இறை சக்தியானது ஒன்றே ஆகும். அந்த சக்தி மூச்சுக்காற்றை இயக்கி யோக நிலையில் நடுநாடியாகிய ஒன்றன் வழியே செலுத்தி மேல் ஏறுகின்ற முறையைக் கூறினால் உள்ளிழுக்கும் மூச்சுக்காற்று ஆயிரமாயிரம் நாடி நரம்புகளைக் கடந்து உடல் முழுவதற்கும் சக்தியூட்டி அதில் ஒவ்வொரு சக்கரங்களாக வெற்றி கொண்டு மேலெழுந்து அங்கே சுழுமுனை நாடியில் கவிழ்ந்த சகஸ்ரதளத்தை நிமிர்ந்த சகஸ்ரதளமாய் மாற்றி அமைத்து காலத்தையும் கடக்கச் செய்யும்.", "vilakam_en": "The divine energy, which is a unique entity without any equal to itself, is one and the same. If we talk about the method by which that energy directs the breath and directs it through the middle nadi in a yogic state and ascends, the inhaled breath will pass through thousands of nadi nerves and energize the entire body, conquer each of the chakras in it, rise up, and there, at the apex of the nadi, transform the inverted sahasratala into an upright sahasratala, thereby allowing time to pass." }, { "song_number": 699, "padal": "முன்னெழும் அக்கலை நாயகி தன்னுடன்\nமுன்னுறு வாயு முடிவகை சொல்லிடின்\nமுன்னுறும் ஐம்பத்தொ டொன்றுடன் அஞ்சுமாய்\nமுன்னுறு வாயுவின் முடிவகை யாமே.", "vilakam": "தலையுச்சியின் முன்னே வீற்றிருக்கும் இறைசக்தியுடன் கீழிருந்து மேலெழுந்து சென்ற மூச்சுக்காற்று ஒன்றாகச் சேர்ந்து கலக்கும் விதத்தை சொன்னால் அடியிலிருந்து சுழுமுனை நாடி வழியே மேலே எழும்பும் வாயுவானது உயிர் சக்தியாகிய குண்டலினியை எழுப்பி மூலாதாரத்திலிருந்து ஒவ்வொரு சக்கரங்களாக அவற்றின் ஐம்ப்தத்தோரு இதழ்களின் வழியே சக்தியூட்டி (பாடல் #696 இல் கொடுத்துள்ளபடி) ஐந்து புலன்களுக்கும் செயல் திறனை அளித்து மொத்தமாய் மேலே சென்று அங்கிருக்கும் சகஸ்ரார தளத்தில் முடிவடைகின்றது. உயிர்சக்தி அங்கிருக்கும் இறை சக்தியோடு கலக்கும் முறை இதுவே ஆகும்.", "vilakam_en": "If we talk about the way the breath that has risen from below and the divine energy that is present in front of the head is mixed together, the air that rises from the bottom through the Vajramuna Nadi awakens the life force, Kundalini, and energizes it from the root to each of the chakras through their fifty-one petals (as given in song #696), giving the five senses the ability to function, and then goes up altogether and ends at the Sahasrara level there. This is the way the life force mixes with the divine energy there." }, { "song_number": 700, "padal": "ஆய்வரும் அத்தனி நாயகி தன்னுடன்\nஆய்வரு வாயு அளப்பது சொல்லிடில்\nஆய்வரும் ஐஞ்ஞூற்று முப்பதொ டொன்பது\nஆய்வரு வாயு வளப்புள் ளிருந்ததே.", "vilakam": "ஆராய்ந்து அறிந்து கொள்ளுவதற்கு முடியாத தலைவியாகிய ஆதிசக்தியுடனும் ஆராய்ந்து அறிந்து கொள்ள முடியாத குண்டலினி சக்தியுடனும் வாயு ஒன்றாகக் கலக்கும் அளவு எவ்வளவு என்று சொன்னால் உயிர்கள் தமக்குள் இழுக்கப்படும் மூச்சுக்காற்றில் 540 அளவுகளில் 539 அளவு உடலின் சக்தியூட்டத்திற்கு பயனாகி மீதியிருப்பது ஒரு அளவே ஆகும். அந்த ஒரு அளவு வாயு மட்டும் உடலின் உள்ளிருந்து மேலே சென்று அங்கிருக்கும் இறை சக்தியோடு கலக்கின்றது.", "vilakam_en": "If we were to say how much air mixes with the unsearchable primal energy, the unsearchable and unknowable Kundalini energy, then out of the 540 breaths that are inhaled by living beings, 539 are used to energize the body, leaving only one. That one amount of air goes up from within the body and mixes with the divine energy there." }, { "song_number": 701, "padal": "இருநிதி யாகிய எந்தை யிடத்து\nஇருநிதி வாயு இயங்கு நெறியில்\nஇருநூற்று முப்பத்து மூன்றுடன் அஞ்சாய்\nஇருநிதி வாயு இயங்கும் எழுத்தே.", "vilakam": "பாடல் 700 ல் உள்ளபடி சகஸ்ர தளத்தில் வீற்றிருக்கும் எம் தந்தையாகிய இறைவனிடத்தில் சென்று சேரும் ஒரு பங்கு காற்றின் அளவு உயிர்களின் உடலில் இருக்கும் இருநூற்று முப்பத்து மூன்று நாடிகளில் பரவிச்சென்று சகஸ்ர தளத்திலுள்ள ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலரை மலரச் செய்து சங்கமமாகி விடுகின்றது. சங்கமமானதும் நமசிவாய என்னும் ஐந்து எழுத்து மந்திரமாய் சகஸ்ர தளத்தை இயங்குகிறது.\n\nகருத்து: சிவசக்தியாய் இருக்கும் சகஸ்ரதளத்தில் கலக்கும் ஒரு பங்கு காற்று நமசிவாய என்னும் மந்திரமாய் செயல்பட்டு தவத்தால் அடையக்கூடிய அட்டமா சித்திகளை இயக்குகிறது.", "vilakam_en": "As stated in Song 700, a portion of the air that reaches our Father, the Lord, who is seated on the Sahasra platform, spreads through the two hundred and thirty-three nadis in the bodies of living beings, causing the thousand-petalled lotus flower on the Sahasra platform to bloom and becoming a confluence. The confluence also operates the Sahasra platform as the five-letter mantra Namasivaya.\n\nComment: A portion of the air that mixes with the Sahasra platform, which is the power of Shiva, acts as the mantra Namasivaya and activates the Atma Siddhis that can be achieved through penance." }, { "song_number": 702, "padal": "எழுகின்ற சோதியுள் நாயகி தன்பால்\nஎழுகின்ற வாயு இடமது சொல்லில்\nஎழுநூற் றிருபத் தொன்பா னதுநாலாய்\nஎழுந்துடன் அங்கி இருந்ததிவ் வாறே.", "vilakam": "பாடல் 700 ல் உள்ளபடி மூலாதாரத்தில் ஜோதி வடிவமாக இருக்கும் சக்தியுடன் ஓர் பங்கு மூச்சுக்காற்று கலக்கும். அந்த மூச்சுக்காற்று எழும் இடத்தை சொன்னால் எழுநூற்று இருபத்து ஒன்பது நாடிகள் வழியாக நான்கு இதழ்களைக் கொண்ட மூலாதாரச் சக்கரத்தின் அக்கினியோடு இருந்தவாறே ஆரம்பிக்கின்றது.\n\nகருத்து: நான்கு இதழ்களாக இருக்கின்ற மூலாதார சக்கரத்தில் இருந்து எழுநூற்று இருபத்து ஒன்பது நாடிகளின் வழியாக ஓர் பங்கு காற்று மூலாதாரத்தில் ஜோதி வடிவமாக இருக்கும் சக்தியுடன் கலக்கிறது.\n\nகுறிப்பு: பாடல் #700ல் உள்ளபடி ஓர் பங்கு மூச்சுக்காற்று பாடல் #701ல் தலை உச்சியில் இருக்கும் சகஸ்ரதளத்தோடு மூச்சுக்காற்று கலக்கும் விதத்தை சொன்ன திருமூலர் இப்பாடலில் கீழே இருக்கும் மூலாதார சக்கரத்தில் மூச்சுக்காற்று கலக்கும் விதத்தை கூறுகிறார்.", "vilakam_en": "As stated in song 700, a portion of the breath mixes with the energy in the form of a torch at the source. If we talk about the place where that breath arises, it starts with the fire of the four-petaled Mooladhara Chakra through seven hundred and twenty-nine nadis.\n\nComment: From the four-petaled Mooladhara Chakra, a portion of the air mixes with the energy in the form of a torch at the source.\n\nNote: As stated in song #700, a portion of the breath mixes with the energy in the form of a torch at the source.\n\nNote: Thirumoolar, who in song #701 talked about the way in which the breath mixes with the sahasratala at the top of the head, in this song talks about the way in which the breath mixes with the mooladhara chakra at the bottom." }, { "song_number": 703, "padal": "ஆறது கால்கொண் டிரதம் விளைத்திடும்\nஏழது கால்கொண் டிரட்டி இறக்கிட\nஎட்டது கால்கொண் டிடவகை யொத்தபின்\nஒன்பது மாநிலம் ஒத்தது வாயுவே.", "vilakam": "உயிரின் உடலாகிய தேருக்கு ஆறு ஆதாரச் சக்கரங்கள் இருக்கின்றன. இந்த ஆறு ஆதாரச் சக்கரங்களின் வழியே சக்தியூட்டப்பட்ட வாயு ஏழாவது ஆதாரமான சகஸ்ரதளத்திற்கு சென்று அங்கிருக்கும் இறைசக்தியோடு கலந்தபின் உருவாகின்ற அமிர்தம் அங்கிருந்து கீழிறங்கி எட்டாவது இடமாகிய உள் நாக்கிற்கு மேலே வந்து விழுகின்றது. இவ்வாறு விழுகின்ற அமிர்தத்தைப் பருகிக்கொண்டே பேரின்பத்தில் திளைத்திருக்கும் போது மாபெரும் நிலம் போன்ற உடலின் ஒன்பது துவாரங்களும் மூச்சுக்காற்றோடு இணைந்து இருக்கின்றது.\n\nகருத்து: அமிர்தத்தைப் பருகி வாழ்பவர்களுக்கு உணவோ தண்ணீரோ தேவைப்படுவதில்லை. அவர்கள் அமிர்தத்தை மட்டுமே பருகிக்கொண்டு ஒன்பது துவாரங்களின் வழியாக வெளிக்காற்றோடு இணைந்திருக்கின்றார்கள்.", "vilakam_en": "The chariot, which is the body of the living being, has six supporting chakras. Through these six supporting chakras, the energized air goes to the seventh base, the sahasratala, and mixes with the divine energy there. From there, the nectar that is formed descends and falls to the eighth place, the inner tongue. While drinking the nectar that falls in this way and is immersed in bliss, the nine orifices of the body, which are like the vast earth, are connected to the breath.\n\nComment: Those who drink nectar do not need food or water. They drink only nectar and are connected to the outside air through the nine orifices." }, { "song_number": 704, "padal": "சந்திரன் சூரியன் தற்பரன் தாணுவிற்\nசந்திரன் தானுந் தலைப்படுந் தன்மையைச்\nசந்தியி லேகண்டு தானாஞ் சகமுகத்\nதுந்திச் சமாதி யுடையொளி யோகியே.", "vilakam": "சந்திரகலையாகிய இடகலை நாடியின் வழியே செல்லும் மூச்சுக்காற்றும் சூரியகலையாகிய பிங்கலை நாடியின் வழியே செல்லும் மூச்சுக்காற்றும் சுழுமுனை நாடி வழியே மேலே சென்று சிவபெருமான் இருக்கும் சகஸ்ரதளத்தில் இணைவதை புருவமத்தியில் இருக்கும் ஆக்ஞா சக்கரத்தில் பார்த்து அதிலேயே லயித்து தன்னுடல் மேலும் இந்த உலகத்தின் மேலும் உள்ள பற்றுக்களை அறுத்து பேரொளியாகிய இறைவனையே நினைத்து சமாதி நிலையில் இருப்பவர்கள் சிவ யோகியர்கள் ஆவார்கள்.\n\nகருத்து: தனக்குள்ளே இறைவனை தரிசித்து இறை நினைப்போடு பற்றுக்களை அறுத்து சமாதி நிலையில் இருப்பவர்கள் சிவ யோகியர்கள்.", "vilakam_en": "Those who see the breath passing through the Itakalai Nadi, the lunar energy, and the breath passing through the Pingala Nadi, the solar energy, ascending through the Suzumunai Nadi and merging with the Sahasratha, where Lord Shiva is, in the Ajna Chakra located between the eyebrows, and become absorbed in it, severing their attachments to themselves and this world, and thinking of the Lord, the great light, and remaining in the state of samadhi, are Shiva Yogis.\n\nComment: Those who see the Lord within themselves, severing their attachments with the thought of God, and remaining in the state of samadhi, are Shiva Yogis." }, { "song_number": 705, "padal": "அணங்கற்ற மாதல் அருஞ்சன நீவல்\nவணங்குற்ற கல்விமா ஞான மிகுத்தல்\nசிணுங்குற்ற வாயர்தம் சித்தி தாம்கேட்டல்\nநுணங்கற் றிருத்தல் கால்வேகம் நுந்தலே.", "vilakam": "உற்றார் உறவினர் சுற்றத்தார் ஆகியோரை விட்டு நீங்கி இருப்பதும் பணிவை தருகின்ற உண்மையான கல்வியால் வருகின்ற ஞானத்தை அதிகமாகக் கொண்டிருப்பதும் எதையும் முணுமுணுக்காமல் உண்மையான மெளனத்தோடு அடங்கிக் கிடக்கும் சித்தர்கள் எண்ணத்தால் போதித்தவற்றை தமக்குள்ளேயே கேட்டுக்கொண்டிருப்பதும், உலக விஷயங்களில் அலைபாயாமல் ஒருமுகப்பட்ட மனதைக் கொண்டு எப்போதும் மூச்சுக்காற்றை தமக்குள்ளேயே வேகமாக ஏற்றி இறக்கி தியானத்தில் இருப்பதும் சித்தர்களின் செயல்களாகும்.\n\nகருத்து: உலக விஷயங்களில் எதிலும் தலையிடாமல் எதனாலும் பாதிக்காத மனதுடன் குரு போதித்ததை தமக்குள்ளேயே உணர்ந்து மெளனமாய் இருப்பதும் தியானம் செய்து மூச்சுக்காற்றை கவனித்துக்கொண்டு இருப்பவர்களே சித்தர்கள்." }, { "song_number": 706, "padal": "மரணஞ் சரைவிடல் வண்பர காயம்\nஇரணஞ் சேர்பூமி இறந்தோர்க் களித்தல்\nஅரணன் திருவுரு வாதன்மூ வேழாங்\nகரனுறு கேள்வி கணக்கறிந் தோனே.", "vilakam": "பாடல் #705 ல் கூறியுள்ள ஆறு தகுதிகளுடன் முதுமை அடையாமல் மரணம் இல்லாத தன்மையைப் பெறுதலும் எங்கிருந்தாலும் எப்போதும் அருள் வெளியோடு கலந்திருத்தலும் இந்த உலகத்தில் இருப்பவர்களுக்கு பலவித நற்செயல்கள் செய்து பெற்ற பலன்களை பித்ருக்களுக்கு சமர்ப்பணமாக அளித்தலும் சிவபெருமானை உணர்ந்து அவனது திருவுருவமாகவே மாறுவதும் ஆகிய மொத்தம் பத்து வித தகுதிகளை பலவித யோகங்கள் மூலமாக கற்று தமது கையில் இருக்கும் பொருள் போலத் தெள்ளத் தெளிவாக உணர்ந்தவர்களே சித்தர்கள் ஆவார்கள்.\n\nகருத்து: யோகமுறைகளை முறையாகக் கற்று உணர்ந்து பத்துவிதமான தகுதிகளை அடைந்தவர்களே சித்தர்கள் ஆவார்கள்.", "vilakam_en": "Siddhas are those who have learned ten qualities through various forms of yoga and have realized them as clearly as if they were objects in their hands, namely, attaining the six qualities mentioned in Song #705, attaining immortality without aging, always being in communion with the divine realm wherever they are, offering the fruits of various good deeds to those in this world as offerings to the Pitrus, and realizing Lord Shiva and becoming his divine form.\n\nComment: Siddhas are those who have learned and realized the ten qualities through various forms of yoga and have realized them as clearly as if they were objects in their hands." }, { "song_number": 707, "padal": "ஓதம் ஒலிக்கும் உலகை வலம்வந்து\nபாதங்கள் நோவ நடந்தும் பயனில்லை\nகாதலில் அண்ணலைக் காண இனியவர்\nநாதன் இருக்கின்ற நகரறி வாரே.", "vilakam": "இறைவனைக் காண வேண்டுமென்று ஓயாமல் அலைகள் அடித்துக் கொண்டிருக்கும் கடல்கள் சூழ்ந்த இந்த உலகம் முழுவதையும் தனது பாதங்கள் வலிக்கும் வரை நடந்து தேடினாலும் ஒரு பயனும் இருக்காது. பார்க்கும் அனைத்தையும் இறைவனாக பார்த்து அந்த இறைவன் மீது உண்மையான அன்பை செலுத்துபவர்கள் சித்திகளை அடைந்து தமது உள்ளமாகிய திருக்கோயிலேயே இறைவன் வீற்றிருக்கின்றான் என்பதை அறிந்து கொள்வர்கள்.\n\nகருத்து: இறைவனை வெளியில் எங்கு தேடினாலும் காண முடியாது. உண்மையான அன்பால் தேடினால் கண்டு கொள்ளலாம்.", "vilakam_en": "It will be of no use even if one walks the entire world, surrounded by endlessly pounding oceans, until one's feet ache in search of God. Those who see everything they see as God and have true love for that God attain the siddhis and realize that God resides within their innermost self.\n\nComment: God cannot be found anywhere outside. If one searches with true love, one can find him." }, { "song_number": 708, "padal": "மூல முதல்வேதா மாலரன் முன்னிற்கக்\nகோலிய ஐம்முகன் கூறப் பரவிந்து\nசாலப் பரநாதம் விந்துத் தனிநாதம்\nபாலித்த சத்தி பரைபரன் பாதமே.", "vilakam": "மூலாதாரத்தில் வீற்றிருந்து வேதங்களை ஓதிக்கொண்டே இருக்கின்ற பிரம்மனும் சுவாதிட்டானத்தில் வீற்றிருக்கின்ற திருமாலும் மணிப்பூரகத்தில் வீற்றிருக்கின்ற உருத்திரனும் அநாகதத்தில் வீற்றிருக்கின்ற மகேஸ்வரனும் விசுத்தியில் வீற்றிருக்கின்ற சதாசிவனும் ஆக்ஞையில் வீற்றிருக்கின்ற ஒளியும் சகஸ்ரரத்தில் வீற்றிருக்கின்ற ஒலியும் அதைத்தாண்டி உள் நாக்கிற்கு மேலே அமிர்தம் கொட்டுகின்ற இடத்தில் வீற்றிருக்கும் பரஒளியும் தலை உச்சியிலிருந்து 12 அங்குலம் உயரத்தில் உள்ள துவாதசாந்த வெளியில் வீற்றிருக்கும் பரஒலியும் ஆகிய இந்த ஒன்பதுவிதமான சக்திகளும் அசையா சக்தி (பரன்-சிவம்) அசையும் சக்தி (பரை-சக்தி) என்று இரண்டாக விளங்கும் பராபரையின் திருவடிகளே ஆகும்.\n\nகருத்து: உயிர்களின் உடலின் ஆறு ஆதாரச் சக்கரங்களில் சக்திமயமாகவும் ஏழாவது சக்கரத்தில் ஒளிமயமாகவும் எட்டாவதாக அமிர்தம் பொழிகின்ற இடத்தில் பரஒளியாகவும், ஒன்பதாவதாக தலையைத் தாண்டிய துவாதசாந்த வெளியில் பரஒலியாகவும் இருக்கின்ற மூர்த்திகள் அனைவரும் பராபரை எனும் ஆதிமூலசக்தியின் திருவடிவங்களே ஆகும்.", "vilakam_en": "Brahma, who sits on the Muladhara and recites the Vedas, Tirumala, who sits on the Swadittanam, Rudra, who sits on the Manipuraka, Maheswara, who sits on the Anagatha, Sadashiva, who sits on the Vishuddhi, the light, who sits on the Ajna, the sound, who sits on the Sahasrara, the Paraoli, who sits on the inner tongue, where the nectar flows, and the Paraoli, who sits on the Dvadashanta space, 12 inches above the top of the head, these nine types of powers are the three feet of Paraparai, who is divided into two: the immobile power (Paran-Shiva) and the mobile power (Parai-Shakti).\n\nComment: In the six basic chakras of the body of living beings, the power is in the eighth chakra, the light in the seventh chakra, the light in the eighth chakra, the place where the nectar flows, and the ninth, the paraoli, who sits on the ninth chakra.All the deities who exist in the ethereal space beyond the head and are also para-olysmic are the divine forms of the primordial energy called Paraparai." }, { "song_number": 709, "padal": "ஆதார யோகத் ததிதே வொடுஞ்சென்று\nமீதான தற்பரை மேவும் பரனொடு\nமேதாதி யீரெண் கலைசெல்ல மீதொளி\nஓதா அசிந்தமீ தானந்த யோகமே.", "vilakam": "யோகத்தின் மூலம் குண்டலினி சக்தியை மேலெழுப்பி மூலாதாரம் முதலிய ஆறு ஆதார சக்கரங்களிலும் வீற்றிருக்கும் மூர்த்திகளோடும் கலந்து சென்று அதற்கு மேலே இருக்கும் சகஸ்ரதளத்தில் வீற்றிருக்கும் சதாசிவமூர்த்தியோடு இணைந்து அமிர்தமாகி தலை உச்சியிலிருந்து நான்கு அங்குலத்திற்குக் கீழே இருக்கும் உள் நாக்கில் பரஒளியாகிய அசையும் சக்தியுடன் கலந்து அதன்பிறகு தலை உச்சியிலிருந்து பன்னிரண்டு அங்குலத்திற்கு மேலே இருக்கும் துவாதசாந்த வெளியில் இருக்கும் பரநாதமாகிய அசையா சக்தியோடு இரண்டறக் கலந்து இருப்பதே பேரின்பம் கொடுக்கும் ஆனந்த யோகமாகும்.\n\nகருத்து: குண்டலினி சக்தியை ஏழு சக்கரங்களுக்கும் ஏற்றிச் சென்று எட்டாவது நிலையில் அமிர்தமாகி ஒன்பதாவது நிலையில் இறைவனோடு கலந்து இருப்பதே பேரின்பம் கொடுக்கும் ஆனந்த யோகமாகும்.", "vilakam_en": "Through yoga, the Kundalini energy is raised and mixed with the deities seated in the six adha chakras, including the root chakra, and then combined with the Sadashiva deity seated on the sahasratala above it, becoming nectar, and then mixed with the moving energy, which is the light of the sky, in the inner tongue, four inches below the crown of the head, and then mixed with the immobile energy, which is the paranatha, twelve inches above the crown of the head.\n\nComment: The Ananda Yoga that gives bliss is the Kundalini energy that raises to all seven chakras, becomes nectar in the eighth level, and merges with God in the ninth level." }, { "song_number": 710, "padal": "மதியமும் ஞாயிறும் வந்துடன் கூடித்\nதுதிசெய் பவரவர் தொல்வா னவர்கள்\nவிதியது செய்கின்ற மெய்யடி யார்க்குப்\nபதியது காட்டும் பரமன்நின் றானே.", "vilakam": "குளிர்ச்சியான சந்திரனின் குணம் கொண்ட இடகலை மற்றும் வெப்பமான சூரியனின் குணம் கொண்ட பிங்கலை ஆகிய நாடிகளின் வழியே உள்ளிழுத்த மூச்சுக்காற்றுகளை சுழுமுனை நாடிவழியே ஒன்றாகச் சேர்த்து மேலெழுப்பிச் சென்று சகஸ்ரதளத்தில் வீற்றிருக்கும் இறைவனிடம் ஒன்றாகக் கலக்கும் படி செய்யும் அகயோகத்தை செய்த யோகியர்களே வானத்தில் வீற்றிருக்கும் பழம்பெரும் தேவர்களாகிறார்கள். இந்த அகயோகத்தை உண்மையாக கடைபிடித்து இருக்கும் சித்தர்களுக்கு அதையும் தாண்டிய ஆனந்த யோகத்தில் தன்னை அடையும் வழியைக் காட்டி அங்கே அவர்களுடன் கலந்து இறைவனும் நிற்கின்றான்.\n\nகருத்து: சுழுமுனை நாடி வழியே மூச்சுக்காற்றை மேலே சேர்க்கும் அகயோகத்தை செய்த யோகிகள் தேவர்களாகிறார்கள். அதையும் தாண்டி துவாதசாந்த வெளியில் இருக்கும் இறைவனோடு இணைகின்ற ஆனந்த யோகத்தை செய்த யோகிகள் இறைவனோடு இரண்டறக் கலந்துவிடுகிறார்கள்.", "vilakam_en": "Yogis who have practiced the inner yoga of bringing the breaths inhaled through the nadis of Itakala, which has the qualities of the cold moon, and the Pingala, which has the qualities of the hot sun, together through the Suzumunai nadi, and then raising them up and merging them with the Lord who is seated on the Sahasratala, become the ancient gods who sit in the sky. To the Siddhas who truly practice this inner yoga, the Lord also stands there, showing them the way to reach Him in the blissful yoga that goes beyond that.\n\nComment: Yogis who have practiced the inner yoga of bringing the breaths upwards through the Suzumunai nadi become gods. Yogis who have practiced the blissful yoga of uniting with the Lord who is beyond that, merge with the Lord who is in the Dvadashanta space, becoming one with the Lord." }, { "song_number": 711, "padal": "கட்டவல் லார்கள் கரந்தெங்குந் தானாவர்\nமட்டவிழ் தாமரை யுள்ளே மணஞ்செய்து\nபொட்டெழக் குத்திப் பொறியெழத் தண்டிட்டு\nநட்டுஅறி வார்க்கு நமனில்லை தானே.", "vilakam": "கீழ்நோக்கிச் செல்லும் மூச்சுக்காற்றை மேல்நோக்கி செல்ல வைத்து அதை சுழுமுனை நாடியோடு கட்டி வைக்கும் திறனைப் பெற்ற யோகியர்கள் அனைத்தும் தாமே என்பதை உணர்ந்து நிற்பார்கள். அதன்பின் சகஸ்ரதளத்தில் மலர்ந்த ஆயிரம் தாமரை இதழ்களின் மேலே வீற்றிருக்கும் இறைவனோடு மூச்சுக்காற்றை கலக்கவிட்டு அதை மீண்டும் கீழிறக்கி உள் நாக்கின் மேலே மூடியுள்ள துளையைக் குத்தி அதில் அமிர்தத்தை சுரக்க வைத்து அந்த அமிர்தத்தைப் பருகி தனது நடு நாடியாகிய சுழுமுனையிலேயே மூச்சுக்காற்றை நிறுத்தி வைக்க முடிந்த யோகியர்கள் இனி எப்போதும் இறந்து பிறவாத நிலையை அடைவார்கள்.\n\nகருத்து: அகயோகம் ஆனந்தயோகம் செய்த யோகியர்களுக்கு இறப்பும் பிறப்பும் இல்லை.", "vilakam_en": "Yogis who have acquired the ability to make the downward-flowing breath go upwards and tie it to the Sukhmunai Nadi will realize that they are all themselves. Then, mixing the breath with the Lord seated on the thousand lotus petals blooming on the Sahasratha, bringing it down again, piercing the hole covered above the inner tongue, causing the nectar to secrete, drinking that nectar, and stopping the breath at the Sukhmunai, their central nadi, will attain the state of never dying or being reborn.\n\nComment: Yogis who have practiced Akhayoga and Anandayoga have no death or birth." }, { "song_number": 712, "padal": "காதல் வழிசெய்த கண்ணுதல் அண்ணலைக்\nகாதல் வழிசெய்து கண்ணுற நோக்கிடிற்\nகாதல் வழிசெய்து கங்கை வழிதருங்\nகாதல் வழிசெய்து காக்குவது மாமே.", "vilakam": "தன்னை அடைவதற்கு உண்மையான அன்பை வழியாக வைத்த நெற்றிக்கண்ணையுடைய இறைவனை உண்மையான அன்போடு இருகண்களுக்கு நடுவே இருக்கும் சுழுமுணை நாடியின் உச்சியை நோக்கி தியானத்தில் இருந்தால் தலை உச்சியிலுள்ள சகஸ்ரதளத்தில் ஒளிப்பிரவாகமாக வீற்றிருக்கும் இறைவனைச் சென்றடையும் வழி கிடைக்கும். அந்த வழியை அன்போடு பின்பற்றி அடைந்து விட்டால் எப்போதும் பேரின்பத்தில் திளைத்து என்றும் அழியாமல் இறையருள் காத்து நிற்கும்.\n\nகருத்து: நாடிகளின் வழியே இறைவனை அடைவதற்கு உண்மையான அன்பு ஒன்றே வழியாகும்.", "vilakam_en": "If you meditate with true love on the Lord who has the eyes of the Lord, who has made true love the path to reach Him, towards the tip of the Shumuna Nadi between the two eyes, you will find the path to reach the Lord who is seated as a stream of light on the Sahasratala at the top of the head. If you follow that path with love and reach it, you will always be immersed in bliss and will never perish and will stand guard in the presence of God.\n\nComment: True love is the only path to reach God through the Nadi." }, { "song_number": 713, "padal": "காக்கலு மாகுங் கரணங்கள் நான்கையுங்\nகாக்கலு மாகுங் கலைபதி னாறையுங்\nகாக்கலு மாகுங் கலந்தநல் வாயுவுங்\nகாக்கலு மாகுங் கருத்துற நிற்றலே.", "vilakam": "உலக விஷயங்களை எண்ணாமல் ஒளி உருவமான இறைவனின் மேல் எப்போதும் எண்ணத்தை வைத்திருந்தால் இறைவனின் திருவருள் நமது நான்கு அந்தக்கரணங்களையும், பதினாறு கலைகளையும், மூச்சுக்காற்றோடு என்றும் கலந்து நின்று காத்தருளும்.\n\nகருத்து: இறைவனின் மேல் எண்ணம் வைத்து தியானிப்பவர்களை இறையருள் அனைத்திலிருந்தும் காத்து அருளும்.\n\nநான்கு அந்தக்கரணங்கள்:\n\nபதினாறு கலைகள் (நாடிகள்):\n\n1. மேதைக்கலை தொப்புள் முதல் மார்பு நடு இதயம் வரை இருக்கும்\n\n2. அருக்கீசக்கலை இதயம் முதல் தொண்டைக்குழிவரை இருக்கும்.\n\n3. விடக்கலை தொண்டை முதல் நாக்கின் அடிவரை இருக்கும்.\n\n4. விந்துக்கலை நாக்கினடி முதல் புருவ நடுவரை இருக்கும்.\n\n5. அர்த்தசந்திரக்கலை புருவநடு முதல் உச்சித்துளைவரை இருக்கும்.\n\n6. நிரோதினிக்கலை,\n\n7. நாதக்கலை,\n\n8. நாதாந்தகலை ஆகிய மூன்றும் சம அளவில் பரவியிருக்கும்.\n\n9. சக்திக்கலை,\n\n10. வியாபினிக்கலை,\n\n11. சமனைக்கலை,\n\n12. உன்மனைக்கலை, ஆகிய  நான்கும் 12 விரல் அளவில் பரவியிருக்கும்.\n\n13. வியோமரூபிணிக் கலை\n\n14. அனந்தைக் கலை\n\n15. அனாதைக் கலை,\n\n16. அனாசிருதைக் கலை சமனைக்கும் வியாபினிக்கும் நடுவே இருக்கும்.", "vilakam_en": "If we always keep our thoughts on the Lord, who is the embodiment of light, without thinking about worldly things, the Lord's grace will always protect our four ear canals and sixteen channels, mixed with the breath.\n\nComment: Those who meditate on the Lord with their thoughts on the Lord will be protected and blessed by the Lord from everything.\n\nThe four ear canals:\n\nSixteen channels (nadis):\n\n1. The methaikala is from the navel to the middle of the chest\n\n2. The arukkeesakala is from the heart to the throat.\n\n3. The vidakala is from the throat to the base of the tongue.\n\n4. The vindukala is from the base of the tongue to the middle of the eyebrow.\n\n5. The arthachandrakala is from the middle of the eyebrow to the top of the head.\n\n6. The nirodhinikala,\n\n7. The nathakala,\n\n8. The nathanthakala are all three in equal measure. Spread.\n\n9. Shaktikala,\n\n10. Vyapinikkalai,\n\n11. Samanaikalai,\n\n12. Unmanaikkalai, these four will spread in the size of 12 fingers.\n\n13. Viyomarupinikalai\n\n14. Ananthaikkalai\n\n15. Anathaikkalai,\n\n16. Anasirthakkalai will be between Samanai and Vyapini." }, { "song_number": 714, "padal": "நிலைபெற நின்றது நேர்தரு வாயு\nசிலைபெற நின்றது தீபமும் ஒத்துக்\nகலைவழி நின்ற கலப்பை அறியில்\nமலைவற வாகும் வழியது வாமே.", "vilakam": "இடகலை பிங்கலை நாடிகளின் வழியே உள்ளிழுத்த மூச்சுக்காற்றை நடுவில் உள்ள சுழுமுனை நாடி வழியே நேராக மேலேற்றிச் சென்று சகஸ்ரதளத்தில் ஒளி வடிவமாக இருக்கின்ற இறைவனோடு கலந்து அசைவில்லாமல் சிலை போல ஒன்றாக நின்றால் வெளிப்படும் அமிர்தத்தின் மூலம் ஒளி வடிவமாக இருக்கின்ற இறைவனின் அருள் வடிவம் பதினாறு கலைகளிலும் (பாடல் #713 இல் கொடுக்கப்பட்டுள்ளபடி 16 நாடிகள்) கலந்து நிற்பதை அறிந்து கொள்ளலாம். யோகியர்கள் மாயையினால் உருவாகும் மயக்கத்திலிருந்து விலகி உண்மை ஞானத்தில் எப்போதும் இருப்பதற்கான வழி இதை அறிந்து கொள்வதே ஆகும்.\n\nகருத்து: சுழுமுனை நாடி வழியே மூச்சுக்காற்றை கொண்டு சென்று சக்ஸ்ரதளத்தில் சேர்க்கும் யோகியர்கள் தங்களின் 16 நாடிகளிலும் இறைவனது திருவருள் கலந்து இருப்பதை அறிந்து எப்போதும் மாயை இல்லாத உண்மை ஞானத்தில் இருப்பார்கள்.", "vilakam_en": "If the breath inhaled through the Itakalai Pingala Nadis is taken straight up through the Suzumunai Nadis in the middle and mixed with the Lord in the form of light in the Sahasratala and stood together like a statue without moving, one can realize that the grace of the Lord in the form of light is mixed in all sixteen Kalais (16 Nadis as given in Song #713). The way for Yogis to stay away from the delusion caused by illusion and always remain in true knowledge is to know this.\n\nComment: Yogis who take the breath through the Suzumunai Nadis and add it to the Chakrasratala will always know that the grace of the Lord is mixed in all their 16 Nadis and will always be in true knowledge free from illusion." }, { "song_number": 715, "padal": "புடையொன்றி நின்றிடும் பூதப் பிரானை\nமடையொன்றி நின்றிட வாய்த்த வழியுஞ்\nசடையொன்றி நின்றஅச் சங்கர நாதன்\nவிடையொன்றி லேறியே வீற்றிருந் தானே.", "vilakam": "மூச்சுக்காற்றோடு கலந்து உயிர்களின் உயிர்த்துடிப்பின் நாதமாக நிற்கின்ற பஞ்ச பூதங்களின் தலைவனாகிய இறைவனை அந்த மூச்சுக்காற்று மற்ற நாடிகளின் வழியே சென்று வீணாகிவிடாமல் சுழுமுனை நாடியின் வழியே மேலேற்றிச் சென்று தலை உச்சியில் சடையணிந்த கோலத்தில் நின்ற சங்கரனின் தலைவனாகிய இறைவனோடு கலந்து விட்டால் அந்த இறைவன் உயிர்களின் உடலையே தனக்கு ஏற்ற காளை வாகனமாக்கி அதிலேயே அழியாமல் என்றும் வீற்றிருந்து அருளுவான்.\n\nகருத்து: மூச்சுக்காற்றை மற்ற நாடிகளின் வழியே செலுத்தி வீணாக்காமல் சுழுமுனை நாடி வழியே எடுத்துச் சென்று இறைவனோடு கலந்துவிடும் யோகியர்களின் உடல் என்றும் அழியாமல் இறைவனின் திருவருளோடு நிலைத்து நிற்கின்றது.", "vilakam_en": "If the Lord, the leader of the five elements, who mixes with the breath and stands as the rhythm of the life of beings, is carried up through the Suzumunai Nadi without going through other nadis and remaining in vain, and is mixed with the Lord, the leader of Shankara, who stands in a braided form on the top of the head, that Lord will make the body of beings His own bull vehicle and sit there eternally without perishing and bestowing grace.Comment: The body of the yogis who, without passing the breath through other nadis and remaining in vain, but taking it through the Suzumunai Nadi and mixing with the Lord, remains eternally with the grace of the Lord." }, { "song_number": 716, "padal": "இருக்கின்ற காலங்கள் ஏதும் அறியார்\nபெருக்கின்ற காலப் பெருமையை நோக்கி\nஒருக்கின்ற வாயு வொளிபெற நிற்கத்\nதருக்கொன்றி நின்றிடுஞ் சாதக னாமே.", "vilakam": "உயிர்களுக்கு தாம் வாழுகின்ற காலம் எவ்வளவு என்பது தெரியாது. தமது வாழ்நாளை அதிகப்படுத்திக் கொடுக்கும் அகயோகத்தின் பெருமையை உணர்ந்து அதனை நோக்கிச்சென்று தங்களின் மூச்சுக்காற்றை சுழுமுனை நாடி வழியே மேலேற்றிச் சென்று சகஸ்ரதளத்தில் ஒளியாக வீற்றிருக்கும் இறைவனோடு கலந்து அதனால் கிடைக்கும் பேரின்பத்தில் திளைத்து எப்போதும் நிலையாக நிற்பவர்கள் சாதகர்கள் ஆகின்றார்கள்.\n\nகருத்து: அழிகின்ற வாழ்நாளை நீட்டிக்க அகயோகம் செய்து இறைவனோடு கலந்து பேரின்பத்தில் திளைத்து நிற்பவர்கள் சாதகர்கள் ஆவார்கள்.", "vilakam_en": "Living beings do not know how long they live. Those who realize the greatness of inner yoga, which increases their lifespan, go towards it, raise their breath through the Vishnumanai, merge with the Lord, who sits as light on the Sahasratha, and bask in the bliss that comes from it, and remain steadfast forever, become successful.\n\nComment: Those who practice inner yoga to extend their perishable lifespan, merge with the Lord, and bask in the bliss that comes from it, become successful." }, { "song_number": 717, "padal": "சாதக மானஅத் தன்மையை நோக்கியே\nமாதவ மான வழிபாடு செய்திடும்\nபோதக மாகப் புகலுறப் பாய்ச்சினால்\nவேதக மாக விளைந்து கிடக்குமே.", "vilakam": "பாடல் #716 ல் உள்ளபடி அகயோகம் செய்வதன் பெருமையை உணர்ந்து மாபெரும் தவமாகிய அந்த யோகத்தை செய்து மூச்சுக்காற்றை சுழுமுனை நாடி வழியே தலை உச்சியிலுள்ள சகஸ்ரதளத்தில் போய்ச் சேரும்படி மேல் நோக்கிப் பாய்ச்சினால் இரும்பை தங்கமாக்கிவிடும் இரசவாத குளிகையைப் போலவே யோகம் செய்பவரின் உடல் பொன்னொளி வீசும் தங்கத்தாலான உடலாக மாறிவிடும்.\n\nகருத்து: அகயோகம் செய்யும் யோகியரின் உடல் பொன்னொளி வீசும் தங்கமாக மாறிவிடும்.", "vilakam_en": "As mentioned in Song #716, if one realizes the greatness of practicing inner yoga and performs that yoga, which is a great penance, and directs the breath upwards through the Vishnumuna Nadi to the Sahasratha at the top of the head, the body of the practitioner of yoga will become a golden body, shining like an alchemical pot that turns iron into gold.\n\nComment: The body of a yogi who practices inner yoga will become a golden body shining like gold." }, { "song_number": 718, "padal": "கிடந்தது தானே கிளர்பயன் மூன்று\nநடந்தது தானேஉள் நாடியுள் நோக்கிப்\nபடர்ந்தது தானேஅப் பங்கய மாகத்\nதொடர்ந்தது தானேஅச் சோதியுள் நின்றே.", "vilakam": "பாடல் #717 ல் உள்ளபடி அகயோகத்தால் தம் உடலைத் தங்கமாக மாற்றிக்கொண்ட யோகியர்களுக்குள் உருவாகும் பயன்கள் மூன்றுவிதமாகும். முதலாவதாக மூலாதாரத்தில் இருந்து வெளிவரும் காற்று சுழுமுனை நாடி வழியாக உள்ளுக்குள் சென்று சகஸ்ரதளத்திற்கும் மூலாதாரத்திற்கும் இடையே உள்ளுக்குள் நோக்கி சுழன்று கொண்டு இருப்பதால் வெளிக்காற்றை சுவாசிக்க வேண்டியது இல்லை. இரண்டாவதாக அவர்களின் உள்ளுக்குள்ளே சுழன்று கொண்டு இருக்கும் காற்று சகஸ்ரதளத்தில் உள்ள ஆயிரம் தாமரை இதழ்களிலும் பரவி அதை மலரச் செய்து எப்போதும் இயக்கத்திலேயே வைத்திருக்கும். மூன்றாவதாக அவர்களின் உடல் இறைவனின் ஜோதிமயத்திலேயே மூழ்கி பேரின்பத்தில் எப்போதும் அழியாமல் நிற்கும்.\n\nகருத்து: அகயோகம் செய்கின்ற யோகியர்கள் உடலுக்கு தேவையான மூச்சுக்காற்றை தனக்குள்ளேயே பெற்றுக்கொண்டு தனக்குள் ஜோதியாய் இருக்கும் இறைவனுடன் பேரின்பத்தில் மூழ்கி இருப்பார்கள்.", "vilakam_en": "As stated in Song #717, the benefits that arise in the yogis who have transformed their bodies into gold through internal yoga are threefold. First, the air emanating from the root of the body passes through the Vajramuna Nadi and circulates inwardly between the Sahasratha and the root of the body, so there is no need to breathe external air. Second, the air circulating within them spreads to the thousand lotus petals in the Sahasratha, causing them to bloom and keeping them in constant motion. Third, their bodies are immersed in the divine light and remain indestructible in bliss.\n\nComment: Yogis who practice internal yoga receive the necessary air for their bodies within themselves and are immersed in bliss with the divine light within them." }, { "song_number": 719, "padal": "தானே எழுந்தஅத் தத்துவ நாயகி\nஊனே வழிசெய்தெம் உள்ளே யிருந்திடும்\nவானோர் உலகீன்ற அம்மை மதித்திடத்\nதேனே பருகிச் சிவாலய மாகுமே.", "vilakam": "இறைவனை அடைவதற்கு வழியாக பிறக்கும் போதே அனைத்து உயிர்களுக்கும் உள்ளே இருக்கும் குண்டலினி சக்தியானது பாடல் #717 ல் உள்ளபடி அகயோகத்தால் தம் உடலைத் தங்கமாக மாற்றிக்கொண்ட யோகியர்களுக்குள் தானாக எழுந்துவிடும். தேவர்களையும் உலகத்தையும் படைத்த அசையும் சக்தியாகவும் அசையா சக்தியாகவும் இருக்கின்ற இறைவனை சுழுமுனை நாடி வழியாக சகஸ்ரதளத்தை சென்று அடைந்து அங்கிருக்கும் அமிர்தத்தை பருகிவிட்டால் அந்த யோகியரின் உடல் இறைவனை வீற்றிருக்கும் ஆலயமாகும்.\n\nகருத்து: அகயோகம் செய்து குண்டலினி சக்தியை மேலெழுப்பி அமிர்தத்தை பருகும் யோகியர்களின் உடல் இறைவனை வீற்றிருக்கும் ஆலயமாகும்.", "vilakam_en": "The path to attaining God is that the Kundalini energy, which is present within all beings at birth, automatically awakens in the yogis who have transformed their bodies into gold through internal yoga, as stated in song #717. If the Lord, who is the moving and immobile energy that created the gods and the world, reaches the Sahasratha through the Sukhmunai Nadi and drinks the nectar there, the body of that yogi becomes the temple where God resides.\n\nComment: The body of the yogis who perform internal yoga, awaken the Kundalini energy and drink the nectar is the temple where God resides." }, { "song_number": 720, "padal": "திகழும் படியே செறிதரு வாயு\nஅழியும் படியை அறிகில ராரும்\nஅழியும் படியை அறிந்தபின் நந்தி\nதிகழ்கின்ற வாயுவைச் சேர்தலு மாமே.", "vilakam": "உயிர்கள் வாழ்வதற்கு மட்டுமன்றி தம்மை வந்தடைந்து மேன்மையடையவும் மூச்சுக்காற்றை படைத்து அருளியிருக்கின்றான் இறைவன். ஆனால் உயிர்கள் சுவாசிக்கும் 540 பங்குகளில் (பாடல் #700 இல் காண்க) ஒரு பங்கைத் தவிர மீதி அனைத்தும் இறைவனை அடையாமலேயே வீணாகிவிடுவதை யாரும் அறிந்திருக்கவில்லை. வீணாகும் மூச்சுக்காற்றின் உண்மைப் பயனை அறிந்து கொண்டு அகயோகம் செய்யும் யோகியர்களுக்கு இறைவனே குருவாக இருந்து அவர்களின் வெளிப்புற மூச்சுக்காற்றை நிறுத்தி உட்புறமாக மூலாதாரத்தில் இருந்து சுழுமுனை நாடிவழியே சுவாசிக்க வைத்து அந்த சுவாசத்தோடு கலந்து நின்று அருளுகின்றான்\n\nகருத்து: உடலின் செயல்களில் வீணாகிவிடும் மூச்சுக்காற்றை அகயோகம் செய்து மாற்றி முழுமையாக பயன்படுத்தும் யோகியர்களின் சுவாசத்தோடு கலந்து குருவாக நின்று இறைவன் அருளுகின்றான்.", "vilakam_en": "God has created and blessed the breath not only for the survival of beings but also for their attainment of Him and exaltation. But no one knows that out of the 540 parts (see song #700) that beings breathe, except for one part, all the rest are wasted without reaching the Lord. Knowing the true benefit of the wasted breath and practicing inner yoga, God Himself is the Guru, stopping their external breath and allowing them to breathe internally from the root of the body through the Suhumuna Nadi, and mixing with that breath, He bestows blessings.\n\nComment: God mixes with the breath of the yogis who use the breath that is wasted in the body's activities and transforms it into a full use by practicing inner yoga." }, { "song_number": 721, "padal": "சோதனை தன்னில் துரிசறக் காணலாம்\nநாதனும் நாயகி தன்னிற் பிரியுநாள்\nசாதன மாகுங் குருவை வழிபட்டு\nமாதன மாகவே மதித்துக்கொள் ளீரே.", "vilakam": "யோகியர் தாம் விடும் மூச்சுக்காற்றின் அளவைக் கொண்டே தமக்குள் இறைவன் வீற்றிருக்கும் உடலும் இறைவி வீற்றிருக்கும் உயிரும் எப்போது பிரியும் என்பதை ஒரு சில சோதனைகளால் சிறிதும் பிழையின்றி மிகச் சரியாக அறிந்து கொள்ளலாம். அந்த சோதனைகள் என்ன என்பதை யோக குருவை வழிபட்டு அவர் அருளுகின்ற சாதனைகளை அரிய மாபெரும் செல்வமாக மதித்து சிரத்தையாக செய்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.\n\nகருத்து: உடலை விட்டு உயிர் பிரிந்து விடும் ஆயுளை மிகச் சரியாகக் கணக்கிடும் சாதனைகளை யோக குருவின் அருள் கொண்டு அறிந்து கொண்டு சிரத்தையுடன் செய்யும் சாதகர்களுக்கு இறப்பிலிருந்து தப்பிக்கும் வழி கிடைக்கும்.\n\nயோக குருவை வழிபட்டு அவர் அருளுகின்ற சாதனைகளைச் சிரத்தையாக செய்வதன் மூலம் கிடைக்கும் பலனை அடுத்த பாடல் #722ல் காணலாம்.", "vilakam_en": "A yogi can accurately determine, without any error, by measuring the amount of air he exhales, when the body in which the Lord resides and the soul in which the Goddess resides will separate. What those tests are can be learned by worshipping the yoga guru and considering the achievements he bestows as a rare and great treasure and performing them with diligence.\n\nComment: Those ascetics who, with the grace of the yoga guru, learn the achievements that accurately calculate the life span of the soul leaving the body and perform them with diligence will find a way to escape death.\n\nThe benefit of worshipping the yoga guru and performing the achievements he bestows with diligence can be seen in the next song #722." }, { "song_number": 722, "padal": "ஈராறு கால்கொண் டெழுந்த புரவியைப்\n\nபேராமற் கட்டிப் பெரிதுண்ண வல்லிரேல்\n\nநீரா யிரமும் நிலமாயி ரத்தாண்டும்\n\nபேராது காயம் பிரான்நந்தி ஆணையே.", "vilakam": "பாடல் #721 இல் கூறியுள்ளபடி யோக குருவை வழிபட்டு அவரது அருளால் கிடைத்த சாதனைகளின் மூலம் ஆறுகளைப் போன்ற இடகலை பிங்கலை நாடிகளின் வழியே குதிரையைப் போல குதித்துவரும் மூச்சுக்காற்றை வீணாக்காமல் கட்டி வைத்து சுழுமுனை நாடி வழியே மேலேற்றிச் சென்று சகஸ்ரதளத்தில் சேர்த்து அங்கே சுரக்கும் அமிர்தத்தைப் பருக முடிந்த யோகியர்களின் உடல் கடலுக்கு அடியில் ஆயிரம் ஆண்டுகள் இருந்தாலும் நிலத்திற்கு அடியில் ஆயிரம் ஆண்டுகள் இருந்தாலும் அழியவே அழியாமல் என்றும் உயிர்ப்புடன் இருக்கும் என்பது குருவிற்கெல்லாம் மேலான மஹா குருவான இறைவனின் மேல் ஆணையே.\n\nகருத்து: யோக குருவின் அருளால் கிடைத்த சாதனைகளின் மூலம் தங்களின் உடலும் உயிரும் பிரியும் ஆயுட் காலத்தை துல்லியமாக அறிந்து கொள்ளும் யோகியர்கள் அதை மாற்றுவதற்கு அகயோகம் செய்தால் அவர்களின் உடலும் உயிரும் எவ்வளவு ஆயிரம் வருடங்களானாலும் பிரியாமல் இருக்கும் இது குருவிற்கெல்லாம் மேலான மஹா குருவான இறைவனின் மேல் ஆணை.", "vilakam_en": "As stated in Song #721, those who worship the Yoga Guru and through the achievements obtained by his grace, who have bound the breath that is like a horse, jumping through the rivers, without wasting it, and have been able to raise it through the Suzumunai Nadi, and have been able to collect it in the Sahasratala and drink the nectar secreted there, will remain alive forever, even if they are under the sea for a thousand years or under the land for a thousand years, and will not perish, it is a promise from the Lord, the Great Guru, who is above all Gurus.\n\nComment: Yogis who know precisely the period of their life when their body and soul will separate through the achievements obtained by the grace of the Yoga Guru, if they practice inner yoga to change it, their body and soul will not separate, no matter how many thousand years it takes. This is a promise from the Lord, the Great Guru, who is above all Gurus." }, { "song_number": 723, "padal": "ஓசையினில் ஏழும் ஒளியின்கண் ஐந்தும்\n\nநாசியினில் மூன்றும் நாவினில் இரண்டும்\n\nதேசியுந் தேசனுந் தன்னிற் பிரியுநாள்\n\nமாசுஅறு சோதி வகுத்துவைத் தானே.", "vilakam": "ஏழு விதமான ஒலிகளை உணரும் காதுகளும் ஐந்து விதமான ஒளிகளைக் காணும் கண்களும் மூன்று விதமான சுவாசங்களை முகரும் நாசிகளும் இரண்டு விதமானதைச் செய்யும் நாக்கும் தொடுவதை உணரும் உடலும் உயிரான ஆன்மாவை விட்டுப் பிரியும் நாள் எதுவென்பதை மிகவும் துல்லியமாக மூச்சுக்காற்றை வைத்தே அளந்து வைத்திருக்கின்றான் அனைத்துவித மலங்களையும் அறுத்து அருளும் சோதிமயமான இறைவன்.\n\nகருத்து: உயிர்கள் தம்மிடம் அடையும் வழியை வைத்தருளிய இறைவன் அதன்படி செய்யாத உயிர்கள் அழிந்து மறுபடியும் பிறவி எடுப்பதற்கான ஆயுளையும் துல்லியமாக அளந்து வைத்திருக்கின்றான்.\n\nகாதுகள் உணரும் ஏழு விதமான ஒலிகள்:\n\nகண்கள் காணும் ஐந்து விதமான ஒளிகள்:\n\nநாசிகள் முகரும் மூன்று விதமான சுவாசங்கள்:\n\nநாக்கு செய்யும் இரண்டு விதமான செயல்கள்:", "vilakam_en": "The ears that perceive seven kinds of sounds, the eyes that see five kinds of lights, the nostrils that smell three kinds of breaths, the tongue that does two things, and the body that feels touch, the day on which the living soul will depart from the soul, the Lord, who cuts off all kinds of impurities and bestows, has measured very precisely by the breath of the breath.\n\nComment: The Lord, who has laid down the path for living beings to reach Him, has also precisely measured the life span of those who do not do so, and will perish and be reborn again.\n\nThe seven kinds of sounds that the ears perceive:\n\nThe five kinds of lights that the eyes see:\n\nThe three kinds of breaths that the nostrils smell:\n\nThe two kinds of actions that the tongue performs:" }, { "song_number": 724, "padal": "உடம்பார் அழியில் உயிரார் அழிவார்\n\nதிடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்\n\nஉடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்\n\nஉடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.", "vilakam": "உயிர்களின் உடல் அழிந்துவிட்டால் அதனுள்ளிருக்கும் உயிர் நீங்கிவிடும். உறுதியான உடல் வலிமை சீர்குலைந்தால் ஞானத்தை அடைய உடலை ஒரு கருவியாகப் பயன்படுத்த முடியாது. உடலை உறுதியாக வைத்து வளர்க்கும் வழியை இறையருளால் அறிந்து கொண்டு அதன் மூலம் உடலை வளர்த்து அதனுள்ளிருக்கும் உயிரையும் வளர்த்தேன்.\n\nகருத்து: இறைவனை அடைவதற்கு கருவியாக பயன்படும் உடலையும் உயிரையும் உறுதியாக நீண்ட காலம் அழியாமல் வளர்த்து இறைவனை அடையலாம்.", "vilakam_en": "If the body of a living being is destroyed, the life within it will be destroyed. If the firmness of the body is disturbed, the body cannot be used as a tool to attain wisdom. By knowing the way to keep and develop the body firmly, by the grace of God, I have developed the body and the life within it.\n\nComment: By developing the body and life, which are used as tools to attain God, for a long time, one can attain God without being destroyed." }, { "song_number": 725, "padal": "உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்\n\nஉடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன்\n\nஉடம்புளே உத்தமன் கோயில்கொண் டானென்\n\nறுடம்பினை யானிருந் தோம்புகின் றேனே.", "vilakam": "உடம்பை முன்பு குறையுடையது என்று எண்ணியிருந்தேன். உடம்புக்குள்ளே உரிமையாளர் இல்லாமல் தானே வந்தடையும் பொருள் ஒன்று இருப்பதை கண்டேன். அந்த பொருள் பரம்பொருளாகிய இறைவன் என்பதையும் அவன் இந்த உடம்புக்குள்ளே கோவில் கொண்டுள்ளான் என்பதை தெரிந்து கொண்டு இந்த உடம்பை யாம் பேணி பாதுகாத்து வருகின்றோம்.\n\nகருத்து: உடம்புக்குள் பரம்மொருளாகிய இறைவன் இருப்பதினால் பிராணாயமம் யோகப்பயிற்சிகள் செய்து உடம்பை பாதுகாத்து வரவேண்டும்.", "vilakam_en": "I had previously thought that the body was defective. I saw that there was an object within the body that came to me on its own without an owner. Knowing that that object is the Supreme Being, God, and that He has a temple within this body, we are protecting and preserving this body.\n\nComment: Since the Supreme Being is within the body, we should protect the body by practicing pranayama and yoga." }, { "song_number": 726, "padal": "சுழற்றிக் கொடுக்கவே சுற்றிக் கழியும்\n\nகழற்றி மலத்தைக் கமலத்தைப் பூரித்\n\nதுழற்றிக் கொடுக்கும் உபாயம் அறிவார்க்\n\nகழற்றித் தவிர்ந்துடல் அஞ்சன மாமே.", "vilakam": "சுவாசிக்கும் மூச்சுக்காற்றை மூலாதாரத்திற்கு அனுப்பி மூலாதாரத்திலுள்ள அக்கினியால் மூச்சுக்காற்றை சுத்தம் செய்து சுழுமுனை நாடியின் கீழ்புறத்திலிருந்து மேலாகச் செலுத்தினால் சுழுமுனையை நாடி சுத்தம் அடையும். பின்பு அந்த காற்றை சகஸ்ரதளத்தில் இருக்கும் ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலரோடு சேர்த்து அந்த மலரை விரியச் செய்த பிறகு அந்த வாயுவை உடம்பிலுள்ள அனைத்து நாடிகளுக்குள்ளும் செலுத்தும் அகயோகப் பயிற்சியை அறிந்து கொண்டு அதைச் செய்பவர்களின் உடல் நெருப்பில் கருகி வெந்துபோகாமல் என்றும் அழியாமல் நிலைத்து நிற்கும்.\n\nகருத்து: சுவாசிக்கும் மூச்சுக்காற்றை மூலாதாரத்திற்கு அனுப்பி சுழுமுனை நாடியை சுத்தப்படுத்தி சகஸ்ரதளத்தில் சேர்த்து பின்பு உடலில் உள்ள அனைத்து நாடிகளுக்கும் அனுப்பும் பயிற்சியை செய்பவர்களின் உடல் நெருப்பினால் சுட்டாலும் அழியாமல் இருக்கும்.", "vilakam_en": "If you send the breath to the source, purify it with the fire in the source, and direct it from the bottom of the sujumunai nadi to the top, the sujumunai nadi will be purified. Then, by combining that air with the thousand-petalled lotus flower at the sahasratha, and spreading that flower, the body of those who know and practice the inner yoga practice of sending that air into all the nadis in the body will not be burned by fire and will remain eternally immortal.\n\nComment: The body of those who practice sending the breath to the source, purifying the sujumunai nadi, combining it at the sahasratha, and then sending it to all the nadis in the body will not be destroyed even if it is burned by fire." }, { "song_number": 727, "padal": "அஞ்சனம் போன்றுட லையறு மந்தியில்\n\nவஞ்சக வாத மறுமத்தி யானத்திற்\n\nசெஞ்சிறு காலையிற் செய்திடிற் பித்தறும்\n\nநஞ்சறச் சொன்னோம் நரைதிரை நாசமே.", "vilakam": "பாடல் #726 ல் உள்ளபடி மூச்சுசுழற்சிப் பயிற்சியை சூரியன் மறையும் சாயந்திர நேரத்தில் செய்தால் கபம் சம்பந்தமான அனைத்து வியாதிகளும் நீங்கும். இந்தப் பயிற்சியை சூரியன் உச்சியிலிருக்கும் மத்தியான நேரத்தில் செய்தால் வாதம் சம்பந்தமான அனைத்து வியாதிகளும் நீங்கும். இந்தப் பயிற்சியை சூரியன் தோன்றும் காலை நேரத்தில் செய்தால் பித்தம் சம்பந்தமான அனைத்து வியாதிகளும் நீங்கும். உடலில் விஷமாக இருக்கும் மூன்றுவிதமான வியாதிகளையும் நீக்கும் வழியாகவே இந்த பயிற்சியை அருளினோம். இந்தப் பயிற்சியை நாள் முழுவதும் செய்துகொண்டே இருந்தால் முடிகள் நரைக்காமல் உடலும் முதுமையடையாமல் இளமையாகவே எப்போதும் நிலைத்து நிற்கும்.\n\nகருத்து: கபம் பித்தம் வாதம் ஆகிய மூன்றும் உடலுக்கு வரும் அனைத்து வியாதிகளுக்கும் காரணம். சரியான நேரத்தில் பாடல் #726 ல் உள்ளபடி அகயோகம் செய்வதன் மூலம் கபம் பித்தம் வாதம் மூன்றையும் நீக்கலாம். அதே யோகத்தை நாள் முழுவதும் செய்தால் உடலில் நோய் இல்லாமல் எப்போதும் இளமையாகவே இருக்கும்.", "vilakam_en": "If you do the breathing exercise as mentioned in Song #726 in the evening when the sun sets, all diseases related to phlegm will be cured. If you do this exercise at noon when the sun is at its highest, all diseases related to rheumatism will be cured. If you do this exercise in the morning when the sun rises, all diseases related to bile will be cured. We have bestowed this exercise as a way to eliminate the three types of diseases that are poisonous in the body. If you continue to do this exercise throughout the day, your hair will not turn gray and your body will not age and will remain young forever.\n\nComment: The three causes of phlegm and bile are the cause of all diseases that come to the body. By doing internal yoga as mentioned in Song #726 at the right time, you can eliminate all three. If you do the same yoga throughout the day, your body will remain young without any disease." }, { "song_number": 728, "padal": "மூன்று மடக்குடைப் பாம்பிரண் டெட்டுள\n\nஏன்ற வியந்திரம் பன்னிரண் டங்குலம்\n\nநான்றவிழ் முட்டை யிரண்டையுங் கட்டியிட்\n\nடூன்றி யிருக்கவே உடலழி யாதே.", "vilakam": "மூன்று வளைவுகளை உடைய இடகலை பிங்கலை எனும் நாடிகளாக இரண்டு பாம்புகள் எட்டு அங்குல நீளத்திற்கு இருக்கின்றன. இயல்பான சுவாசமானது நாசியிலிருந்து இந்த இரண்டு நாடிகளின் வழியே கீழ் நோக்கி எட்டு அங்குல அளவு செல்லும். இந்த இரண்டு நாடிகளின் அடியிலிருந்து தலை உச்சி வரை செல்லும் பன்னிரண்டு அங்குல அளவிற்கு சுழுமுனை நாடி இருக்கிறது. முதுகெலும்பு ஆரம்பிக்கும் கழுத்து அது முடியும் இடுப்பு ஆகிய இரண்டு மூட்டுக்களையும் நேராக வைத்து இரண்டு கால்களையும் மடக்கி உடம்பை நேராக வைத்து அசையாமல் அமர்ந்து மூச்சுக்காற்றாகிய இயந்திரத்தை இடகலை பிங்கலை வழியாக எட்டு அங்குலம் கீழ் நோக்கி பயணிக்க வைத்து அதன் முடிவில் தொடங்கும் சுழுமுனை நாடி வழியே திசை மாற்றி பன்னிரண்டு அங்குலம் மேல் நோக்கி பயணிக்க வைத்து அதன் முடிவில் இருக்கும் சகஸ்ரதள ஆயிரம் தாமரை இதழ்களோடு கலக்க வைக்கும் சுழற்சியான அகயோகத்தை எப்போதும் செய்து கொண்டு இருந்தால் உடல் எவ்வளவு காலம் ஆனாலும் அழியாமல் இருக்கும்.\n\nகருத்து: கழுத்தையும் இடுப்பையும் வளைக்காமல் நேராக வைத்துக் கொண்டு அமர்ந்திருந்து மூச்சுக்காற்றை சுழுமுனை நாடி வழியே மேலேற்றி சகஸ்ரதளத்தோடு கலந்து மறுபடியும் உடல் முழுவதும் பரவும் சுழற்சியை செய்து கொண்டிருந்தால் உடல் எவ்வளவு காலம் ஆனாலும் அழியாமல் இருக்கும்.", "vilakam_en": "There are two serpents called the Itakalai Pingala, which have three curves, each eight inches long. Normal breathing flows downward from the nostrils through these two nadis for eight inches. From the base of these two nadis to the top of the head, there is the Sujumunai Nadi, which is twelve inches long. Keeping the two joints of the spine, namely the neck and the pelvis, which begin and end, straight, bending both legs, keeping the body straight, sitting still, and making the machine that is the breath travel eight inches downward through the Itakalai Pingala, changing direction through the Sujumunai Nadi, which begins at its end, and making it travel twelve inches upward, the body will never perish, no matter how long it takes.\n\nComment: If you sit straight without bending your neck and hips, and make the breath travel upward through the Sujumunai Nadi, mixing with the Sahasratala at its end, and then spreading it throughout the body, the body will never perish, no matter how long it takes." }, { "song_number": 729, "padal": "நூறும் அறுபதும் ஆறும் வலம்வர\n\nநூறும் அறுபதும் ஆறும் இடம்வர\n\nநூறும் அறுபதும் ஆறும் எதிரிட\n\nநூறும் அறுபது மாறும் புகுவரே.", "vilakam": "பிங்கலை இடகலை நாடிகளின் வழியே மூச்சுக்காற்றை அறுபது மாத்திரை அளவிற்கு (30 வினாடிகள்) வலதும் இடதுமாக உள்ளிழுத்து நூறு மாத்திரை அளவிற்கு (50 வினாடிகள்) அடக்கி வைத்து ஆறு மாத்திரை அளவிற்கு (3 வினாடிகள்) சுழுமுனை நாடி வழியே மேல் நோக்கி எடுத்துச் சென்று சகஸ்ரதளத்தில் இருக்கும் ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலரோடு அறுபது மாத்திரை அளவிற்கு (30 வினாடிகள்) வைத்திருந்து பிறகு நூறு மாத்திரை அளவிற்கு (50 வினாடிகள்) உடலிலுள்ள அனைத்து நாடிகளுக்கும் கொண்டு செல்லும் சுழற்சியைத் தொடர்ச்சியாக செய்தால் ஆயுளை எப்போதும் கூட்டிக்கொண்டே இருக்கலாம்.\n\nகருத்து: அகயோகப் பயிற்சியை முறைப்படி தொடர்ச்சியாக செய்ய ஆயுட்காலத்தை நீட்டிக்கலாம்.", "vilakam_en": "If you continuously perform this cycle of inhaling the breath through the Pingala Itakala Nadis for sixty tablets (30 seconds) to the right and left, holding it for one hundred tablets (50 seconds), taking it upwards through the Sujumunai Nadi for six tablets (3 seconds), holding it with the thousand-petalled lotus flower at the Sahasratha for sixty tablets (30 seconds), and then taking it to all the Nadis in the body for one hundred tablets (50 seconds), you can always increase your life span.\n\nComment: If you practice Akhayoga regularly and consistently, you can extend your life span." }, { "song_number": 730, "padal": "சத்தியார் கோயி லிடம்வலஞ் சாதித்தான்\n\nமத்தியா னத்திலே வாத்தியங் கேட்கலாந்\n\nதித்தித்த கூத்துஞ் சிவனும் வெளிப்படுஞ்\n\nசத்தியஞ் சொன்னோம் சதாநந்தி ஆணையே.", "vilakam": "இறைவன் குடியிருக்கும் உடலாகிய கோயிலில் இடதும் வலதுமாக இருக்கும் இடகலை பிங்கலை நாடிகளின் வழியே உள்ளிழுத்த மூச்சுக்காற்றை அடக்கியாண்டு சுழுமுனை நாடி வழியே மேலேற்றிச் செல்லும் பயிற்சியை சாதித்த சாதகனுக்கு மூச்சுக்காற்றின் சுழுமுனை பயணம் புல்லாங்குழலில் புகுந்த காற்றின் இசை போல கேட்கவும் சுழுமுனையின் உச்சியிலிருந்து வெளிப்படும் அமிர்தத்தின் தித்திப்பில் இறைவனின் பேரின்பக் பெருங்கூத்தும் சகஸ்ரதள ஜோதியில் சிவமாகிய ஒளியும் வெளிப்படும் என்பதை குருவிற்கெல்லாம் மஹாகுருவான சதாசிவமூர்த்தியின் மேல் ஆணை.\n\nகருத்து: அகயோகப் பயிற்சியை சாதித்த சாதகர்களுக்கு இசையோடு நடனமும் ஆடும் இறைவனின் பேரின்பப் பெருங்கூத்துத் தரிசனம் கிடைத்து அவர்களுக்குள்ளிருந்தே ஒளியுருவமாக இறைவனும் வெளிப்படுவார்.", "vilakam_en": "The great Guru of all Gurus, Sadasivamurthy, has decreed that the ascetic who has mastered the practice of controlling the breath he has inhaled through the Itakalai Pingala Nadis on the left and right sides of the body where the Lord resides, will hear the whirlwind journey of the breath like the music of the wind entering a flute, and that the blissful roar of the Lord will be revealed in the nectar emanating from the top of the whirlwind, and the light of Shiva will be revealed in the Sahasratala Jyoti.\n\nComment: Ascetics who have mastered the practice of inner yoga will have the vision of the blissful roar of the Lord dancing with music, and the Lord will also manifest from within them as a form of light." }, { "song_number": 731, "padal": "திறத்திறம் விந்து திகழும் அகாரம்\n\nஉறப்பெற வேநினைந் தோதுஞ் சகாரம்\n\nமறிப்பது மந்திர மன்னிய நாதம்\n\nஅறப்பெறல் யோகிக் கறநெறி யாமே.", "vilakam": "ஒரு மாசுமில்லாத தூய்மையான ஒளியுருவான சிவத்தின் அம்சமாக விளங்கும் அ எனும் எழுத்தையும் மாமாயையின் ஒலியுருவான சக்தியின் அம்சமாக விளங்கும் ச எனும் எழுத்தையும் மனதுக்குள் உச்சரிக்கும்பொழுது தோன்றும் அசபை மந்திரத்தை சத்தமாகச் சொல்லாமல் மனதுக்குள்ளேயே ஓதி மனனம் செய்வது அகயோகத்தைக் கடைபிடிக்கும் யோகியர்களுக்கான தர்ம வழியாகும்.\n\nகருத்து: அகயோகம் செய்யும் யோகியர்கள் அம்ச எனும் அசபை மந்திரத்தை மனதிற்குள்ளேயே ஓதுவது அவர்களுக்கான தர்மவழியாகும். இதை முறைப்படி குருவிடம் பெற்று பயன்படுத்துதல் வேண்டும்.", "vilakam_en": "The Asapai Mantra that arises when the letter A, which is an aspect of Shiva, an uncontaminated and pure light, and the letter Sa, which is an aspect of Shakti, the sound of Mamaya, are pronounced in the mind, without saying it out loud, is the Dharma path for Yogis who practice Akayoga.\n\nComment: It is the Dharma path for Yogis who practice Akayoga to recite the Asapai Mantra, which is an aspect of Shiva, in the mind. This should be obtained from a Guru and used properly." }, { "song_number": 732, "padal": "உந்திச் சுழியி னுடனேர் பிராணனைச்\n\nசிந்தித் தெழுப்பிச் சிவமந் திரத்தினால்\n\nமுந்தி முகட்டின் நிறுத்திய பானனைச்\n\nசிந்தித் தெழுப்பவே சிவனவ னாமே.", "vilakam": "நாசியின் மூலம் தொப்புள் இருக்கும் வயிறு வரை உள்ளிழுத்த மூச்சுக்காற்றை பாடல் #731 இல் கூறிய மந்திரத்தை இறைவனை நினைத்து தியானித்துக் கொண்டே மேலே எடுத்துச் சென்று இரண்டு புருவங்களுக்கு மத்தியில் நிறுத்தி வைத்துவிட்டு மூலாதாரத்திலுள்ள மூலாக்கினியை இறைவனை சிந்தித்துக் கொண்டே சுழுமுனை நாடியின் வழியாக மேலே எடுத்துச் சென்று இரண்டு புருவங்களுக்கு மத்தியில் நிறுத்தி வைத்த காற்றோடு சேர்த்து சகஸ்ரதளத்திலுள்ள ஆயிரம் இதழ்கொண்ட தாமரை மலரோடு கலக்கும் சாதகன் சிவனாவான்.\n\nகருத்து: மூச்சுக்காற்றையும் மூலாக்கினியையும் சகஸ்ரதளத்தில் இருக்கும் இறைவனோடு கலந்து அகயோகம் செய்யும் சாதகன் சிவனாவான்.", "vilakam_en": "The devotee who inhales the breath through the nostrils up to the belly where the navel is, while meditating on the Lord, takes it up and stops it between the two eyebrows, while thinking of the Lord, takes the Moolakini at the Mooladhara up through the Suzumunai Nadi and stops it between the two eyebrows, and mixes it with the thousand-petalled lotus flower at the Sahasratala, becomes Shiva.\n\nComment: The devotee who performs Akhayoga by mixing the breath and Moolakini with the Lord at the Sahasratala, becomes Shiva." }, { "song_number": 733, "padal": "மாறா மலக்குதந் தன்மே லிருவிரற்\n\nகூறா இலிங்கத்தின் கீழே குறிக்கொண்மின்\n\nஆறா உடம்பிடை அண்ணலும் அங்குளன்\n\nகூறா உபதேசங் கொண்டது காணுமே.", "vilakam": "எப்போதும் மாறாத மலத்தைக் கொண்டிருக்கும் மலத்துவாரத்திற்கு இரண்டு விரற்கடை மேலேயும் சொல்லாமல் உணரும் பாலுணர்ச்சியின் குறிக்கு இரண்டு விரற்கடை கீழேயும் உள்ள இடமே மூலாதாரம் இருக்கும் இடமாகும். அந்த இடத்தின் மேல் எண்ணத்தை வைத்து பாடல் #731 இல் கொடுத்துள்ள மந்திரத்தை மனதிற்குள் தியானித்தால் உடலிலுள்ள ஆறு ஆதாரங்களிலும் உள்ள இறை சக்தியே அங்கேயும் அக்கினியாக இருக்கிறது என்பதை கண்டு உணரலாம்.\n\nகருத்து: உடலிலுள்ள அனைத்து சக்திமயங்களிலும் இறை சக்தியே இருக்கின்றது. மூலாதாரத்தை எண்ணி மந்திரத்தால் மனதிற்குள் தியானிக்க ஆறு ஆதாரங்களிலும் உள்ள இறை சக்தியே உணரலாம்.", "vilakam_en": "The place where the source of energy is located is two finger widths above the anus, which always contains feces, and two finger widths below the mark of sexual desire that is not expressed. If you keep your mind on that place and meditate on the mantra given in song #731 in your mind, you can see and feel that the divine energy in all the six sources of the body is also there as fire.\n\nComment: The divine energy is present in all the energy fields in the body. By thinking of the source of energy and meditating with the mantra in your mind, you can feel the divine energy in all the six sources." }, { "song_number": 734, "padal": "நீல நிறனுடை நேரிழை யாளொடுஞ்\n\nசாலவும் புல்லிச் சதமென் றிருப்பார்க்கு\n\nஞாலம் அறிய நரைதிரை மாறிடும்\n\nபாலனு மாவர் பராநந்தி ஆணையே.", "vilakam": "பாடல் #732 இல் உள்ளபடி மூச்சுக்காற்றை புருவ மத்தியில் நிறுத்திய பிறகு நடு நெற்றியில் தோன்றும் நீல நிறத்தில் ஜோதிமயமாக இருக்கும் சக்தியிலேயே சிந்தனையை நிரந்தரமாக வைத்து சரணாகதியில் இருப்பவர்களுக்கு உலகத்தவர்கள் அனைவரும் பார்க்கும்படி நரை முடியும் தோல் சுருக்கங்களும் நீங்கி வயது குறைந்து இளைஞனைப் போல இருப்பார்கள் என்பது பரம்பொருளாகிய குருநாதரின் ஆணையாகும்.\n\nகருத்து: தியானத்தில் எப்போதும் நீல நிற சக்தியோடு இணைந்திருப்பவர்களின் உடல் முதுமை மாறி எப்போதும் இளமையோடு இருக்கும்.", "vilakam_en": "As stated in Song #732, after stopping the breath between the eyebrows, those who constantly keep their thoughts on the blue energy that appears in the middle of the forehead and surrender to it, will have their gray hair and wrinkles removed, and will age less and look like a young man, as seen by all the world, as is the mandate of the Supreme Guru.\n\nComment: The body of those who are always connected to the blue energy in meditation will change from old age and will always remain young." }, { "song_number": 735, "padal": "அண்டஞ் சுருங்கில் அதற்கோ ரழிவில்லை\n\nபிண்டஞ் சுருங்கிற் பிராணன் நிலைபெறும்\n\nஉண்டி சுருங்கில் உபாயம் பலவுள\n\nகண்டங் கருத்தநற் கபாலியு மாமே.", "vilakam": "உயிர்கள் உணவை குறைப்பதினால் உடல் எடை குறைந்து சுருங்கினாலும் பாடல் #734 ல் உள்ளபடி நெற்றியின் நடுவில் இருக்கும் நீல நிற ஜோதி அழியாது. உணவை குறைத்து உடலை சுருக்கி நெற்றியின் நடுவில் இருக்கும் நீல நிற ஜோதியில் சிந்தனையை நிரந்தரமாக வைத்து சரணாகதியில் இருப்பவர்களுக்கு மூச்சுக்காற்று அங்கேயே நிரந்தரமாக நிலைபெறும். உணவை குறைத்து உடலை சுருக்கி பாதுகாத்தால் இறைவனை அடையும் வழிகள் பல உள்ளன. இதனை செய்யும் சாதகன் கருமை நிறமுடைய கழுத்தைக் கொண்ட நண்மையே உருவான இறைவனைப் போல் ஆகிவிடுவார்கள்.\n\nகருத்து: உணவை குறைத்து உடலை சுருக்கி நெற்றியின் நடுவில் இருக்கும் நீல நிற ஜோதியில் சிந்தனையை நிரந்தரமக வைத்து சரணாகதியில் இருக்கும் சாதகனுக்கு மூச்சுக்காற்று நெற்றியில் நிலைபெற்று கருமை நிறமுடைய கழுத்தைக் கொண்ட நன்மையே உருவான இறைவனைப் போல் ஆகிவிடுவார்கள்.", "vilakam_en": "Even if the body loses weight and shrinks due to reduced food intake, the blue light in the middle of the forehead will not disappear as stated in song #734. Those who reduce their food intake and shrink their body and permanently focus their thoughts on the blue light in the middle of the forehead will have their breath permanently fixed there. If they reduce their food intake and shrink their body and protect it, there are many ways to reach God. The devotee who does this will become like the Lord who has a dark neck and is endowed with goodness.\n\nComment: The devotee who reduces his food intake and shrinks his body and permanently focuses his thoughts on the blue light in the middle of the forehead will have his breath permanently fixed in his forehead and will become like the Lord who has a dark neck and is endowed with goodness." }, { "song_number": 736, "padal": "பிண்டத்துள் உற்ற பிழக்கடை வாசலை\n\nஅண்டத்துள் உற்று அடுத்தடுத் தேகிடின்\n\nவண்டுஇச் சிக்கும் மலர்க்குழல் மாதரார்\n\nகண்டுஇச் சிக்கும்நல்ல காயமு மாமே.", "vilakam": "உயிர்களின் உடலுக்குள் மலத்துவாரத்திற்கும் பிறவிக்குறிக்கும் நடுவிலுள்ள மூலாதாரத்திலிருக்கும் குண்டலினி சக்தியை எழுப்பி பாடல் #734 இல் உள்ளபடி நெற்றியின் நடுவில் இருக்கும் நீல நிற ஜோதியின் மேல் சிந்தனையை வைத்துக்கொண்டே சுழுமுனை நாடியின் வழியாக ஒவ்வொரு ஆதாரச் சக்கரங்களாக மேல் நோக்கி எடுத்து வந்து தலை உச்சியிலிருக்கும் சகஸ்ரதளத்தில் சேர்த்துவிட்டால் வண்டுகள் தேனை விரும்பி சுற்றும் அழகிய மலர்களை தலையில் அணிந்திருக்கும் பெண்கள் கூட இப்படிப்பட்ட உடல் நமக்கு கிடைக்காதா என்று ஏங்கித் தவிக்கும் அளவிற்கு சாதகரின் உடல் அழகாகிவிடும்.\n\nகருத்து: மூலாதாரத்திலுள்ள குண்டலினியை எழுப்பி ஆறு சக்கரங்களுக்கும் சக்தியூட்டி ஏழாவதான சகஸ்ரதளத்தில் சேர்ப்பவர்களின் உடல் அழகாகிவிடும்.", "vilakam_en": "If the Kundalini energy in the body of living beings is awakened at the source of the soul, between the anus and the birthmark, and, as mentioned in song #734, while keeping one's mind on the blue light in the middle of the forehead, is brought upward through the Vishnumuna Nadi to each of the adhara chakras and placed in the Sahasratha at the top of the head, the body of the aspirant will become so beautiful that even women who wear beautiful flowers on their heads, where beetles love honey, yearn for such a body, will yearn for it.\n\nComment: The bodies of those who awaken the Kundalini in the source of the soul, energize all six chakras, and place it in the seventh Sahasratha, will become beautiful." }, { "song_number": 737, "padal": "சுழலும் பெருங்கூற்றுத் தொல்லைமுன் சீறி\n\nஅழலும் இரதத்துள் அங்கியுள் ஈசன்\n\nகழல்கொள் திருவடிக் காண்குறில் ஆங்கே\n\nநிழலுளுந் தெற்றுளும் நிற்றலு மாமே.", "vilakam": "சுழன்று அடிக்கின்ற சூறாவளிக் காற்றின் நடுவில் சிக்கி தேர் அலைந்து திரிவது போல இறப்பு பிறப்பு எனும் சுழற்சியில் சிக்கிக்கொண்ட உயிர்கள் பிறவித் துன்பத்தில் கிடந்து அலைகின்றன. இந்தப் பிறவிச் சுழற்சியிலிருந்து உயிர்களை விடுவிக்கும் இறைவன் உயிர்களின் உடலுக்குள்ளேயே பாடல் #734 இல் உள்ளபடி நெற்றியின் நடுவில் தோன்றும் நீல நிற ஜோதியில் ஒளியுருவமாக வீற்றிருக்கின்றான். அகயோகம் செய்து நீல நிற ஜோதியின் நடுவில் இறைவனின் ஒளியுருவத்தைத் தரிசித்து அவனது திருவடிகளில் அணிந்திருக்கும் சிலம்பின் ஓசையும் கேட்டு அதிலேயே சிந்தனையை வைத்திருக்கும் சாதகர்கள் இறப்பு பிறப்பு என்கிற பிறவிச் சுழற்சி நீங்கி எப்போதும் பேரின்பத்தில் இறைவனின் திருவடி நிழலிலேயே வீற்றிருப்பார்கள்.\n\nகருத்து: அகயோகம் செய்து இறைவனின் திருவடியை நெற்றிக்குள் தரிசிக்க பிறவி எனும் பெருந்துன்பம் தீர்ந்து இறப்பும் பிறப்பும் இன்றி எப்போதும் இறைவனது திருவடியிலேயே இருக்கலாம்.", "vilakam_en": "Just as a chariot is caught in the midst of a whirlwind, so too are the beings trapped in the cycle of birth and death, wandering in the miseries of birth and death. The Lord, who frees the beings from this cycle of birth and death, sits within the bodies of the beings in the form of a light in the blue light that appears in the middle of the forehead, as stated in song #734. Those who, by performing inner yoga, see the light of the Lord in the midst of the blue light, and hear the sound of the cymbal worn at His feet, and keep their thoughts on that, are free from the cycle of birth and death and forever reside in the shadow of the Lord's feet in bliss.\n\nComment: By performing inner yoga, one can see the Lord's feet in the forehead, and the great miseries of birth and death are over, and one can always remain at the Lord's feet without death or birth." }, { "song_number": 738, "padal": "நான்கண்ட வன்னியும் நாலு கலையேழுந்\n\nதான்கண்ட வாயுச் சரீர முழுதொடும்\n\nஊன்கண்டு கொண்ட வுணர்வு மருந்தாக\n\nமான்கன்று நின்று வளருகின்ற வாறே.", "vilakam": "பாடல் #734 இல் உள்ளபடி நெற்றி நடுவில் கண்ட நீல நிற ஜோதியும் நான்கு கலைகளைக் கொண்டு ஏழு ஆதாரச் சக்கரங்களுக்கும் எடுத்துச் சென்ற மூச்சுக்காற்றும் உடலை முழுவதும் மூடியிருக்கும் தோலும் தமக்குள் உணர்ந்த உண்மை ஞானமாகிய மெய்யுணர்வானது உடலுக்கு சிறந்த மருந்தாகி மான் குட்டி கீரையைத் தின்று வளர்வது முதிர்ச்சி அடைவது போல மெய்யுணர்வைத் தின்று ஆன்மா பிறவியில்லா நிலைக்கு முதிர்ச்சி அடைகிறது.\n\nகருத்து: அகயோகத்தை முறையாக செய்தால் மெய்யுணர்வை பெற்று ஆன்மா பிறவியில்லா நிலைக்கு முதிர்ச்சி அடையும்.", "vilakam_en": "As stated in song #734, the blue light seen in the middle of the forehead, the breath carried by the four arts to the seven adharah chakras, and the skin covering the entire body, the true knowledge, the true consciousness, realized within oneself, becomes the best medicine for the body. Just as a young deer grows and matures by eating greens, so the soul matures to the state of non-birth by eating true consciousness.\n\nComment: If internal yoga is practiced properly, the soul matures to the state of non-birth by gaining true consciousness." }, { "song_number": 739, "padal": "ஆகுஞ் சனவேத சக்தியை அன்புற\n\nநீர்கொள நெல்லின் வளர்கின்ற நேர்மையைப்\n\nபாகு படுத்திப் பல்கோடி களத்தினால்\n\nஊழ்கொண்ட மந்திரந் தான்கொண்டு ஒடுங்கே.", "vilakam": "ஒரு நெல்லை பயிர் செய்தால் அதிலிருந்து பல நெல் வரும் அந்த பல நெல்லை மீண்டும் பயிர் செய்தால் பல ஆயிரம் வரும் அதனையும் பயிர் செய்தால் பல கோடி வரும். அது போல பாடல் #737 ல் உள்ளபடி சரீர நெற்றியில் இருக்கும் நீலநிற ஜோதியில் இருக்கும் வெப்பத்தில் இருந்து வரும் மந்திரமான ஒலியை மீண்டும் மீண்டும் சரீரத்திற்குள்ளேயே எந்தவித எதிர்பார்ப்பின்றி மனனம் செய்யும் சாதகனின் உடல் அழியாமல் இருந்து ஒரு மந்திரம் பல மந்திரமாக பெருகி வேதமந்திரமாக இருக்கும் இறைவனுடனேயே ஒடுங்கிவிடுவார்.\n\nகருத்து: சரீரத்திற்குள்ளேயே எந்தவித எதிர்பார்ப்பின்றி மனனம் செய்யும் சாதகனின் உடல் அழியாமல் இருந்து வேதமந்திரமாக இருக்கும் இறைவனுடனேயே ஒடுங்கிவிடுவார்.", "vilakam_en": "If you plant one paddy, many paddy will come from it. If you plant that many paddy again, you will come to thousands. If you plant that too, you will come to crores. Similarly, as in song #737, the devotee who repeatedly recites the mantra sound coming from the heat of the blue light on the forehead of the body without any expectation, without any body being destroyed, one mantra will multiply into many mantras and will merge with the Lord who is the Vedic mantra.\n\nComment: The devotee who recites the mantra without any expectation, without any body being destroyed, will merge with the Lord who is the Vedic mantra." }, { "song_number": 740, "padal": "மதிவட்ட மாக வரையைந்து நாடி\n\nஇதுவிட்டிங் கீரா றமர்ந்த அதனாற்\n\nபதிவட்டத் துள்நின்று பாலிக்கு மாறும்\n\nஅதுவிட்டுப் போமாறு மாயலுற் றேனே.", "vilakam": "பூமியை நிலா சுற்றி வருகின்ற ஒரு நாளிலிருந்து பதினைந்து நாட்களுக்கு ஐந்து ஐந்து நாளாக சூரியனின் வட்டத்திலிருந்து விலகி கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சம் பெற்று பெளர்ணமியாகும் விதமும் பின்பு ஐந்து ஐந்து நாளாக சூரியனின் வட்டத்தை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சம் இழந்து பின்பு அமாவாசையாகும் விதமும் சந்திரன் சூரியனின் வட்டத்தில் இருக்கும் பன்னிரண்டு இராசிகளில் ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை நாட்கள் அமர்ந்து பின் அடுத்த ராசிக்கு மாறுகின்ற விதமும் இவை அனைத்தும் இறைவனின் திருவருளாலே உயிர்களின் கர்ம வினைகளுக்கேற்ப காத்து அருளுகின்ற விதமும் உடலை விட்டு உயிர் பிரியும்போது அதனை விட்டுப் பிரிந்து செல்லுகின்ற விதமும் ஆராய்ந்து அருளுகின்றேன்.\n\nகருத்து: சந்திரன் பூமியைச் சுற்றும்போது சூரியவட்டத்தில் வரும் பன்னிரண்டு இராசிகளிலும் 30 நாட்களில் அமர்ந்து மாறும்போது இறையருளால் உயிர்களைக் காக்கின்ற தன்மையையும் பின்பு உயிர் உடலை விட்டுப் பிரியும் விதமும் ஆராய்ந்து இந்தத் தலைப்பிலுள்ள பாடல்கள் அருளப்பட்டுள்ளன.", "vilakam_en": "From one day to fifteen days, the moon revolves around the earth, gradually gaining light from the sun's orbit, and becoming a full moon, and then gradually losing light towards the sun's orbit for five to five days, and then becoming a new moon, and how the moon stays in each of the twelve zodiac signs in the sun's orbit for two and a half days and then moves to the next zodiac sign, and all these are the ways in which the Lord protects and bestows blessings upon the souls according to their karmic actions, and how the soul departs from the body when it leaves it.\n\nComment: The songs on this topic have been revealed by examining the nature of the moon's orbit around the earth, when it stays in each of the twelve zodiac signs in the sun's orbit for 30 days, and how the soul departs from the body." }, { "song_number": 741, "padal": "உற்றறி வைந்தும் உணர்ந்தறி வாறேழுங்\n\nகற்றறி வெட்டுங் கலந்தறி வொன்பதும்\n\nபற்றிய பத்தும் பலவகை நாழிகை\n\nஅற்ற தறியாது அழிகின்ற வாறே.", "vilakam": "முதல் நிலையில் ஐந்து புலன்களைச் சார்ந்து இருக்கும் உணர்வுகளில் பெற்ற ஐந்து அறிவுகளும் இரண்டாவது நிலையில் ஐந்தறிவோடு நன்மை தீமையை உணரும் பகுத்தறிவு சேர்ந்து பெற்ற ஆறு அறிவுகளும் மூன்றாவது நிலையில் பகுத்தறிவோடு மனம் சேர்ந்து பெற்ற ஏழு அறிவுகளும் நான்காவது நிலையில் மனதோடு கல்வி சேர்ந்து பெற்ற எட்டு அறிவுகளும் ஐந்தாவது நிலையில் கல்வியோடு அனுபவம் சேர்ந்து பெற்ற ஒன்பது அறிவுகளும் ஆறாவது நிலையில் அனைத்தும் இறையருளாலே என்பதை உணர்ந்து அவனது திருவடிகளை விடாமல் பற்றிக்கொண்டு பெற்ற பத்து அறிவுகளைக் கொண்டு அழிந்து போகும் உடலை விட்டு அழியாத ஞானத்தைப் பெறுவது எப்படி என்பதை அறியாமலேயே பல உயிர்கள் வீணாக அழிந்து போகின்றன.\n\nகருத்து: உயிர்களின் வளர்ச்சியில் ஆறு வகை அறிவு நிலைகளையும் அறிந்து அதன்மூலம் இறைவனின் திருவடிகளைப் பற்றிக்கொண்டு காலச் சுழற்சியாகிய பிறவியிலிருந்து நீங்கும் வழியை அறியாமலேயே பல உயிர்கள் வீணாகிவிடுகின்றன.", "vilakam_en": "In the first stage, the five knowledges acquired through the five senses, in the second stage, the six knowledges acquired through the intellect, which perceives good and evil, in the third stage, the seven knowledges acquired through the intellect, in the fourth stage, the eight knowledges acquired through education, in the fifth stage, the nine knowledges acquired through education, and in the sixth stage, the ten knowledges acquired by grasping the feet of the Lord, realizing that everything is from Him, and by grasping His feet without ceasing, many lives perish in vain, not knowing how to leave the perishable body and attain immortal wisdom.\n\nComment: Many lives perish in vain, not knowing the way to escape from the cycle of birth, which is the cycle of time, by grasping the feet of the Lord, by grasping the feet of the Lord." }, { "song_number": 742, "padal": "அழிகின்ற ஆண்டவை ஐயைஞ்சு மூன்று\n\nமொழிகின்ற முப்பத்து மூன்றென்ப தாகுங்\n\nகழிகின்ற காலறு பத்திரண் டென்ப\n\nதெழுகின்ற ஈரைம்ப தெண்ணற் றிருந்தே.", "vilakam": "உயிர்களின் வாழ்நாளில் அழியக்கூடிய நான்கு பகுதிகள் இருக்கின்றன. முதலாவது எதற்கும் பயனின்றி அழிகின்ற பகுதி பதிமூன்று வயது வரையான குழந்தை பருவம். இரண்டாவது பலராலும் சொல்லப்படுகின்ற அளவிற்கு வாழ்ந்து முடியும் பகுதி முப்பத்து மூன்று வயது வரையான வாலிப பருவம். மூன்றாவது பலருக்கும் பயனுள்ளதாக வாழ்ந்து முடியும் பகுதி அறுபத்தி இரண்டு வயது வரையான முதிர்வு பருவம். நான்காவது முழுவதும் வாழ்ந்து பரிபூரணம் என்று சொல்லப்படுகின்ற நிலையில் முடியும் பகுதி நூறு வயது வரையான வயோதிக பருவம். பதிமூன்று வயதிலிருந்து எப்போது வேண்டுமானாலும் இறைவனை அடையக்கூடிய வழிகளில் முயன்று இறைவனை உணர்ந்து விட்டால் எல்லைகள் இல்லாமல் எண்ணிலடங்காத ஆண்டுகள் ஆனாலும் அழியாமல் இருக்கலாம்\n\nகருத்து: உயிர்களின் வாழ்நாளில் நான்கு விதமான பகுதிகள் இருகின்றன. இந்தக் பகுதிகளுக்குள் வாழ்க்கையை முடித்துக் கொள்வதும் அதைத் தாண்டி இறையருளால் யோகப் பயிற்சிகள் செய்து நீண்ட காலம் வாழ்வதும் ஒவ்வொரு உயிரின் நோக்கத்தைப் பொறுத்தது.", "vilakam_en": "There are four parts of the life span of beings that can perish. The first is childhood up to the age of thirteen, when life is wasted without any benefit. The second is youth up to the age of thirty-three, when life can be lived to the extent that many people say it is. The third is maturity up to the age of sixty-two, when life can be lived usefully by many people. The fourth is old age up to the age of one hundred, when life is lived to the fullest and when life ends in what is called perfection. If one tries to reach God at any time from the age of thirteen and realizes God, one may not perish even after countless years without limits.\n\nComment: There are four different parts of the life span of beings. Ending life within these parts and living a long life beyond them by practicing yoga with the grace of God depends on the purpose of each being." }, { "song_number": 743, "padal": "திருந்து தினமத் தினத்தி னொடுநின்\n\nறிருந்தறி நாளொன் றிரண்டெட்டு மூன்று\n\nபொருந்திய நாளொடு புக்கறிந் தோங்கி\n\nவருந்துத லின்றி மனைபுக லாமே.", "vilakam": "உயிர்கள் பிறந்த தினத்தின் நட்சத்திரத்தை அறிந்து கொண்டு அதிலிருந்து ஒரு நாள், இரண்டு நாள், மூன்று நாள், எட்டு நாள் ஆகிய நாட்களைக் கூட்டி வருகின்ற நாட்களில் அமையும் நட்சத்திரங்களை அறிந்து அந்த நட்சத்திரங்கள் அமையும் நாட்களில் இறைவனை அறிந்துகொள்ளும் அகயோகப் பயிற்சிகளை எதைப்பற்றியும் கவலைப் படாமல் ஆரம்பிக்கலாம்.\n\nகருத்து: அகயோகப் பயிற்சியை ஆரம்பிப்பதற்கு ஏதுவான நாட்களை பிறந்த நாள் நட்சத்திரத்திலிருந்து எடுத்துக்கொண்டு எந்தத் தயக்கமும் இன்றி ஆரம்பிக்கலாம்.", "vilakam_en": "By knowing the star of the day of birth of a living being and adding one, two, three, and eight days from it, one can begin the inner yoga practice of knowing God on the days when those stars are formed without worrying about anything.\n\nComment: One can start the inner yoga practice by taking the days suitable for starting the inner yoga practice from the star of the day of birth and start it without any hesitation." }, { "song_number": 744, "padal": "மனைபுகு வீரும் அகத்திடை நாடி\n\nஎனவிரு பத்தஞ்சும் ஈரா றதனால்\n\nதனையறிந் தேறட்டுத் தற்குறி யாறு\n\nவினையறி யாறு விளங்கிய நாலே.", "vilakam": "அகயோகம் செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தில் பாடல் #748 இல் உள்ளபடி நட்சத்திரம் பார்த்து சாதனைகளை ஆரம்பிக்கும் சாதகர்கள் பாடல் #451 இல் உள்ளபடி தமக்குள் இருபத்தைந்து தத்துவங்களாக இருக்கும் இறைவனை அறிய வேண்டி மூச்சுக்காற்றை பாடல் #728 இல் உள்ளபடி சுழுமுனை நாடியின் 12 அங்குல அளவிற்கும் இறைவனின் மேல் சிந்தனையை வைத்து ஏற்றி இறக்கி தமது மூலாதாரத்திலுள்ள குண்டலினி சக்தியை எழுப்பி ஒவ்வொரு சக்கரமாக ஏறி ஏழாவது சக்கரமாகிய சகஸ்ரதளம் சென்றடைந்தவுடன் பாடல் #709 இல் உள்ளபடி அதையும் தாண்டிய துவாதசாந்த வெளியில் இறைவனோடு கலந்து அவன் நான்கு உயர் தத்துவங்களாக இருப்பதை உணர்ந்து கொள்வார்கள்.\n\nகருத்து: முறைப்படி அகயோகம் செய்யும் சாதகர்கள் இறைவனோடு கலந்து உண்மை ஞானத்தை அடைவார்கள்.\n\nஇருபத்தைந்து தத்துவங்கள்:\n\n5 பூதங்கள்: நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம். 5 புலன்கள்: கண்களால் பார்த்தல், காதுகளால் கேட்டல், வாயால் சுவைத்தல், மூக்கால் நுகருதல், தோலால் தொடுதல். 5 ஞானேந்திரியங்கள்: ஓசை – கேட்பது, ஊறு – உணர்தல், ஒளி – பார்ப்பது, சுவை – உண்பது, நாற்றம் – முகர்வது. 5 கன்மேந்திரியங்கள்: வாய் – பேச்சு, கைகள் – செயல், கால்கள் – போக்குவரவு, எருவாய் – கழிவு நீக்கம் பகுதி, கருவாய் – இன்பமும் பிறப்பும். 4 அந்தக்கரணங்கள்: மனம் – எண்ணங்கள், புத்தி – அறிவு, சித்தம் – சிந்தனை, அகங்காரம் – நான் எனும் நினைப்பு. 1 புருடன்: ஆன்மா.\n\nநான்கு உயர் தத்துவங்கள்:", "vilakam_en": "Aspirants who begin their auspicious deeds by looking at the stars as mentioned in song #748 with the intention of doing Akhayoga, as mentioned in song #451, in order to know the God who is within them as twenty-five elements, raise and lower the breath to the level of 12 inches of the Vuzhumuna Nadi as mentioned in song #728, with the thought of God above it, awaken the Kundalini energy at their root, and ascend to each chakra until, upon reaching the seventh chakra, Sahasratala, they merge with God in the space of Dvadashanta beyond that, as mentioned in song #709, and realize that He is present in the four higher elements.\n\nComment: Aspirants who practice Akhayoga properly merge with God and attain true knowledge.\n\nTwenty-five elements:\n\n5 elements: earth, water, air, fire, and sky. 5 senses: seeing with the eyes, hearing with the ears, tasting with the mouth, smelling with the nose, and touching with the skin. Touch. 5 Sense Organs: Sound – hearing, Touch – feeling, Light – seeing, Taste – eating, Smell – smelling. 5 Sense Organs: Mouth – speaking, Hands – action, Feet – movement, Manure – excretory organ, Fertilization – pleasure and birth. 4 Other Sense Organs: Mind – thoughts, Intellect – knowledge, Will – thinking, Ego – the thought of I. 1 Soul Soul.\n\nFour higher principles:" }, { "song_number": 745, "padal": "நாலுங் கடந்தது நால்வரும் நாலைந்து\n\nபாலங் கடந்தது பத்துப் பதினைந்து\n\nகோலங் கடந்த குணத்தாண்டு மூவிரண்\n\nடாலங் கடந்ததுஒன் றாரறி வாரே.", "vilakam": "பாடல் #744 இல் உள்ளபடி துவாதசாந்த வெளியில் இறைவன் நான்கு உயர் தத்துவங்களாக இருப்பதை உணர்ந்த யோகியர்கள் அதையும் தாண்டிய நிலையில் பாடல் #467 இல் உள்ளபடி ஒன்பது துவாரங்கள் இருபத்தைந்து தத்துவங்களால் ஆன உருவத்தைத் தாண்டி அதைச் சுற்றியிருக்கும் குணங்களைக் கொண்ட ஐந்துவித கோசங்களையும் தாண்டி அண்டசராசரங்கள் அனைத்தையும் தாண்டிய ஒரே பொருளாக இருப்பதை அறிந்துகொள்வதில்லை.\n\nகருத்து: இறைவனை நான்கு உயர் தத்துவங்களாக உணர்ந்த யோகியர்களாலும் இறைவன் அனைத்தையும் கடந்த ஒரே பொருளாக இருப்பதை உணர்ந்துகொள்வதில்லை.\n\nஐந்து கோசங்கள்:", "vilakam_en": "As in song #744, the yogis who have realized that God exists in the four higher principles in the Dvadashanta space do not realize that God exists in the form of the nine holes, the twenty-five principles, the five types of kosas surrounding it, and the universe as a single entity that transcends all.\n\nComment: Even the yogis who have realized God in the four higher principles do not realize that God exists in the form of the five kosas:" }, { "song_number": 746, "padal": "ஆறும் இருபதுக் கையஞ்சு மூன்றுக்குந்\n\nதேறு மிரண்டு மிருபத்தொ டாறிவை\n\nகூறு மதியொன் றினுக்கிரு பத்தேழு\n\nவேறு பதியங்கணன் நாள்விதித் தானே.", "vilakam": "பாடல் #743 ல் உள்ள முறைப்படி நட்சத்திரம் பார்த்து அகயோகப் பயிற்சியை குருநாதரின் வழிகாட்டுதலின் வழியில் மேற்கொள்ளும் சாதகர்களுக்கு இருபதாவது நாளில் மூச்சுக்காற்று ஆறு ஆதார சக்கரங்களையும் செல்வதை உணரலாம். இருபத்தி ஐந்தாவது நாளில் சகஸ்ரதளத்தைத் தாண்டிய துவாதசாந்த வெளியில் இருக்கும் மூன்று மண்டலங்களில் முதலாவதான அக்கினி மண்டலத்திலும் இருபத்தி ஆறாவது நாளில் இரண்டாவதான சூரிய மண்டலத்திலும் இருபத்தி ஏழாவது நாளில் மூன்றாவதான சந்திர மண்டலத்திலும் மூச்சுக்காற்றை வைத்து பயிற்சி செய்தால் இருபத்தி எட்டாவது நாளில் அனைத்தையும் தாண்டி இருக்கும் இறைவனை அறியலாம் என்று யோகத்தின் தலைவனாகிய இறைவன் விதித்து வைத்தான்.\n\nகருத்து: அகயோகப் பயிற்சியை குருநாதரின் வழிகாட்டுதலின் வழியில் முறையாக ஆரம்பிக்கும் சாதகர்கர்கள் தமது இருபத்தி எட்டாவது நாளில் அனைத்தையும் தாண்டி இருக்கும் இறைவனை அறியலாம்.", "vilakam_en": "The Lord, the master of yoga, has decreed that those who practice inner yoga by observing the stars and following the guidance of their Guru, on the twentieth day, will feel the breath moving through the six adhara chakras. On the twenty-fifth day, if they practice in the first of the three realms of the Dvadashanta space beyond the Sahasratala, the first in the Agni Mandal, on the twenty-sixth day, the second in the Solar Mandal, and on the twenty-seventh day, the third in the Lunar Mandal, they will be able to know the Lord who is beyond everything on the twenty-eighth day.\n\nComment: Those who properly begin the inner yoga practice under the guidance of their Guru will be able to know the Lord who is beyond everything on their twenty-eighth day." }, { "song_number": 747, "padal": "விதித்த இருபத்தெட் டொடுமூன் றாகத்\n\nதொகுத்தறி முப்பத்து மூன்று தொகுமின்\n\nபதித்தறி பத்தெட்டும் பாரா திகணால்\n\nஉதித்தறி மூன்றிரண் டொன்றின் முறையே.", "vilakam": "பாடல் #746 இல் உள்ளபடி அகயோகத்தில் இறைவன் விதித்த இருபத்தி எட்டு நாட்கள் முடிந்த பின் அனைத்தையும் தாண்டி இருக்கும் இறைவனை அறிய முயலும் சாதகர்கள் பாடல் # 467 ல் உள்ளபடி தமக்குள் இருக்கும் முப்பத்தாறு தத்துவங்களையும் ஒன்றாகத் தொகுத்து தமது மூச்சுக்காற்றை சுழுமுனை நாடியிலிருந்து 18 அங்குலம் தாண்டியிருக்கும் (புருவ மத்தியிலிருந்து தலை உச்சி 6 அங்குலம், தலை உச்சியிலிருந்து துவாதசாந்த வெளி 12 அங்குலம்) துவாதசாந்த வெளியில் பதித்து பாடல் #744 இல் உள்ளபடி உணர்ந்த நான்கு உயர் தத்துவங்களிலேயே மனதைச் செலுத்தி அகயோகம் பயின்றால் ஐந்து சிவதத்துவங்களாக இருக்கும் இறைவன் ஒருவனே என்பதை அறிந்து கொள்ளலாம்.\n\nகருத்து: ஐந்து சிவதத்துவங்களாக இருக்கும் இறைவன் ஒருவனே சதாசிவமூர்த்தி என்பதை இருபத்தி எட்டு நாட்களுக்குப் பின் முயலும் அகயோகப் பயிற்சியால் அறிந்து கொள்ளலாம்.", "vilakam_en": "After completing the twenty-eight days prescribed by the Lord in Akhayoga as mentioned in Song #746, aspirants who strive to know the Lord who transcends all things, as mentioned in Song #467, should gather the thirty-six Tattvas within themselves and place their breath in the Dvadashanta space, which is 18 inches beyond the Sujumunai Nadi (6 inches from the center of the eyebrows to the top of the head, 12 inches from the top of the head to the Dvadashanta space) and, as mentioned in Song #744, concentrate their minds on the four higher Tattvas and practice Akhayoga. They can come to know that the Lord who is the five Shiva tattvas is one.\n\nComment: The Lord who is the five Shiva tattvas is one, the Sadashivamurthy, can be known by practicing Akhayoga after twenty-eight days." }, { "song_number": 748, "padal": "முறைமுறை யாய்ந்து முயன்றில ராகில்\n\nஇறையிறை யார்க்கும் இருக்க அரிது\n\nமறையது காரண மற்றொன்று மில்லை\n\nபறைபறை யாது பணிந்து முடியே.", "vilakam": "பாடல் #743 ல் இருந்து #747 வரை உள்ள அகயோகப் பயிற்சி முறைகளை முறையாக குருவின் மூலம் கற்று பகுத்து அறிந்துகொண்டு முயற்சிக்க வேண்டும். குருவருள் இல்லாமல் முறையில்லாமல் செய்யும் யோகப் பயிற்சியால் நீண்ட காலம் நிலைத்து நிற்கவும் முடியாமல் இறையருளும் அவர்களுக்கு கிடைக்காது. குருவின் மூலம் முறையாக கற்றுக்கொண்டதும் அதை வேறு எவருக்கும் சொல்லாமல் பணிவோடு முயற்சி செய்து முடியுங்கள். யாருக்கும் சொல்லாமல் பணிவோடு செய்யுங்கள் என்று அருளியதன் காரணம் இறையருள் கிடைக்காது இதுவே காரணம் அன்றி வேறொன்றும் இல்லை.\n\nகருத்து: குருவின் மூலம் முறையாகக் கற்று அதன்படி அகயோகப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.", "vilakam_en": "The internal yoga practices from songs #743 to #747 should be properly learned, analyzed, understood and tried through the Guru. Without the Guru's grace, those who practice yoga without proper discipline cannot sustain themselves for a long time and will not receive the grace of God. Once they have learned it properly from the Guru, they should try it with humility without telling anyone else. The reason why it is said to do it with humility without telling anyone is that they will not receive the grace of God.\n\nComment: One should learn it properly from the Guru and carry out the internal yoga practices accordingly." }, { "song_number": 749, "padal": "முடிந்த தறியார் முயல்கின்ற மூர்க்கர்\n\nஇடிஞ்சில் இருக்க விளக்கெரி கொண்டு\n\nகடிந்தனல் மூளக் கதுவவல் லார்க்கு\n\nநடந்திடும் பாரினில் நண்ணலு மாமே.", "vilakam": "முறையாகச் செய்யும் அகயோகப் பயிற்சினால் சாதிக்கக்கூடிய விஷயங்களை அறியாமல் வேறு பல வழிகளில் அதை சாதிக்க வேண்டி முயற்சி செய்பவர்கள் கையில் அகல் விளக்கு இருந்தாலும் அதை அறியாமல் தீப்பந்தத்தை தேடி அலையும் மூடர்களைப் போன்றவர்களே. உயிர்களின் உடலுக்குள்ளேயே குண்டலினி சக்தி எனும் நெருப்பு மூலாதாரம் எனும் அகலில் தூங்கிக் கொண்டு இருக்கின்றது. அதை எழுப்பி சுழுமுனை நாடியின் வழியே எடுத்துச் சென்று சகஸ்ரதளத்தில் இருக்கும் ஜோதியில் பொருத்தி பெரிய விளக்காகப் பற்ற வைத்து அஞ்ஞானம் எனும் இருளை அகற்றி உண்மை ஞானத்தை உணர முடிந்த சாதகர்களுக்கு காலம் சக்கரம் போல் ஓடிக் கொண்டே இருக்கும் இந்த உலகத்தில் எதனாலும் பாதிக்கப் படாமல் என்றும் நீடித்து வாழும் வல்லமை கிடைக்கும்.\n\nகருத்து: அகயோகப் பயிற்சிகளை முறையாகக் கடைபிடித்து ஞானத்தை உணர முடிந்த சாதகர்கள் நீடித்தகாலம் வாழலாம்.", "vilakam_en": "Those who do not know what can be achieved through proper inner yoga practice and try to achieve it in many other ways are like fools who wander around in search of a torch without knowing it, even though they have a lamp in their hands. The fire energy called Kundalini sleeps in the source called the source within the body of living beings. By awakening it, taking it through the Vishnumanai Nadi, placing it in the Jyothi at the Sahasratha, lighting it as a large lamp, and removing the darkness of ignorance and realizing true knowledge, ascetics who are able to realize this world, where time keeps running like a wheel, gain the power to live forever without being affected by anything.\n\nComment: Ascetics who are able to realize knowledge by properly practicing inner yoga practices can live for a long time." }, { "song_number": 750, "padal": "நண்ணுஞ் சிறுவிர னாணாக மூன்றுக்கும்\n\nபின்னிய மார்பிடைப் பேராமல் ஒத்திடுஞ்\n\nசென்னியின் மூன்றுக்குஞ் சேரவே நின்றிடில்\n\nஉன்னி உணர்ந்திடும் ஓவியந் தானே.", "vilakam": "கட்டை விரலால் சுண்டு விரலைப் பிடித்துக் கொண்டு மற்ற மூன்று விரல்களையும் நேராக நீட்டினால் வரும் முத்திரை வில்லில் ஏற்றிய அம்புகள் போல இருக்கும் மூன்று விரல்களைப் போலவே இடகலை, பிங்கலை மற்றும் சுழுமுனை ஆகிய மூன்று நாடிகளும் மார்பில் உள்ள இதயத்தில் பின்னிப் பிணைந்து பிரியாமல் ஒன்றாகச் சேர்ந்து இருக்கின்றன. அதைப் போலவே மூன்று நாடிகளையும் தலையிலுள்ள மூன்று ஆதாரச் சக்கரங்களோடு (விசுக்தி, ஆக்ஞா, சகஸ்ரதளம்) ஒன்றாகப் பொருந்தும் படி செய்து மூச்சுக்காற்றை சகஸ்ரதளத்திற்கு மேலே இருக்கும் மூன்று மண்டலங்களோடும் (அக்கினி, சந்திர, சூரிய மண்டலங்கள் பாடல் #746 இல் உள்ளபடி) கலக்கும் படி செய்து எண்ணங்களை மொத்தமும் அதிலேயே வைத்து காகிதத்தில் வரைந்த ஓவியம் போல எந்த அசைவும் இன்றி இருந்தால் உண்மை ஞானத்தை உணர்ந்து உடல் என்றும் அழியாத அழகான ஓவியம் போல இளமையுடன் நீண்ட காலம் இருக்கும்.\n\nகருத்து: அகயோகப் பயிற்சியின்படி ஒன்றாக இருக்கும் மூன்று நாடிகளைகளோடு மூச்சுக்காற்றையும் மூன்று மண்டலங்களோடும் கலந்து தியானித்தால் உண்மை ஞானத்தை உணர்ந்து உடல் என்றும் அழியாத ஓவியம் போல இருக்கும்.", "vilakam_en": "The mudra that comes from holding the little finger with the thumb and extending the other three fingers straight is like three arrows on a bow. The three nadis, the Itakalai, the Pingalalai and the Suzumunai, are intertwined in the heart in the chest and are not separated. Similarly, by aligning the three nadis with the three foundation chakras in the head (Vishukti, Ajna, Sahasratha) and mixing the breath with the three mandalas above the Sahasratha (the fire, moon and sun mandalas as mentioned in song #746), keeping all the thoughts in it, like a painting drawn on paper, without any movement, one will realize true knowledge and the body will remain young and long-lived, like an imperishable beautiful painting.\n\nComment: If one meditates on the three nadis that are together according to the practice of Akhayoga, by mixing the breath with the three mandalas, one will realize true knowledge and the body will be like an imperishable painting." }, { "song_number": 751, "padal": "ஓவிய மான வுணர்வை அறிமின்கள்\n\nபாவிக ளித்தின் பயனறி வாரில்லை\n\nதீவினை யாமுடல் மண்டல மூன்றுக்கும்\n\nபூவினில் இருந்திடும் புண்ணியத் தண்டே.", "vilakam": "பாடல் #750 இல் உள்ளபடி அகயோகத்தால் உண்மை ஞானத்தை உணர்ந்து ஓவியம் போல அசையாமல் நிலைபெறும் உணர்வுகளை அறிந்து கொள்ளுங்கள். ஒழுக்கத்திலிருந்து தவறி பாவத்திலேயே வாழுகின்ற உயிர்கள் இந்த யோகத்தின் பயன்களை அறிந்து கொள்வதில்லை. தீவினையால் பிறந்த இந்த உடலுக்கு இருக்கும் அனைத்து வினைகளையும் நீக்கி பிறவிச் சுழற்சியை அகயோகப்பயிற்சியால் அறுத்து அடைய வேண்டிய அக்கினி, சந்திர, சூரிய மண்டலங்களுக்கு (பாடல் #746 ல் உள்ளபடி) செல்லும் வழியாக சகஸ்ரதளத்தின் ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப் பூவிற்கு காம்பு போல புண்ணிய பாதையான சுழுமுனை நாடி இருக்கின்றது.\n\nகருத்து: தீவினையால் பிறந்த உடலுக்கு புண்ணியத்தை பெற்று பிறவி இல்லா நிலையடைய ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலரும் அதன் காம்பு போல நீண்ட சுழுமுனை நாடியும் இருக்கின்றது.", "vilakam_en": "As stated in Song #750, realize true knowledge through inner yoga and become immovable like a painting. Living beings who stray from morality and live in sin do not realize the benefits of this yoga. On the way to the fiery, lunar, and solar systems (as stated in Song #746), which are to be attained by eliminating all the effects of this body born of evil deeds and breaking the cycle of rebirth through the practice of inner yoga, there is a sacred path, the Suzumunai Nadi, like the stem of the thousand-petalled lotus flower of the Sahasratha.\n\nComment: For the body born of evil deeds to attain virtue and attain the state of non-rebirth, there is a thousand-petalled lotus flower and a long Suzumunai Nadi like its stem." }, { "song_number": 752, "padal": "தண்டுடன் ஓடித் தலைப்பெய்த யோகிக்கு\n\nமண்டல மூன்று மகிழ்ந்துடல் ஒத்திடுங்\n\nகண்டவர் கண்டனர் காணார் வினைப்பயன்\n\nபிண்டம் பிரியவே பிணங்குகின் றாரே.", "vilakam": "சுழுமுனை நாடியின் வழியே மூச்சுக்காற்றை மேலேற்றிச் சென்று தலை உச்சியிலிருக்கும் சகஸ்ரதள ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலரோடு கலந்து விடும் அகயோகத்தை செய்த சாதகர்கள் சகஸ்ரதளத்தையும் தாண்டிய துவாதசாந்த வெளியிலிருக்கும் அக்கினி, சந்திர, சூரிய மண்டலங்களோடு (பாடல் #746 ல் உள்ளபடி) உணர்வு ஒடுங்கி இருந்தால் பேரின்பத்தில் திளைத்து அந்த மண்டலங்களோடு கலந்து நீண்ட காலம் அழியாமல் அழகுடன் இருப்பார்கள். இந்த நிலையை அகயோகப் பயிற்சியினால் முயற்சி செய்து அடைந்தவர்கள் மட்டுமே கண்டு உணர்கின்றார்கள். தங்களின் தீவினைப் பயனால் இந்தப் பயிற்சியைப் பற்றித் தெரியாமலோ அல்லது இதைச் செய்யாமல் வேறு வழிகளில் முயன்று தோல்வியடைந்தவர்களோ தங்களின் உடலை விட்டு உயிர் பிரிந்து மீண்டும் மீண்டும் பிறக்கும் பிறவிச் சுழற்சியில் சிக்கிக் கொண்டு வருந்துகின்றார்கள்.\n\nகருத்து: அகயோகத்தை செய்பவர்கள் அதைப் பெற்று பேரின்பத்தில் திளைத்து பிறவிச் சுழற்சியிலிருந்து விடுபடுவார்கள். மற்றவர்கள் தங்களின் தீவினைப் பயனால் பிறவித் துன்பத்திலேயே கிடந்து வருந்துகின்றார்கள்.", "vilakam_en": "Those who have practiced inner yoga, which involves raising the breath through the spiral nadi and merging with the thousand-petalled lotus flower at the top of the head, and who are conscious of the fire, moon, and sun spheres in the Dvadashanta space beyond the sahasratha (as in song #746), will be immersed in bliss and will merge with those spheres for a long time, remaining beautiful and immortal. Only those who have tried and achieved this state through the practice of inner yoga can see and feel it. Those who, due to their bad deeds, do not know about this practice or who have tried and failed in other ways without doing this, leave their bodies and are trapped in the cycle of rebirths and suffer.\n\nComment: Those who practice inner yoga will attain it, immerse in bliss and be freed from the cycle of rebirths. Others, due to their bad deeds, remain in the suffering of rebirths and suffer." }, { "song_number": 753, "padal": "பிணங்கி அழிந்திடும் பேறது கேள்நீ\n\nஅணங்குட னாதித்த னாறு விரியின்\n\nவணங்குட னேவந்த வாழ்வு குலைந்து\n\nசுணங்கனுக் காகச் சுழல்கின்ற வாறே.", "vilakam": "பிறவிச் சுழற்சியில் சிக்கிக்கொண்டு இறைவனை அடைய உதவும் இந்த பிறவி எப்படி அழிந்து போகின்றது என்பதைக் கேட்டுக்கொள்ளுங்கள். வினைகளைத் தீர்த்துக்கொண்டு தம்மை வந்து அடைய வேண்டும் என்பதற்காக இறைவன் கொடுத்த பிறவியை உயிர்கள் தங்களது ஆசைகளின் வழியிலேயே சென்று மேலும் மேலும் அதிகமாக வினைகளைச் சேர்த்துக் கொண்டே இருந்தால் இறைவனை உணர்ந்து அனைவரும் போற்றி வணங்கிடும் நிலை பெற வேண்டிய வாழ்க்கை சீர்குலைந்து எந்தவித இலக்கும் இல்லாமல் திரியும் நாய்களைப்போல் திரிந்து இறந்து மீண்டும் மீண்டும் பிறந்து அழிகின்ற வாழ்க்கையாக மாறிவிடும்.\n\nகருத்து: உயிர்கள் தங்கள் ஆசைகளின் வழி செல்வதால் வினைகளை சேர்த்துக்கொண்டு மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்துக்கொண்டே இருக்கின்றன.", "vilakam_en": "Ask how this birth, which helps one to attain God, is destroyed by being caught in the cycle of births. If beings continue to accumulate more and more karmas in the birth given by God in order to resolve their karmas and reach Him, the life that should be realized by God and be worshipped by everyone will be disrupted and will turn into a life of wandering aimlessly like dogs, dying, being reborn and destroyed again and again.\n\nComment: Because beings follow the path of their desires, they accumulate karmas and continue to be reborn again and again." }, { "song_number": 754, "padal": "சுழல்கின்ற வாறின் துணைமலர் காணான்\n\nதழலிடைப் புக்கிடுந் தன்னு ளிலாமற்\n\nகழல்கண்டு போம்வழி காணவல் லார்க்குக்\n\nகுழல்வழி நின்றிடுங் கூத்தனு மாமே.", "vilakam": "பிறவிச் சுழற்சியில் சிக்கிக்கொண்டு பிறந்து கொண்டே இருக்கின்ற உயிர்கள் தம்மோடு எப்போதும் துணையாக இருக்கும் இறைவனின் திருவடியைத் தாங்கிக் கொண்டு இருக்கின்ற மலரைக் காண்பதில்லை. இறந்த பிறகு நெருப்பில் இடப்படும் இந்த உடலை நிரந்தரம் என்று எண்ணாமல் தமக்குள்ளேயே துணையாக இருக்கும் இறைவனே என்றும் நிரந்தரம் என்பதை உணர்ந்து அவனது திருவடிகளைச் சென்று அடையும் வழியான சுழுமுனை நாடியைக் கண்டுகொண்டவர்கள் அதன் வழியே சென்று அடையும் தலை உச்சியைத் தாண்டிய துவாதசாந்த வெளியில் திருநடனம் புரிந்து கொண்டிருக்கும் இறைவனை கண்டு உணர்ந்து அவனோடு கலந்து பேரின்பத்தில் இருக்கலாம்.\n\nகருத்து: இறந்த பிறகு நெருப்புக்கு இரையாகும் உடலை பற்றிக்கொண்டு பிறவிச் சுழற்சியில் சிக்கிக் கொள்ளாமல் உடலுக்குள் ஏழாவது சக்கரத்தில் இருக்கும் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரில் இறைவன் ஒளி உருவமாக வீற்றிருப்பதை பார்த்து இறைவனின் திருவடிகளைப் பற்றிக்கொண்டு அவனோடு கலந்து பேரின்பத்தில் எப்போதும் நிலைத்து வாழலாம்.", "vilakam_en": "Those who are trapped in the cycle of births and rebirths do not see the flower that holds the feet of the Lord who is always with them. Those who do not consider this body that is placed in the fire after death to be permanent, but realize that the Lord who is within them is eternal, and who find the path to reach His feet, the Suzumunai Nadi, can see the Lord dancing in the Dvadashanta space beyond the top of the head and merge with Him in bliss.\n\nComment: Without being trapped in the cycle of births and clinging to the body that is a prey to fire after death, they can see the Lord seated in the form of light on the thousand-petalled lotus flower in the seventh chakra within the body, cling to the feet of the Lord, merge with Him, and live forever in bliss." }, { "song_number": 755, "padal": "கூத்தன் குறியிற் குணம்பல கண்டவர்\n\nசாத்திரந் தன்னைத் தலைப்பெய்து நிற்பர்கள்\n\nபார்த்திருந் துள்ளே அனுபோக நோக்கிடில்\n\nஆத்தனு மாகி யலர்ந்துவிடு மொன்றே.", "vilakam": "பாடல் #754 ல் உள்ளபடி தலை உச்சியைத் தாண்டிய துவாதசாந்த வெளியில் திருநடனம் புரிந்து கொண்டிருக்கும் இறைவனைத் தரிசித்து தமக்குள் இறைத்தன்மைகள் பலவற்றை கண்டவர்கள் சாஸ்திரங்கள் கூறும் தர்மங்களையே தலையானதாகக் கொண்டு அவற்றை விட்டு சிறிதும் விலகாமல் கடைபிடித்து நிற்பவர்கள். தர்மம் தவறாமல் நின்று தமக்குள்ளேயே இறைவனின் திருவடியையும் திருநடனத்தையும் தரிசித்துக்கொண்டு அவனருளால் பெற்ற பேரின்பத்தை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் தாமே சிவமாகி அவனைப் போலவே எங்கும் வியாபித்து இருப்பார்கள்.\n\nகருத்து: இறைவனை தமக்குள்ளே தரிசித்து தர்மத்தை கடைபிடித்து அதன் படி நடப்பவர்கள் பேரின்பத்தில் திளைத்து தாமே சிவமாகி எங்கும் வியாபித்து இருப்பார்கள்.", "vilakam_en": "Those who, having seen the Lord dancing in the divine space beyond the top of their heads, have seen many divine qualities within themselves, and who regard the Dharmas prescribed by the scriptures as their main principles and adhere to them without deviating from them. Those who, having remained steadfast in Dharma, have seen the Lord's feet and dance within themselves and are enjoying the bliss received from His grace, will themselves become Shiva and will pervade everywhere like Him.\n\nComment: Those who have seen the Lord within themselves, have followed Dharma and acted accordingly, will be immersed in bliss and will themselves become Shiva and will pervade everywhere." }, { "song_number": 756, "padal": "ஒன்றில் வளர்ச்சி உலப்பிலி கேளினி\n\nநன்றென்று மூன்றுக்கு நாளது சென்றிடும்\n\nசென்றிடு முப்பதுஞ் சேர இருந்திடிற்\n\nகுன்றிடையில் பொன்திகழ் கூத்தனு மாமே.", "vilakam": "பாடல் #755 ல் உள்ளபடி இறைவனோடு ஒன்றாய் இரண்டறக் கலந்து தாமே சிவமாகி இருப்பவர்கள் அளவில்லாத காலங்கள் ஆயுள் வளர்ந்து அழியாமல் இருக்கின்ற முறையை கேட்டுக் கொள்ளுங்கள். தமக்குள் இருக்கும் இறைவனை அடைய உதவுவதால் மிகவும் நல்லது என்று சாதகர்கள் உணர்ந்து கொண்ட இடகலை, பிங்கலை, சுழுமுனை ஆகிய மூன்று நாடிகள் வழியாகவும் மூச்சுக்காற்றை உள்ளிழுத்து மேலேற்றி கீழிறக்கி என்று சுழற்சி செய்து கொண்டே இருந்தால் பல காலங்கள் உடல் அழியாமல் சென்று கொண்டே இருக்கும். முப்பது நாட்களுக்கு முறையாகச் செய்த பின்பு குன்றின் மேல் ஏற்றிவைத்த தீபம் போல தலை உச்சியிலிருக்கும் சகஸ்ரதளத்தில் பொன் நிற ஜோதி உருவமாக இருக்கும் இறைவனே தாமாகி ஒளிப் பிரகாசமாக எங்கும் பரவிக்கொண்டே இருப்பார்கள்.\n\nகருத்து: அகயோகம் செய்யும் சாதகர்கள் இறைவனோடு கலந்து அவனைப் போலவே பொன் நிற ஜோதியாகி எங்கும் பரவிக்கொண்டே இருப்பார்கள்.", "vilakam_en": "Listen to the method of those who have merged with the Lord and become Shiva themselves for an infinite period of time and remain immortal. If the ascetics realize that it is very good because it helps them to reach the Lord within them, they inhale the breath and circulate it up and down through the three nadis of Itakalai, Pingala, and Suzumunai, and continue to do so, the body will continue to pass for many periods of time without being destroyed. After doing this properly for thirty days, the Lord, who is in the form of a golden-colored light on the Sahasratala at the top of the head, like a lamp lit on a hill, will become Himself and spread everywhere as a radiant light.\n\nComment: Ascetics who practice Akhayoga will merge with the Lord and become a golden-colored light like Him and spread everywhere." }, { "song_number": 757, "padal": "கூத்தவன் ஒன்றிடுங் கூர்மை அறிந்தங்கே\n\nஏத்துவர் பத்தினில் எண்டிசை தோன்றிடப்\n\nபார்த்து மகிழ்ந்து பதுமரை நோக்கிடிற்\n\nசாத்திடு நூறு தலைப்புஎய்ய லாமே.", "vilakam": "பாடல் #756 ல் உள்ளபடி இறைவனோடு இரண்டறக் கலந்து தாமே சிவமாகிவிடும் வழிமுறையை அறிந்து அதன்படியே அகயோகம் செய்து ஆறு ஆதாரச் சக்கரங்களையும் தாண்டி சகஸ்ரதளத்தின் ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலரில் ஒளி உருவமாக வீற்றிருக்கும் இறைவனோடு கலந்து அதையும் தாண்டி துவாதசாந்த வெளியில் இருக்கும் மூன்று மண்டலங்களில் (அக்கினி, சூரிய, சந்திர மண்டலங்கள் பாடல் #746 இல் உள்ளபடி) இரண்டு மண்டலங்களைத் தாண்டி மூன்றாவதாக இருக்கும் சந்திர மண்டலத்தில் எட்டுத் திசைகளும் பரவி விரியும்படி இறைவனின் ஒளி உருவத்தை ஏற்றிவைத்து பேரின்பத்தில் திளைத்து அதைத் தரிசித்துக் கொண்டே இருப்பவர்கள் சாஸ்திரங்கள் கூறிய முழுமையான வயதான நூறு ஆண்டுகளையும் கடந்து நிற்பார்கள்.\n\nகருத்து: அகயோகம் செய்து ஜோதியான இறைவனோடு கலந்தவர்கள் அந்த ஜோதியை துவாதசாந்த வெளியிலுள்ள மூன்றாவது சந்திர மண்டலத்தில் எட்டுத் திசைகளுக்கும் பரவி விரியும்படி ஏற்றி வைத்தால் நூறு ஆண்டுகளைக் கடந்தும் பேரின்பத்தில் வாழ்வார்கள்.", "vilakam_en": "Those who, having known the method of merging with the Lord in two directions and becoming Shiva themselves, have practiced inner yoga accordingly, have crossed the six chakras of the adhara, have merged with the Lord, who is seated in the form of light on the thousand-petalled lotus flower of the sahasratala, and have crossed two of the three realms (the fire, sun, and moon realms in song #746) in the Dvadashanta space, and have lit the form of the Lord's light so that it spreads in all eight directions in the third lunar realm, and have been immersed in bliss and have been contemplating it, will live beyond the full age of one hundred years as stated in the scriptures.\n\nComment: Those who, having practiced inner yoga, have merged with the Lord, who is the light, and have lit that light so that it spreads in all eight directions in the third lunar realm in the Dvadashanta space, will live in bliss for over a hundred years." }, { "song_number": 758, "padal": "சாற்றிடு நூறு தலைப்பெய்து நின்றவர்\n\nகாத்துடல் ஆயிரங் கட்டுறக் காண்பர்கள்\n\nசேர்த்துடல் ஆயிரஞ் சேர இருந்தவர்\n\nமூத்துடன் கோடியே யுகமது வாமே.", "vilakam": "பாடல் #757 இல் உள்ளபடி அகயோகம் செய்து சாஸ்திரங்கள் கூறிய முழுமையான வயதான நூறு ஆண்டுகளையும் கடந்து நிற்பவர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கும் உடல் கட்டுக்குலையாமல் இருப்பதைக் காண்பார்கள். இறைவனோடு கலந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் இருந்தவர்கள் பேரறிவால் முதிர்ந்து கோடி ஆண்டுகளுக்கும் உடல் அழியாமல் இருந்து பல யுகங்களையும் காண்பார்கள்.\n\nகருத்து: அகயோகப் பயிற்சியை முழுமையாகச் செய்து இறைவனோடு இரண்டறக் கலந்து பேரின்பத்தில் இறைவனை தரிசித்துக்கொண்டே இருப்பவர்கள் பலகோடி வருடங்கள் ஆனாலும் அழியாமல் பல யுகங்களைக் கண்டு அறிவால் முதிர்ந்து உடல் அழியாமல் இருப்பார்கள்.", "vilakam_en": "Those who practice inner yoga as mentioned in Song #757 and live beyond the age of one hundred years, as prescribed by the scriptures, will find their bodies unbroken for a thousand years. Those who have been in union with God for more than a thousand years, will mature in great knowledge and their bodies will not perish for millions of years and will see many ages.\n\nComment: Those who practice inner yoga completely and continue to merge with God in bliss and see God in bliss will not perish for millions of years and will see many ages, will mature in knowledge and their bodies will not perish." }, { "song_number": 759, "padal": "உகங்கோடி கண்டும் ஒசிவற நின்று\n\nஅகங்கோடி கண்டுள் அயலறக் காண்பர்\n\nசிவங்கோடி விட்டுச் செறிய இருந்தங்\n\nகுகங்கோடி கண்டங் குயருறு வாரே.", "vilakam": "பாடல் #758 இல் உள்ளபடி கோடி யுகங்களைக் கண்ட யோகியர்கள் சிறிதும் தளர்வின்றி தமது அகயோகத்திலேயே நிலைபெற்று நின்று தான் எனும் எண்ணம் இல்லாமல் இறைவனும் தாமும் வேறு இல்லை என்பதையும் காண்பார்கள். தமக்குள் உணர்ந்த சிவத்தின் ஒளியுருவத்தையும் கடந்து உருவமும் குணமும் இல்லாத இறை நிலையை அடைந்து பல கோடி யுகங்களையும் கண்டு அனைத்திற்கும் மேலானதொரு நிலையை அடைவார்கள்.\n\nகருத்து: கோடி யுகங்கள் கண்டும் தளர்வில்லாமல் நிலைபெற்று நிற்கும் அகயோகிகள் அதன் பிறகு சிவ நிலையையும் கடந்த பரநிலையில் பலகோடி யுகங்கள் கண்டு அனைத்திற்கும் மேலான நிலையை அடைவார்கள்.", "vilakam_en": "As stated in Song #758, the yogis who have seen crores of ages and who have remained steadfast in their inner yoga without any hesitation will see that there is no other God or self. They will transcend the light form of Shiva they have felt within themselves and attain the formless and attributeless state of God, and will see crores of ages and attain a state that is superior to all.\n\nComment: The inner yogis who have seen crores of ages and who have remained steadfast without any hesitation will then see crores of ages and attain a state that is superior to all." }, { "song_number": 760, "padal": "உயருறு வாருல கத்தொடுங் கூடிப்\n\nபயனுறு வார்பலர் தாமறி யாமற்\n\nசெயலுறு வார்சிலர் சிந்தையி லாமல்\n\nகயலுறு கண்ணியைக் காணகி லாரே.", "vilakam": "பாடல் #759 இல் உள்ளபடி அனைத்திற்கும் மேலானதொரு நிலையை அடைந்த யோகியர்கள் உலகத்தவர்களின் மேல் கொண்ட கருணையினால் அவர்கள் அறியாமலேயே அவர்களோடு கலந்து நின்று பல நல்வினைகளைப் புரிந்து பயன்பெற வைக்கின்றார்கள். உலகத்தவர்களையும் பயன்பெற வைக்கின்ற உயர்வான நிலையைப் பற்றி தெரியாத அல்லது அதில் விருப்பமில்லாதவர்கள் தங்களின் கர்மவினைகளைச் செய்துகொண்டு வீணாக வாழ்க்கையைக் கழித்து மீன்களைப் போல் எப்போதும் கண்மூடாமல் அன்பர்களுக்கு அருள்கொடுக்கும் இறை சக்தியை காணாமலேயே காலத்தை கழித்து அழிந்து போகின்றார்கள்.\n\nகருத்து: அகயோகம் செய்து அனைத்திற்கும் மேலான உயர் நிலையை அடைந்த யோகியர்கள் உலகத்தவர் மேல் கருணை கொண்டு அவர்களுக்காக பல நல்வினைகளைப் புரிகின்றார்கள். இதை அறியாத மற்றவர்கள் தங்களின் வினைகளையே புரிந்து வீணாக காலத்தைக் கழிக்கின்றார்கள்.", "vilakam_en": "As stated in Song #759, yogis who have attained a state above all, out of their compassion for the worldly, they unknowingly mix with them and benefit them by performing many good deeds. Those who are unaware of the high state that benefits the worldly or are not interested in it, spend their lives in vain performing their karmic deeds, like fish, without ever seeing the divine power that always gives blessings to their loved ones, and they perish.\n\nComment: Yogis who have attained a state above all by performing inner yoga, have compassion for the worldly and perform many good deeds for them. Others who do not know this, spend their time in vain performing their own deeds." }, { "song_number": 761, "padal": "காணகி லாதார் கழிந்தோடிப் போவர்கள்\n\nநாணகி லார்நயம் பேசி விடுவர்கள்\n\nகாணகி லாதார் கழிந்த பொருளெலாங்\n\nகாணகி லாமலே கழிகின்ற வாறே.", "vilakam": "பாடல் #760 இல் உள்ளபடி இறை சக்தியைத் தமக்குள் கண்டு உணராதவர்கள் தங்களின் வாழ்க்கையை வீணே வாழ்ந்து கழித்து மீண்டும் பிறக்கும்படி இறந்து போகின்றார்கள். இறை சக்தியை அடையும் வழியைக் கற்று அறிந்தவர்கள் கூட தாம் கற்ற கல்வியை உபயோகித்துப் பயன் பெறாமல் அதைப் பற்றி பலவிதமாகப் பேசுவதில் காலத்தை கழித்துக் கொண்டு தாம் கற்றதெல்லாம் பயனில்லாமல் போகின்றதென்ற நாணம் இல்லாமல் காலத்தை வீணடிக்கின்றார்கள். இறை சக்தியைத் தமக்குள் கண்டு உணராததால் தம்மை விட்டுப் போகின்ற அருட்செல்வங்கள் என்ன என்பதையும் காணமலேயே இவர்களின் காலம் வீணாகக் கழிந்துவிடுகின்றது.\n\nகருத்து: இறைவனை அடையவே சாஸ்திரங்களும் கலைகளும் இறைவனால் அருளப்பட்டன. இதை அறியாமல் கற்றவர் கல்லாதவர் ஆகிய இரண்டு வகையினருமே காலத்தை வீணடித்து இறைவனை அறியாமலேயே இறந்து போகின்றார்கள்.", "vilakam_en": "As stated in song #760, those who do not see and realize the divine power within themselves live their lives in vain and die to be reborn again. Even those who have learned the way to attain the divine power, without using the knowledge they have acquired and benefiting from it, waste their time in talking about it in various ways, without any shame that whatever they have learned is useless. Since they do not see and realize the divine power within themselves, their time passes in vain without even realizing what blessings they are leaving behind.\n\nComment: The scriptures and arts were bestowed by God to attain God. Both the learned and the unlearned, without knowing this, waste their time and die without knowing God." }, { "song_number": 762, "padal": "கழிகின்ற அப்பொருள் காணகி லாதார்\n\nகழிகின்ற அப்பொருள் காணலு மாகுங்\n\nகழிகின்ற வுள்ளே கருத்துற நோக்கிற்\n\nகழியாத அப்பொருள் காணலு மாமே.", "vilakam": "பாடல் #761 இல் உள்ளபடி இறை சக்தியைத் தமக்குள் கண்டு உணராததால் தம்மை விட்டுப் போகின்ற அருட்செல்வங்கள் என்ன என்பதைக் காண முடியாதவர்கள் தாம் பெரிதாக எண்ணியிருந்த உலகச் செல்வங்கள் அனைத்தும் தம் கண் முன்பே அழிந்து போவதைக் காண்கிறார்கள். அழிகின்ற உடலுக்குள்ளும் செல்வத்துக்குள்ளும் என்ன இருக்கின்றதேன்று ஆராய்ந்து பார்த்தால் அழிகின்ற அனைத்து பொருட்களுக்குள்ளும் என்றும் அழியாத பெரும் செல்வமான இறைவன் இருப்பதை அறிந்து கொள்ள முடியும்.\n\nகருத்து: தமக்குள் ஆழ்ந்து தேடி இறைவனை உணர்ந்தவர்களால் மட்டுமே அழிகின்ற அனைத்திலும் என்றும் அழியாத இறை சக்தி இருப்பதைக் கண்டுகொள்ள முடியும்.", "vilakam_en": "As stated in Song #761, those who do not see and realize the divine power within themselves and therefore cannot see what blessings are leaving them see all the worldly wealth they had thought of as great perishing before their eyes. If we examine what is within the perishable body and wealth, we can know that within all perishable things there is the great and eternal wealth of God.\n\nComment: Only those who search deeply within themselves and realize God can see that the eternal divine power is present in all perishable things." }, { "song_number": 763, "padal": "கண்ணன் பிறப்பிலி காணந்தி யாயுள்ளே\n\nஎண்ணுந் திசையுடன் ஏகாந்த னாயிடும்\n\nதிண்ணென் றிருக்குஞ் சிவகதி யாநிற்கும்\n\nநண்ணும் பதமிது நாடவல் லார்கட்கே.", "vilakam": "மூன்று கண்களுடைய பிறப்பில்லாத இறைவனை தனது எண்ணங்கள் அனைத்திலும் காணக்கூடிய சாதகனின் உள்ளே குருவாய் அமர்ந்து அனைத்திற்கும் ஒருவனாகவும் எதிலும் உறுதியாக நிலைத்து இருப்பவனுமான இறைவனின் திருவடிகள் தனக்குள்ளே உறுதியுடன் தேடி சரணாகதியாய் இருப்பவர்களுக்கே கிடைக்கும்.\n\nகருந்து: காலங்கள் அனைத்திலும் இறைவனை தமக்குள் உறுதியாக தேடி சரணாகதியாய் இருப்பவர்களுக்கு இறைவனின் திருவடி கிடைக்கும்.", "vilakam_en": "The feet of the Lord, who is one with all and steadfast in everything, who sits as a Guru within the devotee who can see the three-eyed, unborn God in all his thoughts, are attained only by those who seek and surrender firmly within themselves.\n\nComment: Those who seek and surrender firmly within themselves at all times, attain the feet of the Lord." }, { "song_number": 764, "padal": "நாடவல் லார்க்கு நமனில்லை கேடில்லை\n\nநாடவல் லார்கள் நரபதி யாய்நிற்பர்\n\nதேடவல் லார்கள் தெரிந்த பொருளிது\n\nகூடவல் லார்களுக்குக் கூறலு மாமே.", "vilakam": "பாடல் #763 இல் உள்ளபடி தமக்குள் உறுதியுடன் இறைவனைத் தேடி அடையக்கூடியவர்களுக்கு இறப்பு இல்லை. இவ்வுலகத்தில் எந்தக் குறையும் இன்றி உயிர்களுக்குத் தலைவனாக இருப்பார்கள். இறைவனைத் தமக்குள்ளே தேடி அடைந்தவர்களுக்குத் தெரிந்த பொருள் இதுவாகும். அவர்கள் அறிந்த இறைவனை அடையும் வழியைக் காட்டும்படி கேட்பவர்களில் தகுதியுள்ளவர்களுக்கு தான் அறிந்ததை எடுத்துக் கூறுவார்கள்.\n\nகருத்து: இறைவனைத் தமக்குள்ளே தேடி அடைந்தவர்கள் என்றும் இறப்பு இல்லாமல் தம்மை நாடி வருபவர்களில் தகுதியுள்ளவர்களுக்கு தாம் அறிந்தவற்றை எடுத்துக் கூறுவார்கள்.", "vilakam_en": "As stated in Song #763, those who firmly seek and attain God within themselves will never die. They will be the leaders of all beings in this world without any defect. This is the meaning known to those who have sought and attained God within themselves. They will explain what they know to those who are worthy of asking them to show them the way to attain the God they know.\n\nComment: Those who have sought and attained God within themselves will never die and will explain what they know to those who are worthy of seeking Him." }, { "song_number": 765, "padal": "கூறும் பொருளி தகார வுகாரங்கள்\n\nதேறும் பொருளிது சிந்தையுள் நின்றிடக்\n\nகூறும் மகாரங் குழல்வழி யோடிட\n\nஆறும் அமர்ந்திருக்கும் அண்ணலு மாமே.", "vilakam": "பாடல் #764 ல் உள்ளபடி தம்மை நாடி வருபவர்களில் தகுதியுள்ளவர்களுக்கு கூறும் பொருளானது ஓங்கார மந்திரத்தின் அகார உகார விளக்கமாகும். அகார உகார மகார எழுத்துக்கள் (அ, உ, ம்) சேர்ந்ததே ஓம் எனும் மந்திரம். அதில் அகாரம் சிவத்தையும் உகாரம் சக்தியையும் மகாரம் உயிரையும் குறிக்கும். குருவானவர் கூறிய ஓம் எனும் மந்திரத்தை தமது சிந்தனையுள் எப்போது நினைத்துக் கொண்டே இருக்கும் சாதகர்களுக்கு ஓம் என்னும் மந்திரத்தின் பொருள் உயிர்கள் தமக்குள் ஒளிந்திருக்கும் குண்டலினி சக்தியே என்பதை உணர்ந்து அதை மூலாதாரத்திலிருந்து எழுப்பி சுழுமுனை நாடி வழியே தலை உச்சியிலுள்ள சகஸ்ரதளத்தில் வீற்றிருக்கும் இறைசக்தியோடு சேர்த்துவிட்டால் அவர்களுக்குள் இருக்கும் ஆறு ஆதாரச் சக்கரங்களிலும் சக்திமயமாக அமர்ந்து இருக்கும் இறைசக்தியும் தாமே என்பதை உணர்ந்து கொள்வார்கள்.\n\nகருத்து: ஓம் என்னும் மந்திரத்தில் இருக்கும் பொருளை குருவானவரிடம் கேட்டுத் தமக்குள் அதை உணர்ந்த சாதகர்கள் மகாரமாகிய தங்களின் உயிர்சக்தியை அகாரமாகிய சிவத்தோடும் உகாரமாகிய சக்தியோடும் கலந்துவிட்டால் அவர்கள் இறைவனாக ஆகிவிடுவார்கள்.", "vilakam_en": "As stated in song #764, the meaning of the mantra Om is the akara ughara explanation of the Om mantra for those who are worthy of seeking Him. The akara ughara mahara letters (a, u, m) are combined to form the mantra Om. In it, akara means Shiva, ukara means Shakti and mahara means life. For the ascetics who keep thinking about the mantra Om spoken by the Guru in their thoughts, they will realize that the meaning of the mantra Om is the Kundalini energy hidden within them, and if they awaken it from the root and combine it with the divine energy seated at the Sahasratha at the top of the head through the Sukhmunai Nadi, they will realize that the divine energy seated in all the six adhara chakras within them is also themselves.\n\nComment: If the ascetics who have heard the meaning of the mantra Om from the Guru and have realized it within themselves, if they mix their Mahara life energy with the akara Shiva and the ukara energy, they will They will become God." }, { "song_number": 766, "padal": "அண்ணல் இருப்பிட மாரும் அறிகிலர்\n\nஅண்ணல் இருப்பிடம் ஆய்ந்துகொள் வார்களுக்\n\nகண்ணல் அழிவின்றி உள்ளே அமர்ந்திடும்\n\nஅண்ணலைக் காணில் அவனிவ னாகுமே.", "vilakam": "இறைவன் இருக்கின்ற இடத்தை யாரும் அறிவதில்லை. பாடல் #765 இல் உள்ளபடி இறைவனை அறிந்தவர் மூலம் கேட்டு தமக்குள் ஆராய்ந்து உறுதியுடன் தேடினால் இறைவன் தமக்குள்ளேயே வீற்றிருப்பதை அறிந்து கொள்ளலாம். தமக்குள் இறைவன் வீற்றிருப்பதை அறிந்து கொண்டவர்களுக்கு இறைவன் பேரறிவாய் நின்று அவர்களுக்குள்ளேயே அழியாமல் அமர்ந்திருப்பான். பேரறிவாய் அமர்ந்திருக்கும் இறைவனையே எப்போதும் தரிசித்துக் கொண்டு இருப்பவர்கள் தாமும் அந்த இறைவனாகவே ஆகிவிடுவார்கள்.\n\nகருத்து: தமக்குள்ளேயே வீற்றிருக்கின்ற இறைவனைக் கண்டு உணர்ந்தவர்கள் இறைவனாகவும் ஆகிவிடுவார்கள்.", "vilakam_en": "No one knows where God is. As stated in Song #765, if you listen to the one who knows God and search within yourself with determination, you can know that God resides within you. For those who know that God resides within themselves, God will remain supremely wise and will reside within them indestructibly. Those who always see the Lord who resides supremely wise will themselves become that Lord.\n\nComment: Those who see and realize the Lord who resides within themselves will also become God." }, { "song_number": 767, "padal": "அவனிவ னாகும் பரிசறி வார்இல்\n\nஅவனிவ னாகும் பரிசது கேள்நீ\n\nஅவனிவ னோசை ஒளியினுள் ஒன்றி\n\nஅவனிவன் வட்டம தாகிநின் றானே.", "vilakam": "தாமும் இறைவனாகவே ஆகிவிடும் பெரும் பயனை அறிந்து கொண்டவர்கள் யாரும் இல்லை. தாமும் இறைவனாகவே ஆகிவிடும் பெரும் பயனைப் பற்றிக் கேட்டுக்கொள்ளுங்கள். பாடல் #765 இல் உள்ளபடி ஓங்கார மந்திரத்தில் அகாரம் எனும் ஒலியாக இருப்பவன் சிவம். உகாரம் எனும் ஒளியாக இருப்பவள் சக்தி. மகாரம் எனும் குண்டலினியாக இருப்பது உயிர்கள். உயிர்களின் உடலுக்குள் இருக்கும் ஆறு ஆதார சக்கரங்களில் சக்திமயமாகவும் ஏழாவது சக்கரமான சகஸ்ரதளத்தில் ஒளியாகவும் எட்டாவது இடமான துவாதசாந்த வெளியில் ஒலியாகவும் இருக்கின்ற இறைவனே பிரணவ மந்திரத்திலுள்ள மூன்று எழுத்துக்களின் தத்துவம் என்பதை உணர்ந்து அந்த இடங்களோடு தமது உயிர்சக்தியைக் கலந்து நிற்கின்றவனே இறைவனாக ஆகிவிடுகின்றான்.\n\nகருத்து: பிரணவ மந்திரத்தின் தத்துவம் ஒலியாகிய சிவமும், ஒளியாகிய சக்தியும், உயிராகிய ஆன்மாக்களும் ஒன்றாகக் கலந்து ஒன்றோடு ஒன்று வேறுபடாமல் இருப்பதே ஆகும். இதை உணர்ந்து அறிந்து கொண்டவர்கள் இறைவனாக ஆகிவிடுகிறார்கள்.", "vilakam_en": "There are no people who have realized the great benefit of becoming God. Ask about the great benefit of becoming God. As stated in Song #765, in the Omkara Mantra, the sound called Akaram is Shiva. The light called Ukaram is Shakti. The beings are the Kundalini called Maharam. The Lord, who is the power of the six adhara chakras within the bodies of beings, the light in the seventh chakra, Sahasratala, and the sound in the eighth place, Dvadashanta, is the philosophy of the three letters in the Pranava Mantra, and the one who mixes his life energy with those places, becomes God.\n\nComment: The philosophy of the Pranava Mantra is that Shiva, who is the sound, the energy, who is the light, and the souls, who are the beings, mix together and are not different from each other. Those who realize and understand this become God." }, { "song_number": 768, "padal": "வட்டங்க ளேழு மலர்ந்திடும் உம்முளே\n\nசிட்டன் இருப்பிடஞ் சேர அறிகிலீர்\n\nஒட்டி யிருந்துள் உபாயம் உணர்ந்திடக்\n\nகட்டி யிருப்பிடங் காணலு மாகுமே.", "vilakam": "உயிர்களின் உடலுக்குள்ளேயே தாமரை மலர்கள் போல மலர்ந்து இருக்கின்ற ஏழு சக்கரங்களிலும் தலை உச்சியைத் தாண்டிய துவாதசாந்த வெளியிலும் இருக்கின்ற சக்திமயங்களே இறைவன் என்பதை அறிந்துகொண்டு அந்த இடங்களோடு தம் உயிர்சக்தியை ஒன்றாகச் சேர்த்து வைத்து இருக்கும் வழிமுறையை உயிர்கள் அறிந்து கொள்வதில்லை. அப்படி இருக்கும் வழிமுறையை பாடல் #765 ல் உள்ளபடி குருவானவர் மூலம் அறிந்து தமக்குள் இருக்கும் இறைசக்தியோடு ஒன்றாகக் கூடியிருந்து உணர்ந்துவிட்டால் கருப்பங்கட்டி போல இனிக்கின்ற அமிர்தமான இறைவனை கண்டுகொள்ளலாம்.\n\nகருத்து: பேரின்பத்தைக் கொடுக்கும் இறைவன் இருக்குமிடத்தை அடையும் வழிமுறையை உயிர்கள் குருவானவர் மூலம் அறிந்து தமக்குள் உணர்ந்துவிட்டால் இறைவனை கண்டுவிடலாம்.", "vilakam_en": "The living beings do not know the method by which the seven chakras that bloom like lotus flowers within the body of the living beings and the Dvadashanta space beyond the top of the head are the divine powers and unite their life energy with those places. If they know the method through the Guru, as mentioned in Song #765, and unite with the divine power within them, they can see the divine nectar that is sweet like blackcurrant.\n\nComment: If the living beings know the method through the Guru to reach the place where the divine who gives bliss is, and realize it within themselves, they can see the divine." }, { "song_number": 769, "padal": "காணலு மாகும் பிரமன் அரியென்று\n\nகாணலு மாகுங் கறைக்கண்டன் ஈசனைக்\n\nகாணலு மாகுஞ் சதாசிவ சத்தியும்\n\nகாணலு மாகுங் கலந்துடன் வைத்ததே.", "vilakam": "பாடல் #768 ல் உள்ளபடி தமக்குள் இறைவனை உணர்ந்து கண்டுகொண்ட யோகியர்கள் அந்த இறைவனே படைக்கின்ற பிரம்மனாகவும், காக்கின்ற திருமாலாகவும், கருநீலக் கறையுடைய தொண்டையைக் கொண்டு மாயையை அழிக்கின்ற உருத்திரனாகவும், மாயையால் மறைக்கின்ற மகேசுவரனாகவும், அருளுகின்ற சதாசிவனாகவும் உயிர்களின் உடலோடு கலந்து நிற்கின்ற சக்திமயங்களாகவும் இருப்பதை கண்டுகொள்வார்கள்.\n\nகருத்து: யோகியர்கள் தமக்குள் உணர்ந்த இறைவனே அனைத்து சக்தியாகவும் இருப்பதை கண்டுகொள்வார்கள்.", "vilakam_en": "As stated in Song #768, those who have realized and seen God within themselves will find that God is the creator Brahma, the protector Thirumal, the destroyer of illusion with his dark blue throat, the Maheswaran who hides illusion, the bestower of grace, and the Shaktismaya who mingles with the bodies of living beings.\n\nComment: Yogis will find that the God they have realized within themselves is all-powerful." }, { "song_number": 770, "padal": "வைத்தகை சென்னியில் நேரிதாய்த் தோன்றிடில்\n\nஉத்தம மிக்கிடில் ஓராறு திங்களா\n\nமத்த மிகுத்திட் டிரட்டிய தாயிடில்\n\nநித்தல் உயிர்க்கொரு திங்களில் ஓசையே", "vilakam": "ஒருவன் தனது வாழ்நாள் எல்லையை அளந்து அறிந்து கொள்ள எண்ணுபவன் தனது கையை தலையின்மேல் வைத்ததும் இயல்பான எடையாய்த் தோன்றினால் அவனது வாழ்நாளுக்கு நன்மை மிகுந்த எடையுள்ளதாய் தோன்றினால் அவனது வாழ்நாள் ஆறு மாதங்கள் மட்டுமே மேலும் இரண்டு மடங்கு அதிக எடை உள்ளதாய் தோன்றினால் அவனது வாழ்நாள் ஒரு மாதம் மட்டுமே.", "vilakam_en": "If a person wants to measure the length of his life, he should place his hand on his head and it should appear to be of normal weight; if it should appear to be of a good weight for his life, his life would be only six months; and if it should appear to be of twice that weight, his life would be only one month." }, { "song_number": 771, "padal": "ஓசையும் ஈசனும் ஒக்கும் உணர்வின்கண்\n\nஓசை யிறந்தவர் ஈசனை உள்குவர்\n\nஓசை யிறந்தவர் நெஞ்சினுள் ஈசனும்\n\nஓசை யுணர்ந்த வுணர்வது வாமே.", "vilakam": "உள்ளத்தில் உண்டாகும் எண்ணத்தின் ஓசையில் இறைவனை உணர்ந்து எண்ணம் இல்லாத நிலையை கடந்தவர் ஈசனை நினைத்து அவருடனே கலந்திருப்பார் அவ்வாறு கலந்திருப்பவர் நெஞ்சினுள் ஈசன் உணர்வு வடிவாய் நிற்பன்.", "vilakam_en": "He who realizes God in the sound of thought arising in the heart and transcends the state of thoughtlessness, thinks of God and merges with Him. He who is thus merged, stands in the form of the consciousness of God within the heart." }, { "song_number": 772, "padal": "ஆமே அழிகின்ற வாயுவை நோக்கிடில்\n\nநாமே லுறைகின்ற நன்மை அளித்திடும்\n\nபூமேல் உறைகின்ற போதகம் வந்திடுந்\n\nதாமே உலகில் தலைவனு மாமே.", "vilakam": "உடம்பின் வெளியே சென்று அழிகின்ற மூச்சுக்காற்றை அகயோகத்தின் மூலம் கவனித்து நோக்கினால் உண்ணாக்கில் அமிர்தம் சுரந்து நன்மை செய்யும். சகஸ்ரதளத்தில் இருக்கும் ஆயிரம் இதழ்த்தாமரைக்கு மேல் இருக்கும் ஞானம் கைகூடும். அந்த ஞானம் கைகூடினால் உலகின் தலைவனான சிவனாய் இருப்பதை உணரலாம்.", "vilakam_en": "If you observe the breath that goes out of the body and perishes through inner yoga, the nectar will flow out of the body and be beneficial. The knowledge that is more than a thousand-petalled lotus on the Sahasratala will be attained. If that knowledge is attained, you can realize that you are Lord Shiva, the Lord of the world." }, { "song_number": 773, "padal": "தலைவ னிடம்வலஞ் சாதிப்பார் இல்லை\n\nதலைவ னிடம்வல மாயிடில் தையல்\n\nதலைவ னிடம்வலந் தன்வழி யஞ்சில்\n\nதலைவ னிடம்வலந் தன்வழி நூறே.", "vilakam": "மூச்சுக் காற்றை இடகலை பிங்கலை நாடிகளின் வழியாக உள்ளெடுத்து சுழுமுனை நாடி வழியே எடுத்துச் சென்று தலை உச்சியிலுள்ள சிவனை அடையும் பிராணாயாமத்தைச் சரியாய் செய்பவர்கள் யாரும் இல்லை. இவ்வாறு சாதனை செய்து கைகூடினால் சக்தியாய் இருக்கும் சிவனை உணரலாம். இந்தப் பயிற்சியை நாள் தோறும் ஐந்து நாழிகைகள் செய்தால் நூறு வயது தாண்டியும் வாழலாம்.", "vilakam_en": "There are hardly any who correctly perform the practice of pranayama, where the breath is drawn in through the Ida and Pingala nadis (the left and right energy channels) and directed through the Sushumna nadi to reach Shiva at the crown of the head. If one succeeds in this practice, they can realize Shiva, who exists as Shakti (energy). By performing this exercise for five nāzhigais (approximately 2 hours) daily, one can live even beyond a hundred years." }, { "song_number": 774, "padal": "ஏறிய வாறினில் எண்பது சென்றிடுந்\n\nதேறிய ஏழிற் சிறக்கும் வகையெண்ணில்\n\nஆறொரு பத்தாய் அமர்ந்த இரண்டையுந்\n\nதேறியே நின்று தெளியிவ் வகையே.", "vilakam": "மூச்சுக்காற்று ஆறு விரற்கடை அளவு வெளியேற்றினால் வாழ்நாள் எண்பது ஆண்டாகும். ஏழு விரற்கடை அளவு வெளியேற்றினால் வாழ்நாள் அறுபது ஆண்டாகும். இவ்விரண்டு வகையையும் ஆராய்ந்து உணர்ந்து தெளிவாயாக.", "vilakam_en": "If the breath is exhaled to the length of six finger-widths, the lifespan will be eighty years. If it is exhaled to the length of seven finger-widths, the lifespan will be sixty years. Reflect deeply, understand, and become clear about these two types (of breathing patterns)." }, { "song_number": 775, "padal": "இவ்வகை எட்டும் இடம்பெற ஓடிடில்\n\nஅவ்வகை ஐம்பதே யென்ன அறியலாம்\n\nசெவ்வகை ஒன்பதுஞ் சேரவே நின்றிடின்\n\nமுவ்வகை யாமது முப்பத்து மூன்றே.", "vilakam": "மூச்சுக்காற்று எட்டு விரற்கடை அளவு சுவாசம் நீண்டு வெளியேரினால் ஆயுள் ஐம்பது வருடமாகும். மூச்சுக்காற்று ஒன்பது விரற்கடை அளவு சுவாசம் நீண்டு இயங்குமானால் ஆயுள் முப்பத்து மூன்று வருடமாகும்.", "vilakam_en": "If the breath extends and is exhaled up to eight finger-widths, the lifespan will be fifty years. If the breath extends and functions up to nine finger-widths, the lifespan will be thirty-three years." }, { "song_number": 776, "padal": "மும்மூன்றும் ஒன்றும் முடிவுற நின்றிடில்\n\nஎண்மூன்றும் நாலும் இடவகை யாய்நிற்கும்\n\nஐம்மூன்றும் ஓடி அகலவே நின்றிடிற்\n\nபன்மூன்றொ டீராறு பார்க்கலு மாமே.", "vilakam": "மூச்சுக்காற்று பத்து விரற்கடை அளவு சுவாசம் நீண்டு இயங்குமானால் ஆயுள் இருபத்தி எட்டு வருடமாகும். மூச்சுக்காற்று பதினைந்து விரற்கடை அளவு சுவாசம் நீண்டு இயங்குமானால் ஆயுள் இருபத்தைந்தது வருடமாகும்.", "vilakam_en": "If the breath extends and functions up to ten finger-widths, the lifespan will be twenty-eight years. If the breath extends up to fifteen finger-widths, the lifespan will be twenty-five years." }, { "song_number": 777, "padal": "பார்க்கலு மாகும் பகல்முப் பதுமாகில்\n\nஆக்கலு மாகுமவ் வாறிரண் டுள்ளிட்டுப்\n\nபோக்கலு மாகும் புகலற ஒன்றெனில்\n\nதேக்கலு மாகுந் திருத்திய பத்தே.", "vilakam": "மூச்சுக்காற்று பகல் முப்பது நாழிகையும் இடநாடி வழியே சென்றால் ஆயுள் பன்னிரண்டாண்டு ஆகும். அதனை அனுபவமாகவும் காண முடியும். இடையே மாற்றம் இல்லாமல் ஒருநாள் முழுதும் (அறுபது நாழிகை) மூச்சுக்காற்று இடை நாடி வழியே உள்வந்து வெளிச் சென்றால் ஆயுள் இனி பத்தாண்டு என்று அறியலாம்.", "vilakam_en": "If the breath flows through the Ida nadi continuously for thirty nāzhigais (approximately 12 hours) during the day, the lifespan will be twelve years. This can also be observed through direct experience. If, without any change, the breath flows only through the Ida nadi for a full day (sixty nāzhigais or approximately 24 hours), then it is to be known that the remaining lifespan is ten years." }, { "song_number": 778, "padal": "ஏயிரு நாளும் இயல்புற ஓடிடில்\n\nபாயிரு நாலும் பகையற நின்றிடும்\n\nதேய்வுற மூன்றுந் திகழவே நின்றிடில்\n\nஆயுரு வாறென் றளக்கலு மாமேல்", "vilakam": "மூச்சுக்காற்று ஒரு நாடியின் வழியாகவே இருநாட்கள் சென்றால் கன்மேந்திரியத்ததின் வழியாக கீழே செல்லும் அபானன் என்னும் பகைக்காற்று தடைபட்டு மூச்சுக் காற்றுடன் மூன்று நாட்கள் இணைந்தது நிலை பெற்று இருந்தால் ஆயுள் வளர்ச்சி அடையும்.", "vilakam_en": "If the breath flows through a single nadi continuously for two days, the downward-moving enemy breath called Apana (which moves through the organs of action) gets blocked. If this Apana merges with the regular breath and remains steady for three days, it leads to an increase in lifespan." }, { "song_number": 779, "padal": "அளக்கும் வகைநாலும் அவ்வழியே ஓடில்\n\nவிளக்கும் ஒருநாலு மெய்ப்பட நிற்கும்\n\nதுளக்கும் வகையைந்துந் தூய்நெறி ஓடில்\n\nகளக்க மறமூன்றிற் காணலு மாமே.", "vilakam": "வாழ்நாளை அளந்தது தெரிந்து கொள்ளும் வகையில் நான்கு நாள்கள் பிராணவாயு இடைகலை வழியே இயங்கினால் நான்கு ஆண்டுகள் உயிர் உடலில் இருக்கும். ஐந்து நாள் அவ்வாறு இயங்கினால் தெளிவாக மூன்றாண்டு உயிர் உடலில் இருக்கும்.", "vilakam_en": "To understand the measure of one’s lifespan: if the life-breath (prana) flows through the Ida nadi for four consecutive days, the life will remain in the body for four more years. If it continues that way for five days, then clearly, life will remain in the body for three more years." }, { "song_number": 780, "padal": "காணலு மாகுங் கருதிய பத்தோடிற்\n\nகாணலு மாகுங் கலந்த இரண்டையும்\n\nகாணலு மாகுங் கலப்பற மூவைந்தேற்\n\nகாணலு மாகுங் கருத்துற ஒன்றே.", "vilakam": "மூச்சுக்காற்று பத்து நாள் இடைநாடி வழியே சென்றால் உயிர் உடலில் இரண்டு ஆண்டு கலந்து இருக்கும். மூச்சுக்காற்று பதினைந்து நாள் இடைநாடி வழியே சென்றால் வாழ்நாள் ஓர் ஆண்டு என்பதை தெரிந்து கொள்ளலாம்.", "vilakam_en": "If the breath flows through the Ida nadi for ten days, life will remain in the body for two more years. If the breath continues to flow through the Ida nadi for fifteen days, it is to be understood that only one year of lifespan remains." }, { "song_number": 781, "padal": "கருதும் இருபதிற் காணஆ றாகும்\n\nகருதிய ஐயைந்திற் காண்பது மூன்றாம்\n\nகருதும் இருப துடன்ஆறு காணில்\n\nகருதும் இரண்டெனக் காட்டலு மாமே.", "vilakam": "மூச்சுக்காற்று இருபது நாள் இடைநாடி வழியே இயங்கினால் வாழ்நாள் ஆறு மாதம் ஆகும். இருபத்தைந்து நாள் இயங்கினால் மூன்று மாதம் ஆகும். இருபத்தாறு நாள் இயங்கினால் இரண்டு மாதம் ஆகும்.", "vilakam_en": "If the breath flows through the Ida nadi for twenty days, the remaining lifespan is six months. If it continues for twenty-five days, the lifespan is three months. If it flows that way for twenty-six days, the lifespan is two months." }, { "song_number": 782, "padal": "காட்டலு மாகுங் கலந்திரு பத்தேழில்\n காட்டலு மாகுங் கலந்தெழும் ஒன்றெனக்\n காட்டலு மாகுங் கலந்திரு பத்தெட்டிற்\n காட்டலு மாகுங் கலந்தஈ ரைந்தே.", "vilakam": "மூச்சுக்காற்று இருபத்தேழு நாள் இடகலைநாடி வழியே சென்றால் அதன்பிறகு ஒரு மாதம் வாழ்நாள் என்பதை மெய்ப்பித்துக் காட்டமுடியும். இருபத்தெட்டுநாள் சென்றால் அதன்பின் பத்து நாள்களே வாழ்நாள் என்று மெய்ப்பித்துக் காட்டமுடியும்.", "vilakam_en": "If the breath flows through the Ida nadi for twenty-seven days, it can be confirmed that only one month of life remains. If it continues for twenty-eight days, it can be confirmed that only ten days of life remain thereafter." }, { "song_number": 783, "padal": "ஈரைந்தும் ஐந்தும் இருமூன்றும் எட்டுக்கும்\n\nபார்அஞ்சி நின்ற பகை பத்துநாள் ஆகும்\n\nவாரம்செய் கின்ற வகை ஆறஞ்சு ஆமாகில்\n\nஓர்அஞ்சொடு ஒன்று ஒன்று என ஒன்றும்தானே.", "vilakam": "மூச்சுக்காற்று இடகலை நாடியின் வழியே 28 நாட்களுக்கு சென்றாலும் 29 நாட்களுக்கு சென்றாலும் அதன் பிறகு ஆயுள் பத்து நாட்களே ஆகும். ஆனால் 30 நாட்களுக்கு அவ்வாறு சென்றுவிட்டால் அதன் பிறகு ஆயுள் வெறும் ஏழு நாட்களே ஆகும்.", "vilakam_en": "Even if the breath flows through the Ida nadi for 28 or 29 days, only ten days of life will remain afterward. However, if it continues that way for 30 days, then only seven days of life will remain." }, { "song_number": 784, "padal": "ஒன்றிய நாள்கள் ஒருமுப்பத் தொன்றாகிற்\n\nகன்றிய நாளுங் கருத்துற மூன்றாகுஞ்\n\nசென்றுயிர் நாலெட்டுஞ் சேரவே நின்றிடின்\n\nமன்றியல் பாகு மனையில் இரண்டே.", "vilakam": "மூச்சுக்காற்று இடகலை நாடி வழியாக முப்பத்தொரு நாள் சென்றால் வாழ்நாள் மூன்று நாட்கள் மட்டுமே. முப்பத்திரண்டு நாள் சென்றால் இரண்டு நாளில் அவ்வுயிர் உடலை விட்டுச்செல்லும். சென்றவுடன் அவர் வாழ்ந்த இல்லத்தில் பலர் கூடி ஒலிக்கின்ற இயல்பு தோன்றும்.", "vilakam_en": "If the breath flows through the Ida nadi for thirty-one days, only three days of life will remain. If it continues for thirty-two days, the life will leave the body within two days. As soon as this happens, a natural commotion arises in the household where the person lived, with many people gathering and mourning." }, { "song_number": 785, "padal": "மனையில்ஒன் றாகும் மாதமு மூன்றுஞ்\n\nசுனையில்ஒன் றாகத் தொனித்தனன் நந்தி\n\nவினையற வோங்கி வெளிசெய்து நின்றால்\n\nதனையுற நின்ற தலைவனு மாமே.", "vilakam": "உயிர் முதலில் உடலோடு சேர்ந்து தாயின் வயிற்றில் ஒன்பது மாதம் உருப்பெற்று வளர்ந்து பத்தாம் மாதம் நீரில் மிதந்து பத்தாம் மாத இறுதியில் அவ்விடத்தை விட்டு திருவருள் உணர்வோடு வெளியே வந்து வினைகளை எல்லாம் தீர்த்து தான் யார் என்பதை உணர்ந்து நின்றால் உலகிற்கு தலைவனாகவும் கூடும் என்று நந்தி பெருமான் கூறியுள்ளார்.", "vilakam_en": "Life first joins the body and develops within the mother’s womb for nine months, floating in water during the tenth month. At the end of the tenth month, if one emerges from that place with divine awareness, realizes the self, and transcends all karmas, then—as stated by Lord Nandi—they can even become a leader of the world." }, { "song_number": 786, "padal": "ஆரு மறியார் அளக்கின்ற வன்னியை\n\nஆரு மறியார் அளக்கின்ற வாயுவை\n\nஆரு மறியார் அழிகின்ற அப்பொருள்\n\nஆரு மறியா அறிவறிந் தேனே.", "vilakam": "உயிர் வாழ்தற்கும் வாழ்நாளை அளந்து அறிதற்கும் காரணமான கருவிகள் மூலாக்கினி பிராணவாயு இவற்றின் பெருமைகளை அறிகின்றவர் உலகில் எவரும் இல்லை. அதனால் அவற்றை யோகத்தின் மூலம் ஒழுங்குபட நிறுத்தாத காரணத்தில் விரைவில் உடலை விட்டு நீங்குகின்ற உயிரின் பெருமையையும் அறிகின்றவர் உலகில் எவரும் இல்லை. யாம் இறைவனின் திருவருளால் அவ்விரண்டையும் அறியப் பெற்றேன்.", "vilakam_en": "There is no one in this world who truly understands the significance of the vital tools responsible for sustaining life and determining its span—namely, the digestive fire (Mulagini) and the life-breath (Prana Vayu). Because these are not properly regulated through yogic practices, life quickly departs from the body. Likewise, no one understands the greatness of that departing life. By the grace of the Lord, I have come to know both." }, { "song_number": 787, "padal": "அறிவது வாயுவொ டைந்தறி வாய\n\nஅறிவா வதுதான் உலகுயி ரத்தின்\n\nபிறிவுசெய் யாவகை பேணிஉள் நாடிற்\n\nசெறிவது நின்று திகழு மதுவே.", "vilakam": "பிராணவாயுவின் இயக்கத்தை அறிந்து கொண்டால் நிலையாக இருக்கும் ஐம்பொறிகளாகிய 1. பார்த்தல் 2. கேட்டல் 3. தொடுஉணர்ச்சி 4. சுவை 5. முகர்தல் என்று சொல்லப்படுவது எதுவோ அதுவே, உலகில் உயிர் என்று அறியப்படும், அவ்வுயிர் உலகினின்றும் பிரிந்து போகாதவாறு அதற்குரிய முறைகளை அறிந்து, அந்த வழியிலே உயிரை பேணிக் காத்தால் உயிர் உடம்பில் நிலைபெற்று இருக்கும்.", "vilakam_en": "If one understands the movement of the life-breath (Prana Vayu), then the five senses — 1. Sight, 2. Hearing, 3. Touch, 4. Taste, and 5. Smell — which are considered stable, are in fact what is known as life in this world. By learning the proper methods to ensure that this life does not separate from the world (i.e., the body), and by preserving it through those means, life will remain stable within the body." }, { "song_number": 788, "padal": "அதுவரு ளும்மரு ளான துலகம்\n\nபொதுவரு ளும்புக ழாளர்க்கு நாளும்\n\nமதுவரு ளும்மலர் மங்கையர் செல்வி\n\nஇதுவருள் செய்யும் இறைஅவ னாமே.", "vilakam": "சிவம் அருளிச்செய்த இவ்வுலகத்தில் அனைத்து உயிர்க்கும் பொதுவாக உலக இன்பத்தையும் உயர்ந்தோர்க்கு சிறப்பாக பேரின்பத்தை தந்து சிவானந்தத் தேனாகிய சக்தியை கொடுத்து ஆயுளை அதிகரித்து அருளைப்புரிவது இறைவனே.", "vilakam_en": "In this world graced by Shiva, it is the Lord alone who, by granting worldly pleasures to all beings in general and supreme bliss to the elevated souls in particular, bestows the divine nectar of Shiva’s blissful energy (Shivananda Shakti), thereby increasing lifespan and showering grace." }, { "song_number": 789, "padal": "பிறப்பது சூழ்ந்த பெருந்தகை நந்தி\nகுறிப்பது கூடிய கோலக் குரம்பைப்\nபழப்பதி யாவது பற்றறும் பாசம்\nஅழப்படி செய்வார்க் ககலும் மதியே.", "vilakam": "உயிர்கள் பிறத்தல் வேண்டும் என நந்தி திருவுள்ளக் குறிப்புக் கொண்டருளினன். அக்குறிப்பினால் மாயையால் இவ்வுடம்பு உயிர்களுக்கு அமைந்தது. இவ்வுடல் தொன்று தொட்டு தொடர்ந்து வருவது பாசம் என்னும் பற்று அறுப்பதற்க்கான கருவியாக உள்ளது. இந்த அழகிய உடல் பிஞ்சு, காய், செங்காய் என்று ஆகி முடிவில் பழமாய்ப் பழுத்து விழுந்து அழிந்து விடும். விழுவதற்குள் பாசங்களில் ஆழ்ந்து போகாமல் பாசங்களை விலகும்படி செய்து அதற்குரிய முறைகளில் பழகினால் பாசம் விலகி மெய்யுணர்வு பெருகி ஞானம் மிகும்.", "vilakam_en": "It was by Lord Nandi’s divine will that living beings were destined to be born. From that will, through the power of illusion (Maya), these bodies were formed for the souls. This body, which has existed from ancient times, serves as a tool to cut the bonds of attachment (Pāsam). This beautiful body goes through stages—bud, unripe fruit, ripening, and finally falls and decays like a ripe fruit. Before it falls, if one avoids getting deeply entangled in attachments and practices the proper disciplines, those attachments will fall away, true realization will grow, and wisdom will flourish." }, { "song_number": 790, "padal": "வெள்ளிவெண் திங்கள் விளங்கும் புதன்இடம்\nஒள்ளிய மந்தன் இரவிசெவ் வாய்வலம்\nவள்ளிய பொன்னே வளரும் பிறையிடம்\nதெள்ளிய தேய்பிறை தான்வல மாமே.", "vilakam": "வெள்ளி திங்கள் புதன் கிழமைகளில் இட நாடி வழியாக மூச்சு இயங்க வேண்டும். சனி ஞாயிறு செவ்வாய்க் கிழமைகளில் வல நாடி வழியே மூச்சு இயங்க வேண்டும். வளர்பிறை வியாழக் கிழமைகளில் இடநாடியிலும் தேய்பிறை வியாழக் கிழமைகளில் வலது நாடியிலும் மூச்சு இயங்க வேண்டும். இவ்வாறு இயங்குவது உடல் நலத்திற்கு ஏற்ற இயற்கையான பிராண இயக்கமாகும்.", "vilakam_en": "On Fridays, Mondays, and Wednesdays, the breath should flow through the left nadi (Ida). On Saturdays, Sundays, and Tuesdays, the breath should flow through the right nadi (Pingala). On waxing phase Thursdays, it should flow through the left nadi, and on waning phase Thursdays, through the right nadi. This natural pattern of pranic flow is beneficial for maintaining good health." }, { "song_number": 791, "padal": "வெள்ளிவெண் திங்கள் விளங்கும் புதன்மூன்றும்\nதள்ளி இடத்தே தயங்குமே யாமாகில்\nஒள்ளிய காயத்துக் கூன மிலையென்று\nவள்ளல் நமக்கு மகிழ்ந்துரைத் தானே.", "vilakam": "இயல்பாகவோ அல்லது பயிற்சியினாலோ திங்கள் புதன் வெள்ளிக் கிழமைகளில் மூச்சு இடைகலை வழியாக நடைபெற்றால் ஞானத்தைப் பெறுதற்கு வாயிலாகிய உடம்பிற்கு எந்த ஒரு குறையும் அழிவும் உண்டாகாது என்று அருள் வள்ளலாகிய நந்தி பெருமான் அனைவருக்கும் மகிழ்ந்து அருளினார்.", "vilakam_en": "Whether naturally or through practice, if the breath flows through the Ida nadi on Mondays, Wednesdays, and Fridays, there will be no defect or decay in the body—which serves as the gateway to attaining wisdom. This was joyfully and graciously revealed to all by the compassionate Lord Nandi." }, { "song_number": 792, "padal": "செவ்வாய் வியாழன் சனிஞாயி றேஎன்னும்\nஇவ்வா றறிகின்ற யோகி இறைவனே\nஒவ்வாத வாயு வலத்துப் புரியவிட்\nடவ்வா றறிவார்க்கவ் வானந்த மாமே.", "vilakam": "செவ்வாய்க் கிழமை தேய்பிறை வியாழக்கிழமை சனிக் கிழமை ஞாயிற்றுக் கிழமை ஆகிய நாட்களில் மூச்சை வலப்பக்க நாடி வழியே அறிந்து கொள்ளும் யோகி இறைவன் ஆவான். இந்த நாட்களில் மூச்சு இட நாடியில் நடந்தால் அதை மாற்றி வல நாடியில் புரிய வேண்டும். அப்போது ஆனந்தம் கூடும்.", "vilakam_en": "A yogi who ensures that the breath flows through the right-side nadi (Pingala) on Tuesdays, waning-phase Thursdays, Saturdays, and Sundays becomes one with the Divine. If on these days the breath flows through the left nadi (Ida), it should be shifted to the right nadi. When done so, bliss will arise." }, { "song_number": 793, "padal": "மாறி வருமிரு பான்மதி வெய்யவன்\nஏறி இழியும் இடைபிங் கலையிடை\nஊறும் உயிர்நடு வேயுயி ருக்கிரம்\nதேறி அறிமின் தெரிந்து தெளிந்தே.", "vilakam": "சந்திரனும் சூரியனும், இடகலை பிங்கலை நாடிகளில் மாறி மாறி இயங்கும். இடகலை வழியே ஏறிப் பிங்கலை வழியே இறங்கும். பிங்கலை வழியே ஏறி இடகலை வழியே இறங்கும். நடு நாடியில் மூச்சு ஊர்ந்து போகும். நாசிகள் வழியே இயங்கும் மூச்சில் சிவம் உள்ளது என்பதை அறிந்து தெளியலாம்.", "vilakam_en": "The moon and the sun operate alternately through the Ida and Pingala nadis. The breath ascends through the Ida and descends through the Pingala; likewise, it ascends through the Pingala and descends through the Ida. The central channel (Sushumna) is where the breath slowly crawls through. By observing the breath flowing through the nostrils, one can realize the presence of Shiva within it and attain clarity." }, { "song_number": 794, "padal": "உதித்து வலத்திடம் போகின்ற போது\nஅதிர்த்தஞ்சி யோடுத லாமகன் றாரும்\nஉதித்தது வேமிக யோடிடு மாகில்\nஉதித்த விராசி யுணர்ந்துகொ ளுற்றே.", "vilakam": "பிராணன் வலப்பக்கம் தோன்றி இடப்பக்கம் ஓடும் போது ஒரு பக்கம் கனமாகவும் ஒரு பக்கம் மெல்லியதாகவும் இருக்கும். இரு பக்கமும் கணமாகவும் மெல்லியதாகவும் மாறி மாறி பிராணன் ஒடுவது இயற்கையாக உள்ளது என்பதை உணர்ந்து அறிந்துகொள்ளலாம்.", "vilakam_en": "When the prana arises on the right side and flows to the left, one side will feel heavy and the other light. It is natural for the prana to alternate between both sides—sometimes heavy, sometimes light. This alternating flow can be felt and understood through awareness." }, { "song_number": 795, "padal": "நடுவுநில் லாமல் இடம்வலம் ஓடி\nஅடுகின்ற வாயுவை அந்தணன் கூடி\nஇடுகின்ற வாறுசென் றின்பணி சேர\nமுடிகின்ற தீபத்தின் முன்னுண்டென் றானே.", "vilakam": "மூச்சுக்காற்று நடுநாடியாகிய சுழுமுனையில் நிற்காமல் இடப்பக்கமாகவும் வலப்பக்கமாகவும் மாறி மாறி இயங்குகின்ற போது உலகியல் வாழ்க்கையில் கிடந்து வருத்தப்பட நேரிடும். யோகியானவன் மூச்சுக்காற்றை நாடிகள் கூடுகின்ற நடுநாடியின் சுழுமுனையில் குண்டலினியோடு சேர்க்க நடுநாடியின் உச்சியில் தீபத்தின் ஒளி தோன்றும் என்று நந்தி அருளினான்.", "vilakam_en": "When the breath does not remain in the central nadi, the Sushumna, and instead keeps alternating between the left and right sides, one is subjected to worldly suffering. But when a yogi unites the breath with the Kundalini in the Sushumna—the central channel where all nadis converge—a radiant light like that of a flame will appear at the peak of the central nadi, as revealed by Lord Nandi." }, { "song_number": 796, "padal": "ஆயும் பொருளும் அணிமலர் மேலது\nவாயு விதமும் பதினா றுளவலி\nபோய மனத்தைப் பொருகின்ற வாதாரம்\nஆயுவு நாளும் முகுர்த்தமு மாமே.", "vilakam": "யோகிகள் உள் நோக்கி தியானம் செய்து ஆராயும் பொருள் முழுமுதற்சிவனாகும், ஆராய்ந்த சிவன் நம் அழகான கண் மலர்களுக்கு மேலே உள்ளான். பதினாறு மாத்திரை அளவு செய்யும் மூச்சுப் பயிற்சியின் மூலம் சுவாசத்தை மாற்றி அமைத்தால் அந்த சிவனை நன்கு உணரலாம். அவ்வாறு உணர்ந்தால் வாழ் நாட்களைக் கூறுபடுத்தி வழங்கும் நாள், கிழமை, மாதம், ஆண்டு முகூர்த்தம் ஆகியவை காரணப்பொருளாக இருந்து உயிரின் ஆயுளை அதிகரிக்கும்.", "vilakam_en": "The object of meditation for yogis who turn inward is the Supreme Primordial Shiva. This Shiva resides above our beautiful lotus-like eyes. Through breath control practiced with sixteen counts (mathirai), if the breath is properly regulated, one can clearly realize that Shiva. Once realized, the elements that define the span of life—such as day, weekday, month, year, and auspicious timings (muhurtham)—serve as supporting factors that help increase the lifespan of the soul." }, { "song_number": 797, "padal": "வாரத்திற் சூலம் வரும்வழி கூறுங்கால்\nநேரொத்த திங்கள் சனிகிழக் கேயாகும்\nபாரொத்த சேய்புதன் உத்தரம் பானுநாள்\nநேரொத்த வெள்ளி குடக்காக நிற்குமே.", "vilakam": "திங்கள் சனிக்கிழமைகளில் கிழக்கே சூலம் ஆகும். செவ்வாய் புதன் கிழமைகளில் வடக்கே சூலம் ஆகும். ஞாயிறு வெள்ளிக் கிழமைகளில் மேற்கே சூலம் ஆகும்.\n\nகுறிப்பு: சூரியனின் தீட்சண்யம் குவியும் திசைக்கு சூலம் என்று பெயர் வைத்தார்கள். அந்த திசையில் சூடு அதிகமாக இருக்கும். பயணம் செய்தால் சூட்டினால் உடல் நிலை பாதிக்கும் என்ற காரணத்தால் சூலம் என்று குறிப்பிட்டு அந்த திசையில் பயணிக்க வேண்டாம் என்று சொன்னார்கள்.", "vilakam_en": "On Mondays and Saturdays, the 'Soolam' (inauspicious direction) lies to the East. On Tuesdays and Wednesdays, it lies to the North. On Sundays and Fridays, it lies to the West.\nNote: The term 'Soolam' refers to the direction in which the intensity of the sun's energy (Surya Teekshanyam) concentrates. That direction tends to be hotter. Traveling in that direction may affect the body's condition due to the heat, which is why it is traditionally advised to avoid traveling in the Soolam direction." }, { "song_number": 798, "padal": "தெக்கண மாகும் வியாழத்துச் சேர்திசை\nஅக்கணி சூலமு மாமிடம் பின்னாகில்\nதுக்கமும் இல்லை வளமுன்னே தோன்றிடின்\nமிக்கது மேல்வினை மேன்மேல் விளையுமே.", "vilakam": "வியாழக் கிழமையன்று சூலம் தெற்கு திசையில் அமையும். சூலம் நாம் செல்லும் திசைக்கு இடப் பக்கமாகவோ அல்லது பின்பக்கமாகவோ இருந்தால் நன்மை விளையும். சூலம் நாம் செல்லும் திசைக்கு வலப்பக்கமாகவோ அல்லது முன் பக்கமாகவோ இருந்தால் மேலும் மேலும் தீமை அதிகரிக்கும்.\n\nகுறிப்பு: சூரியனின் தீட்சண்யம் குவியும் திசைக்கு சூலம் என்று பெயர் வைத்தார்கள். அந்த திசையில் சூடு அதிகமாக இருக்கும். பயணம் செய்தால் சூட்டினால் உடல் நிலை பாதிக்கும் என்ற காரணத்தால் சூலம் என்று குறிப்பிட்டு அந்த திசையில் பயணிக்க வேண்டாம் என்று சொன்னார்கள்.", "vilakam_en": "On Thursdays, the 'Soolam' (inauspicious direction) lies to the South. If the Soolam lies to the left or behind the direction in which one is traveling, it brings favorable outcomes. However, if the Soolam lies to the right or in front of the travel direction, it leads to increasing harm.\nNote: The term 'Soolam' refers to the direction where the Sun's intensity (Surya Teekshanyam) is concentrated. That direction tends to be excessively hot. Traveling in that direction may affect one’s physical well-being due to the heat, which is why it is traditionally advised to avoid traveling in the direction of the Soolam." }, { "song_number": 799, "padal": "கட்டக் கழன்று கீழ்நான்று விழாமல்\nஅட்டத்தைக் கட்டி அடுப்பை அணை கோலி\nவிட்டத்தைப் பூட்டி மேற்பையைத் தாட்கோத்து\nநட்ட மிருக்க நமனில்லை தானே.", "vilakam": "மூச்சுக் காற்று கீழே இறங்காமல் அண்ணாக்கில் அதைக் கட்டிவிட வேண்டும். அபான வாயு குதம் வழியாகவோ அல்லது குறி வழியாகவோ வெளியேறாமல் குதத்தைச் சுருக்கி நிறுத்த வேண்டும். இரு கண் பார்வைகளையும் ஒன்றாக்கிவிட வேண்டும். உள்ளத்தைச் சுழுமுனை வழியே பாயும் மூச்சில் கொண்டு நிறுத்த வேண்டும். உடலைத் தாண்டிய இந்த நிலையை ஒருவன் அடைந்து விட்டால் அவன் காலத்தைக் கடந்து விடலாம். அவனுக்கு ஒரு மரணம் இல்லை.", "vilakam_en": "The breath must be held without letting it descend, by locking it at the throat (Annaaka). The Apana Vayu (downward-moving breath) must be restrained from exiting either through the anus or genitals by tightening and holding the pelvic region. The vision of both eyes must be unified. The mind must be fixed in the breath that flows through the Sushumna nadi. If one attains this state—beyond the physical body—one transcends time itself. For such a person, there is no death." }, { "song_number": 800, "padal": "வண்ணான் ஒலிக்குஞ் சதுரப் பலகைமேற்\nகண்ணாறு மோழை படாமற் கரைகட்டி\nவிண்ணாறு பாய்ச்சிக் குளத்தை நிரப்பினால்\nஅண்ணாந்து பார்க்க அழுக்கற்ற வாறே.", "vilakam": "வண்ணான் (துணி துவைப்பவர்) துணியை கல்லில் அடித்து துவைக்கும் போது ஆடையில் இருக்கும் அழுக்கு போவது போல உயிர் முன் பக்கம் உள்ள தன் மூளையை தியானம் மூலம் வரும் சிவயோக ஒளியினால் மோத வேண்டும். இரண்டு கண்களின் பார்வைகளையும் மாறி மாறிப் பார்ப்பதால் சிரசின் உள்ளே தெரியும் இரண்டு பக்கத்துக்கும் இடையே உள்ள சஹஸ்ரதளம் என்னும் குளத்தை தியானத்தின் மூலம் வந்த ஒளியைக் கொண்டு நிரப்ப வேண்டும். அதற்குப் பிறகு நெற்றிக்கு மேலே நிமிர்ந்து பார்த்தால் அந்த உயிர் தன் குற்றங்கள் அனைத்தும் நீங்கித் தூய்மை அடைந்து விடுவான்.", "vilakam_en": "Just as a washerman beats clothes on a stone to remove dirt, the soul must strike its own brain—located at the front—through the light of Shiva Yoga that arises from meditation. By focusing and alternating the gaze of both eyes, one must fill the pond-like Sahasrara Chakra, located between both sides inside the head, with the light that arises through meditation. After that, if the gaze is lifted above the forehead (third eye region), the soul will be cleansed of all sins and attain purity." }, { "song_number": 801, "padal": "இடக்கை வலக்கை இரண்டையும் மாற்றித்\nதுதிக்கையால் உண்பார்க்குச் சோரவும் வேண்டா\nஉறக்கத்தை நீக்கி உணரவல் லார்கட்\nகிறக்கவும் வேண்டா இருக்கலு மாமே.", "vilakam": "இடகலை பிங்கலை நாடிகள் வழியே மூச்சுக் காற்று இயங்குவதை மாற்றிச் சுழுமுனை வழியே மூச்சுக்காற்றை செலுத்தும் கலையை ஒருவன் அறிந்து கொண்டு விட்டால் அவருக்குத் சோர்வு ஏற்படாது. உறங்கும் காலத்தில் உறக்கத்தை விட்டு பயிற்சி செய்து வந்தால் ஒருவனுக்கு இறப்பு இல்லாமல் நீண்ட காலம் வாழலாம்.", "vilakam_en": "If one learns the art of redirecting the breath from flowing through the Ida and Pingala nadis into the Sushumna nadi, they will never experience fatigue. If, during sleep hours, one practices by overcoming sleep and continues this training, they can live for a long time without facing death." }, { "song_number": 802, "padal": "ஆய்ந்துரை செய்யில் அமுதநின் றூறிடும்\nவாய்ந்துரை செய்யும் வருகின்ற காலத்து\nநீந்துரை செய்யில் நிலாமண் டலமாய்ப்\nபாய்ந்துரை செய்தது பாலிக்கு மாறே.", "vilakam": "யோக நூல்களை ஆராய்ந்து அதனை முறையோடு செய்தால் உடம்பிலிருந்து அமுதம் சுரக்கும். அந்த அமுதம நாடிகளில் பாய்கின்றபோது ஓர் ஒலியை எழுப்பும். அந்த ஒலி சந்திர மண்டலமாக விளங்கி நரை, திரை, பிணி, மூப்பு இல்லாமல் நம்மைப் பாதுகாக்கும்.", "vilakam_en": "If one studies the yogic scriptures and practices them properly, nectar (amudham) will begin to secrete from the body. When this nectar flows through the nadis (energy channels), it generates a sound. That sound shines like the lunar realm (Chandra Mandala) and protects us from greying of hair, wrinkles, disease, and aging." }, { "song_number": 803, "padal": "நாவின் நுனியை நடுவே விசிறிடிற்\nசீவனும் அங்கே சிவனும் உறைவிடம்\nமூவரும் முப்பத்து மூவரும் தோன்றுவர்\nசாவதும் இல்லை சதகோடி ஊனே.", "vilakam": "நான்கு வகை யோகங்களுள் ஒன்றான அடயோக முறைப்படி நல்லாசனத்தில் அமர்ந்து நாக்கின் நுனியை அண்ணாக்கில் உரசினால் பிரணவ மந்திரம் கேட்கும். அந்த சாதகம் செய்யும் உயிருடன் சிவனும் கலந்து சேர்ந்து அதன் உடலையே தனக்கு விருப்பமான உறைவிடமாக கொண்டு தங்குவார். அங்கே மும்மூர்த்திகளும் முப்பத்து முக்கோடி தேவர்களும் தோன்றுவார்கள். அந்த உயிருக்கு நூறு கோடி ஆண்டுகளுக்கு மரணம் என்பதே இருக்காது.", "vilakam_en": "Among the four types of yoga, in the path of Adha Yoga, if one sits in a proper posture and gently touches the tip of the tongue to the throat (Annaaka), the Pranava Mantra (Om) will be heard. In such a practitioner, Lord Shiva himself will merge and dwell, making that body his preferred abode. At that place, the Trimurti (Brahma, Vishnu, Shiva) and the 33 crore deities will appear. For that soul, there will be no such thing as death for 100 crore (billion) years." }, { "song_number": 804, "padal": "ஊனூறல் பாயும் உயர்வரை உச்சிமேல்\nவானூறல் பாயும் வகையறி வாரில்லை\nவானூறல் பாயும் வகையறி வாளர்க்குத்\nதேனூறல் உண்டு தெளியலு மாமே.", "vilakam": "ஊனால் ஆன உடம்பின் நெற்றி நடுவில் ஓர் ஓளி உள்ளது, அதனை தலை உச்சிக்கு மேல் உள்ள வான மண்டலத்தோடு சேர்க்கும் வகைகளை அறிபவர்கள் யாரும் இல்லை. வான மண்டலத்தோடு சேர்க்கும் வகைகளை தெரிந்து கொண்டு அவ்ஒளியை வான மண்டலத்தோடு சேர்ப்பவர்கள் அங்கு ஊறும் தேன் போன்ற அமுதத்தை உண்டு தெளிவு பெற்று அதன் சிறப்பை உணர்வார்கள்.", "vilakam_en": "In the center of the forehead of this fleshly body, there exists a light. However, no one knows the methods to unite this inner light with the celestial realm above the crown of the head. Those who learn the way to connect this light with the heavenly realm will drink the nectar (amudham) that flows there like honey, gain clarity, and experience its divine greatness." }, { "song_number": 805, "padal": "மேலையண் ணாவில் விரைந்திரு காலிடிற்\nகாலனும் இல்லைக் கதவந் திறந்திடும்\nஞாலம் அறிய நரைதிரை மாறிடும்\nபாலனு மாவான் பராநந்தி ஆணையே.", "vilakam": "அண்ணாக்கின் அருகில் உள்ள பகுதியில் இடகலை பிங்கலை என்னும் இரு நாடிகளின் வழியே இயங்கும் மூச்சுக்காற்றை பயிற்சியின் மூலம் பொருத்தினால் யமன் பயம் இல்லை. உடலுக்கு அழிவு இருக்காது. மேலுலகத்து வாயிற் கதவு திறக்கும். நரை திரைகளும் மாறிவிடும். அதன்பின் யோகி உலகம் அறிய இளமைத் தோற்றத்தையும் உடையவனாவான். இது குருவான இறைவன் மேல் ஆணையாகச் சொல்லுகின்ற உண்மை.", "vilakam_en": "Near the throat region (Annaakam), if the breath flowing through the Ida and Pingala nadis is aligned through proper practice, there will be no fear of Yama (the god of death). The body will not face decay. The gateway to the higher worlds will open. Grey hairs and wrinkles will fade. After this, the yogi will appear youthful to the world. This is a truth spoken as a divine command by the Guru, who is none other than the Lord." }, { "song_number": 806, "padal": "நந்தி முதலாக நாமேலே யேறிட்டுச்\nசந்தித் திருக்கில் தரணி முழுதாளும்\nபந்தித் திருக்கும் பகலோன் வெளியாகச்\nசிந்தித் திருப்பவர் தீவினை யாளரே.", "vilakam": "குருநாதர் காட்டிய வழியில் நாக்கின் நுனியை அண்ணாக்கில் ஏறும்படிச் செய்து அங்கே நடுநாடியின் உச்சியில் கூடி இருக்க வேண்டும். அதனைச் செய்கின்ற யோகி உலகத்தார் யாவரையும் ஆட்கொள்கின்ற திருவருட் செல்வம் உடையவன் ஆவான். அந்த யோகத்தை மேற்கொள்ளாது உலகியலில் அறிவை நினைத்துக்கொண்டிருப்போர் பிறப்பு இறப்புத் துன்புக்கு ஆட்படும் தீவினையராவர் ஆவார்.", "vilakam_en": "By following the path shown by the Guru, the tip of the tongue should be raised to touch the Annaakam (soft palate), where it should unite at the peak of the central nadi (Sushumna). The yogi who practices this becomes one blessed with divine grace, able to influence all beings of the world. Those who do not undertake this yogic path and remain entangled in worldly knowledge are bound by karma and subjected to the suffering of birth and death." }, { "song_number": 807, "padal": "தீவினை யாடத் திகைத்தங் கிருந்தவர்\nநாவினை நாடின் நமனுக் கிடமில்லை\nபாவினை நாடிப் பயனறக் கண்டவர்\nதேவினை யாடிய தீங்கரும் பாமே.", "vilakam": "பாவச் செயல்களைச் செய்ததனால் பிறப்பு இறப்புக்கு உட்பட்டு தீ வினைகள் நம்மை வருத்தும் பொழுது அதனை போக்க வழி தெரியாமல் இருப்பவர்கள் நாவின் நுனியால் உண்ணாக்குத் தொளையை அடைக்கும் பயிற்சியாகிய கேசரி யோகத்தைப் பயின்றால் எமனை வென்று விடலாம். பரந்த வினைகளை எல்லாம் ஆராய்ந்து அவற்றால் விளையும் பயன்கள் ஒன்றும் இல்லை என நன்கு அறிந்தவர்கள் தெய்வப் பணியில் ஈடுபட்டு கிடைக்கும் திருவருளை இனிய கரும்பு சுவைப்பது போல் அதன் இனிமையைச் சுவைப்பர்.", "vilakam_en": "Due to sinful actions, one becomes subject to birth and death, and the resulting karmic effects cause suffering. Those who do not know how to escape this cycle can overcome Yama (the god of death) by practicing Kesari Yoga, a discipline in which the tip of the tongue blocks the uvula. Those who thoroughly examine the vast karmic consequences and realize that they offer no true benefit, engage in divine service and relish the sweetness of divine grace like tasting the sweetness of sugarcane." }, { "song_number": 808, "padal": "தீங்கரும் பாகவே செய்தொழி லுள்ளவர்\nஆங்கரும் பாக அடையநா வேறிட்டுக்\nகோங்கரும் பாகிய கோணை நிமிர்த்திட\nஊன்கரும் பாகியே ஊனீர் வருமே.", "vilakam": "கேசரியோகப் பயிற்சியால் வினைகள் சுழன்ற உடம்பினை இனித்த கரும்பு போல் ஆக்கிக்கொண்டவர்கள் நாவின் நுனியை மேல் நோக்கிக் குவித்துச் செலுத்தி கோங்கரும்பை போன்ற குண்டலியின் வளைவை நேராக்கினால் இந்த உடலிலேயே அமுதத்தைக் காணலாம்.", "vilakam_en": "Those who, through the practice of Kesari Yoga, refine the body burdened by karma into something as sweet as sugarcane, and who raise the tip of the tongue upward and straighten the coiled Kundalini like an uncoiling tender sugarcane shoot — such practitioners can witness the nectar (amrita) within this very body." }, { "song_number": 809, "padal": "ஊனீர் வழியாக வுண்ணாவை யேறிட்டுத்\nதேனீர் பருகிச் சிவாய நமவென்று\nகானீர் வரும்வழி கங்கை தருவிக்கும்\nவானீர் வரும்வழி வாய்ந்தறி வீரே.", "vilakam": "கேசரி யோகத்தைச் செய்து நாவின் வழியாக உண்ணாக்கை மேலே செலுத்தி அங்கு ஊற்றெடுக்கும் அமுதத்தை பருகி சிவாய நம என்ற ஐந்து எழுத்துக்களை சிந்தனை செய்பவர்களுக்கு ஓர் ஒளி வெள்ளம் நீர் வெள்ளம் போல முகத்தின் முன்பு பெருகும். (வியர்வை போல்) காற்றும், நீரும் உலாவும் இடமாகிய இந்த உடம்பு ஆகாய கங்கையை உம்மிடம் வரச்செய்யும். அந்த வான கங்கையை பெற்று அறிந்து கொள்ளுங்கள்.", "vilakam_en": "By practicing Kesari Yoga and raising the uvula through the tongue, one can sip the nectar that springs there and meditate upon the five sacred syllables 'Si-Va-Ya-Na-Ma'. For such practitioners, a flood of light—like a stream of water—will radiate before their face. This body, which is a vessel for both air and water (like perspiration), will draw the heavenly Ganges (Akasha Ganga) toward you. Attain and realize that celestial Ganga." }, { "song_number": 810, "padal": "வாய்ந்தறிந் துள்ளே வழிபாடு செய்தவர்\nகாய்ந்தறி வாகக் கருணை பொழிந்திடும்\nபாய்ந்தறிந் துள்ளே படிக்கத வொன்றிட்டுக்\nகூய்ந்தறிந் துள்ளுறை கோயிலுமாமே.", "vilakam": "சிவனை மனதில் உணர்ந்து வழிபாடு செய்தவர்களின் அறியாமையை சக்தி ஒலி ஒளி வடிவாக வந்து சுட்டெரித்து வெளிப்படுவாள். கேசரி முத்திரையினால் அந்த ஒளி ஒலிகளில் மனத்தைப் பதித்து அதன் மீது தியானம் செய்தால் அந்த யோகியின் உடலே ஓர் கோயிலாகி விடும்.", "vilakam_en": "For those who worship Shiva with heartfelt awareness, their ignorance will be burned away by the divine power that manifests as sound and light. By practicing Kesari Mudra and fixing the mind on these divine vibrations through meditation, the yogi's very body itself becomes a sacred temple." }, { "song_number": 811, "padal": "கோயிலின் உள்ளே குடிசெய்து வாழ்பவர்\nதாயினும் நல்லார் தரணி முழுதுக்கும்\nகாயினும் நல்லவர் காய்ந்தவர் தம்முளுந்\nதீயினுந் தீயரத் தீவினை யாளர்க்கே.", "vilakam": "உள்ளத்தைக் கோயிலாகக் கொண்டு சிவபெருமானுடன் குடியிருந்து வாழ்பவர். எல்லாவுலகங்களுக்கும் திருவருள் செய்வதில் தாயினும் நல்லவராவர். பிறர் இவர் மீது கோபம் கொண்டாலும் இவர் நன்மையே செய்வார். தீவினையாளர்களின் தீவினைத் துன்பம் போக நோய்க்கு மருந்துபோல் தீவினையாளர்களுக்கு துன்பத்தை கொடுத்து தீயினும் கொடியராவர்.", "vilakam_en": "One who treats their heart as a temple and resides with Lord Shiva within is more compassionate than even a mother in bestowing divine grace upon all worlds. Even if others become angry with such a person, they will respond only with kindness. Yet, to relieve evil-doers of the suffering caused by their bad karma, they may administer pain like a medicine—appearing harsher than fire itself, though it is ultimately for healing." }, { "song_number": 812, "padal": "தீவினை யாளர்தஞ் சென்னியி லுள்ளவன்\nபூவினை யாளர்தம் பொற்பதி யானவன்\nபாவினை யாளர்தம் பாவகத் துள்ளவன்\nமாவினை யாளர்தம் மதியிலுள் ளானே.", "vilakam": "தன்னை வழிபடும் நல்வினை இல்லாதவர்க்கும் அவர் தலையில் மறைந்தே இறைவன் இருக்கின்றான். தன்னை ஏதேனும் ஒரு வழியில் வெளிப்பக்கமாக வைத்து வழிபடுகின்றவர்களுக்கும் அவ்வழியாய் நின்று இறைவன் அருள் செய்கின்றான். தன்னை மானசீகமாய் ஆதாரங்களில் வைத்து பாவிக்கின்றவர்கட்கு அப்பாவனையிலே இறைவன் விளங்குகின்றான். யோகத்தைச் செய்கின்றவர்களுக்கு அவர்களது உணர்வு வடிவாய் இறைவன் நிற்கின்றான்.", "vilakam_en": "For those without good deeds who do not worship Him, the Lord still remains hidden upon their crown. To those who worship Him in any external form, He stands in that very form and bestows His grace. For those who contemplate Him mentally within the energy centers (ādhāras), He reveals Himself through their meditation. And for those who practice yoga, the Lord appears in the very form of their realization." }, { "song_number": 813, "padal": "மதியி னெழுங்கதிர் போலப் பதினாறாய்ப்\nபதிமனை நூறுநூற் றிருபத்து நாலாய்க்\nகதிமனை யுள்ளே கணைகள் பரப்பி\nஎதிர்மலை யாமல் இருந்தனன் தானே.", "vilakam": "சந்திரனில் இருந்து வரும் கதிர்கள் பதினாறு. அது போல் கழுத்துப் பகுதி விசுத்திச் சக்கரத்தில் இருந்து வரும் கதிர்கள் பதினாறாய் இருந்தும், உடம்பில் அந்தந்த இடங்களின் அதிபதியாய் 224 கதிர்களாய் இருந்தும், இயங்கும் இல்லமாகிய உடம்பினுள் வினைகளாய் உள்ள பகைவர்களை அவ்யோகியர் எதிர்சென்று போர் புரியாதவாறு தனது அருளாற்றலாகிய கணைகளைப் பொழிந்து கொண்டு இருக்கின்றான்.", "vilakam_en": "There are sixteen rays that emanate from the moon. Likewise, from the Vishuddhi chakra in the throat region, sixteen rays emerge. These further manifest as 224 rays governing different parts of the body. Within the moving dwelling that is the body, these rays act as divine arrows of grace, targeting and destroying the enemies of karma. The Lord, without confronting the enemies like an ordinary yogi, silently showers these arrows of divine grace to subdue them." }, { "song_number": 814, "padal": "இருந்தனள் சத்தியு மக்கலை சூழ\nஇருந்தனள் கன்னியு மந்நடு வாக\nஇருந்தனள் மானேர் முகநில வார\nஇருந்தனள் தானும் அமுதம் பொழிந்தே.", "vilakam": "விசுத்திச்சக்கரத்தின் 16 கதிர்களின் நடுவே இறைவனின் சக்தி திருவருளோடு இருக்கின்றாள். மான்போல் விழிகளும் சந்திரன் போல் திருமுகமும் கொண்டு உடலில் இருந்து அமுதத்தைப் பொழிந்துகொண்டு அவற்றோடு தானும் இருக்கின்றாள்.", "vilakam_en": "At the center of the 16 rays of the Vishuddhi Chakra resides the divine power (Shakti) of the Lord, along with His sacred grace. With eyes as beautiful as a deer’s and a face radiant like the moon, she dwells within the body, constantly showering nectar and remaining united with those rays." }, { "song_number": 815, "padal": "பொழிந்த இருவெள்ளி பொன்மண் ணடையில்\nவழிந்துள் ளிருந்தது வான்முத லங்குக்\nகழிந்தது போகாமற் காக்கவல் லார்க்குக்\nகொழுந்தது வாகுங் குணமது தானே.", "vilakam": "திருவருளால் உடம்பில் உள்ள வெண்ணிறமான அமிர்தம் பொன்நிறமான மண்போல் இருக்கும் மூலத்திடம் சேர்ந்தால் அங்குப் பெருகி வழிந்து நிறைந்திருந்து உடம்புக்கு உறுதி தரும். ஐம்பூதங்களால் ஆன உடம்பில் கழிவுகள் ஏற்பாடாது. இது போல் உடம்பை காக்க வல்லவர்களுக்கு உடம்பு இளமையுடன் கொழுந்து போல் என்றும் பொலிவுடன் இருக்கும்.", "vilakam_en": "By the grace of the Divine, the milky-white nectar within the body, when it merges with the golden-hued element at the base (Mooladhara), overflows and spreads, providing strength to the body. In such a body composed of the five elements, no impurities can accumulate. Those who are capable of preserving the body in this way will retain youthful vitality, with a radiant glow like a fresh sprout, forever shining." }, { "song_number": 816, "padal": "குணமது வாகிய கோமள வல்லி\nமணமது வாக மகிழ்ந்தங் கிருக்கில்\nதனமது வாகிய தத்துவ ஞானம்\nஇனமது வாக இருந்தனன் தானே.", "vilakam": "ஒரு பொருளுக்கும் அப்பொருளின் குணத்திற்கும் உள்ள சம்பந்தம் பிரிக்க முடியாது. அது போல ஆன்மாவின் குணமாய் ஒன்றாய் இருக்கும் திருவருள் சக்தி யோகத்தால் வெளிப்பட்டு யோகியோடு என்றும் உடனாய் சிவனோடு சேர்ந்து இருக்கும். கேசரி யோகம் அளிக்கும் உண்மை ஞானத்தின் வழியாகச் சிவனும் அவனிடத்தினின்றும் நீங்காதிருப்பான்.", "vilakam_en": "Just as the quality of an object cannot be separated from the object itself, the Divine Grace (Thiruvarul Shakti), which exists as the inherent nature of the soul, manifests through yoga and eternally remains with the yogi, uniting with Shiva. Through the true wisdom granted by Kesari Yoga, Shiva will never depart from such a person." }, { "song_number": 817, "padal": "இருந்த பிராணனும் உள்ளே எழுமாம்\nபரிந்தஇத் தண்டுடன் அண்டம் பரிய\nவிரிந்தஅப் பூவுடன் மேலெழ வைக்கின்\nமலர்ந்தது மண்டலம் வாழலு மாமே.", "vilakam": "கேசரி யோகப் பயிற்சியால் மூலாதாரத்தில் உள்ள பிராணனை உள்ளே நடுநாடியின் வழியாக மேல் எழுப்பி தலை உச்சியில் உள்ள சஹஸ்ரதளத்தில் சேர்க்க ஆயிரம் இதழ் தாமரை நன்கு விரிந்து உடலுடன் நெடுங்காலம் வாழலாம்.", "vilakam_en": "Through the practice of Kesari Yoga, the prana located in the Mooladhara chakra is drawn inward and elevated through the central channel (Sushumna Nadi) to the Sahasrara at the crown of the head. When the thousand-petaled lotus fully blossoms there, one can live a long life in harmony with the body." }, { "song_number": 818, "padal": "மண்டலத் துள்ளே மனவொட்டி யாணத்தைக்\nகண்டகத் தங்கே கருதியே கீழ்க்கட்டிப்\nபண்டகத் துள்ளே பகலே ஒளியாகக்\nகுண்டலக் காதனுங் கூத்தொழிந் தானே.", "vilakam": "ஞான எண்ணத்துள் மனம் ஒடுங்கும் நிலை உள்ளதை உணர்ந்து கேசரி யோகத்தின் மூலம் கீழே செல்ல விடாமல் வைத்தால் உடம்பில் பகலில் உள்ள ஒளி போல குண்டலம் அணிந்த சிவபெருமான் தன் ஐந்தொழில்களை விட்டு அசைவின்றி அங்கே இருப்பான்.", "vilakam_en": "When the mind withdraws and settles within the state of pure wisdom, and through Kesari Yoga, the vital energy is prevented from descending, Lord Shiva—adorned with the glowing kundalam (earrings) like daylight within the body—remains motionless there, having ceased His five cosmic functions." }, { "song_number": 819, "padal": "ஒழிகின்ற வாயுவும் உள்ளே அமருங்\nகழிகின்ற வாயுவும் காக்கலு மாகும்\nவழிகின்ற காலத்து வட்டக் கழலைப்\nபழிகின்ற காலத்துப் பையகற் றீரே.", "vilakam": "வெளியில் செல்லும் மூச்சுக்காற்றை கேசரி யோகத்தின் மூலம் உள்ளே வைத்தால் வெளியே வராமல் உடம்பில் இருக்கின்ற அந்த மூச்சுக்காற்று உடம்பில் இருந்து உயிர் வெளியே செல்லாமல் காக்கும். வரும் காலத்தில் குண்டலி சக்தியின் தலையில் உள்ள பிரமரந்திரத்தை அடைய கற்றுக் கொள்வீர்கள்.", "vilakam_en": "If the outward-flowing breath is retained within using Kesari Yoga, it remains inside the body without escaping, thus preventing life from leaving the body. In time, you will learn to guide the Kundalini Shakti to reach the Brahmarandhra at the crown of the head." }, { "song_number": 820, "padal": "பையினி னுள்ளே படிக்கத வொன்றிடின்\nமெய்யினி னுள்ளே விளங்கும் ஒளியதாங்\nகையினுள் வாயுக் கதித்தங் கெழுந்திடின்\nமையணி கோயில் மணிவிளக் காமே.", "vilakam": "உடலில் உள்ள மூலாதாரக் கதவு குதம் (எருவாய்) ஆகும். அதை கேசரி யோகத்தின் மூலம் இருகால்களால் அணைத்து சுருக்கினால் அபானன் அமுக்கப்படும். அபானன் தன் திசையை மாற்றிக் கொண்டு மேல் நோக்கிப் போகும். உயிர்ப்பை மாற்றி மேலே செல்லும் போது உடல் ஒளியுடன் விளங்கும். அபானன் நாடியினுள் மேலே எழும் போது மலங்கள் நிறைந்த உயிர் ஒளி உடையதாக இருக்கும்.", "vilakam_en": "The gateway of the Mooladhara in the body is the rectum. When it is pressed and tightened using both legs through the practice of Kesari Yoga, the Apana (downward-flowing energy) is compressed. This Apana then changes its direction and moves upward. As it merges with the upward-moving Prana, the body radiates with light. When the Apana rises through the Nadi (channel), even the impure life force becomes radiant with divine light." }, { "song_number": 821, "padal": "விளங்கிடும் வாயுவை மேலெழ உன்னி\nநலங்கிடும் கண்டத்து நாபியி னுள்ளே\nவணங்கிடு மண்டலம் வாய்ந்திடக் கும்பிச்\nசுணங்கிட நின்றவை சொல்லலு மாமே.", "vilakam": "உடலின் அடிவயிற்றில் தொப்புளுக்கு பின்புறம் இருக்கின்ற மூச்சுக்காற்றை மேல்நோக்கி செலுத்தி முகவாயைக் கழுத்தோடு சேர்த்து ஜாலந்திர பந்தம் என்கிற முறையில் சுருக்கிக் கொண்டு யோகத்தில் எண்ணங்களை நெற்றிக்கு நடுவில் வைத்து அமர்ந்திருந்தால் தலை உச்சியிலிருந்து சுரக்கும் அமிர்தமானது அடி வயிற்றுக்கு சென்று அங்கிருக்கும் நெருப்பில் பொசுங்கிப் போகாமல் நெற்றியிலேயே நிலைத்து நிற்கும். அவ்வாறு அமிர்தம் நின்றால் கிடைக்கும் பெரும் பயன்களைச் சொல்லவும் முடியாது.", "vilakam_en": "By directing the breath from the lower abdomen (located behind the navel) upwards, and by locking the throat through the technique called Jalandhara Bandha (where the mouth is joined with the throat), if one focuses their thoughts in the center of the forehead and sits in deep yogic meditation, then the nectar (Amrita) that drips from the crown of the head will not descend to the lower abdomen to be consumed by the fire there. Instead, it will remain stabilized at the forehead. The immense benefits gained from retaining that nectar are beyond explanation." }, { "song_number": 822, "padal": "சொல்லலு மாயிடு மாகத்து வாயுவுஞ்\nசொல்லலு மாகு மனல்நீர்க் கடினமுஞ்\nசொல்லலு மாகும் இவையஞ்சுங் கூடிடிற்\nசொல்லலு மாந்தூர தெரிசனந் தானே.", "vilakam": "பாடல் #821 இல் உள்ளபடி நெற்றியில் அமிர்தம் நிலைத்து நின்றால் கிடைக்கும் பயன்களைச் சொல்லப்போனால் பஞ்ச பூதங்களான ஆகாயம், காற்று, நிலம், நீர், நெருப்பு ஆகிய ஐந்தும் தமது உடலுக்குள்ளேயே அடங்கி இருப்பதை கண்டு கொண்ட யோகியர்கள் அண்டசராசரங்களில் பஞ்ச பூதங்களாக கலந்து நிற்கும் இறை சக்தியே தமக்குள்ளும் பஞ்ச பூதங்களாகக் கலந்து இருக்கின்றது என்பதை உணர்வார்கள். அந்த இறை சக்தியைத் தமக்குள்ளேயே தரிசிக்க முடியும் என்பதையும் சொல்லலாம்.", "vilakam_en": "As mentioned in verse #821, when the nectar stabilizes in the forehead, the benefits are indescribable. Yogis who perceive this realize that the five elements—space (akasham), air (vayu), earth (nilam), water (neer), and fire (neruppu)—exist within their own bodies. They understand that the divine power, which pervades the entire cosmos as the five elements, is also present within themselves as these very five elements. It can also be said that one can directly perceive that divine power within oneself." }, { "song_number": 823, "padal": "தூர தரிசனஞ் சொல்லுவன் காணலாங்\nகாராருங் கண்ணி கடைஞான முட்பெய்து\nஏராருந் தீபத் தெழிற்சிந்தை வைத்திடிற்\nபாரா ருலகமும் பகன்முன்ன தாமே.", "vilakam": "பாடல் #822 இல் உள்ளபடி அண்ட சராசரங்கள் அனைத்திலும் கலந்திருக்கும் இறை சக்தியைத் தமக்குள் கலந்திருக்கும் பஞ்ச பூதங்களாகக் கண்டு தரிசிக்க முடிந்த யோகியர்கள் ஞானக் கண்ணைப் பெற்று தமக்குள் இருக்கும் இறை சக்தியை தீபத்தில் ஏற்றி வைத்த ஜோதியைப் போல ஒளி உருவமாகக் கண்டு தரிசித்து தமது எண்ணங்களை அதன் மேலேயே வைத்து தியானித்திருந்தால் அண்டசராசரங்கள் அனைத்தையும் தாம் உட்கார்ந்த இடத்தில் இருந்தே முழு சூரிய வெளிச்சத்தில் காணும் பகல் காட்சி போல தெள்ளத் தெளிவாகக் காணலாம்.", "vilakam_en": "As mentioned in verse #822, yogis who are able to perceive the divine power that pervades all the universes within themselves as the five elements, gain the eye of wisdom. They visualize this divine power inside them as a light—like a flame placed on a lamp—and focus their mind upon it in meditation. By doing so, they can clearly and vividly see all the universes as if illuminated by the full light of the sun, right from where they are seated, just like a bright daytime vision." }, { "song_number": 824, "padal": "முன்னெழு நாபிக்கு முந்நால் விரற்கீழே\nபன்னெழு வேதப் பகலொளி யுண்டென்னும்\nநன்னெழு நாதத்து நற்றீபம் வைத்திடத்\nதன்னெழு கோயில் தலைவனு மாமே.", "vilakam": "உடலில் கொப்புழில் இருந்து பன்னிரண்டு விரல் கீழே வேதத்தில் கூறியது போல் பகல் போல் ஓளி இருக்கிறது. கேசரியோகத்தின் மூலம் அந்த ஓளிப் பிழம்பிலிருந்து வெளிப்பட்டு எழுந்து வரும் ஓங்காரத்தை இடைவிடாது சிந்தித்தால் சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் திருக்கோயிலாக இவ்வுடல் அமையும்.", "vilakam_en": "As described in the Vedas, there is light in the body from the crown (Kopuzhil) extending down to the twelve fingers below. Through the practice of Kesari Yoga, if one continuously meditates on the arising Omkara (the sacred sound ‘Om’) emanating from this radiant light, this body will become a sacred temple where Lord Shiva resides and grants His blessings." }, { "song_number": 825, "padal": "பூசு வனவெல்லாம் பூசிப் புலர்த்திய\nவாச நறுங்குழலில் மாலையுஞ் சாத்திக்\nகாயக் குழலி கலவியொ டுங்கலந்\nதூசித் துளையுறத் தூங்காது போகமே.", "vilakam": "உடம்பில் பூசுவதற்கு ஏதுவான வாசனை திரவியங்களையெல்லாம் பூசிக்கொண்டு நீராடி காயவைத்த நறுமணம் கமழும் கூந்தலில் வாசனையுள்ள மலர்களையும் மாலையாகச் சூடிக்கொண்டு மனதை மயக்குகின்ற மங்கையோடு கலவியில் ஒன்றாகக் கலந்து இருக்கின்ற போதும் ஊசியில் நூல் கோர்ப்பது போல நெற்றிக்கு நடுவில் உள்ள சுழுமுனை நாடியின் உச்சித்துளை வழியே மூச்சுக்காற்றை செலுத்திக் கொண்டே இருக்கின்ற யோகியர்களுக்கு போகம் எப்போதும் அழியாது.\n\nகுறிப்பு: ஆணும் பெண்ணும் ஒருவருடன் ஒருவர் போகத்தில் இருக்கும் போது அதை யோகமாக எப்படி மாற்றுவது என்பதை விளக்குவதே பரியாங்க யோகமாகும்.", "vilakam_en": "When a yogi applies fragrant substances suitable for anointing the body, bathes, dries themselves, adorns their fragrant hair with fragrant flowers as garlands, and even while being in close embrace with a beloved who intoxicates the mind, yet continues to direct the breath through the tip of the Sushumna nadi at the center of the forehead as if threading a needle with a thread—such yogis never lose their vigor or vitality.\nNote: When a man and woman are intimately together, transforming that union into yoga practice is known as Pariyanga Yoga." }, { "song_number": 826, "padal": "போகத்தை யுன்னவே போகாது வாயுவு\nமேகத்த வெள்ளியு மீளும் வியாழத்தில்\nசூதொத்த மென்முலை யாளுநற் சூதனுந்\nதாதிற் குழைந்து தலைக்கண்ட வாறே.", "vilakam": "பாடல்#825 ல் கூறியபடி தலை உச்சியில் சகஸ்ரதளத்தில் பேரறிவு பொருந்திய சிவனை எண்ணியபடி ஓர் ஆடவன் போகத்தில் ஈடுபட்டால் அவனது காம வாயு விரைவாக அதன் வேலையை செய்யாமல் நீரின் தன்மை கொண்ட அவன் சுக்கிலம் பெண்ணின் சுரோணிதத்தில் கலக்காது. மயக்கும் சூதாடும் கருவியைப் போன்ற ஸ்தனங்கள் உடைய பெண்ணும் உடல் என்னும் தேரைச் செலுத்தும் ஆடவனும் செய்த இந்தக் கூட்டுறவால் வெளிப்பட்ட சுக்கிலமும் சுரோணிதமும் ஒளியாய் மாறித் தலையில் சென்று தன் தலையில் நாதமாகிய சிவனும் ஒலியான சக்தியும் விளங்குவதைக் காண்பான்.", "vilakam_en": "As mentioned in verse #825, when a man meditates on the all-knowing Shiva at the Sahasrara (crown) and engages in union (yoga) with a woman, his vital energy (Kama Vayu) does not hastily discharge its function but takes on the quality of water, preventing his seed (Shukila) from mixing with the woman’s Sushumna Nadi. Through this union between the woman, whose body is like a delicate instrument, and the man, whose body is like a chariot, the Shukila and Sushumna transform into radiant light that ascends to the crown. There, Shiva, who is the sound (Nada) at the crown, along with the resounding energy, manifests and shines brilliantly." }, { "song_number": 827, "padal": "கண்டனுங் கண்டியுங் காதல்செய் யோகத்து\nமண்டலங் கொண்டிரு பாலும் வெளிநிற்கும்\nவண்டியை மேற்கொண்டு வானீர் உருட்டிடத்\nதண்டொரு காலுந் தளராது அங்கமே.", "vilakam": "பாடல்# 801 ல் உள்ள படி ஒரு தலைவனும் தலைவியும் யோகத்தில் போகம் செய்யும் போது வலது இடது நாசிகளின் வழியே ஏறி இறங்கும் மூச்சுக்காற்றின் வழியே மேலே சென்று தலையின் மேலே சஸ்ரதளத்தில் உள்ள ஒலி ஓளிகளை கைவருமாறு செய்தால் முதுகுத்தண்டு எப்போதும் தளராது. தளராததாகவே உடலுக்கும் அழிவில்லை.", "vilakam_en": "As stated in verse #801, when a man and a woman engage in yoga with desire, and the breath flows up and down through the right and left nostrils, if they guide the light and sound at the Sahasrara (crown) with their hands as if holding them, the spinal column will remain always firm. When the spine remains firm, the body does not deteriorate or perish." }, { "song_number": 828, "padal": "அங்கப் புணர்ச்சியு மாகின்ற தத்துவ\nமங்கத்தில் விந்து வருகின்ற போகத்துப்\nபங்கப் படாமற் பரிகரித் துத்தம்மைத்\nதங்கிக் கொடுக்கத் தலைவனு மாமே.", "vilakam": "போகத்தின் போது உடலிலிருந்து நீரின் தன்மை கொண்ட சுக்கிலம் வெளியே செல்லும். அவ்வாறு செல்ல விடாமல் யோகத்தால் பாதுகாத்து வெற்றி கொண்டவன் யோகிகளுக்குத் தலைவனாய் இருப்பான்.", "vilakam_en": "During desire (Bhoja), the watery essence of the seed (Shukila) tends to be lost from the body. One who, through yoga, prevents this loss and attains victory will be the leader among yogis." }, { "song_number": 829, "padal": "தலைவனு மாயிடுந் தன்வழி ஞானந்\nதலைவனு மாயிடுந் தன்வழி போகந்\nதலைவனு மாயிடுந் தன்வழி யுள்ளே\nதலைவனு மாயிடுந் தன்வழி அஞ்சே.", "vilakam": "பாடல் #828 ல் உள்ளபடி வெற்றி பெற்ற தலைவன் தன் ஆன்மாவை அறிந்தவன் ஆவான். அவனைச் சிவயோகம் தானே வந்தடையும். தன்னைத் தானே வசப்படுத்தி ஆளும் திறமை அவனுக்கு வரும். ஐந்து பூதங்களும் அவன் வசமாகி அவன் விருப்பப்படி நடக்கும்.", "vilakam_en": "As stated in verse #828, the victorious leader is one who has realized his own soul. Shiva Yoga itself will come to him. He gains the power to govern and rule over himself. The five elements become subservient to him and act according to his will." }, { "song_number": 830, "padal": "அஞ்சு கடிகைமேல் ஆறாங் கடிகையில்\nதுஞ்சு தொன்றத் துணைவி துணைவன்பால்\nநெஞ்சு நிறைந்தது வாய்கொளா தென்றது\nபஞ்ச கடிகை பரியங்க யோகமே.", "vilakam": "பரியங்க யோகம் ஐந்து நாழிகைப் பொழுது மட்டுமே செய்ய வேண்டும். அதற்கு மேலும் பயின்றால் ஆறாவது நாழிகையில் துணைவி துணைவன்பால் கொள்ளும் போகம் அதிகமாகி நெஞ்சம் பூரித்து சிற்றின்பத்தில் ஆழ்ந்துவிடுவார். ஐந்து நாழிகைப் பொழுது போகத்தில் யோகம் செய்வது மட்டுமே பரியாங்க யோகமாகும்.", "vilakam_en": "Pariyanga Yoga should only be practiced during the five nāzhikai period (approximately 2 hours). If practiced beyond this, by the sixth nāzhikai, desire increases due to the presence of a partner, and the heart becomes filled, sinking deeply into minor pleasures. Only practicing yoga during the five nāzhikai period of union is considered true Pariyanga Yoga." }, { "song_number": 831, "padal": "பரியங்க யோகத்துப் பஞ்ச கடிகை\nஅரியஇவ் யோகம் அடைந்தார்க் கல்லது\nசரிவளை முன்கைச்சி சந்தனக் கொங்கை\nஉருவித் தழுவ ஒருவர்க்கொண் ணாதே.", "vilakam": "ஐந்து நாழிகைகள் மன உறுதியோடு இறைவனை நினைத்துக் கொண்டே மிகவும் கடினமான பரியங்க யோகத்தை செய்தவர்களுக்கு மட்டுமே இறைவனை தமக்குள் உணரும் பெரும்பேறு கிடைக்கும். மற்றவர்கள் விரக தாபத்தில் கையிலிருக்கும் வளையல்கள் நழுவும் அளவிற்கு மெலிந்த தேகத்துடன் சந்தனம் போன்ற வாசனையும் மிருதுவும் உடைய கொங்கைகளை கொண்ட மாதர்களைத் தழுவிப் பெறும் சிற்றின்பத்திலேயே மூழ்கி இருப்பார்கள்.", "vilakam_en": "Only those who practice the very intense Pariyanga Yoga for five nāzhikai (approximately two hours) with firm mental focus on the Lord will attain the great honor of truly realizing God within themselves. Others, overwhelmed by the pain of separation (Viraga Taapam), will remain submerged in minor pleasures—embracing mothers with soft, sandalwood-scented hair and delicate bodies, whose bangles slip from their hands due to weakness." }, { "song_number": 832, "padal": "ஒண்ணாத யோகத்தை உற்றவ ராரென்னில்\nவிண்ணார்ந்த கங்கை விரிசடை வைத்தவன்\nபண்ணார் அமுதினைப் பஞ்ச கடிகையில்\nஎண்ணா மென்றெண்ணி இருந்தான் இருந்ததே.", "vilakam": "அவ்வளவு எளிதில் செய்துவிட முடியாத மிகவும் கடினமான பரியங்க யோகத்தை செய்து இறைவனைத் தமக்குள் உணர்ந்தவர்கள் யார் என்றால் விண்ணுலகிலிருந்து வலிமையோடு பொழியும் கங்கையைத் தமது தலையின் சடையில் தாங்கிக் கொண்டு நஞ்சாக இருந்தாலும் அதை உலக நன்மைக்காக ஏற்றுக்கொள்பவனாகிய இறைவனைப் போன்றவர்கள். ஏனெனில் அவர்கள் இனிக்கின்ற சிற்றின்பம் வேண்டாமென்று ஐந்து நாழிகைக்குள் இறைவனை மட்டுமே நினைத்து யோகத்தில் இருந்தவர்கள்.", "vilakam_en": "Those who have practiced the very difficult Pariyanga Yoga and realized the Lord within themselves are like the divine beings who bear the mighty celestial Ganga on their heads. Even if it is poisonous, they accept it for the welfare of the world. This is because they renounced all fleeting pleasures and focused solely on the Lord during the five nāzhikai period in their yoga practice." }, { "song_number": 833, "padal": "ஏய்ந்த பிராயம் இருபது முப்பதும்\nவாய்ந்த குழலிக்கு மன்னர்கு மானந்தம்\nவாய்ந்த குழலியோ டைந்து மலர்ந்திடச்\nசோர்ந்தன சித்தமுஞ் சோர்வில்லை வெள்ளிக்கே.", "vilakam": "பரியங்க யோகம் செய்வதற்கு ஏற்ற வயது பெண்ணுக்கு இருபதும் ஆணுக்கு முப்பதும் ஆகும். இந்த யோகம் கைவந்தவர்கள் இருவருக்கும் ஆனந்தம் உண்டாகும். பெண்ணின் ஐம் பொறிகளும் இன்பத்தில் மலர்ந்திடும். ஆணுக்கு சுக்கில நீக்கம் ஏற்படாது.", "vilakam_en": "The appropriate age for practicing Pariyanga Yoga is twenty years for a woman and thirty years for a man. Those who undertake this yoga together experience great bliss. The woman's five senses blossom with pleasure, and the man does not experience loss of seed (Shukila)." }, { "song_number": 834, "padal": "வெள்ளி யுருகிப் பொன்வழியே ஓடாமே\nகள்ளத்தட் டானார் கரியிட்டு மூடினார்\nகொள்ளி பறியக் குழல்வழி யேசென்று\nவள்ளியுண் ணாவில் அடக்கியேவைத் தாரே.", "vilakam": "தங்கத்தில் நகை செய்யும் பொற்கொல்லர்கள் திருட்டுத்தனமாக வெள்ளியில் உட்புற பாகங்களை செய்து அது உருகி தங்கத்தோடு கலந்து விடாமல் இருக்க கரியினால் மூடிப் புடம்போட்டு அதை நெருப்பில் சுத்தப்படுத்தி அதன் மேலே தங்கத்தை வார்த்து நகை செய்து தங்கத்தை மிச்சம் பிடிப்பார்கள். அதுபோலவே பரியங்க யோகம் செய்வதில் திறமையான யோகியர்கள் தனது துணையுடன் போகத்தில் இருக்கும் போது துணையை ஏமாற்றி சுக்கிலத்தை வெளியேற்றி விடாமல் இறைவனின் மேல் நாட்டம் வைத்து சுக்கிலம் வெளியேறாமல் தடுத்து அடி வயிற்றின் நெருப்பினால் தமது சுக்கிலத்தை சுத்தப்படுத்தி சுழுமுனை நாடி வழியே மேலேற்றிச் சென்று சகஸ்ரதளத்தில் சேமிக்கிறார்கள். சகஸ்ரதளத்தில் சேர்க்கப்பட்ட சுக்கிலம் அமிர்தமாக மாறி உள் நாக்கில் வந்து விழும்போது அது மறுபடியும் வயிற்றில் சென்று நெருப்பினால் பொசுங்கிப் போகாமல் அந்த அமிர்தத்தை யோக முறையில் தங்களது உள் நாக்கிலேயே அடக்கி வைத்து விடுகின்றார்கள்.", "vilakam_en": "Just as skilled goldsmiths who make gold jewelry carefully coat the gold with a black substance on the inside to prevent it from melting and mixing with silver during smelting, and then purify it in fire to retain the gold, similarly, adept yogis practicing Pariyanga Yoga, when united with their partner, deceive the partner and prevent the release of their seed (Shukila). They direct their focus upon the Lord and, without letting the seed escape, purify it with the fire of the digestive fire (Agni) in the lower abdomen. Then they raise it through the Sushumna Nadi upwards and store it in the Sahasrara. The seed stored in the Sahasrara transforms into nectar (Amrita). When this nectar flows down to the inner tongue, instead of descending back into the stomach and being consumed by the fire, the yogis use yogic techniques to restrain it within their inner tongue." }, { "song_number": 835, "padal": "வைத்த இருவருந் தம்மின் மகிழ்ந்துடன்\nசித்தங் கலங்காது செய்கின்ற ஆனந்தம்\nபத்து வகைக்கும் பதினெண் கணத்துக்கும்\nவித்தக னாய்நிற்கும் வெங்கதி ரோனே.", "vilakam": "பரியங்க யோகப் பயிற்சி கைவந்த இருவரும் மகிழ்ச்சியுடன் சிறிதும் எண்ணம் கலங்காமல் இறை எண்ணத்துடன் பரியங்க யோகத்தை செய்தால் அவர்கள் பத்து திசைகளுக்கும் தலைவனான பதினெட்டு வகைத் தேவர்களுக்கும் தலைவனான செங்கதிரவன் போல் இருப்பார்கள்.", "vilakam_en": "When both partners skilled in Pariyanga Yoga practice it happily and with steady mind focused on the Divine, they become like Sengathiravan—the leader of the eighteen types of gods who rule over the ten directions." }, { "song_number": 836, "padal": "வெங்கதி ருக்குஞ் சனிக்கும் இடைநின்ற\nநங்கையைப் புல்லிய நம்பிக்கோ ரானந்தந்\nதங்களிற் பொன்னிடை வெள்ளிதா ழாமுனந்\nதிங்களிற் செவ்வாயை புதைத்திருந் தாரே.", "vilakam": "இருளும் வெளிச்சமும் கலந்து இருக்கும் அதிகாலை நேரத்தில் துணைவனும் துணைவியும் போகத்தின் போது சிற்றின்பத்தில் இருந்தாலும் துணைவன் தனது சுக்கிலத்தையும் துணைவி தனது சுரோணிதத்தையும் வெளிப்படுத்தாமலேல்யே மனதை ஒருமைப்படுத்தி இறையருளில் மட்டுமே மனதைப் பதித்து வைத்து செய்வது பரியங்க யோகமாகும்.", "vilakam_en": "During the early dawn when darkness and light intermingle, when husband and wife unite, even if minor pleasures arise, the husband restrains his seed (Shukila) and the wife her Sushumna Nadi energy without releasing them. They unite their minds as one, focusing solely on divine grace. This practice is called Pariyanga Yoga." }, { "song_number": 837, "padal": "திருத்திப் புதனைத் திருத்தல்செய் வார்க்குக்\nகருத்தழ காலே கலந்தங் கிருக்கில்\nவருத்தமு மில்லையா மங்கை பங்கற்குந்\nதுருத்தியுள் வெள்ளியுஞ் சோரா தெழுமே.", "vilakam": "துணைவனும் துணைவியும் போகத்தில் இருக்கும்போது அந்த இன்பத்திலேயே மூழ்கிவிடாமல் அறிவை மாற்றி இறைவன் மேல் வைத்து மனத்தைத் தூய்மையுடன் எண்ணிப் பார்க்கும் சிறந்த அழகோடு பரியங்க யோகம் செய்பவர்களுக்கு உலகியல் துன்பம் உண்டாகாது. இறைவியைத் தம்மில் பாதியாகக் கொண்ட இறைவனது அருளால் சுக்கிலம் வெளியே வந்து விழாமல் உள்ளுக்குள்ளேயே மேல்நோக்கி எழுந்து செல்லும்.", "vilakam_en": "When husband and wife are united, those who do not get lost in the pleasures but instead transform their intellect and focus their mind purely on the Lord, practicing Pariyanga Yoga with utmost beauty and discipline, will be free from worldly suffering. By the grace of the Lord who dwells within them, the seed (Shukila) does not get expelled but rises upward internally." }, { "song_number": 838, "padal": "எழுகின்ற தீயைமுன் னேகொண்டு சென்றிட்டால்\nமெழுகுரு கும்பரி செய்திடும் மெய்யே\nஉழுகின்ற தில்லை ஒளியை அறிந்தபின்\nவிழுகின்ற தில்லை வெளியறி வார்க்கே.", "vilakam": "மூலாதாரத்திலிருந்து சுவாதிட்டானம் வழியாக காமாக்கினியை புருவ நடுவுக்கு கொண்டு சென்று அங்குள்ள சிவனை அறிந்த பின் அனலின் முன் மெழுகு உருகுவது போன்று சாதகர்க்கு உடம்பு ஜோதியாய் மாறிவிடும். ஜோதியாய் ஆன பின் புருவ நடுவைத் தாண்டி தலைக்கு மேல் பெருவெளியை அறிந்தவர்களுக்கு உடல் உலகியலில் வீழ்வது இல்லை.", "vilakam_en": "From the Muladhara chakra, through the Swadhisthana, when the Kama energy is brought to the spinal center and the practitioner realizes Shiva there, the body transforms into light like wax melting before a flame. Once transformed into this light, those who transcend the spinal center and realize the vast expanse above the head will not fall into worldly existence." }, { "song_number": 839, "padal": "வெளியை அறிந்து வெளியி னடுவே\nஒளியை அறிவி னுளிமுறி யாமே\nதெளிவை அறிந்து செழுநந்தி யாலே\nவெளியை அறிந்தனன் மேலறி யேனே.", "vilakam": "பரவெளியாகிய ஆகாயத்தை அறிந்து அதன் நடுவில் உள்ள அருள் ஒளியை உணர்ந்து அதில் விளங்குகின்ற அருளொளியையும் அவ்வொளியால் தெளிவான மெய்ப்பொருளையும் குரு நந்தி பெருமான் அருளால் உணர்ந்தேன். பரியாங்க யோகத்தில் இதற்கு மேல் அறியத் தக்கது ஒன்று இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.", "vilakam_en": "I have realized, by the grace of Guru Nandi Peruman, the vast expanse of the sky, the grace-light at its center, the radiant grace that shines therein, and the clear ultimate truth revealed by that light. Regarding Pariyanga Yoga, I do not know of anything beyond this to be understood." }, { "song_number": 840, "padal": "மேலாந் தலத்தில் விரிந்தவ ராரெனின்\nமாலாந் திசைமுகன் மாநந்தி யாயவர்\nநாலா நிலத்தி னடுவான வப்பொருள்\nமேலா யுரைத்தனர் மின்னிடை யாளுக்கே", "vilakam": "இல்லறத்தில் இருப்பவர்களில் பரியாங்க யோகத்தின் மூலமாக அனைத்தும் இறைவன் ஒருவனே என்ற உணர்வைப் பெற்றிருந்தவர்கள் யாரவது உள்ளார்களா என்றால் திருமால், பிரம்மா, உருத்திரன், நந்தி, சிவகணங்கள் இவர்கள் எல்லாம் துய தலைவனாகிய சிவனை உணர்ந்து அவனே பரம்பொருள் என்று தங்களது துணைவியருக்கு உணர்த்தினர்.", "vilakam_en": "Among those living a householder’s life, those who have realized through Pariyanga Yoga that all is one Lord include Thirumal, Brahma, Uruthiran, Nandi, and Sivaganas. They all recognized Shiva as the supreme leader and revealed to their spouses that He alone is the ultimate reality." }, { "song_number": 841, "padal": "மின்னிடை யாளுமின் னாளனுங் கூட்டத்துப்\nபொன்னிடை வட்டத்தின் உள்ளே புகப்பெய்து\nதன்னொடு தன்னைத் தலைப்பெய்ய வல்லிரேல்\nமண்ணிடைப் பல்லூழி வாழலு மாமே.", "vilakam": "பரியாங்க யோகத்தின் மூலம் மின்னல் போன்ற இடையை உடைய சக்தியையும் அவளை ஆள்பவனாகிய சிவனையும் அவர்கள் கூட்டத்துடன் பொன்னொளி கொண்ட ஆகாயத்தில் நிலை பெறும்படி செய்து அக்கூட்டத்தில் யோகி ஆன்மாவாகிய தன்னையும் பார்த்தால் இவ்வுலகத்தில் நெடுங்காலம் வாழ்வார்.", "vilakam_en": "Through Pariyanga Yoga, when one realizes the lightning-like energy called Ida, Shiva who governs her, and sees oneself as the yogi soul established in that golden radiant sky with the assembly, one will live a long life in this world." }, { "song_number": 842, "padal": "வாங்க லிறுதலை வாங்கலில் வாங்கிய\nவீங்க வலிக்கும் விரகறி வாரில்லை\nவீங்க வலிக்கும் விரகறி வாளரும்\nஓங்கிய தன்னை உதம்பண்ணி னாரே.", "vilakam": "துணைவி பெற்றுக்கொள்ளும் துணைவனின் சுக்கிலத்தை வெளியே நீக்காமல் பரியங்க யோகத்தின் மூலம் உள்வாங்கிக் கொள்ளும் முறையில் சுக்கிலத்தை உடம்பினுள் ஆற்றலாய் மாற்றுகின்ற வழியை அறிகின்றவர் ஒருவரும் இல்லை. அவ்வழியை அறிந்தவர் இறைவனை அடையும் வழியை அறிந்தவராவார்.", "vilakam_en": "No one truly knows the method by which the seed (Shukila) of the husband received by the wife is not expelled but instead is absorbed and transformed into energy within the body through Pariyanga Yoga. One who understands this path is one who has found the way to attain the Divine." }, { "song_number": 843, "padal": "உதமறிந் தங்கே ஒருசுழிப் பட்டாற்\nகதமறிந் தங்கே கபாலங் கறுக்கும்\nஇதமறிந் தென்றும் இருப்பாள் ஒருத்தி\nபதமறிந் தும்முளே பார்கடிந் தாளே.", "vilakam": "போகத்தை அனுபவிக்கத் தகுதியான வழியை அறிந்து அதை நன்கு பயின்றால் தலையிலுள்ள உரோமம் கறுக்கும் சாதகருக்கு தேவையான நன்மை கருதி சக்தியும் அவனை அறிந்து செயல் புரிவாள். சாதகரின் காலத்தை அறிந்து அவரின் உணர்வில் உள்ள உலகியல் எண்ணத்தை போக்கி அருள்வாள்.", "vilakam_en": "One who knows the proper way to enjoy the union (Poga) and practices it well will experience the hair on the head turning gray. The divine power, recognizing the practitioner's needs, will act accordingly. She will know the lifespan of the practitioner, remove worldly thoughts from their mind, and bestow grace." }, { "song_number": 844, "padal": "பாரில்லை நீரில்லை பங்கயம் ஒன்றுண்டு\nதாரில்லை வேரில்லை தாமரை பூத்தது\nஊரில்லை காணும் ஒளியது ஒன்றுண்டு\nகீழில்லை மேலில்லை கேள்வியிற் பூவே.", "vilakam": "தலை உச்சியில் ஆயிரம் இதழ்த் தாமரை ஒன்று உண்டு. அது ஞான வெளியில் இருப்பதால் அங்கு நிலமோ நீரோ இல்லை. இந்தத்தாமரை வேர் இல்லாமல் மலர்ந்தே உள்ளது. அதனால் அதற்கு மொட்டும் இல்லை. அது ஒளியால் நிரம்பி உள்ளது. ஒளி எங்கும் பரவி இருப்பதால் அதற்கு குறிப்பிட்ட இடத்தில் தான் இருக்கும் என்று இல்லை. ஓளிக்கு காரணம் இந்த தாமரையே என்றாலும் அதற்கு அடியும் இல்லை நுனியும் இல்லை.", "vilakam_en": "At the crown of the head, there is a thousand-petaled lotus. Since it exists in the realm of wisdom light, there is neither earth nor water there. This lotus blooms without roots, and hence it has no buds. It is filled with light. As light spreads everywhere, it is not confined to any particular place. Although this lotus is the cause of light, it has no base or tip." }, { "song_number": 845, "padal": "உடலிற் கிடந்த உறுதிக் குடிநீர்க்\nகடலிற் சிறுகிணற் றேமிட் டாலொக்கும்\nஉடலில் ஒருவழி ஒன்றுக் கிறைக்கில்\nநடலைப் படாதுயிர் நாடலு மாமே.", "vilakam": "குடிக்க முடியாத உப்பு நீரைக் கொண்ட கடலுக்கு அருகே ஒரு சிறு கிணறு தோண்டி ஏற்றம் இறைத்தால் சுத்தமான குடிநீர் வருவதைப் போலவே உயிர்களின் உடல் கழிவு உப்புக்கள் நிறைந்த சிறுநீருக்கு அருகிலேயே ஆற்றல் மிக்க அமுரி நீர் இருக்கிறது. அதை சிறுநீருடன் கலந்து வெளியேற்றி வீணாக்காமல் மேல் நோக்கி சுழுமுனை நாடிவழியே எடுத்துச் சென்றால் என்றும் அழியாமல் உயிர் நிலைத்து நிற்கும்.", "vilakam_en": "Just as digging a small well near a salty sea water body during low tide yields clean drinking water, similarly, near the body waste urine rich in salts of living beings, there is a powerful nectar-like water. If this is mixed with urine and expelled wastefully, it is lost. But if it is drawn upward through the spiraling central channel (Sushumna nadi) without mixing wastefully, then life remains sustained and never perishes." }, { "song_number": 846, "padal": "தெளிதரும் இந்தச் சிவநீர் பருகில்\nஒளிதரும் ஓராண்டில் ஊனமொன் றில்லை\nவளியுறும் எட்டில் மனமும் ஒடுங்கும்\nகளிதரும் காயம் கனகம தாமே.", "vilakam": "தெளிவைத் தரும் இந்த சிவநீரான அமுரி நீரை பருகினால் ஓரு வருட காலத்தில் அறிவு மிக தெளிவாகும். உடலில் உள்ள நோய் இளைப்பு முதலிய அனைத்து குறைகளும் நீங்கும். இந்த நீர் மூச்சுக்காற்றுடன் கலந்து உடலில் மேலே ஏறுவதை எட்டு ஆண்டுகள் பயிற்சி செய்தால் மனம் கீழ் செல்லாமல் எப்போதும் மேலேயே நிற்கும் அதனால் மன ஒருமை உண்டாகும். சிவ இன்பத்திற்குரிய இவ்உடம்பு பொன் போல அழகு பெற்று விளங்கும்.", "vilakam_en": "If one drinks this clear, divine nectar-like Amritham water, within one year the intellect becomes very clear. All defects in the body such as diseases and weakness are removed. If this water, mixed with the breath, is practiced to rise upward in the body for eight years, the mind will never fall downward but remain elevated, resulting in mental unity. This body, suitable for experiencing Shiva’s bliss, will shine beautifully like gold." }, { "song_number": 847, "padal": "நூறும் மிளகு நுகருஞ் சிவத்தினீர்\nமாறும் இதற்கு மருந்தில்லை மாந்தர்கள்\nதேறில் இதனைத் தெளியுச்சி கப்பிடின்\nமாறும் இதற்கு மறுமயிரும் ஆமே.", "vilakam": "நூறு மிளகு அளவு சிவ அமுரி நீரை மூச்சுக்காற்றோடு கலந்து அதனை சுழுமுனை நாடியின் உச்சித் துளைக்குக் கொண்டு சேர்த்தால் உடல் பொன் மேனியாக மாறி ஒளிபெற்றுத் திகழும். நரைகூடிய வெள்ளை முடிகளும் மிகவும் கருமையாக மாறும். யோகிக்கு இதை விட சிறந்த மருந்து வேறொன்றும் இல்லை.", "vilakam_en": "If one mixes a quantity of Shiva Amuri water equal to the size of a hundred pepper seeds with the breath and directs it to the crown aperture of the Sushumna Nadi, the body will transform into a golden radiance, shining brightly. Even white, aged hair will turn deep black. For the yogi, there is no medicine greater than this." }, { "song_number": 848, "padal": "கரையரு கேநின்ற கானல் உவரி\nவரைவரை என்பர் மதியிலா மாந்தர்\nநுரைதிரை நீக்கி நுகரவல் லார்க்கு\nநரைதிரை மாறும் நமனு மில்லையே.", "vilakam": "கடற்கரையின் அருகே சேரும் அலைகளின் நுரைகலந்த உப்புநீர் எதற்கும் உதவாது அதை ஒதுக்கிவிட வேண்டும் என்று அறிவில்லாத மனிதர்கள் கூறுவார்கள். ஆனால் அந்த அலைகளின் நுரைகலந்த உப்புநீரிலிந்து நுரையையும் அழுக்கையும் நீக்கிவிட்டு சுத்தமான உப்பாக்கி அதை உணவில் கலந்து சுவையோடு உண்ணத் தெரியும் அறிவுள்ள மனிதர்கள் வீணாக்க மாட்டார்கள். அதுபோலவே உயிர்களின் உடலின் கழிவு உப்புக்கள் நிறைந்த சிறுநீர் எதற்கும் பயன்படாது அதை வெளியேற்றிவிடு என்பவர்கள் அறிவில்லாத மனிதர்கள். அந்த உப்புக்கள் நிறைந்த சிறுநீர்ப் பைக்கு அருகிலேயே இருக்கும் சுக்கிலத்தை அடி வயிற்று நெருப்பால் சுத்தமாக்கி சுழுமுனை நாடி வழியே மேலேற்றிச் சென்று சகஸ்ரதளத்தில் சேர்க்கும் வழியறியந்த அறிவுள்ள யோகியர் அதை வீணாக்காமல் செய்தால் அவர்களின் நரை முடிகள் கருத்து சுருங்கிய தோல்கள் இளைமை பெற்று முதுமையை வென்று என்றும் இறப்பில்லாமல் பேரின்பத்தில் வாழ்வார்கள்.", "vilakam_en": "Ignorant people say that the foamy saltwater from waves that reach the seashore is useless and should be discarded. But the wise know how to remove the foam and impurities from that foamy saltwater, turn it into pure salt, and mix it into food to enjoy with taste — they never waste it. Likewise, ignorant people claim that the salt-filled urine, the body’s waste fluid, is of no use and should be expelled. However, wise yogis know the way to purify the semen — which lies close to the bladder filled with that salty urine — using the inner abdominal fire, and to raise it through the Sushumna Nadi to the Sahasrara (the thousand-petalled lotus). If they do not waste it, their gray hair will turn black, wrinkled skin will regain youthfulness, they will conquer old age, and they will live forever in supreme bliss without death." }, { "song_number": 849, "padal": "அளக நன்னுத லாயோ ரதிசயங்\nகளவு காயங் கலந்தஇந் நீரிலே\nமிளகு நெல்லியும் மஞ்சளும் வேம்பிடில்\nஇளகும் மேனி இருளுங் கபாலமே.", "vilakam": "அழகிய கூந்தலை உடையவளே ஒரு அதிசயம் உள்ளது. இந்த உடலில் மறைவாக உள்ள அமுரி நீர் உடலில் மேலே சென்று சிரத்தை அடையும் போது மிளகு, நெல்லி, மஞ்சள், வேப்பம் பருப்பு இவற்றைக் கலந்து நனறாக அரைத்துத் தலையில் தேய்த்துக் குளித்தால் உடல் மேன்மை அடையும். தலை மயிர் கறுப்பாக ஆகும்.", "vilakam_en": "O beautiful-haired one, there is a wonder. When the hidden Amuri water within the body rises upward and reaches the head, if one grinds pepper, amla (Indian gooseberry), turmeric, and neem seeds together into a fine paste, applies it to the head, and bathes, the body will be enhanced, and the hair will turn black." }, { "song_number": 850, "padal": "வீர மருந்தென்றும் விண்ணோர் மருந்தென்றும்\nநாரி மருந்தென்றும் நந்தி அருள்செய்தான்\nஆதி மருந்தென் றறிவார் அகலிடஞ்\nசோதி மருந்திது சொல்லவும்வொண் ணாதே.", "vilakam": "உயிர்களின் உடலிலுள்ள சிவ நீரான அமுரி நீரை வீரியத்தால் உண்டாகும் வீர மருந்து என்றும் தேவர்கள் பருகும் அமிர்தம் என்றும் மங்கையருடனான போகத்திற்கு உதவும் மருந்து என்றும் குருவாகிய இறைவன் அருளிக் கூறினார். அனைத்திற்கும் தலையான முதல் மருந்து இதுவே என்று யோகியர்கள் அறிவார்கள். அப்படி அறிந்தவர்களின் உள்ளுக்குள் ஜோதி மயமாக இருக்கும் இந்த பெருமை மிக்க மருந்தின் அருமை பெருமைகளை வார்த்தைகளால் விவரித்து சொல்ல முடியாது.", "vilakam_en": "The Amuri water, the Shiva nectar within the bodies of living beings, was revealed by the Guru — the Lord Himself — as the heroic medicine born of virility, the nectar consumed by the gods, and the elixir that aids in union with women. Yogis know that this is the foremost and supreme medicine above all others. For those who realize this truth, whose inner being is filled with divine light, the greatness and glory of this precious medicine cannot be fully described in words." }, { "song_number": 851, "padal": "எய்து மதிக்கலை சூக்கத்தி லேறியே\nஎய்துவ தூலம் இருவகைப் பக்கத்துள்\nஎய்துங் கலை போல ஏறி இறங்குமாந்\nதுய்யது குக்கத்துத் தூலத்த காயமே.", "vilakam": "எண்ணங்கள் தூல உடலில் இருந்து சூட்சும உடலுக்கு ஏறியும் சூட்சும உடலில் இருந்து தூல உடலுக்கு இறங்கியும் வரும். இது சந்திரனின் வளர்பிறை தேய்பிறை போன்று இருக்கும். சூட்சும உடல் தூய்மை அடைவதற்கு ஏற்ப தூல உடம்பும் தூய்மை அடையும்.", "vilakam_en": "Thoughts rise from the physical body to the subtle body and descend from the subtle body to the physical body. This is like the waxing and waning of the moon. As the subtle body attains purity, the physical body too becomes pure." }, { "song_number": 852, "padal": "ஆகின்ற சந்திரன் சூரியன் அங்கியுள்\nஆகின்ற ஈரெட்டொ டாறிரண் டீரைந்துள்\nஏகின்ற வக்கலை யெல்லா மிடைவழி\nஆகின்ற யோகியர் அறிந்த அறிவே.", "vilakam": "உயிர்களின் உடலில் இருக்கும் சந்திர மண்டலத்திற்கு (இடதுபக்க மூச்சுக்காற்று) பதினாறு கலைகள் உண்டு. சூரிய மண்டலத்திற்கு (வலது பக்க மூச்சுக்காற்று) பன்னிரண்டு கலைகள் உண்டு. அக்கினி மண்டலத்திற்கு (குண்டலினி) பத்துக் கலைகள் உள்ளன. இடது பக்க முச்சுக்காற்றையும் வலது பக்க முச்சுக்காற்றையும் உபயோகித்து அகயோகப் பயிற்சியால் நடுநாடியாகிய சுழுமுனையின் வழியே குண்டலினியை மேல்நோக்கிச் செலுத்துவது எப்படி என்பதை யோகியர்கள் நன்றாக அறிந்து கொண்டிருக்கிறார்கள்.\n\nகுறிப்பு: கலைகள் என்பது என்னவெனில் மூச்சுக்காற்று எப்படி தானாக உள்ளேயும் வெளியேயும் எப்படி சென்று வருகின்றது என்பதை குறிப்பதாகும்.", "vilakam_en": "In the body of living beings, the lunar sphere (left-side breath) has sixteen kalas (phases), the solar sphere (right-side breath) has twelve kalas, and the fire sphere (Kundalini) has ten kalas. Using both the left and right breaths, yogis know well how to raise the Kundalini upward through the central channel, the Sushumna, by means of the inner yogic practice.\nNote: Kalas refer to the natural way in which the breath flows inward and outward." }, { "song_number": 853, "padal": "ஆறாற தாங்கலை ஆதித்தன் சந்திரன்\nநாறா நலங்கினார் ஞாலங் கவர்கொளப்\nபேறாங் கலைமுற்றும் பேருங்கால் ஈரெட்டும்\nமாறாக் கதிர்கொள்ளு மற்றங்கி கூடவே.", "vilakam": "சூரியன் பன்னிரண்டு கலைகளோடு சந்திரனது பதினாறு கலைகளையும் அக்கினியோடு சேர்க்க அறிந்து கொண்டவர் உலகம் விரும்பும் பேறுகளை அடைவர்.", "vilakam_en": "One who knows how to unite the sun’s twelve kalas with the moon’s sixteen kalas, together with the fire, will attain the blessings and rewards desired by the world." }, { "song_number": 854, "padal": "பத்தும் இரண்டும் பகலோன் உயர்கலை\nபத்தினொ டாறும் உயர்கலை பான்மதி\nஒத்தநல் அங்கிய தெட்டெட் டுயர்கலை\nஅத்திறன் நின்றமையை ஆய்ந்துகொள் வீரே.", "vilakam": "சூரியகலை உயர்ந்து செல்லும் அளவு பன்னிரண்டு ஆகும். சந்திரக்கலை செல்லும் அளவு பதினாறு ஆகும். சூரியகலையும் சந்திரகலையும் சேர்ந்து குண்டலினியாகிய அக்கினியை உயர்த்திச் செல்வது மொத்தம் அறுபத்து நான்கு ஆகும். இவை மூன்றையும் குருநாதரின் வழிகாட்டுதலில் யோக முறைப்படி செய்து ஆராய்ந்து அறிந்து கொள்ளுங்கள்.", "vilakam_en": "The extent to which the sun’s kalas rise is twelve, and the extent to which the moon’s kalas rise is sixteen. By combining the sun’s kalas and the moon’s kalas to raise the fire known as Kundalini, the total becomes sixty-four. Practice and understand these three under the guidance of the Guru, following the yogic method." }, { "song_number": 855, "padal": "எட்டெட் டனலின் கலையாகும் ஈராறுட்\nசுட்டப் படுங்கதி ரோனுக்குஞ் சூழ்கலை\nகட்டப் படுமீ தீரெட்டா மதிக்கலை\nஒட்டப் படாஇவை ஒன்றோடொன் றாகவே.", "vilakam": "அக்கினிக் கலைகள் அறுபது நான்கு. சூரியனின் கலைகள் பன்னிரண்டு. சந்திரனின் கலைகள் பதினாறு இவை அனைத்தும் ஒன்றை ஒன்று சூழ்ந்து இருந்தாலும் தனித்தனியாகவே விளங்கிக் கொண்டிருக்கும்.", "vilakam_en": "The fire has sixty-four kalas, the sun has twelve kalas, and the moon has sixteen kalas. Though all of these surround one another, they each continue to exist distinctly on their own." }, { "song_number": 856, "padal": "எட்டெட்டும் ஈராறும் ஈரெட்டுந் தீக்கதிர்\nசுட்டிட்ட சோமனில் தோன்றுங் கலையென்ப\nகட்டப் படுந்தார கைக்கதிர் நாலுள\nகட்டிட்ட தொண்ணூற்றொ டாறுங் கலாதியே.", "vilakam": "அக்கினிக்கு அறுபத்து நான்கு சூரியனுக்குப் பன்னிரண்டு சந்திரனுக்குப் பதினாறு என கலைகள் 92 ம் சேர்ந்துள்ள மூலாதாரத்தில் நட்சத்திரக் கலை நான்கு உள்ளன. இவ்வாறு மூலாதாரத்துடன் இணைக்கப்பட்டுள்ள கலைகள் மொத்தம் தொண்ணூற்றாறு ஆகும்.", "vilakam_en": "The fire has sixty-four kalas, the sun has twelve, and the moon has sixteen. Along with these, in the Mooladhara there are four stellar kalas. Thus, the total number of kalas connected with the Mooladhara is ninety-six." }, { "song_number": 857, "padal": "எல்லாக் கலையும் இடைபிங் கலைநடுச்\nசொல்லா நடுநாடி யூடே தொடர்மூலஞ்\nசெல்லா எழுப்பிச் சிரத்துடன் சேர்தலால்\nநல்லோர் திருவடியை நண்ணிநிற் பாரே.", "vilakam": "சந்திர மண்டலமாகிய இடகலை மற்றும் சூரிய மண்டலமாகிய பிங்கலை நாடிகளின் வழியே உள்ளிழுக்கப்படும் எல்லா மூச்சுக்காற்றும் இயல்பாகவே கீழ் நோக்கி செல்லக்கூடியவை. அவற்றைத் தடுத்து நடுவில் இருக்கும் சுழுமுனை நாடி வழியே அவற்றை மேல் நோக்கி எடுத்துச் சென்று உச்சந்தலையில் உள்ள சகஸ்ரதளத்தில் சேர்த்து இறைவனின் மேல் எண்ணத்தை வைத்து இருக்கும் யோகியர்கள் எப்போதும் இறப்பின்றி இறைவனின் திருவடிகளையே பற்றிக்கொண்டு பேரின்பத்தில் திளைத்து இருப்பார்கள்.", "vilakam_en": "All the breaths drawn in through the Ida Nadi, representing the lunar sphere, and the Pingala Nadi, representing the solar sphere, naturally tend to flow downward. By restraining them and directing them upward through the central channel, the Sushumna Nadi, and uniting them in the Sahasrara at the crown of the head while keeping their thoughts fixed on the Lord, yogis remain forever deathless, holding firmly to the Lord’s divine feet and immersed in supreme bliss." }, { "song_number": 858, "padal": "அங்கியிற் சின்னக் கதிரிரண் டாட்டத்துத்\nதங்கிய தாரகை யாகும் சசிபானு\nபங்கிய தாரகை யாகும் பரையொளி\nதங்கு நவசக்ர மாகுந் தரணிக்கே.", "vilakam": "சந்திர யோகத்தில் இடகலை பிங்கலை நாடிகளின் வழியே உள்ளிழுக்கப்படும் மூச்சுக்காற்று மூலாதாரத்தில் உள்ள நெருப்பின் மேல் பட்டு மூலாதாரத்தின் அசைவினால் தோன்றும் ஒளிக்கீற்றுக்கள் சூரியன் சந்திரன் என்னும் இரண்டு நட்சத்திரங்களாக மாறுகிறது. இந்த நட்சத்திரங்களாக மாறிய ஒளிக்கீற்றைகளை மூச்சுக்காற்றுடன் உடலில் உள்ள ஏழு சக்கரங்களையும் தாண்டி எட்டாவது சக்கரமாகிய துவாதசந்தவெளியையும் தாண்டி ஒன்பதாவது பரவெளியில் கொண்டு சென்று அங்கு உள்ள பரவொளியுடன் கலந்து விட்டால் உலகத்தை இயக்கும் இறைவனது பேரொளியின் அம்சமாக இருக்கலாம்.\n\nகுறிப்பு: அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது எனும் சொல்லுக்கு ஏற்ப உலகம் என்று நாம் அழைக்கும் சூரிய குடும்பத்தில் இருக்கின்ற ஒன்பது கிரகங்களும் இன்னும் பல நட்சத்திரங்களும் நமது உடலிலேயே இருக்கின்றன. இவை அனைத்தையும் ஒளி உருவமாக இருந்து இயக்கும் இறைசக்தியே நமது உடலில் சகஸ்ரதளத்தில் ஜோதி வடிவாக தங்கி இருக்கின்றது. இதை நாம் யோகப் பயிற்சியின் மூலம் இயக்க ஆரம்பித்தால் உலகங்கள் அனைத்தையும் இயக்கும் இறை சக்தியாகவே நாமும் மாறிவிடுவோம்.", "vilakam_en": "In Chandra Yoga, the breath drawn in through the Ida and Pingala Nadis touches the fire in the Mooladhara. From the movement of the Mooladhara, rays of light emerge and transform into two stars called the Sun and the Moon. These rays of light, having taken the form of these stars, are carried along with the breath beyond the seven chakras in the body, past the eighth chakra — the Dwadashanta space — and into the ninth realm, the infinite space. There, they merge with the Infinite Light, becoming one with the supreme radiance of the Lord who governs the universe.\n\nNote: In accordance with the saying 'What is in the macrocosm exists in the microcosm', all the nine planets and countless other stars of the solar system we call the world also exist within our own body. The divine energy that governs and moves all these as forms of light dwells within us as the radiance in the Sahasrara. When we begin to activate this through yogic practice, we ourselves transform into the divine power that governs all worlds." }, { "song_number": 859, "padal": "தரணி சலங்கனல் கால்தக்க வானம்\nஅரணிய பானு அருந்திங்கள் அங்கி\nமுரணிய தாரகை முன்னிய ஒன்பான்\nபிரணவ மாகும் பெருநெறி தானே.", "vilakam": "உயிர்களின் உடலில் இருக்கும் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூத அம்சங்கள் இடகலை பிங்கலை வழியே சுழன்று கொண்டிருக்கும் சூடான மற்றும் குளிர்ந்த மூச்சுக்காற்று மூலாதாரத்திலுள்ள குண்டலினியிலிருந்து தோன்றும் ஒளிக்கீற்றுக்கள் என மொத்தம் ஒன்பது வகையான அம்சங்களும் பிரணவமாகிய இறை சக்தியின் அம்சங்களாகும். இவற்றை உபயோகித்து செய்யும் யோகமே இறைவனை அடைவதற்கு உதவும் மிகப்பெரிய மார்க்கமாகும்.", "vilakam_en": "Within the bodies of living beings, the five elemental aspects — earth, water, fire, air, and ether — along with the warm and cool breaths circulating through the Ida and Pingala, and the rays of light arising from the Kundalini in the Mooladhara, together form nine types of aspects, all of which are manifestations of the divine power of Pranava. The yoga that makes use of these is the greatest path that helps one attain the Lord." }, { "song_number": 860, "padal": "தாரகை மின்னுஞ் சசிதேயும் பக்கத்துத்\nதாரகை மின்னா சசிவளர் பக்கத்துத்\nதாரகை பூவிற் சகலத்து யோனிகள்\nதாரகை தாரகை தானாஞ் சொரூபமே.", "vilakam": "வானத்து நட்சத்திரங்கள் சந்திரனின் தேய்பிறை சமயத்தில் பிரகாசமாக மின்னும். அதுவே சந்திரனின் வளர்பிறை சமயத்தில் நட்சத்திரங்களின் ஒளி சந்திரனின் பிரகாசமான ஒளியில் மங்கிவிடும். அதுபோலவே சந்திர யோகம் செய்கின்ற யோகியர்கள் தமது மூச்சுக்காற்றை கீழ் நோக்கி எடுத்துச் சென்று குண்டலினியில் கலக்கும்போது அதில் பிரகாசமான ஒளிக்கீற்றுக்கள் உருவாகும். அதை ஒளிக்கீற்றை மேல் நோக்கி சகஸ்ரதளத்திற்கு எடுத்துச் செல்லும்போது சகஸ்ரதள ஜோதியின் பிரகாசமான ஒளியில் மங்கிவிடும். சந்திர யோகம் செய்து குண்டலினியில் உருவாகும் ஒளிக்கீற்றுக்களை சகஸ்ரதள ஜோதியில் சென்று சேர்க்கும் யோகியர்களிடம் பிரகாசிக்கும் ஜோதி உலகத்தில் அனைத்தையும் உருவாக்கும் பேரொளி ஜோதியான இறைவனின் சொரூபம் (ஒளி உருவம்) ஆகும்.", "vilakam_en": "In the sky, during the waning phase of the moon, the stars shine brightly. But in the waxing phase of the moon, the light of the stars fades in the brilliance of the moon’s radiance. Likewise, when yogis practicing Chandra Yoga direct their breath downward to merge with the Kundalini, bright rays of light are generated there. When these rays are taken upward to the Sahasrara, they fade in the brilliant radiance of the Sahasrara light. For yogis who, through Chandra Yoga, merge the rays of light generated in the Kundalini into the Sahasrara light, the radiance that shines within them is none other than the supreme, all-creating Light — the very form of the Lord Himself." }, { "song_number": 861, "padal": "முற்பதி னைஞ்சின் முளைத்துப் பெருத்திடும்\nபிற்பதி னைஞ்சிற் பெருத்துச் சிறுத்திடும்\nஅப்பதி னைஞ்சும் அறியவல் லார்கட்குச்\nசெப்பரி யானின்கழல் சேர்தலு மாமே.", "vilakam": "சந்திரன் முதல் பதினைந்து நாட்கள் சிறிது சிறிதாக வளர்ந்து பெளர்ணமியில் முழுமை அடையும். அதன்பிறகு பதினைந்து நாட்கள் சிறிது சிறிதாகத் தேய்ந்து அமாவாசையில் முழுமையாக மறைந்துவிடும். அதுபோலவே சந்திர யோகம் செய்யும் யோகியருக்கு குண்டலினியில் ஒளிக்கீற்றுக்கள் தோன்றி பெரிய நட்சத்திரமாக வளர்ந்து பின்பு சகஸ்ரதளத்தில் சென்று முழுமையாக மறைந்துவிடும். இந்த பதினைந்து நிலைகளையும் உணர்ந்து அறிந்துகொள்ளக்கூடிய யோகியர்கள் வார்த்தைகளில் கூறிவிடமுடியாத மகத்துவத்தைக் கொண்ட இறைவனின் திருவடிகளை தமக்குள் கண்டு அடைவார்கள்.", "vilakam_en": "The moon gradually grows over fifteen days to reach fullness on the full moon day, and then gradually wanes over the next fifteen days until it completely disappears on the new moon day. Likewise, for yogis practicing Chandra Yoga, rays of light arise in the Kundalini, grow into a great star, and then completely disappear upon reaching the Sahasrara. Yogis who can perceive and understand these fifteen stages will behold and attain within themselves the divine feet of the Lord, whose greatness cannot be expressed in words." }, { "song_number": 862, "padal": "அங்கி எழுப்பி அருங்கதிர் வட்டத்துத்\nதங்குஞ் சசியினால் தாமம்ஐந் தைந்தாகிப்\nபொங்கிய தாரகை யாம்புலன் போக்கறத்\nதிங்கள் கதிரங்கி சேர்கின்ற யோகமே.", "vilakam": "அகயோகம் மூலம் மூலாதாரத்திலுள்ள குண்டலினியை எழுப்பிய பிறகு அந்த அக்கினியை அருமையான சூரிய மண்டலத்தில் தங்குகின்ற சந்திர கலையாகிய வாயுவோடு சேர்த்து நட்சத்திர ஒளியாக மாறுவதற்கு பத்து நாட்களும் அதன் பிறகு நட்சத்திரமாக மாறிய ஒளிக்கீற்றுக்களை சந்திர சூரிய அக்கினி மண்டலங்களோடு சேர்த்து மனதை ஒருமுகப்படுத்தி ஐந்து புலன்களையும் அதனதன் வழியில் செல்ல விடாமல் தடுத்து இறைவனின் மேல் எண்ணங்களை வைத்து சகஸ்ரதளத்தை அடைவதற்கு ஐந்து நாட்களும் ஆக மொத்தம் பதினைந்து நாட்கள் பாடல் #861 இல் கூறியுள்ளபடி உணர்ந்து அறிந்து கொண்டு செய்வதே சந்திர யோகமாகும்.", "vilakam_en": "In Agayoga, after awakening the Kundalini in the Mooladhara, it takes ten days for that fire, when united with the lunar breath residing in the radiant solar sphere, to transform into starlight. Then, it takes another five days to merge those light rays, now in the form of a star, with the lunar, solar, and fire spheres, focusing the mind, restraining the five senses from following their respective paths, and fixing the thoughts on the Lord to reach the Sahasrara. Thus, as stated in verse #861, understanding and practicing these fifteen days in the proper way is what is known as Chandra Yoga." }, { "song_number": 863, "padal": "ஒன்றிய ஈரெண் கலையும் உடலுற\nநின்றது கண்டும் நினைக்கிலர் நீசர்கள்\nகன்றிய காலன் கருக்குழி வைத்தபின்\nசென்று அதில்வீழ்வர் திகைப்பொழி யாரே.", "vilakam": "வானத்திலிருக்கின்ற வளர் பிறை தேய் பிறை சந்திர மாற்றங்களின் பதினாறு கலைகளும் உயிர்களின் உடலுக்குள்ளேயும் இருப்பதைக் கண்டுகொண்ட பிறகும் அதை வைத்துக்கொண்டு இறைவனை நினைத்து சந்திரயோகம் செய்து பிறவி இல்லாத பெருவாழ்வை அடைய முயற்சி செய்யாத கீழான குணமுடையவர்களை கண்ட எமன் இனி இவர்கள் வாழ்ந்து என்ன பயன் என்று அவர்கள் இறந்து அடுத்த பிறவி எடுக்கும்படி மரணப்பிடியில் சிக்க வைக்கிறார். கீழான குணமுடையவர்களும் அதில் சென்று வீழ்ந்து மீண்டும் பிறவிச் சுழற்சியில் மாட்டிக்கொண்டு எப்படி தப்பிப்பது என்று திகைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.", "vilakam_en": "Even after realizing that the sixteen phases of the moon’s waxing and waning seen in the sky also exist within the bodies of living beings, those of lowly nature who fail to remember the Lord and practice Chandra Yoga to attain the great, birthless life are seen by Yama, the god of death, as having no further purpose in living. He seizes them in the grip of death, causing them to die and take their next birth. Such people, bound by their lowly nature, fall into this fate and become trapped once again in the cycle of rebirth, left bewildered and distressed, wondering how they might ever escape." }, { "song_number": 864, "padal": "அங்கி மதிகூட ஆகும் கதிரொளி\nஅங்கி கதிர்கூட ஆகும் மதியொளி\nஅங்கி சசிகதிர் கூடஅத் தாரகை\nதங்கிய அதுவே சகலமு மாமே.", "vilakam": "குண்டலினியாகிய மூலாக்கினியில் சந்திர கலையாகிய இடகலை மூச்சுக்காற்று இணையும்போது அது சூரிய ஒளிக்கீற்றைப் பெறுகிறது. மூலாக்கினியில் சூரிய கலையாகிய பிங்கலை மூச்சுக்காற்று இணையும் போது அது சந்திர ஒளிக்கீற்றைப் பெறுகிறது. இப்படி மாறிப் பெற்ற இரண்டு ஒளிக்கீற்றுக்களும் சுழுமுனையில் ஒன்றாக இணையும் போது அது நட்சத்திர மண்டலங்களாக மாறுகின்றது. இந்த நட்சத்திர மண்டலங்கள் உயிர்களின் உடலிலுள்ள ஒன்பது மண்டலங்களையும் தாண்டி பரவெளியில் இறை சக்தியோடு ஒன்றினையும் போது அனைத்துமாகிய இறைவனாகவே யோகியர்கள் ஆகிவிடுகின்றனர்.", "vilakam_en": "When the lunar breath of the Ida Nadi unites with the Moola fire (Kundalini), it receives the rays of the sun. When the solar breath of the Pingala Nadi unites with the Moola fire, it receives the rays of the moon. When these two interchanged rays of light merge together in the Sushumna, they transform into star realms. When these star realms pass through the nine spheres within the body of living beings and unite with the divine power in the infinite space, the yogis become one with the all-encompassing Lord Himself." }, { "song_number": 865, "padal": "ஈராறு பெண்கலை எண்ணிரண் டாண்கலை\nபேராமற் புக்குப் பிடித்துக் கொடுவந்து\nநேராகத் தோன்றும் நெருப்புற வேபெய்யில்\nஆராத ஆனந்தம் ஆனந்த மானதே.", "vilakam": "பன்னிரண்டு கலைகள் கொண்ட சூரியக்கலை பெண் கலை ஆகும். பதினாறு கலைகள் கொண்ட சந்திரக்கலை ஆண் கலை ஆகும், இரண்டு கலைகளையும் பயிற்சியினால் மூலாக்னியில் ஒரு நிலைப்படுத்தினால் அங்கு தெவிட்டாத திருவடி இன்பம் கிடைக்கும்.", "vilakam_en": "The solar kala, with its twelve kalas, is the feminine kala, and the lunar kala, with its sixteen kalas, is the masculine kala. If, through practice, both kalas are united and stabilized in the Moola fire, one attains the unfading bliss of the Divine Feet there." }, { "song_number": 866, "padal": "காணும் பரிதியின் காலை இடத்திட்டு\nமாணும் மதியதன் காலை வலத்திட்டுப்\nபேணியே யிவ்வாறு பிழையாமற் செய்வீரேல்\nஆணி கலங்காதவ் வாயிரத் தாண்டே.", "vilakam": "குரு கற்பித்த வழியில் தவறில்லாமல் சூரியக் கலையில் வலது பக்க மூக்கு வழியாக இயங்கும் மூச்சுக்காற்றை இடது பக்கம் இயங்கச் செய்தும் சந்திரக் கலையில் இடது பக்க மூக்கு வழியாக இயங்கும் மூச்சுக்காற்றை வலது பக்கம் இயங்கச் செய்து வந்தால் ஆயிரம் ஆண்டுகள் சென்றாலும் உடல் தளர்ச்சி அடையாமல் இருக்கும்.", "vilakam_en": "By following the Guru’s teachings without error — making the breath of the solar kala, which normally flows through the right nostril, flow through the left, and making the breath of the lunar kala, which normally flows through the left nostril, flow through the right — the body will remain without weakness even after a thousand years." }, { "song_number": 867, "padal": "பாலிக்கும் நெஞ்சம் பறையோசை ஒன்பதில்\nஆலிக்கும் அங்கே அமரர் பராபரன்\nமேலைக்கு முன்னே விளக்கொளி யாய்நிற்குங்\nகாலைக்குச் சங்கொளி கதிரவன் தானே.", "vilakam": "சந்திர யோகம் செய்யும் யோகியர்கள் தமது குண்டலினி சக்தியை ஆறு ஆதார சக்கரங்கள் ஏழாவது சகஸ்ரதளம் எட்டாவது துவாதசாந்த வெளியைத் தாண்டிய ஒன்பதாவதான பரவெளியில் வீற்றிருக்கும் இறை சக்தியோடு கலக்கும்போது அந்த இறை சக்தியைத் தமக்குள் தேவ நாதமாக கேட்டு உணர்ந்து அந்த இறை சக்தியிலேயே மனதை ஒருமுகப்படுத்தி தியானத்தைத் தொடர்ந்தால் விரைவில் பரவெளியையும் தாண்டிய அண்டசராசரங்களில் இருந்து கொண்டு அனைத்து உலகங்களுக்கும் தினமும் காலையில் தோன்றி ஒளியைக் கொடுக்கின்ற மாபெரும் சூரியனைப் போன்ற இறைவனின் பேரொளி உருவத்தை தூய்மையான சங்கைப் போன்ற வெண்மை நிற ஜோதியாகத் தமக்குள் தரிசனம் செய்வார்கள்.", "vilakam_en": "When yogis practicing Chandra Yoga merge their Kundalini power, having passed through the six foundational chakras, the seventh Sahasrara, and the eighth Dwadashanta space, with the divine power seated in the ninth realm — the Infinite Space — they will hear and experience that divine power within themselves as the celestial sound. If they focus their mind solely on that divine power and continue their meditation, they will soon behold within themselves the supreme radiant form of the Lord — the great Sun that rises daily from beyond the Infinite Space to shine upon all worlds — appearing as a pure, conch-white light." }, { "song_number": 868, "padal": "கதிரவன் சந்திரன் காலம் அளக்கும்\nபொதிரவ னுள்ளே பொழிமழை நிற்கும்\nஅதிரவ னண்டப் புறஞ்சென் றடர்ப்ப\nஎதிரவ னீசன் இடமது தானே.", "vilakam": "சூரிய கலை சந்திர கலை ஆகிய இரண்டு நாடிகளும் உயிர்களின் உடலுக்கான காலத்தை அளக்கும் கருவிகளாகும். சூரிய கலை சந்திர கலை இரண்டும் தனித் தனியாக இருக்கும் வரை உயிர்கள் காலத்துக்கு கட்டுப் பட்டவையாகும். சந்திர யோகத்தால் இரு நாடிகளையும் மாற்றி சுழுமுனை வழியே மேலே கொண்டு செல்கிற யோகியின் உடலில் சூரிய கலையும் சந்திர கலையும் சகஸ்ரதளத்தில் ஒன்று சேரும் போது அங்கே அமுதம் விளையும். அங்கிருந்து தலைக்கு மேல் உள்ள துவாதசாந்த வெளியில் இறை சக்தியை ஒலியாக கேட்டு அதையும் தாண்டிய பரவெளியில் இறை சக்தியை ஒளியாக தரிசித்து அதையும் தாண்டிய அண்ட வெளியே சிவனது இருப்பிடம் என்பதை உணரலாம்.", "vilakam_en": "The solar kala and lunar kala, represented by the two Nadis, are the instruments that measure the lifespan of living beings. As long as the solar and lunar kalas remain separate, beings are bound by time. When, through Chandra Yoga, the yogi reverses the flow of both Nadis and carries them upward through the Sushumna, the solar and lunar kalas unite in the Sahasrara, and nectar is produced there. From there, in the Dwadashanta space above the head, the divine power can be heard as sound; and beyond that, in the Infinite Space, the divine power can be seen as light. Going even beyond that, one realizes the abode of Siva in the cosmic realm." }, { "song_number": 869, "padal": "உந்திக் கமலத் துதித்தெழுஞ் சோதியை\nஅந்திக்கு மந்திர மாரும் அறிகிலார்\nஅந்திக்கு மந்திர மாரும் அறிந்தபின்\nதந்தைக்கு முன்பாக மகன்பிறந் தானே.", "vilakam": "மூலாதாரத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் குண்டலினியை எழுப்பி ஜோதியாக மணிப்பூரக சக்கரத்தில் செயல்பட வைத்து ஒவ்வொரு சக்கரங்களாக மேலே எழுப்பிச் சென்று சகஸ்ரதளத்தில் சேர்க்கும் சந்திரயோகப் பயிற்சிக்கு உறுதுணையாக இருக்கும் பிரணவ மந்திரத்தை யாரும் அறிந்திருக்கவில்லை. அந்த மந்திரத்தை குருவின் மூலம் அறிந்து உணர்ந்த யோகியர்கள் அனைத்துலகிற்கும் தந்தையான இறைவனுக்கு முன்பு மகனாக இருக்கும் தங்களின் ஆத்ம ஜோதியை தரிசிப்பார்கள்.", "vilakam_en": "Awakening the Kundalini, which lies dormant in the Muladhara, and activating it as light in the Manipura chakra, then raising it step by step through each chakra to unite it with the Sahasrara, is the practice of Chandra Yoga. The Pranava Mantra that serves as a powerful aid for this practice is not known to most. The yogis who come to know and experience this mantra through the grace of their Guru will behold their own soul-light in the presence of the Supreme Lord — the Father of all worlds — as His true sons." }, { "song_number": 870, "padal": "ஊதியம் ஏதும் அறியார் உரைப்பினும்\nஓதியும் ஏதும் அறியாத ஊமர்கள்\nஆதியும் அந்தமும் அந்திக்க வல்லிரேல்\nவேதியன் அங்கே வெளிப்படுவன் தானே.", "vilakam": "நூல்களைக் கற்றாலும் அவற்றின் பயனை சிறிதும் உணராத அறிவிலிகள் நூல்களின் பயனை மற்றவர்கள் கூறினாலும் உணரமாட்டார்கள். குண்டலி சத்தியை அது தோன்றுகின்ற மணிபூரகத்தில் உணர்தலோடு மட்டுமில்லாது அதன் முடிவாகிய சந்திர மண்டலத்தில் சேர்த்தால் அங்கு சிவன் வெளிபடுவான்.", "vilakam_en": "Even if they study the scriptures, the ignorant who do not grasp their essence will not understand their value, even when others explain it to them. The Kundalini Shakti, when felt at the Manipura chakra where it arises, should not only be experienced there but must be united with its ultimate destination — the Chandra Mandala (Moon Sphere) — where Lord Shiva will manifest." }, { "song_number": 871, "padal": "பாம்பு மதியைத் தினலுறும் அப்பாம்பு\nதீங்கு கதிரையுஞ் சேரத் தினலுறும்\nபாம்பும் மதியும் பகைதீர்த் துடன்கொளீர்\nநீங்குதல் கொடானே நெடுந்தகை யானே.", "vilakam": "சந்திர யோகப் பயிற்சியின் மூலம் குண்டலினியாகிய பாம்பை உறக்கத்திலிருந்து எழுப்பிவிட்டால் அது நித்தமும் சந்திர கலையை உண்டு அதுவும் பத்தாதென்று சூடாகிய தீங்கைக் கொடுக்கும் சூரிய கலையையும் உண்டு வளரும். குண்டலினிக்கு இரையாக கலைகள் இருப்பதால் இரண்டும் பகையாளிகள் போல இருந்தாலும் சந்திர யோகப் பயிற்சியினால் குண்டலினியை ஒவ்வொரு மண்டலமாக மேலேற்றிச் சென்று கடைசியில் ஒன்பதாவதான பரவெளியில் இருக்கும் சந்திர மண்டலத்தோடு ஒன்று சேர்த்துவிட்டால் குண்டலினியும் கலைகளும் தமது பகையைத் தீர்த்து ஒன்றாகிவிடும். அதன் பிறகு மாபெரும் கருணையாளனான இறைவன் யோகியை விட்டு என்றும் நீங்காமல் இருப்பான்.\n\nஉட்கருத்து: சந்திர யோகப் பயிற்சியில் மூச்சுக்காற்றின் மூலமே குண்டலினியை வளர்த்து ஏழு சக்கரங்கள் எட்டாவது துவாதசாந்த வெளியைத் தாண்டிய ஒன்பதாவது பரவெளியில் இருக்கும் சந்திர மண்டலத்தோடு கலந்துவிட்டால் அதன் பிறகு யோகியர்களுக்கு மூச்சுக்காற்றோ உணவோ தேவையின்றி எவ்வளவு காலமும் இறைவனுடன் பேரின்பத்தில் இருக்கலாம்.", "vilakam_en": "Through the practice of Chandra Yoga, once the serpent-like Kundalini is awakened from its slumber, it constantly feeds on the Moon energy (Chandra Kala), and also on the Sun energy (Surya Kala) which gives intense heat. These two energies, though appearing as rivals within the Kundalini, can be reconciled: by steadily raising the Kundalini through each energy center (chakra) and finally uniting it with the Chandra Mandala (Moon Sphere) in the ninth realm — beyond the eighth realm of Dvadasanta — they merge into oneness. From then on, the supremely compassionate Lord will never leave the yogi.\n\nInner Meaning:In Chandra Yoga practice, by using only the breath to nurture and raise the Kundalini through the seven chakras, past the eighth realm of Dvadasanta, and merging it with the Chandra Mandala in the ninth realm, the yogi no longer needs breath or food and can remain in eternal bliss with the Divine." }, { "song_number": 872, "padal": "அயின்றது வீழ்வள வுந்துயில் இன்றிப்\nபயின்ற சசிவீழ் பொழுதில் துயின்று\nநயந்தரு பூரணை உள்ள நடத்தி\nவியந்தரு பூரணை மேவும் சசியே.", "vilakam": "குண்டலினியுடன் மேலே சென்ற சந்திரன் தலையின் மீது நிற்கும் குண்டலினியை உறங்காமல் கவனிக்கும். அதன் பின் கீழே சந்திரன் இறங்கிய போது உறங்கும். நன்மையைத் தரும் ஒளியை மனத்தில் இருக்கச் செய்தால் அப்போது முழுமையாகத் சந்திரக்கலை யோகியிடம் பொருந்தும்.", "vilakam_en": "When the moon rises upward along with the Kundalini, it remains at the top of the head, keeping watch over the Kundalini without resting. Afterwards, when the moon descends downward, it rests. If the beneficial light is made to remain in the mind, then at that time the phases of the moon will fully align with the yogi." }, { "song_number": 873, "padal": "சசியுதிக் கும்அள வந்துயி லின்றிச்\nசசியுதித் தானேல் தனதூண் அருந்திச்\nசசிசரிக் கின்றள வுந்துயி லாமற்\nசசிசரிப் பிற்தன் கண்டுயில் கொண்டதே.", "vilakam": "சந்திர யோகத்தில் குண்டலினியைச் சந்திர மண்டலத்தில் சேர்க்கும் வரையில் சோர்வு இன்றி யோகத்தில் முயன்று அதைச் சேர்த்தபின் உள் நாக்கில் பெருகும் அமிர்தத்தைப் பருகி வேறு எதுவும் தேவையின்றி மூச்சுக்காற்று சந்திர கலை இயங்காமல் சூரிய கலை இயங்கும் பொழுது உறங்குதல் வேண்டும்.", "vilakam_en": "In the Chandra Yoga practice, one must persevere in yoga without fatigue until the Kundalini is united with the lunar sphere. Once united, drink the overflowing nectar on the inner tongue, needing nothing else. When the breath and the lunar energy cease to function and only the solar energy operates, it is time to rest." }, { "song_number": 874, "padal": "ஊழி பிரியா திருக்கின்ற யோகிகள்\nநாழிகை யாக நமனை அளப்பர்கள்\nஊழி முதலாய் உயர்வார் உலகினில்\nதாழவல் லாரில்இச் சசிவன்னர் ராமே.", "vilakam": "ஊழிக் காலங்கள் பல சென்றாலும் அழியாமல் உலகிலே வாழ்கின்ற யோகிகள் தாம் யோகத்தில் இருக்கின்ற நாழிகையையே தமது ஆயுளின் அளவுகோலாகக் கொண்டு எமனை எதிர்த்து நிற்பார்கள். ஆனால் சந்திர யோகத்தைப் பின்பற்றும் யோகியர்கள் ஊழிக்கு முதல்வனாய் உள்ள இறைவனே தாமாகி என்றும் இந்த உலகில் மீண்டும் வந்து பிறக்காத உயர் நிலையை அடைவார்கள்.", "vilakam_en": "Even after countless aeons pass, yogis who live in this world without perishing measure their lifespan by the duration they remain in the state of yoga, standing against Yama (the god of death). However, yogis who follow the lunar yoga attain the supreme state where they themselves become the Lord who is the origin of the aeons, and they will never be reborn in this world again." }, { "song_number": 875, "padal": "தண்மதி பானுச் சரிபூமி யேசென்று\nமண்மதி காலங்கள் மூன்றும் வழிகண்டு\nவெண்மதி தோன்றிய நாளில் விளைந்தபின்\nதண்மதி வீழ்அள விற்குஅண மின்றே.", "vilakam": "குளிர்ந்த நிலவும் சூரியனும் சரிபாதியாக பூமிக்கு வெளிச்சத்தைக் கொடுத்து மண்ணுலகில் மூன்றுவித காலங்களையும் அறிந்து கொள்வதற்கு வழியாக இருக்கின்றன. அதுபோலவே உயிர்களின் உடலில் சந்திர கலையும் சூரிய கலையும் விண்ணுலகின் உண்மை ஞானத்தை அறிந்து கொள்வதற்கு வழியாக இருக்கின்றன. இவை இரண்டையும் கொண்டு சந்திர யோகத்தின் மூலம் குண்டலினியை மேலேற்றிச் சென்று சந்திர மண்டலத்தில் சேர்த்து இறை சக்தியாகிய தூய வெண்ணிற ஜோதியைத் தரிசித்து விட்டால் அளவில் குறைவின்றி குளிர்ந்த அமிர்தம் எப்போதும் கிடைத்துக் கொண்டே இருக்கும்.", "vilakam_en": "The cool moon and the sun together provide equal light to the earth, making it possible to understand the three types of seasons in the world. In the same way, within the bodies of living beings, the lunar energy and the solar energy serve as the means to realize the true wisdom of the celestial realms. By using both and, through lunar yoga, raising the Kundalini upwards to unite with the lunar sphere and then beholding the divine power — the pure white light — one will forever receive an endless supply of cool nectar without any diminishment." }, { "song_number": 876, "padal": "வளர்கின்ற ஆதித்தன் தன்கலை யாறுந்\nதளர்கின்ற சந்திரன் தன்கலை யாறும்\nமலர்ந்தெழு பன்னிரண் டங்குலம் ஓடி\nஅலர்ந்து விழுந்தமை யாரறி வாரே.", "vilakam": "வளர்கின்ற சூரியக்கலை ஆறும் தேய்கின்ற சந்திரக்கலை ஆறும் மூச்சுக்காற்றாய் வழக்கமாக தொண்டைக்கு கீழே எட்டு அங்குலமும் சந்திர யோகப் பயிற்சியில் தொண்டைக்கு மேலே நான்கு அங்குலமும் ஓடி சகஸ்ரதளத்தில் சேர்ந்து மலர்ந்து பின் அங்கிருந்து உடலெங்கும் விரிந்து பரவும் யோக முறையை யாரும் அறியவில்லை.", "vilakam_en": "The waxing solar energy and the waning lunar energy normally flow with the breath—eight inches below the throat for ordinary breathing, and, in lunar yoga practice, four inches above the throat—then unite in the Sahasrara (thousand-petaled lotus), blossom there, and subsequently spread throughout the body. This yogic method is unknown to most." }, { "song_number": 877, "padal": "ஆமுயிர்த் தேய்மதி நாளே யெனல்விந்து\nபோம்வழி எங்கணும் போகாது யோகிக்குக்\nகாமுற வின்மையிற் கட்டுண்ணு மூலத்தில்\nஓமதி யத்துள்விட் டுரையுணர் வாலே.", "vilakam": "சந்திர யோகத்தைச் செய்கின்ற யோகியர்கள் முழு நிலவு வருவதற்குள் தங்களது பயிற்சியை சரியாகச் செய்து முடித்துவிட்டால் அதன் பிறகு வரும் தேய்பிறை நாட்களில் அவர்களின் சுக்கிலம் வழக்கம் போல கீழிறங்கி எதன் மூலமும் வெளியேறிவிடாமல் காம எண்ணங்கள் சிறிதும் இன்றி மூலாதாரத்திலேயே கட்டுப்பட்டு நிற்கும். யோகியர்களும் மூச்சுக்காற்றை ஓங்கார மந்திரத்தோடு சேர்த்து சந்திர மண்டலத்தில் கலந்த பிறகு தமது எண்ணங்களை அதிலேயே நிலைக்க வைத்து அனைத்து உணர்வுகளையும் தாண்டிய நிலையில் இருப்பார்கள்.", "vilakam_en": "If practitioners of Chandra Yoga complete their training correctly before the full moon, then during the subsequent waning phase their vital essence (shukla) will no longer descend or escape by any means. It will remain firmly contained in the Muladhara without the slightest trace of lustful thoughts. After merging their breath, along with the Omkara mantra, into the lunar sphere, yogis keep their mind fixed there, remaining in a state beyond all sensory perceptions." }, { "song_number": 878, "padal": "வேறுறச் செங்கதிர் மெய்க்கலை யாறொடுஞ்\nசூறுற நான்குந் தொடர்ந்துற வேநிற்கும்\nஈறிலி நங்கலை யீரைந்தொ டேமதி\nஆறுஉட் கலையுள் அகலுவா வாமே.", "vilakam": "குண்டலினியிலிருந்து வேர் பிடித்து மேலெழும்பும் செம்மையான கதிர்களைக் கொண்ட உண்மை ஞானத்தைக் கொடுக்கும் ஆறு சூரிய கலைகளோடு வெப்பத்தை கொடுக்கும் நான்கு அக்கினி கலைகள் கலந்து தொடர்ந்து வரும். அதனோடு ஈடு இணையில்லாத இறைவனை அடைய உதவும் பத்து நன்மை தரும் கலைகளோடு குளிர்ச்சியைக் கொடுக்கும் ஆறு சந்திர கலைகளும் கலந்து மொத்தம் 16 கலைகளும் ஒன்றாகச் சேர்ந்து சந்திர மண்டலத்தை அடையும் போது யோகியர்கள் அனைத்து உணர்வுகளையும் விட்டு விலகி இறைவனைப் பற்றி மட்டுமே எண்ணிக்கொண்டு இருக்கும் பேரானந்த நிலையை அடைவார்கள்.", "vilakam_en": "From the Kundalini arise six sun kalas (solar energies) with radiant red rays that grant true wisdom, blending with four fire kalas that give heat. Along with these come ten auspicious kalas that aid in attaining the matchless Supreme, and six moon kalas that bring coolness. When all sixteen kalas unite and reach the lunar sphere, yogis attain a state of supreme bliss, withdrawing from all sensory experiences and thinking only of the Divine." }, { "song_number": 879, "padal": "உணர்விந்து சோணி உறவினன் வீசும்\nபுணர்விந்து வீசுங் கதிரிற் குறையில்\nஉணர்வும் உடம்பும் உவையொக்க நிற்கில்\nஉணர்வும் உடம்பும் ஒருகால் விடாவே.", "vilakam": "உணர்வுக்கு வாயிலாக உள்ள ஒளியும் ஒலியும் ஒன்றாக கலக்க சூரியக்கலையின் கதிர்கள் குறையுமானால் ஒளி தலைக்கு மேலே தோன்றும். ஒளியாகிய சூட்சும உடம்பும் உணர்வும் ஒன்றான பின் யோகிக்கு உடம்பு அழியாது.", "vilakam_en": "If the rays of the solar sphere diminish so that the light and sound within perception merge as one, a light will appear above the head. Once the subtle body of light and the perception become one, the yogi’s body will not perish." }, { "song_number": 880, "padal": "விடாத மனம்பவ னத்தொடு மேவி\nநடாவு சிவசங்கின் நாதங் கொளுவிக்\nகடாவிடா ஐம்புலன் கட்டுண்ணும் வீடு\nபடாத இன்பம் பருகார் அமுதமே.", "vilakam": "தன் விருப்பத்திற்கு ஆடும் மனம் சந்திர யோகம் செய்யும் யோகியர்களுக்கு வசப்பட்டு மூச்சுக்காற்றோடு இணைந்து கொண்டு நடு நாடி வழியே மேலேறும் போது சகஸ்ரதளத்தில் இறை சப்தங்களின் உயர்ந்த சங்கொலி கேட்கும். மதம் பிடித்த யானை போல அலையும் ஐந்து புலன்களும் யோகியின் வசப்பட்டு அவர்களின் எண்ணத்திற்கு ஏற்ப உடலுக்குள் கட்டுப்பட்டு இயங்கும். எப்போதும் திகட்டிவிடாத பேரின்பத்தை கொடுக்கும் அமிர்தம் அவர்களின் உள்நாக்கில் ஊற அவர்கள் அதை எப்போதும் பருகிக் கொண்டே இருப்பார்கள்.", "vilakam_en": "When the restless mind of its own will becomes obedient to the yogis practicing Chandra Yoga and merges with the breath to rise upward through the central channel (Sushumna), they will hear the lofty conch-like sound of divine vibrations in the thousand-petaled lotus (Sahasrara). The five senses, which normally wander like a mad elephant, will also come under the yogi’s control, functioning within the body according to their will. Nectar that grants unending bliss will flow into their inner tongue, and they will continuously drink of it without ever tiring." }, { "song_number": 881, "padal": "அமுதப் புனல்வரு மாற்றங் கரைமேற்\nகுமிழிக்கத் தற்சுட ரைந்தையுங் கூட்டிச்\nசமையத்தண் டோட்டித் தரிக்கவல் லார்க்கு\nநமன்இல்லை நற்கலை நாள்இல்லை தானே.", "vilakam": "உடலில் புருவ மத்திக்குக் கீழே இருக்கும் எல்லைக் கோட்டைத் தாண்டி உள்நாக்கில் பொழியும் அமிர்தத்தோடு புருவ மத்திக்கு மேலே இருக்கின்ற அறிவு, ஆற்றல், ஓசை, ஒளி, உயிர் ஆகிய ஐந்து சுடர்களையும் ஒன்று படுத்தி அதனுடன் மூலாதாரத்திலிருந்து எழுப்பிய குண்டலினி சக்தியை நடு நாடியாகிய சுழுமுனையின் வழியே மேலேற்றிக் கொண்டு வந்து ஒன்றாகக் கலந்து அதிலேயே எண்ணங்களை வைத்து தியானத்தில் இருக்கக் கூடிய யோகியர்களுக்கு என்றும் இறப்பு இல்லை. அவர்களுக்கு ஆயுளின் மூச்சுக்காற்று அளவுகளும் நாள் கணக்குகளும் இல்லை.", "vilakam_en": "In the body, when a yogi crosses the boundary just below the center of the eyebrows and unites the nectar flowing onto the inner tongue with the five flames—wisdom, power, sound, light, and life—that exist above the center of the eyebrows, and then merges them with the Kundalini energy (awakened from the Muladhara) by raising it through the central channel (Sushumna) to join as one, keeping the mind fixed in meditation upon it, such yogis will never face death. For them, the measurements of life by breath count or by the passage of days no longer apply." }, { "song_number": 882, "padal": "உண்ணீ ரமுத முறுமூ றலைத்திறந்\nதெண்ணீர் இணையடித் தாமரைக் கேசெலத்\nதெண்ணீர்ச் சமாதி யமர்ந்துதீ ராநலங்\nகண்ணாற் றொடேசென்று கால்வழி மாறுமே.", "vilakam": "சந்திர யோகம் புரியும் யோகியர்களே உங்களின் குண்டலினியை எழுப்பி சகஸ்ரதளத்தில் சேர்ப்பதன் மூலம் புருவ மத்தியில் இருக்கும் அமிர்தம் விளையும் ஊற்றைத் திறந்து எப்போதும் வற்றாத அமிர்தத்தைப் பருகுங்கள். அதன் பிறகு இறைவனின் ஈடுஇணையில்லாத தாமரை மலர் போன்ற திருவடிகளை மட்டுமே எண்ணிக்கொண்டு வேறு எதன் மீதும் எண்ணங்களை செலுத்தாமல் வெளிப்புற உலகத்தின் எதுவும் பாதிக்காத சமாதி நிலையில் அமர்ந்து ஞானக்கண் வழியே அனைத்தையும் கண்டு மூச்சுக்காற்றை வெளியிலிருந்து எடுத்துக் கொள்ளாமல் உள்ளுக்குள்ளேயே இயக்கத்தை மாற்றி எப்போதும் திகட்டாத பேரானந்தத்தில் திளைத்து இருங்கள்.", "vilakam_en": "The yogis who practice Chandra Yoga, awaken your Kundalini and unite it with the Sahasrara (crown center) to open the source of nectar located at the space between the eyebrows. Drink this inexhaustible nectar forever. After that, focus only on the matchless, lotus-like divine feet of the Lord, without letting your thoughts wander elsewhere, remaining in a state of samadhi where nothing from the external world can affect you. Through the eye of wisdom, perceive all things, and by reversing the flow of breath to remain entirely internal—without drawing it from outside—immerse yourself eternally in the boundless bliss that never fades." }, { "song_number": 883, "padal": "மாறு மதியும் மதித்திரு மாறின்றித்\nதாறு படாமல் தண்டோடே தலைப்படில்\nஊறு படாதுடல் வேண்டும் உபாயமும்\nபாறு படாஇன்பம் பார்மிசைப் பொங்குமே.", "vilakam": "இடநாடி வழியாகவும் வலநாடி வழியாகவும் இயங்குகின்ற தம் இயல்பான மூச்சுக்காற்றிலிருந்து மாறுகின்ற சந்திர கலையும் சூரிய கலையும் யோகத்திற்குரிய முறையில் மாறுபடாமலும் தடை படாமலும் குறைவின்றி சீராக நடுநாடியான சுழுமுனையின் வழியே சென்று தலை உச்சியைத் தாண்டியுள்ள சந்திர மண்டலத்தை அடைந்தால் எதனாலும் பாதிக்கப்படாத அழியாத உடலை அடையும் வழியும் எப்போதும் திகட்டாமல் அளவின்றி பெருகும் பேரின்பமும் இந்த உலகத்திலேயே கிடைக்கும்.", "vilakam_en": "When the lunar energy (Chandra Kalai) and solar energy (Surya Kalai)—which usually flow through the left (Ida) and right (Pingala) channels—are steadily and uninterruptedly directed, without imbalance, into the central channel (Sushumna) according to the proper yogic method, they will ascend and reach the lunar sphere (Chandra Mandala) above the crown of the head. Upon attaining this, one gains an imperishable body that nothing can harm, and experiences limitless, ever-increasing bliss right here in this very world." } ]